கொஞ்சம் மிஸ் ஆனாலும் ரூ. 10 லட்சம் அபராதம்.. சிம் வாங்க புது செக்..
- சிம் வாங்கும் வாடிக்கையாளர் பற்றி அதிக விவரங்கள் சேகரிக்கப்படும்.
- ஏற்க மறுத்தால் ரூ. 10 லட்சம் வரை அபராதம்.
இந்தியாவில் நாளை (டிசம்பர் 1) முதல் சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளில் புதிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. இந்த மாற்றங்கள் அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு, பிறகு டிசம்பர் 1-ம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என மாற்றப்பட்டது.
புதிய விதிமுறைகள் இந்தியாவில் நடைபெற்று வரும் சைபர் குற்றங்களை பெருமளவுக்கு குறைக்கவோ அல்லது குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. புதிய விதிமுறைகள் குடிமக்கள் பாதுகாப்பு கருதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி சிம் கார்டுகளை அதிகளவில் விற்பனை செய்வது, யார் விற்பனை செய்ய முடியும் என்பது தொடர்பான விதிமுறைகள் மாற்றப்பட்டு உள்ளன.
விதிமுறை விவரங்கள்:
இந்த விதிமுறைகளின் கீழ் புதிய சிம் வாங்கும் வாடிக்கையாளர் பற்றி அதிக விவரங்கள் சேகரிக்கப்படும். இதன் மூலம் தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட நபரை எளிதில் தொடர்பு கொள்ள முடியும்.
ஏற்கனவே உள்ள நம்பர்களுக்கு சிம் கார்டுகளை வாங்கும் போது, உங்களின் ஆதார் மற்றும் அடையாள விவரங்களை சமர்பிக்க வேண்டும். இதேபோன்று சிம் கார்டை விற்பனை செய்வோரும் வெரிஃபிகேஷனை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சிம் டீலர்கள் விற்பனை செய்யும் சிம் கார்டுகளை ரெஜிஸ்டர் செய்வதோடு, அவர்களையும் வெரிஃபை செய்ய வேண்டும்.
புதிய விதிமுறைகளை ஏற்க மறுத்தால், அரசாங்கம் சார்பில் அதிகபட்சம் ரூ. 10 லட்சம் வரையிலான அபராதம் விதிக்கப்படும். ஒரு நபர் அதிக சிம் கார்டுகளை வாங்குவதில் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. அதன் படி தனிநபர் பயன்பாட்டுக்கு ஒருவர் தனது அடையாள சான்றினை பயன்படுத்தி அதிகபட்சம் 9 சிம் கார்டுகளை வாங்க முடியும்.
ஒருவரின் சிம் கார்டு செயலிழந்து போனால், அந்த நம்பர் அடுத்த 90 நாட்கள் வரை வேறு யாருக்கும் நிர்ணயம் செய்யப்படாது. இந்த காலக்கட்டத்தில் பயனர்கள் அந்த நம்பருடன் ஒருங்கிணைந்த தகவல்கள் அனைத்தையும் அழித்துவிடலாம். இன்றுக்குள் (நவம்பர் 30) சிம் விற்பனையாளர்கள் பதிவு செய்யாத பட்சத்தில் அவர்களுக்கு ரூ. 10 லட்சம் வரையிலான அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.