அறிந்து கொள்ளுங்கள்

வாட்ஸ்அப்-இல் அறிமுகமாகும் வேற லெவல் அம்சம் - எதற்கு தெரியுமா?

Published On 2023-05-01 04:15 GMT   |   Update On 2023-05-01 04:15 GMT
  • புதிய அம்சம் ஸ்கிரீனை பிரித்து, பல்வேறு உரையாடல்களை ஒரே சமயத்தில் பயன்படுத்த வழி செய்கிறது.
  • உரையாடல்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவற்றின் அளவு குறைந்து கொண்டே வரும்.

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு டேப்லெட் வெர்ஷனில் சைட்-பை-சைட் பெயரில் புதிய அம்சம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம் ஏற்கனவே உள்ள சாட்களை திரையின் ஒருபகுதியில் வைத்துக் கொண்டு மேலும் அதிக சாட்களுக்கு பதில் அனுப்பவும், சாட் செய்யவும் உதவுகிறது. இதன் மூலம் ஆண்ட்ராய்டு டேப்லெட் ஸ்கிரீனில் பல்வேறு சாட்களை ஒரே சமயத்தில் பயன்படுத்தலாம்.

புதிய அம்சம் ஸ்கிரீனை பிரித்து, பல்வேறு உரையாடல்களை ஒரே சமயத்தில் பயன்படுத்த வழி செய்கிறது. ஒரே சமயம் பலருக்கு குறுந்தகவல் அனுப்பும் வழக்கம் கொண்டிருப்போருக்கு இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்கும். எனினும், இவ்வாறு செய்யும் போது உரையாடல்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவற்றின் அளவு குறைந்து கொண்டே வரும்.

 

இந்த அம்சம் வேண்டாம் என்பவர்கள் அதனை டிசேபில் (செயலிழக்க) செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. இவ்வாறு செய்ய வாட்ஸ்அப் செட்டிங்ஸ் -- சாட்ஸ் ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும். புதிய அம்சத்திற்கான அப்டேட் தேர்வு செய்யப்பட்ட பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வரும் நாட்களில் அனைத்து பீட்டா பயனர்களுக்கும் இந்த அம்சம் வழங்கப்படும் என்று தெரிகிறது. இதுதவிர வாட்ஸ்அப்-இல் மல்டி-டிவைஸ் லாக்-இன் அம்சமும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதை கொண்டு பயனர்கள் பல்வேறு சாதனங்களில் ஒரே வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ பயன்படுத்த முடியும். இந்த அம்சம் உலகளவில் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

Photo Courtesy: WABetaInfo

Tags:    

Similar News