அறிந்து கொள்ளுங்கள்
null

பிரபல சேவையை அதிரடியாக நிறுத்திய நெட்ஃப்ளிக்ஸ்

Published On 2023-07-20 07:51 GMT   |   Update On 2023-07-20 08:34 GMT
  • நெட்ப்ளிக்ஸ் சேவையில் புதிதாக 60 லட்சம் பேர் இணைந்திருப்பதாக அந்நிறுவனம் அறிவிப்பு.
  • இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ் தள பயன்பாடுகளில் புதிய மாற்றம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் பாஸ்வேர்டு ஷேரிங் திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. புதிய அறிவிப்பு காரணமாக இந்திய பயனர்கள் இனி தங்களது அக்கவுன்ட் விவரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாது.

கடந்த மே மாதத்தில் அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் பாஸ்வேர்டு ஷேரிங் சேவை நிறுத்தப்பட்டது. இந்த சேவை நிறுத்தப்பட்டதில் இருந்து நெட்ப்ளிக்ஸ் சேவையில் சுமார் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர் என்று அந்நிறுவனம் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் தான், நெட்ப்ளிக்ஸ் சேவையில் ஒரே அக்கவுன்ட்-ஐ பலர் பயன்படுத்துவதற்கான வசதி நீக்கப்பட்டு இருக்கிறது. ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் நெட்ப்ளிக்ஸ் அக்கவுன்ட்-ஐ அவர்களது வீடு, வெளியில் செல்லும் இடங்கள் மற்றும் பயணங்கள் என எங்கிருந்து வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதோடு டிரான்ஸ்பர் ப்ரோபைல், மேனேஜ் அக்சஸ் மற்றும் டிவைசஸ் போன்ற புதிய அம்சங்களை பயன்படுத்த முடியும். நெட்ஃப்ளிக்ஸ்-இன் புதிய அறிவிப்பு மூலம், அந்நிறுவனம் IP முகவரி, டிவைஸ் ஐடி, அக்கவுன்ட் ஆக்டிவிட்டி உள்ளிட்ட விவரங்கள் அடிப்படையில், அக்கவுன்ட்-ஐ யார் பயன்படுத்துகின்றார்கள் என்பதை அறிந்து கொள்கிறது.

புதிய மாற்றம் காரணமாக பயனர்கள், நெட்ப்ளிக்ஸ் ஹவுஸ்ஹோல்டு-ஐ செட்டப் செய்து கொள்ள வேண்டும். இந்த அக்கவுன்ட் பயனர் வீடு அல்லது வசிக்கும் இடமாக இருத்தல் அவசியம் ஆகும். ஒரே இன்டர்நெட் இணைப்பை பயன்படுத்துவோர் மட்டுமே இந்த அக்கவுன்ட்-ஐ பயன்படுத்த முடியும்.

மற்ற இணைப்பில் இருந்து நெட்ப்ளிக்ஸ் அக்கவுன்ட்-இல் லாக் இன் செய்தால், அவ்வாறு செய்வோருக்கு புதிய அக்கவுன்ட் உருவாக்குவதற்கான நோட்டிபிகேஷன் அனுப்பப்படுகிறது.

Tags:    

Similar News