அறிந்து கொள்ளுங்கள்

ஸ்பெஷல் ஆப்ஸ், கேம்ஸ்-உடன் விற்பனைக்கு வந்தது ஆப்பிள் விஷன் ப்ரோ

Published On 2024-02-03 13:45 GMT   |   Update On 2024-02-03 13:45 GMT
  • 2 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருந்தனர்.
  • அசாத்திய கம்ப்யூட்டிங் அனுபவத்தை வழங்குகிறது.

ஆப்பிள் நிறுவனத்தன் விஷன் ப்ரோ ஹெட்செட் ஒருவழியாக விற்பனைக்கு வந்தது. முதற்கட்டமாக அமெரிக்காவில் இதன் விற்பனை துவங்கியுள்ளது. ஏற்கனவே இந்த ஹெட்செட்-க்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வந்தது. முன்பதிவின் போதே, இந்த ஹெட்செட்-ஐ வாங்க 2 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருந்தனர்.

புதிய ஹெட்செட் பயனர்கள் தொழில்நுட்பத்துடன் எப்படி உரையாடுகின்றனர் என்பதை மாற்றியமைக்கும் வகையில் பல்வேறு அசத்தலான அம்சங்களை கொண்டிருக்கிறது. ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் முப்பரிமாண டிஜிட்டல் சூழலை நம் கண் முன்னே கொண்டுவருகிறது. இது தனித்துவம் மிக்க, அசாத்திய கம்ப்யூட்டிங் அனுபவத்தை வழங்குகிறது.

 


ஆப் ஸ்டோரில் பத்து லட்சத்திற்கும் அதிக செயலிகள் உள்ள நிலையில், புதிய ஏ.ஆர். / வி.ஆர். ஹெட்செட்-இல் பயன்படுத்துவதற்கென பிரத்யேகமாக 600 புதிய செயலிகள் மற்றும் கேம்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புதிய செயலிகள் ஆப்பிள் விஷன் ப்ரோ அம்சங்களை முழுமையாக பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்-இன் விலை 3499 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 2 லட்சத்து 90 ஆயிரத்து 415 என துவங்குகிறது. முதற்கட்டமாக அமெரிக்காவில் இதன் விற்பனை துவங்கியுள்ள நிலையில், மற்ற நாடுகளில் எப்போது விற்பனைக்கு வரும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

Tags:    

Similar News