null
விரைவில் விற்பனைக்கு வரும் விஷன் ப்ரோ ஹெட்செட் - இந்தியாவுக்குமா?
- விஷன் ப்ரோ விற்பனை குறித்து ஆப்பிள் அப்டேட் கொடுத்தது.
- ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் முன்பதிவு செய்ய முடியும்.
ஆப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது முதல் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட்- ஆப்பிள் விஷன் ப்ரோ மாடலை அறிமுகம் செய்தது. எனினும், இதன் விற்பனை துவங்காமல் இருந்தது. இந்த ஆண்டு துவக்கத்தில் விஷன் ப்ரோ ஹெட்செட் விற்பனைக்கு வரும் என ஆப்பிள் அறிவித்து இருந்த நிலையில், இது பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி ஆப்பிள் நிறுவனம் விஷன் ப்ரோ ஹெட்செட் விற்பனை பிப்ரவரி 2-ம் தேதி அமெரிக்காவில் துவங்கும் என்று அறிவித்து இருக்கிறது. பயனர்கள் இந்த ஹெட்செட்-ஐ ஜனவரி 19-ம் தேதி முதல் முன்பதிவு செய்ய முடியும். அமெரிக்க பயனர்கள் விஷன் ப்ரோ ஹெட்செட்-ஐ ஆப்பிள் ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் முன்பதிவு செய்ய முடியும். இதன் விலை 3 ஆயிரத்து 499 டாலர்கள் ஆகும்.
விஷன் ப்ரோ ஹெட்செட் உடன் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய இரு ஹெட்பேன்ட் வழங்கப்படுகிறது. இத்துடன் மினிமலிஸ்ட் சோலோ நிட் பேன்ட், ஸ்டேபிலிட்டி கொண்ட டூயல் லூப் பேன்ட் வழங்கப்படுகிறது. இந்த ஹெட்செட்-இன் பெட்டி வெளிச்சம் புகாத வகையிலும், மென்மையான குஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.
அம்சங்களை பொருத்தவரை விஷன் ப்ரோ மாடலில் 23 மில்லியன் பிக்சல்கள் அடங்கிய, அதிக ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே சிஸ்டம் இரு டிஸ்ப்ளேக்களிடையே வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் பிரத்யேக டூயல் சிப் டிசைன் மற்றும் ஆப்பிள் சிலிகான் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த தொழில்நுட்பம் அசாத்திய டிஸ்ப்ளே அனுபவத்தை பயனர்களுக்கு கடத்தும் திறன் கொண்டிருக்கிறது. ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் கொண்டு பயனர்கள் தங்களின் நினைவுகளை திரும்பி பார்க்க முடியும். இதன் இந்திய விற்பனை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.