அறிந்து கொள்ளுங்கள்

5 ஜிபி இலவச டேட்டா வழங்கும் வோடபோன் ஐடியா

Published On 2023-05-07 04:15 GMT   |   Update On 2023-05-07 04:15 GMT
  • வி நிறுவனம் தொடர்ச்சியாக தனது சலுகைகளை மாற்றியமைத்து வருகிறது.
  • வி நிறுவனத்தின் 5ஜி சேவை வெளியீடு தொடர்ந்து தாமதமாகி வருகிறது.

இந்திய சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்களிடம் கடுமையான போட்டியை எதிர்கொள்ளும் வி நிறுவனத்தின் பயனர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. தொடர் நஷ்டம் காரணமாகவும், பயனர்கள் எண்ணிக்கை குறைவதாலும் வி நிறுவனத்தின் 5ஜி வெளியீடு தாமதமாகி வருகிறது.

எனினும், வி நிறுவனம் தொடர்ச்சியாக புதிய சலுகைகளை அறிவித்தும், அவ்வப்போது சிறப்பான சலுகைகளையும் அறிவித்து வருகிறது. அந்த வரிசையில் தேர்வு செய்யப்பட்ட பிரீபெயிட் சலுகைகளை பயனர்கள் வி செயலி மூலம் ரிசார்ஜ் செய்தால் கூடுதல் கட்டணம் இன்றி இலவச டேட்டா வழங்கப்படுகிறது.

முன்னதாக இதே போன்ற சலுகையை வி நிறுவனம் குறுகிய காலக்கட்டத்திற்கு வழங்கி வந்தது. இந்த சலுகையின் கீழ் பயனர்கள் வி செயலி மூலம் பிரீபெயிட் ரிசார்ஜ் செய்தால் அதிகபட்சம் 5ஜிபி வரை கூடுதல் டேட்டா பெற முடியும். பயனர்கள் ரூ. 299 அல்லது இதைவிட அதிக தொகைக்கு ரிசார்ஜ் செய்யும் போது கூடுதல் டேட்டாவை பெற்றுக் கொள்ள முடியும். இதற்கான வேலிடிட்டி மூன்று நாட்கள் ஆகும். 

Tags:    

Similar News