அறிந்து கொள்ளுங்கள்

வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு ஏர்டெல்-ன் குட் நியூஸ்

Published On 2024-04-23 07:25 GMT   |   Update On 2024-04-23 07:25 GMT
  • உலகளவில் 184 நாடுகளில் சேவைகளை தடையின்றி டேட்டா சேவைகளை பெற அனுமதி அளித்திருந்தது.
  • ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு புதுபுது வசதிகளை செய்து வருவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.

2022 டிசம்பர் மாதம் ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்காக ஏர்டெல் வேர்ல்ட் பாஸ் என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தில் உலகளவில் 184 நாடுகளில் சேவைகளை தடையின்றி டேட்டா சேவைகளை பெற அனுமதி அளித்திருந்தது. எனவே ஏர்டெல் வாடிக்கையாளர்கள் விமான நிலையத்திற்குச் சென்றாலும் அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்குப் பயணம் செய்தாலும், இந்த ஒரு பேக் இப்போது அனைத்து ரோமிங் தேவைகளுக்கும் ஏற்றதாக இருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டது.

அதன்படி வெளிநாடுகளில் அதிகம் தங்குபவர்கள் அல்லது அடிக்கடி பயணம் மேற்கொள்பவர்களுக்கென சிறப்பு ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பேக்குகள் மலிவு விலையில் சுமார் 1 வருடம் வரை செல்லுபடியாகும் வகையில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், உலகின் எந்த மூலையிலிருந்தும் வாடிக்கையாளருக்கு 24X7 கால் சென்டர் மூலம் வாடிக்கையாளர் சேவையை முற்றிலும் இலவசமாக பெறலாம் என்றும் தெரிவித்து அதை நடைமுறைபடுத்தி இருந்தது. இந்த மூலம் வெளிநாடுகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்களுக்கு இந்த அறிவிப்பு மகிழ்விக்கும் விதமாகவும், பயனுள்ளதாக இருந்தது.


இதை தொடர்ந்து இந்த ஆண்டு ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதவாது.

வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் வாடிக்கைகாளர்கள் அந்தந்த நாட்டில் புதிய சிம் கார்டுகளை வாங்குபதை தவிர்க்கும் வகையில் 'அனைத்து நாடுகளுக்கும் ஒரே பிளான்' என்ற பெயரில் 'புதிய சர்வதேச ரோமிங்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, 10 நாட்களுக்கு 1GB இணைய சேவையுடன் 100 நிமிடங்கள் டாக் டைம் கொண்ட இந்த புதிய திட்டம் 899 ரூபாய் கட்டணத்தில் கிடைக்கும். அதே போல் 30 நாட்களுக்கான கட்டணம் ரூபாய் 2998 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஏர்டெல் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வெளிநாடு செல்லும் பயணிகளுக்கும் மிகவும் உபயோகமானதாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

Tags:    

Similar News