புதிய கேஜெட்டுகள்

50MP பிரைமரி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் உருவாகும் புது ரியல்மி ஸ்மார்ட்போன்

Published On 2022-10-26 05:50 GMT   |   Update On 2022-10-26 05:50 GMT
  • ரியல்மி நிறுவனம் உருவாக்கி வரும் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
  • புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் சீரிஸ் முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி 10 5ஜி மற்றும் ரியல்மி 10 ப்ரோ 5ஜி போன் மாடல்கள் சமீபத்தில் தான சீன சான்றிதழ்களை பெற்றன. தற்போது ரியல்மி 10 4ஜி ஸ்மார்ட்போனின் ரெண்டர்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் ரெண்டர்கள் @OnLeaks மூலம் வெளியாகி இருக்கிறது.

ரியல்மி 10 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொருத்தவரை 6.54 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெ் ரேட், மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிரசஸர், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 2MP இரண்டாவது கேமரா சென்சார் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.

பாலிகார்போனேட் பேக் கொண்டிருக்கும் புது ரியல்மி ஸ்மார்ட்போன் 2MP கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம். ரியல்மி 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு அதன் பின் மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படும என எதிர்பார்க்கலாம்.

Photo Courtesy: OnLeaks @91Mobiles

Tags:    

Similar News