அறிந்து கொள்ளுங்கள்

200 பேரை பணி நீக்கம் செய்யும் இன்டெல் - அதிர்ச்சியில் ஊழியர்கள்

Published On 2023-12-22 16:01 GMT   |   Update On 2023-12-22 16:01 GMT
  • இன்டெல் நிறுவனம் பணி நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
  • மேலும் பலர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்.

சர்வதேச அளவில் செமிகண்டக்டர் உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனமாக இன்டெல் உள்ளது. சமீப காலங்களில் ஏற்பட்ட தொடர் நிதி நெருக்கடி காரணமாக இன்டெல் நிறுவனம் பணி நீக்க நடவடிக்கை எடுப்பதாக அறிவித்து, இதுவரை நூற்றுக்கும் அதிமானோரை பணி நீக்கம் செய்துள்ளது.

அந்த வகையில், பணி நீக்க நடவடிக்கையின் ஐந்தாவது கட்டமாக 200-க்கும் அதிக ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இன்டெல் திட்டமிட்டு வருகிறது. இதுதவிர அடுத்த ஆண்டு துவக்கத்தில் இருந்து மேலும் பலர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போதைய பணி நீக்க நடவடிக்கை டிசம்பர் 31-ம் தேதி துவங்கும் என்றும் இதில் 235 பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். இரண்டு வார காலங்களில் பணி நீக்க நடவடிக்கை முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.

"நிறுவனம் முழுக்க பணியாளர்கள் எண்ணிக்கையை குறைப்பது, செலவீனங்களை குறைத்து நிறுவனத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துவதற்கான யுக்திகள் கையாளப்படுகிறது," என இன்டெல் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News