ரூ. 2 ஆயிரத்து 400 தள்ளுபடி வழங்கும் வோடபோன் ஐடியா!
- வோடபோன் ஐடியா நிறுவன வாடிக்கையாளர்களுக்கு ரூ. 2 ஆயிரத்து 400 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- வோடபோன் ஐடியா பிரீபெயிட் பயனர்கள் இந்த சலுகையில் பயன்பெற முடியும்.
வி ஸ்மார்ட்போன் திட்டம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த திட்டம் வோடபோன் ஐடியா பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்காக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 4ஜி அல்லது 5ஜி போனுக்கு மாறும் வி வாடிக்கையாளர்கள் ரூ. 2 ஆயிரத்து 400 வரையிலான தள்ளுபடி பெற முடியும்.
எனினும், இந்த தள்ளுபடியை வி செயலி மூலம் மேற்கொள்ளப்படும் ரிசார்ஜ்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். முதற்கட்டமாக இந்த திட்டம் தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது.மேலும் இது குறுகிய கால சலுகை என்பதால், பயனர்கள் இதனை நீண்ட காலம் கழித்து பயன்படுத்த முடியாது.
வி ஸ்மார்ட்போன் திட்டம்
பீச்சர் போன் பயனர்களை ஸ்மார்ட்போன் வாங்க செய்யும் நோக்கில் இந்த புதிய திட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே உள்ள வி பயனர்கள் 4ஜி அல்லது 5ஜி சாதனத்திற்கு அப்கிரேடு செய்யும் போது, இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தியாவில் வி நிறுவனம் 5ஜி சேவையை வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது.
இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நிறைவு பெற்றதும், 5ஜி வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இந்த சலுகை ஜூலை 4-ம் தேதி துவங்கிய நிலையில், செப்டம்பர் 30-ம் தேதி வரை வழங்கப்பட இருக்கிறது. இநத திட்டம் பஞ்சாப், அரியானா, சென்னை மற்றும் தமிழ்நாடு பகுதிகளில் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் வாசிக்கையாளர்களுக்கு முதலில் வெல்கம் எஸ்எம்எஸ் அனுப்பப்படும். இதில் ரூ. 2 ஆயிரத்து 400 ரிசார்ஜ் தள்ளுபடி பற்றிய விவரங்கள் இடம்பெற்று இருக்கும். இந்த திட்டத்தின் கீழ் தள்ளுபடி பெறுவதற்கு பயனர்கள், ரூ. 319, ரூ. 359, ரூ. 368, ரூ. 399, ரூ. 409, ரூ. 475, ரூ. 479, ரூ. 499, ரூ. 539, ரூ. 599, ரூ. 601, ரூ. 666, ரூ. 719, ரூ. 839, ரூ. 901, ரூ. 902, ரூ. 903, ரூ. 1066, ரூ. 1499, ரூ. 1999, ரூ. 2899, ரூ. 2999 மற்றும் ரூ. 3099 விலை சலுகைகளில் ஒன்றை ரிசார்ஜ் செய்து தள்ளுபடி பெறலாம்.
மேலும் பயனர்கள் வி ஆப் மூலம் ரிசார்ஜ் செய்தால் மட்டுமே தள்ளுபடி பெற முடியும். புதிய ஸ்மார்ட்போனில் ரிசார்ஜ் செய்யும் போது ரூ. 100 தள்ளுபடி கூப்பன் பெறலாம். இதற்கான கூப்பன் வி செயலியின் மை கூப்பன் பிரிவில் இடம்பெற்று இருக்கும்.