அறிந்து கொள்ளுங்கள்

ஏஐ சாட்பாட் உருவாக்கும் இன்ஸ்டாகிராம் - எதற்கு தெரியுமா?

Published On 2023-06-07 07:49 GMT   |   Update On 2023-06-07 07:49 GMT
  • இன்ஸ்டாகிராம் ஏஐ சாட்பாட்-இடம் கேள்விகளை கேட்கும் போது, அது கேள்விக்கு ஏற்ற பதில் அளிக்கும்.
  • இது எப்போது பயன்பாட்டுக்கு வழங்கப்படும் என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை.

முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏஐ சாட்பாட் உருவாக்கும் பணிகளில் ஆர்வம் காட்ட துவங்கி உள்ளன. ஸ்னாப்சாட் தளத்தில் 'மை ஏஐ' சாட்பாட் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இன்ஸ்டாகிராம் நிறுவனமும் சொந்தமாக ஏஐ சாட்பாட் உருவாக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஏஐ சாட்பாட்கள் சாட்ஜிபிடி சேவைக்கு இணையானவை ஆகும்.

இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் ஏஐ சாட்பாட் உருவாக்கப்படுவதை ஆப் ஆய்வாளரான அலெசாண்ட்ரோ பலூசி கண்டறிந்தார். இன்ஸ்டாகிராம் ஏஐ சாட்பாட்-இடம் கேள்விகளை கேட்கும் போது, அது கேள்விக்கு ஏற்ற பதில் அளிக்கும் என தெரியவந்துள்ளது. பயனர்கள் கிட்டத்தட்ட 30 வெவ்வேறு பண்புகளில் ஒன்றை தேர்வு செய்து கொள்ள முடியும்.

பபயனர்கள் தங்களை பற்றி சிறப்பாக வெளிப்படுத்தவும், மெசேஜ்களை எழுத உதவி பெற்றுக் கொள்ள வேண்டும் என்று இன்ஸ்டாகிராம் நினைக்கிறது. இது பெரும்பாலும் இன்ஸ்டாகிராமில் எப்படி எழுத வேண்டும் என்பது பற்றி அறிவுறையாக இருக்கும் என தெரிகிறது. இந்த அம்சம் இன்னமும், உருவாக்கும் பணிகளே நடைபெற்று வருகிறது. இது எப்போது பயன்பாட்டுக்கு வழங்கப்படும் என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை.

இன்ஸ்டாகிராம் தளத்தில் இது எப்படி இயங்கும் என்பது பற்றியும் இதுவரை எந்த தகவலும் இல்லை. ஸ்னாப்சாட் பயனர்கள் ஏஐ சாட்பாட் உடன் உரையாடல் நடத்தவும், கேள்விகளை கேட்கவும் முடியும். ஒபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி கொண்டு தான் இந்த தொழில்நுட்பமும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News