5ஜி பிரிவில் புதிய புரட்சி.. ஜியோவின் வேற லெவல் ஸ்கெட்ச்.. வெளியீடு எப்போ தெரியுமா?
- ஜியோ போன் 5ஜி மாடலின் புகைப்படங்கள் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
- ஜியோவின் 5ஜி மொபைல் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி தனது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023 ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய ஜியோ போன் 5ஜி மாடலை அறிமுகம் செய்யும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக இந்த மொபைல் பற்றிய விவரங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி உள்ளன.
அந்த வரிசையில், இரண்டு புதிய மொபைல் போன்களின் விவரங்கள் இந்தியாவின் பி.ஐ.எஸ். வலைதளத்தில் லீக் ஆகி இருக்கின்றன. இதுபற்றிய தகவல்களை டிப்ஸ்டரான முகுல் ஷர்மா தனது X (முன்பு டுவிட்டர்) அக்கவுன்டில் பகிர்ந்து இருக்கிறார். அதன்படி புதிய ஜியோ போன் மாடல்கள் நொய்டாவில் உற்பத்தி செய்யப்பட உள்ளன.
இரண்டு ஜியோ போன் மாடல்களும் JBV161W1 மற்றும் JBV162W1 எனும் மாடல் நம்பர்களை கொண்டிருக்கின்றன. அந்த வகையில், ஜியோ போன் 5ஜி மாடலின் புகைப்படங்கள் முன்னதாக இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. இந்த மாடல் இம்மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இது அந்நிறுவனத்தின் குறைந்த விலை 5ஜி போனாக இருக்கும் என்று தெரிகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஜியோபோன் 5ஜி மாடலில் 6.5 இன்ச் HD+ 90Hz LCD பேனல், 4 ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர், 13MP பிரைமரி கேமரா, 2MP லென்ஸ், 8MP செல்ஃபி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் சார்ஜிங் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த மாதம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோ பாரத் 4ஜி ஃபீச்சர் போன் மாடலை அறிமுகம் செய்தது.