அறிந்து கொள்ளுங்கள்

விரைவில் ஆண்ட்ராய்டிலும் பயன்படுத்தலாம் - வாட்ஸ்அப்-இன் புது அப்டேட்!

Published On 2023-05-04 14:53 GMT   |   Update On 2023-05-04 14:53 GMT
  • தேர்வு செய்யப்பட்ட பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் புதிய நேவிகேஷன் பார் அம்சம் வழங்கப்பட்டுள்ளது.
  • புதிய அம்சத்தின் படி இந்த ஐகான்களை க்ளிக் செய்து சம்பந்தப்பட்ட ஆப்ஷனை இயக்க முடியும்.

வாட்ஸ்அப் தளத்தின் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் நேவிகேஷன் பார் போன்ற அம்சம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக ஐஒஎஸ் வெர்ஷனில் வழங்கப்பட்டு இருந்த நேவிகேஷன் பார் அம்சம் தற்போது ஆண்ட்ராய்டிலும் வழங்கப்பட இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் புதிய நேவிகேஷன் பார் அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

இது பற்றி WABetaInfo வெளியிட்டு இருக்கும் தகவல்களில் தேர்வு செய்யப்பட்ட பீட்டா டெஸ்டர்களுக்கு செயலியின் கீழ்புறம் நேவிகேஷன் பார் வழங்கப்பட்டுள்ளது. வரும் மாதங்களில் இந்த அம்சம் மேலும் அதிக டெஸ்டர்களுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

 

வாட்ஸ்அப் ஐஒஎஸ் வெர்ஷனின் கீழ்புறம் உள்ள நேவிகேஷன் பார் கொண்டு செயலியின் பல்வேறு ஆப்ஷன்களை எளிதில் இயக்கிவிட முடியும். தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் செயலியின் ஆண்ட்ராய்டு வெர்ஷனை ரிடிசைன் செய்து - புதிதாக நேவிகேஷன் பார் போன்ற அம்சத்தினை வழங்க இருக்கிறது.

புதிய அம்சம் குறித்து வெளியாகி இருக்கும் ஸ்கிரீன்ஷாட்களின் படி, புதிய இண்டர்ஃபேஸ் கீழ்புறத்தில் பல்வேறு டேப்கள் இடம்பெற்றுள்ளன. இதில் சாட், கம்யுனிடிஸ், கால்ஸ் மற்றும் ஸ்டேட்டஸ் போன்ற ஆப்ஷன்கள் உள்ளன. புதிய அம்சத்தின் படி இந்த ஐகான்களை க்ளிக் செய்து சம்பந்தப்பட்ட ஆப்ஷனை இயக்க முடியும்.

தற்போது இந்த அம்சத்திற்கான சோதனை துவங்கி இருக்கிறது. அந்த வகையில், இந்த அம்சம் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட சில பீட்டா டெஸ்டர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். எதிர்காலத்தில் மேலும் அதிக பீட்டா டெஸ்டர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்படும். வாட்ஸ்அப்-இன் ஸ்டேபில் வெர்ஷனில் இந்த அம்சம் எப்போது வழங்கப்படும் என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை.

Photo Courtesy: WABetaInfo

Tags:    

Similar News