இந்தியாவில் மொபைல் இண்டர்நெட் வேகம் 115 சதவீதம் அதிகரிப்பு!
- ஜியோ மற்றும் ஏர்டெல் சேவைகளின் எல்டிஇ வேகம் கணிசமாக அதிகரித்து இருக்கிறது.
- மீடியா டவுன்லோட் வேகம் 13.87Mbps-இல் இருந்து 29.85Mbps ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் மீடியன் மொபைல் டவுன்லோட் வேகம் 115 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5ஜி சேவைகள் வெளியீட்டை தொடர்ந்து மொபைல் டவுன்லோட் வேகம் திடீரென அதிகரிக்க துவங்கி இருக்கிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13.87Mbps ஆக இருந்த மொபைல் டவுன்லோட் வேகம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 29.85Mbps ஆக அதிகரித்து இருக்கிறது. இந்தியாவில் மொபைல் டவுன்லோட் வேகம் பற்றிய தகவல்களை ஊக்லா ஆய்வு நிறுவனம் வெளியிட்டு இருக்கும் நெட்வொர்க் இண்டெலிஜன்ஸ் மற்றும் கனெக்டிவிட்டி பற்றி அறிக்கையில் இடம்பெற்று இருக்கிறது.
இதன் காரணமாக சர்வதேச ஸ்பீடு-டெஸ்ட் இண்டெக்ஸ்-இல் இந்தியா 49 இடங்கள் முன்னேறி தற்போது 69 ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 118 ஆவது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 69 ஆவது இடத்திற்கு முன்னேரி இருக்கிறது. சர்வதேச ஸ்பீடு-டெஸ்ட் இண்டெக்ஸ்-இல் இந்தியாவின் வளர்ச்சி சில ஜி20 நாடுகளான மெக்சிகோ, ரஷ்யா மற்றும் அர்ஜெண்டினாவை விட அதிகரித்து இருக்கிறது.
ஆய்வு அறிக்கையின் படி 5ஜி சேவை வெளியீட்டை தொடர்ந்து ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் எல்டிஇ வேகம் வளர்ச்சி அடைந்து இருப்பது தெரியவந்துள்ளது. இரு நிறுவனங்கள் புதிய நெட்வொர்க் கட்டமைப்புக்கு மேற்கொண்டு இருக்கும் முதலீடுகள் தற்போது பலன் அளிக்க துவங்கி இருக்கிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5ஜி முதன் முதலில் வெளியிடப்படும் போது, 5ஜி நெட்வொர்க் திறன் பற்றி பயனர்களுக்கு முரணான கருத்துக்கள் இருந்து வந்தது. மீடியன் 5ஜி டவுன்லோடே வேகங்கள் குஜராத்தில் 512.57Mbps ஆகவும், மேற்கு உத்திரபிரேதச மாநிலத்தில் 19.23Mbps ஆக இருந்தது. தற்போது. ஒன்பது டெலிகாம் வட்டாரங்கள்: ஆந்திர பிரதேசம், கொல்கத்தா, வடகிழக்கு, ஹரியானா, ராஜஸ்தான், பீகார், பஞ்சாப், கேரளா மற்றும் உத்திர பிரதேசம் மேற்கு பகுதிகளில் டெஸ்டிங் காரணமாக மீடியன் 5ஜி டவுன்லோட் வேகம் 100Mbps-க்கும் குறைவாகவே இருந்து வந்தது.
நான்கு மாதங்களுக்கு பின், 5ஜி மீடியன் டவுன்லோட் வேகம் அனைத்து டெலிகாம் வட்டாரங்களிலும் அதிகரித்து இருக்கிறது. தற்போது ஜம்மு காஷ்மீர் தவிர இதர பகுதிகலில் 200Mbps வேகம் சீராக கிடைக்கிறது. கொல்கத்தாவில் 500Mbps வரையிலான டேட்டா வேகம் கிடைக்கிறது.