திரெட்ஸ் சேவையில் ஒரு கோடியை கடந்த பயனர் எண்ணிக்கை.. மகிழ்ச்சியில் மார்க் ஜூக்கர்பர்க்!
- அதிருப்தியில் உள்ளவர்கள், திரெட்ஸ் சேவையில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- திரெட்ஸ் சேவையில் பயனர்கள் அதிகபட்சம் 500 வார்த்தைகள் அடங்கிய பதிவுகளை பதிவிட முடியும்.
மெட்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய சமூக வலைதள சேவையில் சுமார் ஒரு கோடி பேர் இணைந்துள்ளனர் என்று மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்துள்ளார். சேவை துவங்கிய ஏழு மணி நேரங்களில் இத்தனை பேர் இணைந்துள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எலான் மஸ்க் விலைக்கு வாங்கிய டுவிட்டர் தளத்திற்கு நட்பு ரீதியிலான போட்டியாளர் திரெட்ஸ் என்று மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்துள்ளார். டுவிட்டர் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய மாற்றங்கள் காரணமாக அதிருப்தியில் உள்ளவர்கள், திரெட்ஸ் சேவையில் இணைவார்கள் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திரெட்ஸ் சேவையில் பயனர்கள் அதிகபட்சம் 500 வார்த்தைகள் அடங்கிய பதிவுகளை பதிவிட முடியும். இத்துடன் பல்வேறு அம்சங்கள் டுவிட்டர் தளத்தில் இருப்பதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய நபர்களை பின் தொடர்வதற்காக இன்ஸ்டாகிராம் அல்காரிதம் பயன்படுத்தி குறிப்பிட்ட பதிவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
இத்துடன் பாலோவர்-ஒன்லி ஃபீட் அம்சத்தை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இது பயனர்கள் பின்தொடர்வோரின் பதிவுகளை மட்டுமே காண்பிக்கும். திரெட் சேவையில் பயனர்களை ஃபாலோ மற்றும் அன்-ஃபாலோ செய்ய முடியும். இன்ஸ்டாகிராம் போன்றே இந்த தளமும், ப்ரோபைலை பிரைவேட் ஆக வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது.