என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கர்நாடகா
- கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.
- பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. தலைநகர் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்கள், மலைநாடு மாவட்டங்கள், பெலகாவி உள்ளிட்ட வடகர்நாடக மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
இதன் காரணமாக ஏற்கனவே பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. மரங்களும், மின்கம்பங்களும் முறிந்து விழுந்துள்ளன.
பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தும் உள்ளன. ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
மேலும் கரையோர கிராமங்களையும், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை தீயணைப்பு படை வீரர்கள், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் படகு, பரிசல், ரப்பர் படகு உள்ளிட்டவைகளில் சென்று மீட்டு வருகிறார்கள்.
விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்து பயிர்களை மூழ்கடித்ததால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
இதுஒருபுறம் இருக்க சார்மடி, சிராடி காட் உள்பட மாநிலத்தில் உள்ள பல மலைப்பாதைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு இருப்பதாலும், மேலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாலும் மலைப்பாதை வழியாக வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
உத்தர கன்னடாவில் ஏற்கனவே கனமழையால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கனமழையால் உத்தரகன்னடா மாவட்டத்தில் 92 வீடுகள் இடிந்துள்ள நிலையில் நேற்று கார்வார் தாலுகா சென்டியா கிராமத்தில் 4 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அந்த 4 வீடுகளையும் சுற்றி 3 அடி உயரத்திற்கு மேல் வெள்ளம் தேங்கி நின்றது.
உத்தரகன்னடா மாவட்டத்தில் இன்னும் 439 இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், அதனால் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு அரசு முகாம்களில் தங்க வைத்து இருப்பதாகவும் மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.
இதேபோல் பெலகாவி மாவட்டத்திலும் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் பெலகாவி மாவட்டத்தில் ஓடும் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் விளைநிலங்களில் வெள்ளம் புகுந்து பயிர்களை மூழ்கடித்ததால் பல ஏக்கர் நெற்பயிர்கள் நாசமாகின. வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இன்னும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
- இந்த சம்பவம் ஜூன் 26 ஆம் தேதி நடந்துள்ளது.
- இந்த வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு பெண் ஒருவர் போன் செய்து, மும்பை செல்லும் எனது காதலர் பையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்தார்.
இதனையடுத்து, விமான நிலைய ஊழியர்கள் அந்த நபரை தேட ஆரம்பித்தனர். அந்த நபரைக் கண்டுபிடித்ததும், அதிகாரிகள் அவரை சோதனை செய்தனர், ஆனால் வெடிகுண்டு எதுவும் அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை.
இதை தொடர்ந்து இந்த வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண்ணும் அதே விமானநிலையத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த பெண்ணும் அவரது காதலரும் கெம்பேகவுடா விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு வெவ்வேறு விமானங்களில் புறப்பட தயாராக இருந்தனர். ஆனால் தனது காதலன் மும்பை செல்வதை அந்த பெண் விரும்பவில்லை. அதனால் தனது காதலனை பெங்களூரூவில் இருந்து மும்பைக்கு செல்லும் விமானத்தில் ஏறாமல் தடுக்கவே அப்பெண் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார் என்று அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இந்த சம்பவம் ஜூன் 26 ஆம் தேதி நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்துள்ள அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மக்களவை தேர்தலில் பாஜக 19 இடங்களில் வெற்றி பெற்றது.
- இந்த 19 இடங்களில் வெற்ற பெற்றதுடன், 142 சட்டமன்ற இடங்களில் அதிகமான வாக்குகள் பெற்றோம்.
கர்நாடக மாநில மக்கள் பயனற்ற வாக்குறுதிகள், பண பலம் மற்றும் அதிகார பலத்தை புறந்தள்ளியுள்ளனர். மக்களவை தேர்தலில் மக்கள் பாஜவை தேர்ந்தெடுத்துள்ளனர். தற்போது தேர்தல் நடத்தப்பட்டால் 150 இடங்களில் வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எடியூரப்பா கூறியதாவது:-
சித்தராமையாவுக்கு தைரியம் இருந்தால் சட்டமன்றத்தை கலைத்துவிட்டு, மீண்டும் தேர்தல் நடத்த தயாரா? என சாவல் விடுகிறேன். அதன்பிறகு உங்களுடைய நிலை என்ன? என்பது உங்களுக்கு தெரியவரும். தேர்தல் நடத்தப்பட்டால் பாஜக 140-ல் இருந்து 150 வரையிலான இடங்களை பிடிக்கும்.
மக்களவை தேர்தலில் பாஜக 19 இடங்களில் வெற்றி பெற்றது. மேலும் 142 சட்டமன்ற இடங்களில் அதிகமான வாக்குகளை பெற்றோம். ஒரு வருடத்திற்கு முன்னதாக 134 இடங்களில் வெற்றி பெற்று கார்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. தற்போது சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட பல அமைச்சர்களின் சட்டமன்ற இடங்களில் பாஜக உடன் குறைவான வாக்குகளை பெற்றுள்ளது.
இது ஊழலில் ஈடுபட்டு, மக்களின் நலனை புறந்தள்ளி ஒரு வருடத்திற்குள் மக்கள் ஆதரவை இழந்துள்ளது என்பதை காண்பிக்கிறது. இதன்மூலம் ஆட்சியில் தொடர் தார்மீக உரிமை இல்லை. மக்கள் பண அதிகாரம் உள்ளிட்டவைகளை புறந்தள்ளி, மோடியின் மீது தங்கள் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.
பயனற்ற வாக்குறுதிகள் காரணமாக அனைத்து பொருட்களின் விலைவாசியையும் அதிகரித்து விட்டது. பணவீக்கத்திற்கு அடித்தளத்தை அமைத்தது.
இவ்வாறு எடியூரப்பா தெரிவித்தார்.
- தர்ஷனின் ரசிகர் ரேணுகாசுவாமி பவித்ரா கவுடாவுக்கு அருவெறுப்பான மெசேஜ்களை அனுப்பியுள்ளார்.
- இதனால் தர்ஷன் திட்டமிட்டு ரேணுகாசுவாமியை கொலை செய்து உடலை மறைத்துள்ளார்.
கன்னடத்தில் பிரபல நடிகராக திகழ்ந்து வருபவர் தர்ஷன். இவரது தோழி பவித்ரா கவுடா. தர்ஷனின் ரசிகர் ரேணுகாசுவாமி பவித்ரா கவுடாவுக்கு மோசமான வகையில் மெசேஜ் அனுப்பியதாக தெரிகிறது. இதனால் தர்ஷன் பவித்ரா கவுடா உடன் இணைந்து திட்டமிட்டு ரேணுகாசுவாமியை கொலை செய்து உடலை மறைத்துள்ளார்.
போலீசார் விசாரணையில் தர்ஷன், பவித்ரா கவுடா மற்றும் 15 பேரை இந்த வழக்கில் கைது செய்துள்ளனர். தர்ஷன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தர்ஷனின் மனைவி விஜய லட்சுமி, பெங்களூரு போலீஸ் கமிஷனர் பி.தயானந்தாவிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதனால் பவித்ரா கவுடாவை தர்ஷனின் மனைவி எனக் குறிப்பிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பெங்களூரு போலீஸ் கமிஷனருக்கு எழுதிய கடிதத்தில் விஜயலட்சுமிக்கு கூறியிருப்பதாவது:-
பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது நீங்கள் தவறாக அறிக்கையை கொடுத்துள்ளீர்கள். பவித்ரா தர்ஷனின் மனைவி என குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த தவறு கர்நாடகா உள்துறை மந்திரி மற்றும் தேசிய மீடியாக்கள் தொடர்ந்து செய்தது. ரேணுகாசுவாமி கொலை வழக்கில் தர்ஷன் தம்பதி கைது என கூறப்பட்டு வருகிறது.
இது எதிர்காலத்தில் தனக்கும் தன்னுடைய மகன் வினீஷ் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். பவித்ரா கவுடா சஞ்சய் சிங்கை திருமணம் செய்துள்ளார். அவர்களுடைய மகள் அவருடன் இருக்கிறார். இந்த உண்மைகள் போலீஸ் பதிவுகளில் துல்லியமாக பதிவு செய்யப்பட வேண்டும்.
நீதித்துறை மீது முழு நம்பிக்கை வைத்துள்ளேன். சட்டம் அதன் கடமையை செய்யும் என நம்புகிறேன். பவித்ரா என்னுடைய கணவரின் தோழி என்பதுதான் உண்மை. அவர் மனைவி அல்ல. நான் மட்டும்தான் சட்டப்பூர்வமாக தர்ஷனை திருமணம் செய்து கொண்டேன். எங்களுடைய திருமணம் 2023-ம் ஆண்டு மே மாதம் தரம்சாலாவில் நடைபெற்றது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
- சன்னப்பட்டினம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.
- மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் சன்னப்பட்டினம் தொகுதி எம்..எல்.ஏ.வாக இருந்த மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய மந்திரியானார்.
இதையடுத்து சன்னப்பட்டினம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. எனவே இந்த தொகுதியில் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிட விருப்பம் இல்லை என்று தெரிவித்தார்.
இதையடுத்து இந்த தொகுதியில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகளும், பெங்களூரு ஊரக தொகுதி எம்.பி. டாக்டர் சி.என். மஞ்சுநாத்தின் மனைவியுமான அனசுயா போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
நடந்து முடிந்த தேர்தலில் அவர் வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்தார். மேலும் பிரசாரத்தின் போது அவர் வகுத்த வியூகம் ஆகியவை வெற்றிக்கு கை கொடுத்தது. இதையடுத்து அனசுயா வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு இருப்பதாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி இருக்கிறது.
- உண்மையான மொழிபெயர்ப்பு “அதிக வேகமே விபத்துகளுக்கு காரணம்" ஆகும்.
- பதிவு வைரலாகி பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், அதே சமயம் பாராட்டும் விதமாகவும் அமையும். மேலும் சில வீடியோக்கள் சர்ச்சைக்குள்ளாகும். அந்த வகையில், கர்நாடகாவில் நெடுஞ்சாலை சார்பில் நிறுவப்பட்டுள்ள வழிகாட்டி பலகை தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கர்நாடகாவின் குடகு அருகே நெடுஞ்சாலை சார்பில் நிறுவப்பட்டுள்ள வழிகாட்டி பலகை கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் உள்ளது. "அவசரவே அபகதக்கே கரனா" என்ற கன்னட சொற்றொடரின் தவறான மொழிபெயர்ப்பாக ஆங்கிலத்தில் "அவசரமாக ஒரு விபத்தை உண்டாக்குங்கள்" என்று எழுதப்பட்டிருந்தது. இதன் உண்மையான மொழிபெயர்ப்பு "அதிக வேகமே விபத்துகளுக்கு காரணம்" ஆகும்.
கொடகு கனெக்ட் என்ற பயனர் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள இந்த பதிவு வைரலாகி பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு பயனர், இதற்கும் கூட chatgpt-ஐ பயன்படுத்துக்கள் என்றும் மற்றொருவர் "அவசரத்திற்குப் பிறகு ஒரு கமா வைத்தால் பொருள் முற்றிலும் மாறும்" என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- கழிவறையில் இருந்து குழந்தை சத்தம் கேட்பது தெரியவந்தது.
- மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள், மாவட்ட குழந்தைகள் நலப்பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் சீனிவாசபூர் தாலுகா பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவர் வழக்கம்போல் கல்லூரிக்கு வந்தார். அப்போது திடீரென வயிற்று வலியால் அவதிப்பட்ட மாணவி கல்லூரி வளாகத்தில் உள்ள கழிவறைக்கு சென்றார்.
அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. அப்போது மாணவி மயக்கத்தில் இருந்தார். இந்த நிலையில் குழந்தையின் அழுகுரல் சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்ததால் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் எங்கிருந்து குழந்தை அழும் சத்தம் வருகிறது என்று தேடினர். அப்போது கழிவறையில் இருந்து குழந்தை சத்தம் கேட்பது தெரியவந்தது.
இதையடுத்து மாணவி மற்றும் குழந்தையை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் சார்பில் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கல்லூரிக்கு சென்ற மாணவிக்கு குழந்தை பிறந்த தகவல் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். மேலும் இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள், மாவட்ட குழந்தைகள் நலப்பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக மாணவியிடம் கோலார் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். மாணவி கொடுத்த தகவலின் அடிப்படையில் அனில்குமார் (21) என்ற வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி கழிவறையில் மாணவி குழந்தை பெற்ற சம்பவம் கல்லூரி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
- நீலம், டார்ட்ராசைன் போன்ற ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டன.
- செயற்கை வண்ணங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடக சுகாதாரத்துறை சமீபத்தில் மாநிலம் முழுவதும் உள்ள பல உணவகங்களில் இருந்து சுமார் 250 பானி பூரி மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்தது. இதில் 40 மாதிரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் இருப்பது உறுதியானது.
மேலும் இந்த ஆய்வில் நீலம், டார்ட்ராசைன் போன்ற ரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டன.
கோபி மஞ்சூரியன் மற்றும் கபாப் போன்ற பிற தின்பண்டங்களில் இதுபோன்ற காரணிகள் இருந்ததால் அவற்றை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டதை போல் பானிபூரியிலும் புற்றுநோய் நிறமூட்டும் காரணிகள் இருப்பதால் கர்நாடக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சகம் கேட்டுகொண்டுள்ளது.
இதனை தொடர்ந்து கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் முழுமையான பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
அதே நேரத்தில் பொதுமக்கள் தங்கள் உடல் நலனில் தனி அக்கறை எடுத்து உடல் நலத்தை பாதிக்கும் உணவுப் பொருட்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். தூய்மை மற்றும் சுகாதாரத்திற்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த மாத தொடக்கத்தில் பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியன், கபாப் தயாரிப்பில் செயற்கை வண்ணங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பலர் விரும்பி உண்ணும் பிரபலமான வட இந்திய உணவான பானிபூரியில் புற்றுநோயை உண்டாக்கும் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் பானிபூரியை விரும்பி உண்ணும் நபர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பானிபூரியை தடை செய்யவும் சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும் சிலர் ஆதரவு அளித்து வருகின்றனர்.
பெங்களூரு:
நடிகை பவித்ரா கவுடாவுக்கு இன்ஸ்டாகிராமில் போலி கணக்கில் இருந்து ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாக சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இதில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 17 பேர் கைதாகி உள்ளனர்.
தற்போது நடிகர் தர்ஷன் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கைதி எண் 6,106 வழக்கப்பட்டுள்ளது. அவரது ரசிகர்கள் பலரும் இந்த எண்ணை தங்கள் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுகின்றனர். மேலும் உடலில் பச்சை குத்துவது உள்ளிட்ட பல்வேறு விதங்களில் நடிகர் தர்ஷனின் கைதி எண்ணை மகிழ்ச்சியுடன் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் தர்ஷனின் ரசிகர் ஒருவர் தனது ஒரு வயது குழந்தைக்கு வினோத முறையில் 'போட்டோசூட்' நடத்தி உள்ளார்.
அதாவது தனது குழந்தைக்கு சிறை கைதிகளின் உடையை அணிவித்துள்ளார். அதில் நடிகர் தர்ஷனின் கைதி எண் 6,106 பொறிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் அருகே கைதிகளுக்கான கைவிலங்கு, ஜெய் டி-பாஸ் போன்ற வசனங்களை வரைந்து இருந்தார். அதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும் சிலர் ஆதரவு அளித்து வருகின்றனர்.
- தவறு செய்த பைக் ரைடர் எந்த உதவியும் செய்யவில்லை.
- பதிவு வைரலானதை அடுத்து பயனர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
கூகுள் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியரான அமிஷா அகர்வால் என்பவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவு இப்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் அடிப்பட்ட கால்கள் மற்றும் சிகிச்சைக்கு பிறகான கால்கள் என புகைப்படங்களை பகிர்ந்து "இனி ஒருபோதும் ரேபிடோ பைக்கை எடுக்க வேண்டாம்" என பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் சம்பவம் குறித்து கூறியுள்ளதாவது:- "வெள்ளிக்கிழமை இரவு ரேபிடோ பைக்கை முன்பதிவு செய்தேன். ஓட்டுநர் போக்குவரத்து விதிகளை மீறி அதிவேகமாக ஓட்டினார். கடுபீசனஹள்ளி அவுட்டர் ரிங் ரோட்டில், இன்டிகேட்டர் பயன்படுத்தாமல் திடீரென சர்வீஸ் லேனுக்கு மாறினார். இதனால் பின்னால் வந்த கார் கட்டுப்பாடு இழந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் சாலையில் வீழ்ந்தோம்.
இதில் மோசமான விஷயம் என்னவென்றால், தவறு செய்த பைக் ரைடர் எந்த உதவியும் செய்யவில்லை. ரைடர் பயணத்தை முடித்துவிட்டு என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் ஓடிவிட்டார். மாறாக கார் டிரைவர்தான் உதவினார்.
இச்சம்பவம் குறித்து ரேபிடோவின் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்டபோது, காப்பீட்டு நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு கூறினர்.
"ரேபிடோவுக்கு எதிராக என்னிடம் எதுவும் இல்லை, ஆனால் பைக் ஓட்டுபவர்கள் பொதுவாக மிகவும் கவனக்குறைவாக ஓட்டுகிறார்கள். இதனால் தங்கள் வாழ்க்கையை விரும்புவோர் இருசக்கர வாகனங்களை முன்பதிவு செய்வதைத் தவிர்க்குமாறு அனைவருக்கும் அறிவுறுத்துகிறேன்," என்று கூறியுள்ளார்.
அவரது இந்த பதிவு வைரலானதை அடுத்து பயனர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- மத்திய தொழில்பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆகாங்ஷாவின் பகிர்வுக்கு பதில் அளித்து எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளனர்.
- பதிவு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்று வைரலானது.
தொலை தூரங்களுக்கு பயணம் செல்லும் போது எதிர்பாராதவிதமாக தங்களின் விலை உயர்ந்த பொருட்கள் தொலைந்து போனால் அந்த குடும்பத்தினருக்கு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தும். அந்த வகையில் மும்பையை சேர்ந்த ஆகாங்ஷா சிங் என்பவர் பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவரது வைர மோதிரம் தொலைந்து போய் விட்டது. இதனால் அவர் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார்.
இதுகுறித்து அவர் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் விமான நிலையம் முழுவதும் தேடிப்பார்த்தனர். அப்போது அந்த பெண் தொலைத்த வைர மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஆகாங்ஷா சிங் தனது எக்ஸ் தளத்தில் இந்த சம்பவத்தை விவரித்து பதிவிட்டுள்ளார். அதில், கெம்பேகவுடா விமான நிலையத்தில் எனது வைர மோதிரத்தை இழந்தேன். ஆனால் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகளான ராஜேஷ் சிங் மற்றும் வினய்குமார் ராய் ஆகியோரின் உதவியுடன் எனது மோதிரத்தை கண்டுபிடிக்க முடிந்தது. அவர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் உதவும் இயல்புக்கு நன்றி என பதிவிட்டு உள்ளார். அவரின் இந்த பதிவு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்று வைரலானது.
இந்நிலையில் மத்திய தொழில்பாதுகாப்பு படை அதிகாரிகள் ஆகாங்ஷாவின் பகிர்வுக்கு பதில் அளித்து எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளனர். அதில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு அன்பான வாழ்த்துகள். உங்கள் பயணத்தை பாதுகாப்பாகவும், சுமூகமாகவும் உறுதிப்படுத்துவதற்கு சி.ஐ.எஸ்.எப். எப்போதும் உதவியாக இருக்கும். உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களுக்கு நன்றி என கூறியுள்ளனர்.
- கூட்டத்தில் பல்வேறு பரபரப்பு விவாதங்கள் நடந்ததாக கூறப்படுகிறது.
- கர்நாடகாவில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் பதவி காலியாக இல்லை.
பெங்களூரு:
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து ஓராண்டு ஆகிறது. முதல்-மந்திரியாக சித்தராமையா உள்ளார். துணை முதல்-மந்திரியாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான டி.கே.சிவக்குமார் உள்ளார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது நீண்ட இழுபறிக்கு பிறகு சித்தராமையாவுக்கு முதல்-மந்திரி பதவியும், டி.கே.சிவக்குமாருக்கு துணை முதல்-மந்திரி பதவியும் வழங்கப்பட்டது. அப்போது முதல்-மந்திரி பதவி ஆளுக்கு 2½ ஆண்டுகள் அதிகாரத்தை பகிா்ந்து அளிப்பது என்று வாய்மொழியாக ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் அவ்வப்போது சித்தராமையாவின் ஆதரவாளர்கள் கூடுதல் துணை முதல்-மந்திரி பதவி உருவாக்க வேண்டும் என்றும், டி.கே.சிவக்குமார் ஆதரவாளர்கள் அவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்கவும் போர்க்கொடி தூக்கி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்-மந்திரி சித்தராமையாவின் ஆதரவு மந்திரி கே.என்.ராஜண்ணா மேலும் 3 துணை முதல்-மந்திரி பதவிகளை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே வழங்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அதாவது துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், கட்சியின் மாநில தலைவராகவும் உள்ளார். அவருக்கு ஒரு பதவி மட்டுமே வழங்க வேண்டும் என மந்திரி கே.என் ராஜண்ணா மறைமுகமாக கூறி வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் கே.என்.ராஜண்ணாவின் பேச்சுக்கு டி.கே.சிவக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்றிருந்த முதல்-மந்திரி சித்தராமையா, முதல்-மந்திரி மாற்றம் பற்றி டி.கே.சிவக்குமாரின் தூண்டுதலின் பேரில் மடாதிபதி, சிலர் பேசி வருவதாக கட்சி மேலிட தலைவர்களிடம் புகார் அளித்து இருந்தார்.
அதுபோல் டி.கே.சிவக்குமாரும் டெல்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம், கூடுதல் துணை முதல்-மந்திரி பதவி கேட்டு மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் பேசி வருவதை கூறியதுடன், எக்காரணம் கொண்டும் துணை முதல்-மந்திரிகளை கூடுதலாக நியமிக்க கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாா் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 190 நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் கலந்துகொண்ட டி.கே.சிவக்குமார் ஆதரவாளர்கள் அவருக்கு முதல்-மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். மேலும் சில நிர்வாகிகள், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி பேசும் மந்திரிகளுக்கு நோட்டீஸ் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
இதுகுறித்து விரைவில் முடிவு செய்வதாக டி.கே.சிவக்குமாா் உறுதியளித்தார். சில மந்திரிகள் தன்னை பணிய வைத்துவிடலாம் என்று கருதி பேசுகிறார்கள். அதற்கெல்லாம் பணிந்து செல்பவன் நான் கிடையாது என்று டி.கே.சிவக்குமார் கட்சி நிர்வாகிகளிடம் கூறியதாக கூறப்படுகிறது.
இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை.
அதனால் முதல்-மந்திரி சித்தராமையா இல்லாமல் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு பரபரப்பு விவாதங்கள் நடந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே கர்நாடக நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் பைரதிசுரேஷ் கூறியதாவது:-
கர்நாடகாவில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் பதவி காலியாக இல்லை. கூடுதலாக 4 அல்லது 5 துணை முதல்-அமைச்சர்கள் பதவி ஏற்பதா என்பது குறித்து கட்சியின் மேலிடம் முடிவு செய்யும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்