அறிந்து கொள்ளுங்கள்

பிஎஸ்என்எல் 4ஜி இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2022-11-02 08:08 GMT   |   Update On 2022-11-02 08:08 GMT
  • மத்திய அரசு டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் இந்திய சந்தையில் 4ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
  • இந்தியாவில் எப்போது 4ஜி சேவைகள் வெளியிடப்படும் என்ற கேள்விக்கு பிஎஸ்என்எல் தனது ட்விட்டரில் பதில் அளித்துள்ளது.

பிஎஸ்என்எல் இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவில் 4ஜி வெளியீடு பற்றி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன் படி இந்தியாவில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை கொண்டு 4ஜி சேவைகள் எப்போது வெளியிடப்படும் என பிஎஸ்என்எல் தெரிவித்து இருக்கிறது. இந்திய சந்தையில் 4ஜி சேவைகளை வெளியிட பிஎஸ்என்எல் நிறுவனம் நீண்ட காலமாக போராடி வருகிறது.

எனினும், 4ஜி வெளியீட்டில் பிஎஸ்என்எல் ஏராளமான தடைகளை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில், பிஎஸ்என்எல் இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவில் எப்போது பிஎஸ்என்எல் 4ஜி வெளியாகும் என்ற கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், இதில் சரியான வெளியீட்டு தேதி குறிப்பிடப்படவில்லை. எனினும், எப்போது 4ஜி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ட்விட்டர் பயனர் ஒருவர் பிஎஸ்என்எல் இந்தியா-வை ட்விட்டரில் டேக் செய்து பிஎஸ்என்எல் 4ஜி வெளியீடு பற்றி கேள்வி எழுப்பி இருந்தார். இவரது கேள்விக்கு பதில் அளித்த பிஎஸ்என்எல் இந்தியா, "சரியான தேதியை குறிப்பிடுவது கடினமான காரியம். இதற்கு தேவையான தொழில்நுட்ப உபரணங்கள் தயாராகி வருகின்றன. அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாத வாக்கில் சேவைகள் துவங்கும் என எதிர்பார்க்கலாம்," என்று தெரிவித்து இருக்கிறது. 

Tags:    

Similar News