அறிந்து கொள்ளுங்கள்
null

10 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்தது மைக்ரோசாப்ட் - புது முதலீடுகளுக்கு திட்டம்!

Published On 2023-01-19 07:03 GMT   |   Update On 2023-01-19 10:15 GMT
  • மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர்களில் ஐந்து சதவீதம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
  • பணி நீக்கம் செய்த போதிலும், மைக்ரோசாப்ட் தொடர்ந்து புது ஊழியர்களை பணியில் அமர்த்தி, மற்ற துறைகளில் முதலீடு செய்ய இருக்கிறது.

மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா 10 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்து இருக்கிறார். பணி நீக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இன்று முதல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. பொருளாதார சூழல் காரணமாக கடின முடிவுகளை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக சத்ய நாதெல்லா குறிப்பிட்டு இருக்கிறார். தற்போது ஊழியர்களில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவானோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை சுமார் 2 லட்சத்து 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களில் சுமார் 99 ஆயிரம் பேர் அமெரிக்கா தவிர்த்த நாடுகளில் வசிப்போர் ஆவர். மைக்ரோசாப்ட் மட்டுமின்றி டுவிட்டர், அமேசான் மற்றும் மெட்டா போன்ற நிறுவனங்களும் பல ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

உலகின் பெரும்பாலான நாடுகளில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு இருப்பது, நுகர்வோர் செலவு செய்வதை குறைந்து இருப்பது போன்ற காரணங்களால் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக சத்ய நாதெல்லா நிறுவன ரீதியில் அனுப்பிய அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார். செலவீனங்களை மறு கட்டமைப்பு செய்து, வருவாயை முறைப்படுத்த பணி நீக்கம் அத்தியாவசியமான ஒன்று ஆகும்.

பணி நீக்கம் செய்யப்பட்ட போதிலும் புதிதாக ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுவர் என்றும், தொடர்ந்து புது முதலீடுகள் செய்யப்படும் என்றும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. பணி நீக்கம் செய்யப்படுவோருக்கு தகவல் தெரிவிக்கும் பணி துவங்கிவிட்ட போதிலும், இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் தான் இந்த நடவடிக்கைகள் முழுமை பெறும்.

Tags:    

Similar News