அறிந்து கொள்ளுங்கள்

டிரான்ஸ்பேரன்ட் பேக் பேனல் கொண்ட ரியல்மி 12 ப்ரோ பிளஸ் - வெளியீடு எப்போ தெரியுமா?

Published On 2024-02-07 12:23 GMT   |   Update On 2024-02-07 12:23 GMT
  • ரியல்மி 12 ப்ரோ பிளஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 பிராசஸர் உள்ளது.
  • ரியல்மி 12 ப்ரோ பிளஸ் மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.

ரியல்மி நிறுவனம் சமீபத்தில் தான் ரியல்மி 12 ப்ரோ 5ஜி மற்றும் ரியல்மி 12 ப்ரோ பிளஸ் 5ஜி என இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. ரியல்மி 12 ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 பிராசஸரும், ரியல்மி 12 ப்ரோ பிளஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 பிராசஸரும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ரியல்மி 12 ப்ரோ சீரிஸ் மாட்ல்களில் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ரியல்மி யுஐ 5.0 ஒ.எஸ். மற்றும் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. ரியல்மி 12 ப்ரோ பிளஸ் மாடல் மூன்றுவித நிறங்களில் கிடைக்கின்றன. இந்த நிலையில், ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் டிரான்ஸ்பேரன்ட் பேக் பேனல் கொண்ட மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தெரியவந்துள்ளது.

 

ஐரோப்பாவுக்கான ரியல்மி தலைமை செயல் அதிகாரி பிரான்சிஸ் வாங் இது தொடர்பான புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். புகைப்படத்தின் படி புதிய ஸ்மார்ட்போனின் பின்புறம் கேமரா பாகங்கள் தெளிவாக காட்சியளிக்கின்றன. புதிய வெர்ஷனுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கும் நிலையில், இது எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

இந்திய சந்தையில் ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் நேவிகேட்டர் பெய்க், சப்மரைன் புளூ மற்றும் எக்ஸ்புளோரர் ரெட் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என துவங்கி அதிகபட்சம் ரூ. 33 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News