ஸ்மார்ட்போனுக்கு ரூ. 7 ஆயிரம் விலை குறைப்பு - எந்த மாடல்?
- வட்டியில்லா மாத தவணை முறை சலுகை வழங்கப்படுகிறது.
- ரூ. 4 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் ஹானர் பிராண்டு கடந்த ஆண்டு இறுதியில் ரி என்ட்ரி கொடுத்தது. ரிஎன்ட்ரியின் போது ஹானர் பிராண்டின் முதல் சாதனமாக ஹானர் X9b 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 25 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஹானர் X9b 5ஜி ஸ்மார்ட்போனினை பயனர்கள் ரூ. 24 ஆயிரத்து 999 விலையில் வாங்கிட முடியும். இதுதவிர வங்கி சலுகைகளை சேர்க்கும் பட்சத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 22 ஆயிரத்து 999 என்றும் மாறிவிடும்.
பயனர்கள் தங்களது பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 4 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் வயலெட் ஹைடெக் 30 வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ. 699 ஆகும். இவைதவிர இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது வட்டியில்லா மாத தவணை முறை சலுகையும் வழங்கப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை ஹானர் X9b மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 பிராசஸர், LPDDR4x ரேம், UFS 3.1 மெமரி, 6.78 இன்ச் பன்ச் ஹோல் கர்வ்டு OLED டிஸ்ப்ளே, 2652x1200 பிக்சல் ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 108MP பிரைமரி கேமரா, 5MP அல்ட்ரா வைடு சென்சார், 2MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 16MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் 5800 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 35 வாட் வயர்டு சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. கனெக்டிவிட்டிக்கு வைபை 5, ப்ளூடூத் 5.1, யு.எஸ்.பி. 2.0 டைப் சி போர்ட், இன் ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.