அறிந்து கொள்ளுங்கள்
null

உலகளவில் விண்டோஸ் சேவைகளில் பாதிப்பு

Published On 2024-07-19 07:12 GMT   |   Update On 2024-07-19 07:13 GMT
  • கிரவுட்ஸ்டிரைக் சென்சார் வெர்ஷனில் பாதிப்பு.
  • பாதிப்புக்கான காரணம் குறித்து ஆய்வு.

விண்டோஸ் இயங்குதளம் பயன்படுத்தும் பெரும்பாலான பயனர்கள் புளூ ஸ்கிரீன் (Blue Screen of Death) பாதிப்பை சந்தித்துள்ளனர். இந்த பாதிப்பு விண்டோஸ் இயங்குதளத்தின் கிரவுட்ஸ்டிரைக் சென்சார் வெர்ஷனில் ஏற்பட்டுள்ளது முதற்கட்ட தகவல்களில் தெரியவந்துள்ளது.

மைக்ரோசாப்ட் சேவைகளில் பிரச்சினை ஏற்பட்டதை கிரவுட்ஸ்டிரைக் உறுதிப்படுத்தி இருக்கிறது. பாதிப்பை சரி செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது. மேலும், இந்த பாதிப்பு ஏற்பட என்ன காரணம் என்பதும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

பாதிப்பை பயனர்கள் தாங்களாகவே சரி செய்ய முயற்சிக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பாதிப்பை சரி செய்வதற்கான பணிகளில் கிரவுட்ஸ்டிரைக் ஈடுபட்டுள்ளது. பாதிப்பு சரி செய்வது தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

Tags:    

Similar News