அறிந்து கொள்ளுங்கள்

ஸ்கிராட்ச்-ல இருந்து ஆரம்பிக்கிறேன்.. மாதவ் சேத் தலைமையில் ரி-லான்ச்-க்கு ரெடியாகும் ஹானர்?

Published On 2023-07-17 04:15 GMT   |   Update On 2023-07-17 04:15 GMT
  • ஹானர் பிரான்டு இந்திய சந்தையில் ரி-என்ட்ரி கொடுக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
  • மாதவ் சேத் இந்தியாவில் ஹானர் பிரான்டுக்கு தலைவர் பதவியை ஏற்க இருப்பதாக தகவல்.

ஹூவாய் நிறுவனத்தின் துணை பிரான்டாக 2013-ம் ஆண்டு துவங்கப்பட்டது தான் ஹானர். இந்திய சந்தையில் 2014 ஆண்டு களமிறங்கிய ஹானர் பிரான்டு குறைந்த விலை மற்றும் காசுக்கு ஏற்ற சாதனங்களை வழங்கியதன் மூலம் மிக விரைவில் அதிக பிரபலம் அடைந்தது. எனினும், 2020 ஆண்டு ஹானர் தனது இந்திய வியாபாரத்தை நிறுத்தி விட்டது.

முன்னதாக ஹானர் 9X ப்ரோ, ஹானர் 9A மற்றும் ஹானர் 9S போன்ற ஸ்மார்ட்போன்களை ஹானர் பிரான்டு அறிமுகம் செய்து இருந்தது. பிறகு அமெரிக்க அரசு ஹூவாய் நிறுவனத்தின் மீது பிறப்பித்த கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக, ஹூவாய் நிறுவனம் தனது ஹானர் பிரான்டை சீன நிறுவனங்கள் ஒருங்கிணைந்த கூட்டமைப்பிடம் விற்றுவிட்டது.

 

ஹானர் பிரான்டு சீனா மற்றும் சில சர்வதேச சந்தைகளில் தொடர்ந்து வியாபார பணிகளை மேற்கொண்டு வந்தது. இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து விலகி இருந்த போதிலும், ஹானர் பிரான்டு தொடர்ச்சியாக ஃபிட்னஸ் டிராக்கர் மற்றும் டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்து வந்தது.

இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஹானர் பிரான்டு இந்திய சந்தையில் ரி-என்ட்ரி கொடுக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஹானர் பிரான்டிங் கொண்ட புதிய ஸ்மார்ட்போன் மாடல் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக இணையத்தில் வெளியாகி இருந்த தகவல்களின் படி ரியல்மி நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் இந்தியாவில் ஹானர் பிரான்டுக்கு தலைவர் பதவியை ஏற்க இருப்பதாக கூறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பிரபல டிப்ஸ்டர் முகுல் ஷர்மா வெளியிட்டு இருக்கும் தகவல்களில், டிரேட்மார்க் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.

டிரேட்மார்க் படங்களில், நிறுவனம் "ஹானர் ஃபார் நைட்ஸ்" (Honor For Knights) என்ற பெயர் கொண்டிருக்கிறது. இத்துடன் புதிய நிறுவனம் மொபைல் போன் மற்றும் அக்சஸரீக்கள் தொடர்பான வியாபார பணிகளை மேற்கொள்ள இருப்பதாக அதன் விவரகுறிப்பில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இத்துடன், அதன் உரிமையாளராக மாதவ் சேத் பெயர் இடம்பெற்று உள்ளது.

 

இதுதவிர மாதவ் சேத் டுவிட்டர் மற்றும் லின்க்டுஇன் போன்ற வலைதள பயோ பிரிவில் நைட் எப்போது வரப் போகிறது, "When is the KNIGHT Coming?" என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இவற்றை வைத்தே மாதவ் சேத் தலைமையில் புதிய ஹானர் பிரான்டு இந்தியாவில் களமிறங்க இருப்பதை நெட்டிசன்கள் கிட்டத்தட்ட உறுதியான தகவலாக எடுத்துக் கொண்டுள்ளனர்.

டிப்ஸ்டர் முகுல் ஷர்மா வெளியிட்டு இருக்கும் தகவல்களில், ஹானர் பிரான்டு இந்திய சந்தையில் மீண்டும் களமிறங்க இருப்பதாகவும், இதன் புதிய ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ரி-என்ட்ரிக்காக ஹானர் அறிமுகம் செய்ய இருக்கும் முதல் ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் மர்மமாகவே உள்ளன.

Tags:    

Similar News