ஆட்டோ டிப்ஸ்

மீண்டும் விலை மாற்றம் - பயனர்களுக்கு ஷாக் கொடுத்த டாடா மோட்டார்ஸ்

Published On 2022-07-10 04:45 GMT   |   Update On 2022-07-10 06:27 GMT
  • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் தனது வர்த்தக வாகனங்கள் விலையை உயர்த்தியது.
  • தற்போது பயணிகள் வாகன விலையை உயர்த்த டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பயணிகள் வாகன விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. இம்முறை 0.55 சதவீதம் விலை உயர்த்தப்படுகிறது. கார் மாடல், வேரியண்டிற்கு ஏற்ப விலை உயர்வு வேறுபடும். ஒவ்வொரு மாடலின் விலை எந்த அளவுக்கு மாறும் என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.


"உற்பத்தி செலவீனங்களை எதிர்கொள்ள பல்வேறு முயற்சிகளை நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. எனினும், தொடர்ச்சியான பாதிப்புகளால், விலை உயர்வை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்," என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது.

இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பயணிகள் வாகன பிரிவில் கடந்த மாதம் மட்டும் 45 ஆயிரத்து 197 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. இவற்றில் 3 ஆயிரத்து 507 யூனிட்கள் எலெக்ட்ரிக் மாடல்கள் ஆகும். டாடா டியாகோ, டாடா டிகோர், டாடா அல்ட்ரோஸ், டாடா நெக்சான், டாடா பன்ச், டாடா ஹேரியர் மற்றும் டாடா சஃபாரி போன்ற மாடல்களை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்து வருகிறது.

Tags:    

Similar News