கடலில் விழுந்து காணாமல் போன ஆப்பிள் வாட்ச் - கண்டெடுத்ததும் சீராக இயங்கிய அதிசயம்!
- கடலில் காணாமல் போன ஆப்பிள் வாட்ச் மாடல் மீண்டும் கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது.
- கடல்நீரில் மூழ்கி இருந்த ஆப்பிள் வாட்ச் மீட்கப்படும் போதும் சீராக இயங்கும் நிலையில் இருந்தது.
ஆப்பிள் வாட்ச் மாடல்கள் எப்படி பயனர் உயிரை காப்பாற்றுகின்றன என்பதை கூறும் சம்பவங்கள் பலமுறை அரங்கேறியுள்ளன. தற்போது கடலில் காணாமல் போன ஆப்பிள் வாட்ச் மாடல் ஒன்று பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. வெற்றிகரமாக மீட்கப்பட்ட நிலையில் ஆப்பிள் வாட்ச் முன்பு இருந்ததை போன்றே சீராக இயங்கியது.
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனரியோவில் பாய்மர கப்பலில் பயணம் செய்த ஜெஃபர்சன் ரோச்சா, கடலில் இறங்கி நீந்த திட்டமிட்டார். கடலில் மகிழ்ச்சியாக நீந்திய ரோச்சா, தனது ஆப்பிள் வாட்ச்-ஐ தவறுதலாக கடலில் தொலைத்துவிட்டார். அவர் கடலில் தொலைத்த ஆப்பிள் வாட்ச் மாடல் ஃபைண்ட் மை (Find Me) எனும் அம்சம் கொண்டிருந்தது. எனினும், அது எந்த ஆப்பிள் வாட்ச் மாடல் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.
கடலில் ஆப்பிள் வாட்ச் தவறவிட்டதை அறிந்து கொண்ட ரோச்சா உடனடியாக படகில் ஏறி ஆப்பிள் வாட்ச் ஆஃப் ஆவதற்குள் அதனை 'ஃபைண்ட் மை' அம்சம் மூலம் தேட துவங்கினார். ஃபைண்ட் மை ஆப் மூலம் தேட துவங்கியதும், ஆப்பிள் வாட்ச் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டது. பின் காணாமல் போன மறுநாள் அவருக்கு நோட்டிஃபிகேஷன் அலர்ட் கிடைத்துள்ளது.
அதில் ஆப்பிள் வாட்ச் ஆக்டிவேட் ஆகி இருப்பதாக தகவல் இருந்தது. உடனே லாஸ்ட் மோட்-ஐ ஆக்டிவேட் செய்த ரோச்சா, தனது தனிப்பட்ட விவரங்களை பதிவிட்டார். தேடல் முயற்சிக்கு பலன் அளிக்காத நிலையில், வேறு யாரேனும் அதனை கண்டெடுத்தால் தன்னை தொடர்பு கொள்வர் என்றும் ரோச்சா நம்பினார்.
இவரது நம்பிக்கை வீண் போகவில்லை. இன்ஸ்டாகிராமில் இருந்து ரோச்சாவை 16 வயது சிறுமி ஒருவர் தொடர்பு கொண்டு ஆப்பிள் வாட்ச் தன்னிடம் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். ஆப்பிள் வாட்ச்-ஐ 50 வயது ஓட்டுனர் கண்டெடுத்தார் என்பதை ரோச்சா, அந்த சிறுமியின் மூலம் அறிந்து கொண்டார்.
இவரது வாட்ச்-ஐ கண்டெடுத்த ஓட்டுனர் பெனோனி அண்டோனியோ ஃபிஹோ மக்கள் தொலைக்கும் பொருட்களை கண்டெடுத்தால், அதனை அவர்களிடம் சேர்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இவர் மீட்டெடுத்த ரோச்சாவின் ஆப்பிள் வாட்ச் அதன் முந்தைய நிலையிலேயே சீராக இயங்கியது.
ஆப்பிள் நிறுவனம் சீரிஸ் 2-வை தொடர்ந்து அறிமுகம் செய்த அனைத்து மாடல்களிலும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியை வழங்கி வருகிறது. இது ஆப்பிள் வாட்ச் அதிகபட்சம் 50 மீட்டர்கள் வரையிலான நீரில் மூழ்கினாலும் சீராக இயங்கும் வசதியை கொண்டுள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மாடல் அதிகபட்சம் 100 மீட்டர்கள் ஆழத்தில் விழுந்தலும் சீராக இயங்கும்.
காணாமல் போன ஆப்பிள் வாட்ச்-ஐ மீட்பது எப்படி?
- ஐபோனில் ஆப்பிள் வாட்ச் செயலியை திறக்கவும்.
- ஆல் வாட்சஸ் ஆப்ஷனில் மை வாட்ச் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- வாட்ச் அருகில் உள்ள இன்ஃபோ பட்டனை கிளிக் செய்து, ஃபைண்ட் மை ஆப்பிள் வாட்ச் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- ஐபோனில் ஃபைண்ட் மை ஆப்-இல் வாட்ச் லொகேஷனை பார்க்க அதற்கான ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
- ஆப்பிள் வாட்ச் அருகாமையில் இருப்பதை காண்பித்தால், உடனே பிளே சவுண்ட் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
Photo Courtesy: Arquivo Pessoal