என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கர்நாடகா
- பெண் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது சோப்பினால் தவறி விழுந்து கீழே விழ முற்பட்டபோது, மொட்டை மாடியின் கம்பியை பிடித்துக்கொண்டார்.
- அந்தப் பெண் உடனடியாக மீட்கப்பட்டு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
பெங்களூருவில் பெண் (27) ஒருவர் வீட்டு மொட்டை மாடியில் துணி துவைத்துக்கொண்டிருந்தார். அப்போது அவரது கணவரும் மாடியில் இருந்துள்ளார்.
அந்த பெண் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது சோப்பினால் தவறி விழுந்து கீழே விழ முற்பட்டபோது, மொட்டை மாடியின் கம்பியை பிடித்துக்கொண்டார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் கணவர் அவரை மேலே இழுக்க முயன்றபோது, அந்தப் பெண் பிடியை இழந்து கீழே விழுந்தார்.
அக்கம்பக்கத்தினர் மற்றும் பல உள்ளூர்வாசிகளின் உதவியுடன் அந்தப் பெண் உடனடியாக மீட்கப்பட்டு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் தீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த பெண் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து டிஜே ஹாளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துணி துவைத்துக் கொண்டிருந்த பெண் தவறி கிழே விழும் பதறவைக்கும் காட்சி..#bangalore pic.twitter.com/95r7eMGo6X
— Thanthi TV (@ThanthiTV) June 22, 2024
- கிரிக்கெட் வீரர் சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
- ஜான்சனின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேவிட் ஜான்சன் தனது 52வது வயதில் பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டேவிட் ஜான்சன், இன்று பெங்களூருவில் உள்ள அவரது அபார்ட்மெண்டிற்கு வெளியே இறந்து கிடந்துள்ளார்.
டேவிட் ஜூட் ஜான்சன், கொத்தனூரில் உள்ள கனக ஸ்ரீ லேஅவுட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் வீரர் சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், அவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், டேவிட் ஜூன் ஜான்சனின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் கர்நாடக வேகப்பந்து வீச்சாளர் டேவிட் ஜான்சன். 1996- 97 சீசனில் இந்தியாவுக்காக விளையாடிய இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார் டேவிட் ஜான்சன். ரஞ்சி டிராபியில் கேரளாவுக்கு எதிராக பத்து விக்கெட்டுகளை வீழ்த்தி புகழ் பெற்றார்.
இதேபோல், உள்நாட்டு சுற்றுகளில் கர்நாடகாவுக்காக 70 க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளார். 1996-ல் அக்டோபரில் டெல்லியில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சர்வதேச அரங்கில் அறிமுகமானார். காயம்பட்ட ஜவகல் ஸ்ரீநாத்திற்கு பதிலாக அவர் அணியில் இடம்பிடித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் டேவிட் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 16 ஓவர்கள் வீசினார் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர் மைக்கேல் ஸ்லேட்டரை டக் அவுட் செய்தார்.
அவர் அதே ஆண்டில் அடுத்த சுற்றுப்பயணத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மற்றொரு டெஸ்டில் விளையாடினார். ஆனால் டர்பனில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே பெற முடிந்தது.
அவரது சர்வதேச வாழ்க்கை இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே நீடித்தது. ஆனால் அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் கர்நாடகாவுக்காக தொடர்ந்து விளையாடினார்.
- கன்னட சின்னத்திரை வைஷ்ணவி கவுடா தொடர்பான ஒரு 'டீப் பேக்' ஆபாச வீடியோ வெளியாகி உள்ளது.
- பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைப் ஆகியோரின் முகத்தை பயன்படுத்தி 'டீப் பேக்' ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்தநிலையில், கன்னட சின்னத்திரை வைஷ்ணவி கவுடா தொடர்பான ஒரு 'டீப் பேக்' ஆபாச வீடியோ வெளியாகி உள்ளது. அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட அவரது புகைப்படங்களை மர்ம நபர்கள் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளனர்.
அவற்றைப் பார்த்த நடிகை வைஷ்ணவி கவுடா அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுபற்றி பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது கன்னட சின்னத்திரை நடிகைகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- முதலில் ஆடிய இந்திய அணி 325 ரன்களைக் குவித்தது.
- அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 312 ரன்களை மட்டுமே எடுத்தது.
பெங்களூரு:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 3 விக்கெட் இழந்து 325 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடி சதமடித்தார். மந்தனா 136 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஹர்மன்பிரித் கவுர் 103 ரன்னிலும், ரிச்சா கோஷ் 25 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோன்குலுலேகோ ம்லபா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. மரிஜான் காப் அதிரடியாக விளையாடி 114 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
தொடக்க வீராங்கனையான லாரா வோல்வார்ட் பொறுப்புடன் ஆடி சதமடித்து 135 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். அணியை வெற்றிக்கு மிக அருகில் அழைத்துச் சென்றார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அத்துடன், ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.
இந்திய அணி சார்பில் பூஜா வஸ்த்ராகர், தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- கடந்த 15-ம் தேதி முதல் கர்நாடகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது.
- பெங்களூருவில் கடந்த 10 ஆண்டுக்கு முன் குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவி ஏற்ற ஓராண்டுக்குள் 5 உத்தரவாத திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டங்களால் கர்நாடக அரசு நிதிச்சுமையில் சிக்கித்தவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.
இதற்கிடையே, கடந்த 15-ம் தேதி முதல் கர்நாடகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெங்களூருவில் குடிநீர் கட்டணத்தை உயர்த்த கர்நாடக அரசும், பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியமும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், குடிநீர் கட்டணத்தை உயர்த்த பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் முடிவு செய்துள்ளது. பெங்களூரு நகர வளர்ச்சித் துறையை தன்வசம் வைத்துள்ள துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார், குடிநீர் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக, துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியதாவது:
கடந்த 10 ஆண்டுகளாக பெங்களூருவில் குடிநீர் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதனால் பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது.
புதிய திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்துக்கு எந்த வங்கியும் நிதியளிக்க முன்வருவதில்லை.
70 சதவீதம் மின் கட்டணம் மற்றும் தொழிலாளர் செலவு. ஒவ்வொரு ஆண்டும் பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் ஒரு பெரிய இழப்பை சந்தித்து வருகிறது. இழப்பை ஈடுகட்ட மாதாந்திர குடிநீர் கட்டணத்தை உயர்த்த உள்ளோம் என தெரிவித்தார்.
பெங்களூரு நகரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2014-ம் ஆண்டு குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- எச்.டி.குமாரசாமி மக்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து சன்னபட்னா தொகுதிக்கு இடைத்தேர்தல்.
- சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை.
கர்நாடக மாநிலம் ராமாநகரா மாவட்டத்தில் உள்ள சன்னபட்னா தொகுதியின் பிரதிநிதியான ஜேடி(எஸ்) தலைவரும், மத்திய அமைச்சருமான எச்.டி.குமாரசாமி, சமீபத்தில் நடத்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்று மக்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, சன்னபட்னா தொகுதி காலியானது. இதனால், அந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இந்த சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில், சன்னபட்னா இடைத்தேர்தலில் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, கருத்து தெரிவித்த துணை முதல்வர் டி.கே சிவக்குமார், " கர்நாடகா மாநிலத்தில் உள்ள சன்னபட்னா சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை மறுக்கவில்லை. கட்சி மற்றும் வாக்காளர்களின் முடிவுக்கு கட்டுப்படுவேன்" என்றார்.
மேலும் அவர், "என்னுடைய இதயத்தில் சன்னபட்னா தொகுதி எப்போதும் உள்ளது. எனக்கு அரசியல் பிறப்பைக் கொடுத்த இடம் சன்னபட்னா தான்.
எனது சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சன்னப்பட்னா தொகுதியில் நான் நான்கு முறை வெற்றி பெற்றுள்ளேன். அங்குள்ள மக்கள் என்னை ஆசீர்வதித்துள்ளனர்.
சன்னபட்னாவும் முன்பு சாத்தனூரில் ஒரு பகுதியாக இருந்தது (சிவகுமார் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட பழைய பகுதி). நான் சன்னபட்னாவை விரும்புகிறேன். நான் சன்னபட்னாவுக்கு உதவ விரும்புகிறேன். நான் சன்னபட்னாவை மாற்ற விரும்புகிறேன்.
இக்கட்டான காலத்திலும் சன்னப்பட்டின மக்கள் எங்களுக்கு சுமார் 80,000 வாக்குகளை (சமீபத்திய மக்களவைத் தேர்தலில்) அளித்துள்ளனர்.
அங்கு மாற்றத்தை கொண்டு வந்து அங்குள்ள மக்களுக்கு நான் செலுத்த வேண்டிய கடனை அடைக்க வேண்டும். கனகபுரத்தில் நான் செய்ததை விட அதிக வளர்ச்சியை அங்கு செய்ய வாய்ப்பு உள்ளது" என்றார்.
அவரது சகோதரரும், முன்னாள் எம்.பி.யுமான டி.கே.சுரேஷ், சன்னப்பட்டனத தொகுதியில் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு, "அது குறித்து முடிவு செய்யப்படவில்லை. எது எப்படியோ ஆனால் எனக்கே ஓட்டு கேட்கிறேன்" என்றார்.
சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பெங்களூரு ஊரக மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த சுரேஷ், சன்னபட்னாவில் களமிறக்கப்படலாம் என்று முன்னதாகவே பேசப்பட்டாலும், அவரை பழிவாங்க சிவக்குமார் களத்தில் இறங்கலாம் என்ற யூகங்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் குறிப்பாக பெரும் கட்சியினரிடையே பரவி வருகிறது.
சிவக்குமார் சன்னபட்னா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், அவர் தற்போது பிரதிநிதித்துவப்படுத்தும் கனகபுரா சட்டமன்றத் தொகுதியை சுரேஷுக்காக விட்டுக்கொடுப்பார் என்று கூறப்படுகிறது.
- பெங்களூருவில் வசிக்கும் ஒரு இளம் தம்பதியினர் இருவருமே சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.
- பதிவு சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மாதம் ரூ.7 லட்சம் சம்பளம் வாங்கும் ஒரு தம்பதியினர் பணத்தை செலவு செய்வது எப்படி? என ஆலோசனை கேட்டதாக அதிகாரி ஒருவர் செய்துள்ள பதிவு எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது. இந்திய வல்லுனர்களின் சம்பளம், பணியிடங்கள் மற்றும் நிதி பற்றி விவாதிக்கும் கிரேப்வைன் தளத்தின் இணை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சவுமில் திரிபாதி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
பெங்களூருவில் வசிக்கும் ஒரு இளம் தம்பதியினர் இருவருமே சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயர்களாக வேலை பார்த்து வருகின்றனர். அவர்களின் மாத வருமானம் ரூ.7 லட்சமும், வருடாந்திர போனசும் அடங்கும். அதில் இருந்து ரூ.2 லட்சத்தை மியூசுவல் பண்டுகளில் முதலீடு செய்கிறார்கள். அவர்களின் மாத செலவுகள் ரூ.1.5 லட்சம் ஆகிறது. சொந்தமாக கார் வைத்திருக்கும் அந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. மாத இறுதியில் அவர்களின் வங்கி கணக்கில் ரூ.3 லட்சத்திற்கும் மேல் மீதம் உள்ளது. அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியவில்லை. ஆலோசனை தேவை என்று கேட்டதாக ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளார்.
அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- திட்டத்திற்காக ஏற்கனவே 46 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
- உற்பத்தி நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும்.
பெங்களூரு:
இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளீதரன். சுழற்பந்து ஜாம்பவானான இவர் கிரிக்கெட் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் முரளீதரன் கர்நாடக மாநிலம் சாமராஜநகரா மாவட்டத்தில் உள்ள படன குப்பேயில் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ரூ.1,400 கோடி முதலீடு செய்ய இருப்பதாக கர்நாடக தொழில்துறை மந்திரி எம்.பி. பாட்டீல் தெரிவித்து உள்ளார்.
இந்தத் திட்டம் பற்றி அவருடன் முரளீதரன் கலந்துரையாடினார்.
இதுகுறித்து மந்திரி பாட்டீல் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளீதரன் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனம் அமைக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக முதலில் ரூ.230 கோடி முதலீட்டில் திட்டமிடப்பட்ட இந்த திட்டம், தற்போது மொத்தம் ரூ.1,000 கோடியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் ரூ.1,400 கோடியாக உயர்த்தப்படும். இந்த திட்டத்திற்காக ஏற்கனவே 46 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
மேலும், முரளீதரன் வரும் காலங்களில் தார் வாட்டில் மற்றொரு பிரிவையும் தொடங்க திட்டமிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சாப்ட்வேர் என்ஜினியர்களான பெங்களூருவை சேர்ந்த தம்பதி அமேசானில் எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலரை ஆர்டர் செய்துள்ளனர்.
- பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானது.
ஆன்லைன் ஷாப்பிங் செய்வோரிடம் பெரும் வரவேற்பை பெற்ற தளம் அமேசான். இருந்த இடத்தில் இருந்துகொண்டே வாங்க நினைக்கும் பொருளை ஆன்லைனில் ஆர்டர் செய்ய நினைக்கும் போது பெரும்பாலானவர்களுக்கு நினைவுக்கு வருது அமேசான் தான். அவ்வாறு ஆர்டர் செய்பவர்களுக்கு தவறுதலாக பொருட்களை மாற்றி அனுப்பும் நிகழ்வுகளும் பல நடந்துள்ளது.
ஆனால், தாங்கள் ஆர்டர் செய்த பொருளுடன் கூடுதலாக வந்த ஜீவனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் பெங்களூருவை சேர்ந்த தம்பதியினர்.
சாப்ட்வேர் என்ஜினியர்களான பெங்களூருவை சேர்ந்த தம்பதி அமேசானில் எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலரை ஆர்டர் செய்துள்ளனர். அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அமேசானில் இருந்து பார்சல் வந்தது. அவர்கள் ஆர்டர் செய்த கண்ட்ரோலருடன் உயிருடன் நாகப்பாம்பு இருந்தது. ஆர்டர் செய்யப்பட்ட பொருளுடன் பாம்பை நெளிந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அத்தம்பதி எக்ஸ் தள பக்கத்தில், அமேசானில் இருந்து ஒரு எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலரை ஆர்டர் செய்தேன். அதனுடன் இலவசமாக பாம்பு கிடைத்தது என்று பதிவு செய்தனர். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானது.
A family ordered an Xbox controller on Amazon and ended up getting a live cobra in Sarjapur Road. Luckily, the venomous snake was stuck to the packaging tape. India is not for beginners ? pic.twitter.com/6YuI8FHOVY
— Aaraynsh (@aaraynsh) June 18, 2024
இந்த பதிவை கண்ட அமேசான் நிறுவனம், அமேசான் ஆர்டரில் உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்தை அறிந்து வருந்துகிறோம். இதை சரிபார்க்க விரும்புகிறோம். தேவையான விவரங்களை தருமாறும், விரைவில் எங்கள் குழு உங்களை தொடர்பு கொள்ளும் என்று கூறியுள்ளது.
- பாலியல் வன்கொடுமையால் அப்பெண்ணுக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
- குற்றவாளிக்கு 15 நாள் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
கர்நாடகாவில் 16 வயது சிறுமியை 23 வயது இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன்மூலம் அப்பெண்ணுக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பாலியல் வன்கொடுமை செய்தவர் தான் அந்த குழந்தையின் அப்பா என்று டி.என்.ஏ சோதனையில் தெரிய வந்துள்ளது.
இது சம்பந்தமான வழக்கு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 18 வயது ஆனவுடன் திருமணம் செய்து கொள்வதாக பாலியல் வன்கொடுமை செய்தவர் நீதிமன்றத்தில் உறுதி அளித்தார்.
இதனையடுத்து குற்றவாளிக்கு 15 நாள் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜூலை 3 ஆம் தேதி காவல்நிலையத்தில் சரணடைய வேண்டும் என்றும் ஜூலை 4 ஆம் தேதி திருமண சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இளம் வயதில் தாயாகியுள்ள பெண் மற்றும் அவரது குழந்தையின் நலனை கருத்தில் கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 50 ஓவரில் 265 ரன்கள் சேர்த்தது.
- அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 122 ரன்களில் சுருண்டது.
பெங்களூரு:
தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் சேர்த்தது. ஸ்மிருதி மந்தனா பொறுப்புடன் ஆடி சதமடித்து 117 ரன்னில் அவுட்டானார். தீப்தி ஷர்மா 37 ரன்னில் ஆட்டமிழந்தார். பூஜா வஸ்த்ராகர் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் அயப்ங்கா 3 விக்கெட்டும், மசபடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. இந்திய வீராங்கனைகள் துல்லியமாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 37.4 ஓவரில் 122 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சூன் லுலுஸ் அதிகமாக 33 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 143 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் ஆஷா ஷோபனா 4 விக்கெட்டும், தீப்தி ஷர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- கர்நாடகத்தில் பெட்ரோல், டீசலுக்கான விலை உயர்த்தப்பட்டுள்ளது.
- பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை உயர்த்தி அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை வரியை முறையே 29.84 சதவீதம் மற்றும் 18.44 சதவீதம் என அரசாங்கம் திருத்தியுள்ளது. இந்த வரி உயர்வால் பெட்ரோல் விலை ரூ.3, டீசல் விலை ரூ.3.50 அதிகரித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தப்பட்டது குறித்து முதல் மந்திரி சித்தராமையா கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சித்தராமையா கூறியதாவது:
குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற இடங்களைவிட தற்போது கர்நாடகாவின் திருத்தப்பட்ட எரிவாயு கட்டணங்கள் குறைந்த விலையில் தான் உள்ளது.
வாட் வரி உயர்த்தப்பட்டாலும் மற்ற மாநிலங்களை விட கர்நாடகாவில் டீசல் விலை குறைவாகவே உள்ளது.
கர்நாடகாவின் வளங்களை மற்ற மாநிலங்களுக்கு பா.ஜ.க. அரசு கொடுத்துள்ளது.
பெட்ரோல் மீதான கலால் வரியை ரூ.9.21ல் இருந்து ரூ.32.98 ஆகவும், டீசல் மீதான கலால் வரியை ரூ.3.45ல் இருந்து ரூ.31.84 ஆகவும் மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் உயர்த்தி உள்ளது.
இந்த வரி உயர்வு மக்களுக்கு சுமையாக உள்ளது. மக்களின் நலன் கருதி இந்த வரிகளை மத்திய அரசு குறைக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்