null
ஃபாரின் கார் பயன்பாடு சர்ச்சை: நான் டிரைவிங் கத்துக்கிட்டதே இந்த காரில் தான் - ஆனந்த் மஹிந்திரா
- ஆனந்த் மஹிந்திரா சொந்தமாக அதிக வெளிநாட்டு சொகுசு கார்களையே வைத்துள்ளார் என்றும் அதையே அவர் பயன்படுத்துகிறார் என்ற சர்ச்சை எழுந்தது
- தனது தாய் ஸ்கை ப்ளூ பிரிமியர் பத்மினி [sky-blue premier] காரில் தான் தனக்கு கார் ஓட்ட சொல்லித்தந்தார் என்று தெரிவித்தார்
தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா சொந்தமாக அதிக வெளிநாட்டு சொகுசு கார்களையே வைத்துள்ளார் என்றும் அதையே அவர் பயன்படுத்துகிறார் என்றும் நெட்டிசன் ஒருவர் கூறியது சர்சையானது. உள்நாட்டு தயாரிப்பான அவரது மஹிந்திரா கார்களை பயன்படுத்தாமல் வெளிநாட்டு கார்களை பயன்படுத்துவது ஏன் என ஆனந்த் மஹிந்திராவிடம் நபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் வெளிநாட்டு கார்களான பெராரி கலிபோர்னியா T, போர்ச்சே 911, மெர்சிடிஸ் பென்ஸ் SLS AMG உள்ளிட்ட கார்களை பயன்படுத்துவதாக புகைப்படங்களுடன் வெளியான கட்டுரை ஒன்றின் ஸ்க்ரீன்சாட்டை அந்த நெட்டிசன் பகிர்ந்திருந்தார்.
மேக் இன் இந்தியா பொருட்களைப் பயன்படுத்த தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஆனந்த் மஹிந்திரா அந்த நெட்டிசனின் பதிவை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இந்த புதிய சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார். அவரது பதிவில், 1991 இல் மஹிந்திராவில் பொறுப்பு வகிக்கத் தொடங்கியது முதல் மஹிந்திரா கார்களையே பயன்படுத்தி வருகிறேன், எனக்கு சொந்தமான கார்கள் அனைத்தும் மஹிந்திரா கார்கள் மட்டும்தான் என்றும் தற்சமயம் ஸ்கார்பியோ N மாடல் மஹிந்திரா காரை பயன்படுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு கார்களுடன் நிற்கும் அந்த புகைப்படங்கள் மஹிந்திரா படிஸ்டா மின்சார ஹைப்பர் கார் அறிமுகத்தின்போது மான்டேர் கார் வார நிகழ்வில் [Monterey Car Week] எடுக்கப்பட்ட புகைப்படம் என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும்தனது தாய் ஸ்கை ப்ளூ பிரிமியர் பத்மினி [sky-blue premier][Fiat] காரில் தான் தனக்கு கார் ஓட்ட சொல்லித்தந்தார்என்றும், அதற்கு ப்ளூ பேர்ட் (BlueBird) என்று தனது தாய் பெயர் வைத்திருந்ததாகவும் தெரிவித்தார்.