அறிந்து கொள்ளுங்கள்
null

ரூ.279-க்கு 2GB டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்.. சூப்பர் சலுகை அறிவித்த ஏர்டெல்

Published On 2024-06-20 06:45 GMT   |   Update On 2024-06-20 08:39 GMT
  • நீங்கள் 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்திவிட்டால், ஏர்டெல் வழங்கும் டேட்டா வவுச்சர்களைப் பெறலாம்.
  • டேட்டாவை அதிகம் பயன்படுத்தாத மற்றும் குறைந்த செலவில் போன் நம்பரை செயலில் வைத்திருக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த திட்டமாகும்.

பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்கு ரூ.279 விலையில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் ஏர்டெல் இணையதளம் மற்றும் மொபைல் ஆப்-பிலும் வழங்கப்படுகிறது.

இது ஒரு வித்தியாசமான திட்டமாகும், ஏனெனில் இது குறைந்த செலவில் கிடைக்கும். ஆனால் மற்ற வகையான நன்மைகளை நீக்குகிறது.

சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் ரூ.395 பிளானை 70 நாட்கள் வேலிடிட்டியுடன் அறிமுகப்படுத்தியது. இப்போது ரூ.279 விலையில் கிடைக்கும் திட்டம் 45 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. ஏர்டெல் பயனர்களுக்கு குறைந்த விலையில் நீண்ட வேலிடிட்டி வழங்கும் இந்த பிளான், அதிக டேட்டாவை வழங்கவில்லை. பயனர்கள் அதிக டேட்டாவை பயன்படுத்த விரும்பினால் டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.279 திட்டத்தில் 2GB டேட்டா, வரம்பற்ற வாய்ஸ் கால் மற்றும் 600 SMS என்று மொத்தமாக 45 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை பயன்படுத்துவதற்கான சராசரி தினசரி செலவு ரூ.6.2 ஆகும்.

இருப்பினும், நீங்கள் 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்திவிட்டால், ஏர்டெல் வழங்கும் டேட்டா வவுச்சர்களைப் பெறலாம். இவற்றின் விலை 1 நாளுக்கு ரூ. 19 இல் தொடங்குகிறது. டேட்டா வவுச்சர்களைப் பெற நீங்கள் தொடர்ந்து அதிகமாகச் செலவிட வேண்டியிருக்கும்.

டேட்டாவை அதிகம் பயன்படுத்தாத மற்றும் குறைந்த செலவில் போன் நம்பரை செயலில் வைத்திருக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த திட்டமாகும். வரம்பற்ற வாய்ஸ் கால் இருப்பதால், அழைப்பின் பலன் எப்போதும் நாள் முடிவில் உதவியாக இருக்கும்.

இதே சலுகையில் ஏர்டெல் தேங்ஸ் பலன்கள் வழங்கப்படுகின்றன. இதில் அப்போலோ 24/7, இலவச ஹெலோ டியூன்கள், வின்க் மியூசிக் உள்ளிட்ட பலன்கள் அடங்கும்.

Tags:    

Similar News