search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி.
    • சோதனை செய்த பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் வருகிற 3-ந் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இன்று புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி சென்னை, மதுரை, கோவை, தூத்துக்குடி, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வாகனங்களில் பக்தர்கள் வருகை தந்து தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர்.

    காலை 6.15 மணிக்கு வனத்துறை கேட் திறந்து விடப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களின் உடைமைகளை வனத்துறையினர் சோதனை செய்து பாலித்தீன் கேரிப்பை போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

    அதோடு மது மற்றும் போதை வஸ்து பொருட்கள் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என சோதனை செய்த பிறகு அனுமதிக்கப்பட்டனர்.

    காலையில் வெயில் இல்லாமல் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் பக்தர்கள் வேகமாக மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் பகுதியில் சரிவர மழை பெய்யாததால் தாணிப்பாறையில் உள்ள வழுக்குப் பாறையில் தண்ணீர் இன்றி காட்சி அளிக்கிறது.

    புரட்டாசி மாத பிரதோஷத்தையொட்டி இன்று மாலை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகிறது. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

    மொட்டை உள்ளிட்ட நேர்த்தி கடன்களை பக்தர்கள் செலுத்தினர். காலாண்டு விடுமுறை தினமாக இருந்தும் மழை பெய்தால் அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் பக்தர்கள் கூட்டம் ஓரளவு குறைந்து காணப்பட்டது.

    நாளை மறுநாள் மகாளய அமாவாசை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 3-ந் தேதியுடன் 4 நாள் அனுமதி முடிவடைகிறது.

    • சனிக்கிழமை விஷ்ணுவுக்கு விசேஷ தினமாகக் கருதப்படுகிறது.
    • வெங்கடாஜலபதியை வழிபட்டால் எல்லா நன்மைகளும் உண்டாகும்.

    சனிக்கிழமை விஷ்ணுவுக்கு விசேஷ தினமாகக் கருதப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமை இன்னும் சிறப்புடையதாக உள்ளது.

    புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து திருப்பதி வெங்கடாஜலபதியை வழிபட்டால் எல்லா நன்மைகளும் உண்டாகும்.

    புரட்டாசி சனிக்கிழமைகளில் வெங்கடாஜலபதியை திருப்பதி சென்று முறைப்படி வழிபாடு செய்து அருள் பெற்றவர் நாரத மகரிஷி, தான் பெற்ற பலனை ஒரு ஏழைக் குயவனுக்கு அடைய வழிகாட்டினார்.


    திருமலை அடிவாரத்தில் ஒரு ஏழைக்குயவன் வாழ்ந்து வந்தான். பீமன் என்ற அவன் உடல் ஊனமுற்றவன். அவன் தினமும் மண்பாண்டங்களைச் செய்துவிற்று பிழைப்பு நடத்தி வந்தான். மண்ணினால் மலர்களைச் செய்து அம்மலர்களால் ஸ்ரீவேங்கடேஸ்வரப் பெருமானை அர்ச்சனை செய்து வந்தான்.

    ஒருநாள் அவனது கனவில் நாரத மகரிஷி தோன்றினார். புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்து வெங்கடாஜலபதியை வழிபடும் முறையை உபதேசித்தார். மலை மீது ஏற முடியாத பீமய்யா தனது குடிசையிலேயே வழிபாடு நடத்த முடிவு செய்தான்.

    மண்ணால் வெங்கடா ஜலபதியின் உருவத்தை செய்தான். மண்ணாலே மலர்கள் செய்து புரட்டாசி சனிக்கிழமைகளில் அர்ச்சித்து வழிபாடு செய்தான். முறைப்படி விரதத்தைக் கடைப்பிடித்தான்.

    அதே சமயத்தில் நாட்டை ஆண்ட அரசர் தொண்டமான் சக்கரவர்த்தி தங்க மலர்களால் சீனிவாசனைப் பூஜை செய்து வந்தான். ஒருநாள் பொன்னாலான மலர்களால் அர்ச்சனை செய்தபோது அவை மண் மலர்களாகி விழுவதைப் பார்த்தான் அதிர்ச்சி அடைந்து பயந்து கண் கலங்கினான்.

    ஒருநாள் நள்ளிரவில் ஏழுமலையான் அரசனின் கனவில் வந்து அரசே! அருகில் வசிக்கும் பீமன் என்ற குயவன் என்னைத் தினமும் பக்தியுடன் மண் மலர்களால் பூஜை செய்கிறான். ஆகையால் நீ பூஜைக்குப் பயன்படுத்தும் பொன்மலர்கள் மண் மலர்களாக மாறி விடுகின்றன என்று கூறி மறைந்தார்.

    மறுநாள் காலை இந்த உண்மையை அறியத் தொண்டமான் புறப்பட்டு சென்றான். ஒரு குடிசையில் மண்ணினால் செய்யப்பட்ட ஸ்ரீவேங்கடாஜலபதியின் சிலைக்கு எதிரில் மெய்மறந்த நிலையில் மண் பூக்களால் அர்ச்சனை செய்யும் பீமனை கண்டான்.

    குயவனுக்கு அரசன் உதவி செய்தான். சில காலம் கழிந்த பின்னர் பீமன், புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்ததன் காரணமாக மோட்ச உலகை அடைந்தான்.

    தொண்டமான் இவ்வரலாற்றை அர்ச்சகர்களுக்குச் சொல்லி சீனிவாசனுக்கு நைவேத்தியம் செய்யும் பிரசாதங்களை மண் பாண்டங்களிலேயே தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டான். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தொடங்கிய அந்த பழக்கம் இன்று வரை கோவிலில் நடைபெற்று வருகிறது.

    • இன்று கஜச்சாளயை பிரதோஷம்.
    • அருனந்தி சிவாச்சாரியார் நாயனார் குருபூஜை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு புரட்டாசி-14 (திங்கட்கிழமை)

    பிறை: தேய்பிறை.

    திதி: திரயோதசி இரவு 8.45 மணி வரை. பிறகு சதுர்த்தசி.

    நட்சத்திரம்: மகம் காலை 9.01 மணி வரை. பிறகு பூரம்.

    யோகம்: மரண, சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று கஜச்சாளயை பிரதோஷம். மாத சிவராத்திரி சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். திருமயம் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு. அருனந்தி சிவாச்சாரியார் நாயனார் குருபூஜை. திருச்சேழை ஸ்ரீசாரநாதர் திருமஞ்சன சேவை. கோவில்பட்டி பூவண்ணநாதர் புறப்பாடு. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் சிவன் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மகிழ்ச்சி

    ரிஷபம்-அசதி

    மிதுனம்-அமைதி

    கடகம்-பரிசு

    சிம்மம்-புகழ்

    கன்னி-சாதனை

    துலாம்- மகிழ்ச்சி

    விருச்சிகம்-நலம்

    தனுசு- மேன்மை

    மகரம்-களிப்பு

    கும்பம்-இன்பம்

    மீனம்-பயணம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெருமாளுக்கும் லட்சுமிக்கும் ஒரு முறை பிணக்கு ஏற்பட்டது.
    • இறுதி தரிசனமும் கோபாலன் வாரிசுகளுக்கு தான்.

    பெருமாளுக்கும் லட்சுமிக்கும் ஒரு முறை பிணக்கு ஏற்பட்டது. திருமகள் கோபித்துக்கொண்டு பூமிக்கு வந்துவிட்டார். பின்னாலேயே பெருமாளும் வந்து அவரைத்தேடும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் அவரால் லட்சுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவர் தவம் செய்தார்.

    நாளடைவில் அவர் மேல் பெரும் புற்று மூடிவிட்டது. அங்கு மாடுகளை மேய்க்கும் கோபாலன் என்பவர் தன்னுடைய பசுவைக்கொண்டு தினசரி அந்த புற்றுக்கு பால் அபிஷேகம் செய்ய, அதில் மனம் மகிழ்ந்த பெருமாள் அவனுடைய சந்ததிகளுக்கு தன்னை முதலில் தரிசனம் செய்யும் வரம் அளித்தார்.


    பெருமாளின் இந்த அருளால் கோபாலன் என்பவர் பரம்பரையில் வந்தவர்கள் தினமும் திருமலையில் முதலில் ஏழுமலையானை தரிசிக்கிறார்கள்.

    மூலஸ்தான நடை திறந்தவுடன் பெருமாளின் முதல் தரிசனம் இவர்களுக்குத்தான் கிடைக்கிறது. பின் இவர்கள் அர்ச்சகர்களின் வீடுகளுக்கு சென்று பூஜை செய்வதற்கு வரும்படி அழைக்கின்றனர். அதன் பின்னரே அர்ச்சகர்கள் கோவிலில் தங்கள் கடமையை ஏற்க வருகின்றனர்.


    இரவில் ஏகாந்த சேவை முடிந்தபின் பெருமாளின் அன்றைய இறுதி தரிசனமும் கோபாலன் வாரிசுகளுக்கு கிடைத்த பின் தான் நடை அடைக்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருப்பதியில் ஏழுமலையானை தவிர வேறு யாருக்கும் சன்னதி கிடையாது.
    • கோவிலில் திருவாய்மொழி பாடவும் ராமானுஜர் ஏற்பாடு செய்தார்.

    திருப்பதியில் ஏழுமலையானை தவிர வேறு யாருக்கும் சன்னதி கிடையாது. தாயார் சன்னதி கூட கீழே திருச்சானூரில் தான் இருக்கிறது.

    திருமலையின் ஆதிமூர்த்தியான வராக சாமி தெப்ப குளக்கரையில்தான் இருக்கிறார். ஆழ்வார்களுக்கும் இடம் கிடையாது. இதற்கு ஒரே ஒரு விதி விலக்கு, ராமானுஜர் மட்டுமே. திருவேங்கடத்தான் கோவிலுக்குள் இவருக்கு தனி சன்னதி இருக்கிறது.

    ராமானுஜர் 1017-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார். 1137-ம் ஆண்டு வரை 120 ஆண்டுகள் வாழ்ந்த இவர் வியக்கும் அளவுக்கு திருப்பதிக்குத் திருப்பணிகள் செய்திருக்கிறார். திருப்பதியை வைணவத்தலமாக நிலை நிறுத்தியவரே ராமானுjஅர் தான்.


    அவர் காலத்தில் வேங்கடமலை மீது இருப்பது சைவ கோவிலா? வைணவ கோவிலா? சிவன் சிலையா? பெருமாள் சிலையா? என்ற சர்ச்சை ஏற்பட்டது.

    ராமானுஜர் ஏழுமலையானுக்குச் சங்கு, சக்கரம் சாத்தி, பெருமாள் என்று நிலை நாட்டினார்.

    ஏழுமலையான் கோவிலில் திருவாய்மொழி பாடவும் ராமானுஜர் ஏற்பாடு செய்தார்.

    ஸ்ரீரங்கம் கோவிலின் நடைமுறைகளை இங்கும் கொண்டு வந்தார். காடு திருத்தி, வீதி அமைத்து, பெருமாள் வீதிவலம் வரவும், விழாக்கள் நடத்தவும் ஏற்பாடு செய்தார். அதிலிருந்துதான் திருமலை நகரம் தோன்றியது.

    இன்றும் அங்கு 'ராமானுஜர் வீதி' இருக்கிறது. கோவில் நந்தவனம் அமைத்து அழகுபடுத்தினார். அது 'ராமானுஜர் நந்தவனம்' என்ற பெயரில் இன்றும் இருக்கிறது.

    ஏழுமலை ஏறி திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு இலவச உணவு அளிக்கவும் ராமானுஜர் ஏற்பாடு செய்தார். அதுவே 'ராமானுஜக் கூடம் ஆனது'. இன்றும் அங்கு பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக அன்றே 'சமபந்தி' சாப்பாட்டை ராமானுஜர் தொடங்கி வைத்து விட்டார்.

    ஏழுமலையான் மார்பில் திருமகள் திருமேனியைத் தொங்க விட்டவரும், ராமானுஜரே!


    ஏழுமலையானுக்கு பச்சை கற்பூர நாமம் சாத்தவும் ராமானுஜரே ஏற்பாடு செய்தார். சைவர்கள் மீண்டும் உரிமை கொண்டாடக்கூடாது என்பதற்காகப் பளிச்சென்று பெரிய நாமமாக சாத்தினார்.

    இன்றும் மற்ற பெருமாள்களை விட ஏழுமலையானுக்குப் பெரிய பட்டை நாமம் சாத்தப்பட்டிருப்பதைப் பார்க்க முடியும். வெள்ளி தோறும் திருமஞ்சனக் காப்பு நடத்தவும், அலங்காரம் செய்யும் முறையையும், நித்திய பூஜையையும் ராமானுஜர் வகுத்துக் கொடுத்தார்.

    மலை அடிவாரத்தில் கீழ் திருப்பதி ஊரையும் உருவாக்கினார். இப்படி ஏழுமலையான் கோவிலை வைணவர்களுக்கே உரியதாக ஆக்கியதால் தான் ஏழுமலையான் கோவிலுக்குள் ராமானுஜர் சந்நிதியும் இடம் பெற்றுள்ளது.

    ராமானுசர் பிறந்த திருவாதிரை நட்சத்திரத்தில் ஒவ்வொரு மாதமும் திருப்பதியில் விழா கொண்டாடுகிறார்கள்.

    • இன்று சன்யஸ்த மகாளயம், யதி மகாளயம்.
    • திருப்போரூர் ஸ்ரீமுருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு புரட்டாசி-13 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: தேய்பிறை.

    திதி: துவாதசி இரவு 7.15 மணி வரை. பிறகு திரயோதசி.

    நட்சத்திரம்: ஆயில்யம் காலை 7.09 மணி வரை. பிறகு மகம்.

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று சன்யஸ்த மகாளயம், யதி மகாளயம். சூரியனார்கோவில் ஸ்ரீசூரியநாராயணருக்கு சிறப்பு அபிஷேகம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பருக்கும் அன்னை ஸ்ரீ காந்தியம்மனுக்கும் தாமிரபரணி ஆற்று தண்ணீரில் அலங்கார திருமஞ்சனம். சாத்தூர் ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. திருப்போரூர் ஸ்ரீமுருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீசெல்லமுத்துக்குமார சுவாமிக்கு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பணிவு

    ரிஷபம்-களிப்பு

    மிதுனம்-விருத்தி

    கடகம்-நன்மை

    சிம்மம்-பக்தி

    கன்னி-பாசம்

    துலாம்- ஆக்கம்

    விருச்சிகம்-ஆதரவு

    தனுசு- நற்செயல்

    மகரம்-சிறப்பு

    கும்பம்-துணிவு

    மீனம்-இயல்பு

    • இன்று சர்வ ஏகாதசி.
    • திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு புரட்டாசி-12 (சனிக்கிழமை)

    பிறை: தேய்பிறை.

    திதி: ஏகாதசி இரவு 6.09 மணி வரை. பிறகு துவாதசி.

    நட்சத்திரம்: ஆயில்யம் முழுவதும்.

    யோகம்: மரணயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சர்வ ஏகாதசி. குச்சனூர் ஸ்ரீசனிபகவான் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் புறப்பாடு. மதுரை ஸ்ரீகூடலழகர் புறப்பாடு. மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணிஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகள்ள பிரானுக்கு பால் அபிஷேகம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீசீனிவாசப பெருமாள் சிறப்பு ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீகாளமேகப் பெருமாள் திருமஞ்சன அலங்கார சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-துணிவு

    ரிஷபம்-தனம்

    மிதுனம்-கீர்த்தி

    கடகம்-லாபம்

    சிம்மம்-சோர்வு

    கன்னி-செலவு

    துலாம்- சாந்தம்

    விருச்சிகம்-தாமதம்

    தனுசு- உயர்வு

    மகரம்-அன்பு

    கும்பம்-உவகை

    மீனம்-பண்பு

    • இதன் பலனாக அனுமனுக்கு தெற்கு நோக்கி நரசிம்மர் தலை முளைத்தது.
    • நரசிம்மரின் முகம் பூதம், பிசாசு தொல்லைகளில் இருந்து மக்களை காப்பாற்றும்.

    ராமபிரானுக்காக பிரதிபலன் பாராமல் உழைத்த ஆஞ்சநேயருக்கு வைகுண்டத்தில் என்ன பதவி கொடுப்பது என்று ஒருமுறை ஆலோசனை நடந்தது.

    நீண்ட ஆய்வுக்கு பிறகு அனைவரும் ஒருமனதாக கடைசியில் வரப்போகும் யுகத்திற்கு, அவரை பிரம்மாவாக தேர்ந்து எடுக்கலாம் என்று முடிவு செய்தனர்.

    தேவர்களும் அதை ஏற்றுக் கொண்டனர்.

    பிறகு தேவர்கள் பூலோகம் வந்து பிரம்மனுக்குரிய சின்னங்¢களான சங்கு, சக்கரம், கிரீடம், குண்டலம் இவற்றை அனுமனிடம் அளித்தார்கள்.

    ஆனால் அனுமன் அதை ஏற்க மறுத்தார். "ராம நாமமே" எனக்கு மனநிறைவைத் தருகிறது. மேலும் எனக்கு பிரம்மாவின் வேலை என்ன என்பதே தெரியாதே! என்றார்.

    அப்போது மகாவிஷ்ணு தோன்றினார். "பிரம்மாவின் படைப்பு விந்தைகள் உனக்கே தெரியும். தெரியாததை நான் கிருஷ்ண அவதாரம் எடுக்கும் போது சொல்வேன்" என்று கூறி மறைந்தார்.

    கிருஷ்ண அவதாரத்தில் நடந்த பாரத போரில் கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு சாரதியாக இருந்து கீதா உபதேசம் செய்தார். அது அர்ஜூனனுக்கு மட்டுமல்ல. தேரில் கொடியாக இருந்த அனுமனுக்கும் தான்.

    பிரம்மாவாக ஆவதற்கு நான்கு சக்திகள் தேவை. அம்ருதம் எனப்படும் உயிருட்டும் சக்தி. விஷத்தை அடக்கும் சக்தி. நிலைநிறுத்தும் சக்தி. மற்றும் குரு மண்டலத்தில் அகர ஸ்தானம் வகிக்கும் சக்தி.

    இந்த நான்கு சக்திகளையும் பெற்றால் தான் பிரம்மா செய்யும் வேலைகளை செய்ய முடியும். இதை கருத்தில் கொண்டு தான், ஆஞ்சநேயர், நான் ராம நாமம் ஜபித்துக்கொண்டு இருக்கிறேன்.

    இதெல்லாம் எனக்கு வேண்டாம் என்று கூறினார்.

    ஆனாலும் மும்மூர்த்திகளும் கேட்கவில்லை.

    அதனால் அம்ருதம் வர்ஷிக்க ஸ்ரீ நரசிம்மத்தை குறித்து தவம் செய்தார்.

    இதன் பலனாக அனுமனுக்கு தெற்கு நோக்கி நரசிம்மர் தலை முளைத்தது.

    நரசிம்மரின் முகம் பூதம், பிசாசு தொல்லைகளில் இருந்து மக்களை காப்பாற்றும்.

    கருடனை குறித்து தவம் செய்தார். அதன் பயன் கருட முகம் கிழக்கு நோக்கி முளைத்தது.

    கருட முகம் பாம்பு போன்ற கொடிய விஷங்களில் இருந்து காப்பாற்றுகிறது.

    வராக மூர்த்தியை நோக்கி தவம் செய்யும் போது வடக்கு நோக்கி வராக முகம் முளைத்தது.

    வராக மூர்த்தியின் முகம் பக்தர்களுடைய உடல் பிணிகளை அகற்றும்.

    ஹயக்கீரிவரை நோக்கி தவம் செய்தார்.

    அதனால் அவரது முகம் மேல்புறம் தோன்றியது. ஹயக்கீரிவருடைய முகம் பக்தர்களுக்கு அஞ்ஞானத்தை போக்கி ஞானத்தை கொடுக்கக்கூடியது.

    இப்படி பிரம்ம பதவி தகுதிக்கு நிகரான அனைத்து சக்திகளும் ஆஞ்சநேயருக்கு கிடைத்தன.

    ஏற்கனவே சங்கு சக்கரம், அஷ்டதிக்பாலர்களின் சக்திகள், விஷ்ணு சக்தி, மூன்றாவது கண் எல்லாம் பெற்ற ஆஞ்சநேயருக்கு இந்த சக்திகள் மேலும் பலத்தைக் கொடுத்தன.

    இதனால் தான் ஆஞ்சநேயரை நாம் வணங்கும் போது புத்தி, பலம், புகழ் மன உறுதி, அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், விழிப்பு, வாக்கு வன்மை இத்தனையையும் நமக்கு தந்து ஆசீர்வதிப்பார் என்ற ஐதீகம் உள்ளது.

    • தர்ப்பாரணியேஸ்வரரை ஸ்தாபித்து தன் சொரூப பிம்பத்தினடியில் தன் யந்திரத்தை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார் சனி பகவான்.
    • இந்த எட்டு தலங்களில் நவக்கிரகங்கள் தூலமாகவும் மூர்த்திகளாகவும் வீற்றிருக்கின்றனர்.

    சனீஸ்வரர் -திருநள்ளாறு:தர்ப்பாரணியேஸ்வரர்

    திருநள்ளாற்றில் தர்ப்பாரணியேஸ்வரரை ஸ்தாபித்து தன் சொரூப பிம்பத்தினடியில் தன் யந்திரத்தை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார் சனி பகவான்.

    ராகுகேது: காளஹஸ்தி காளஹஸ்தீஸ்வரர்

    இவ்விரு கிரகங்களுக்கு தன் இஷ்ட தெய்வமாகிய வாயு லிங்கத்தை ஸ்தாபித்து அதன் காலடியில் தங்கள் யந்திரத்தை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இந்த எட்டு தலங்களில் நவக்கிரகங்கள் தூலமாகவும் மூர்த்திகளாகவும் வீற்றிருக்கின்றனர்.

    இந்த மகிமை அநேக சதுர்யுகங்களுக்கும் மகாபிரளய காலம் வரை நீடிக்கும் என்று திருமூலர் அருளியிருக்கும் நாடி கிரந்தத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

    • திருச்செந்தூரில் ஸ்ரீபாலசுப்பிரமணியமாய் தம்மைத்தாமே ஸ்தாபித்துக்கொண்டிருக்கிறார்.
    • சுற்றிலும் நீர் நிலையாக உள்ள ஸ்ரீரங்கத்தை தன் பிரதிஷ்டா ஸ்தலமாக சுக்கிரன் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

    புதன்: மதுரை சுந்தரேஸ்வரர்.

    சொக்கநாதரையும் மகாமாரியையும் ஸ்தாபித்து சுந்தரேஸ்sவரர் பாதத்தில் புதன் தன்னை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார்.

    குரு:திருச்செந்தூர் முருகன்.

    திருச்செந்தூரில் ஸ்ரீபாலசுப்பிரமணியமாய் தம்மைத்தாமே ஸ்தாபித்துக்கொண்டிருக்கிறார்.

    சுக்கிரன்:ஸ்ரீரங்கம் ரங்கநாதன்.

    நான்கு ராஜாக்களில் ஒருவரான ஸ்ரீரங்கநாதரை (தியாகராஜா, ரங்கராஜா, நடராஜா, கோவிந்தராஜா) காவேரி அரங்கத்தில் எழுந்தருள செய்து அவர் காலடியில் தன்யந்திரத்தை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார்.

    சில நாடிக்கிரந்தங்களில் சுக்கிரனை நீர் என்று குறிப்பிட்டிருக்கிறது.

    சுற்றிலும் நீர் நிலையாக உள்ள ஸ்ரீரங்கத்தை தன் பிரதிஷ்டா ஸ்தலமாக சுக்கிரன் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

    • சுதர்சன சுக்ராதிபதியான வேங்கடேசப்பெருமானின் காலடியில் தன் காயத்ரீயை ஸ்தாபித்துக்கொண்டிருக்கிறார் சந்திரன்.

    சூரியன்: சூரியனார் கோவில், சூரிய நாராயணார்

    மூர்த்தியின் பெயர் சிவ நாராயண சுவாமி.

    இங்கு சிவசொரூபியான சூரியன் தன் இஷ்ட தெய்வமாகிய பிரணவ சொரூபியாயும், பிரும்ம விஷ்ணு ருத்ர ரூபியாயும் இருக்கிற லிங்கத்தை ஸ்தாபித்துக்கொண்டு தமது திருக்கோலத்தையும் ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார்.

    சந்திரன், திருமலை, திருப்பதி, வேங்கடாஜலபதி,

    சேஷாசலம் என்கிற திருவேங்கட சேத்திரத்தில் சுதர்சன சுக்ராதிபதியான வேங்கடேசப்பெருமானின் காலடியில் தன் காயத்ரீயை ஸ்தாபித்துக்கொண்டிருக்கிறார் சந்திரன்.

    செவ்வாய்: பழனி தண்டாயுதபாணி.

    வடக்கில் பிரகதீஸ்வரரும், தெற்கில் காளியும் சுற்றிலும் ஆறு சேத்திரங்களையுடைய தண்டாயுதபாணியை ஸ்தாபித்து அவர் காலடியில் தன் காயத்ரீயை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார் அங்காரகன்.

    • ராமப்பிரியா ராகத்தில் ராகு கீர்த்தனைகளை பாடி பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.
    • சண்முகப் பிரியா ராகத்தில் கேது கீர்த்தனைகளை பாடி பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.

    ராகு

    ராகு பகவானுக்கு ஏதாவது ஒரு கிழமைகளில் அபிஷேகம் செய்து, கருப்பு வஸ்திரம், கோமேதக மணி நீலமந்தாரை, இலுப்பைபூ ஆகியவற்றால் அலங்காரம் செய்து ராகு மந்திரங்களை ஜெபித்து, அருகம்புல்லால் யாக்தீயை எழுப்பி உளுந்து தானியம், உளுத்தம் பருப்பு பொடி, அன்னம் ஆகியவற்றால் ஆகுதி செய்து தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேத்தியம் கொடுத்து, ராமப்பிரியா ராகத்தில் ராகு கீர்த்தனைகளை பாடி பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.

    இப்படி செய்தால் ராகு கிரகதோஷம் நீங்கும்.

    ராகு-திருநாகேஸ்வரம்

    கும்பகோணத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ராகு பகவானுக்கு ராகு காலத்தில் பால் அபிஷேகம் செய்து பூஜை செய்யப்படுகிறது.

    கேது

    கேது பகவானுக்கு ஏதாவது ஒரு கிழமைகளில் அபிஷேகம் செய்து பலவர்ண ஆடை வைடூர்ய மணி செவ்வல்லி மலர் ஆகியவற்றால் அலங்காரம் செய்து கேது மந்திரங்களை ஓதி தருப்பையினால் யாகத்தீயை எழுப்பி கொள்ளு தானியம், கொள்ளு பொடி, அன்னம் ஆகியவற்றைல் ஆகுதி பண்ணித் தீபாராதனை செய்து அர்ச்சனை செய்து தூப தீப நைவேந்தியம் கொடுக்க சண்முகப் பிரியா ராகத்தில் கேது கீர்த்தனைகளை பாடி பிரார்த்தனை செய்து கொண்டு கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும்.

    இப்படி செய்தால் கேது கிரக தோஷம் நீங்கும்.

    குறிப்பு: நவக்கிரக கீர்த்தனைகளை முத்துசாமி தீட்சரும் முத்தையா பாகவதரும் இயற்றி இருக்கிறார்கள்.

    ×