என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
மத்தியப்பிரதேசம்
- ராகுல் சர்மா எனும் பண்டிட் இச்சிறுமியை காப்பாற்றி உதவி செய்தார்
- வெற்று கோஷங்களில் அலறல்களை அடக்கி விடுகின்றனர் என்றார் ராகுல்
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் ஒரு 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாள். தாக்குதலுக்கு உள்ளான அச்சிறுமி, உடல் முழுவதும் காயங்களுடன், ரத்த போக்குடனும், அறைகுறை ஆடைகளுடனும் பரிதாபமாக உதவி கேட்டு பல வீட்டு கதவுகளை தட்டியும், அவளுக்கு உதவி மறுக்கப்பட்டது.
அந்நகரத்தில் பட்நகர் சாலையில் ஒரு ஆசிரமத்தை சேர்ந்த ராகுல் சர்மா எனும் பண்டிட் இவளை கண்டு, உடனடியாக இவளுக்கு ஆடைகள் கொடுத்து உதவி, காவல்துறையினரை வரவழைத்து, மருத்துவமனையில் சேர்த்தார். காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அச்சிறுமி சாலைகளில் உதவி கேட்டு வருவதும், அது மறுக்கப்படுவதும் கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் குறித்து இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரது கருத்துக்களை தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
மத்திய பிரதேசத்தில் 12 வயது சிறுமிக்கு எதிரான கொடூரமான குற்றம், அன்னை இந்தியாவின் இதயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். நாட்டிலேயே மத்திய பிரதேசத்தில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், சிறு பெண்களுக்கு எதிரான கற்பழிப்புகளும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுகின்றன. இந்த குற்றங்களில் நேரடியாக ஈடுபட்டவர்கள் மட்டுமே குற்றவாளிகள் அல்ல; மாநில பா.ஜ.க. அரசாங்கமும் குற்றவாளிதான். நாட்டின் மகள்களை பாதுகாக்க இயலாத அரசாங்கம் நடைபெறுகிறது. மாநிலத்தில் நீதி இல்லை, சட்டம் ஒழுங்கு இல்லை, உரிமைகள் இல்லை. இன்று மத்திய பிரதேசத்தின் மகள்களின் நிலை குறித்து முழு நாடும் வெட்கப்படுகிறது. ஆனால், மாநில தலைவருக்கும் நாட்டின் பிரதமருக்கும் இவை அவமானமாகவே தெரியவில்லை. அவர்கள் தேர்தல் உரைகள், வெற்று வாக்குறுதிகள் மற்றும் தவறான கோஷங்களுக்கிடையே நாட்டின் மகள்களின் அலறல்களை பா.ஜ.க.வினர் அடக்கிவிடுவார்கள்.
இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.
- மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற 2023-ம் ஆண்டுக்கான இந்தியா ஸ்மார்ட் சிட்டிகள் மாநாட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்றார்.
- ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் நாட்டிலேயே சிறந்த மாநிலத்துக்கான விருதை மத்தியபிரதேசத்துக்கு ஜனாதிபதி முர்மு வழங்கினார்.
இந்தூர்:
நாட்டில் 100 நகரங்களில் அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்புகளை உலகத்தரத்தில் உயர்த்தும் நோக்குடன் 'ஸ்மார்ட் சிட்டிகள்' எனப்படும் 'பொலிவுறு நகரங்கள்' திட்டத்தை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று நடைபெற்ற 2023-ம் ஆண்டுக்கான இந்தியா ஸ்மார்ட் சிட்டிகள் மாநாட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்றார்.
அப்போது அவர், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் 66 விருதுகளை வழங்கினார். அதில் 31 விருதுகள் நகரங்களுக்கும், 4 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் மற்றும் 7 நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
நாட்டின் 100 ஸ்மார்ட் சிட்டிகளில் சிறந்த நகரத்துக்கான 'தேசிய ஸ்மார்ட் சிட்டி விருதை' இந்தூருக்கு ஜனாதிபதி முர்மு வழங்கினார். குஜராத் மாநிலத்தின் சூரத்துக்கு 2-வது இடத்துக்கான விருதும், உத்தரபிரதேசத்தின் ஆக்ராவுக்கு 3-வது இடத்துக்கான விருதும் அளிக்கப்பட்டன.
மாதிரி சாலைகள் அமைப்பு, ஏரிகள் மீட்பு, புதுப்பிப்புக்கான சூழல் உருவாக்க பிரிவு விருதும், தென்மண்டல ஸ்மார்ட் சிட்டி விருதும் தமிழ்நாட்டின் கோவை மாநகருக்கு வழங்கப்பட்டன.
குளங்கள் பாதுகாப்புக்காக தஞ்சாவூருக்கு கலாசார விருதும், ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் மின் கண்காணிப்புக்காக தூத்துக்குடிக்கு சமூக அம்சங்கள் விருதும் கிடைத்தன.
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் நாட்டிலேயே சிறந்த மாநிலத்துக்கான விருதை மத்தியபிரதேசத்துக்கு ஜனாதிபதி முர்மு வழங்கினார். தமிழ்நாட்டுக்கு 2-வது இடத்துக்கான விருது வழங்கப்பட்டது. ராஜஸ்தான், உத்தரபிரதேச மாநிலங்களுக்கு 3-வது இடத்துக்கான விருது கூட்டாக வழங்கப்பட்டது.
இந்த மாநாட்டில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார மந்திரி ஹர்தீப் சிங் பூரி, மத்தியபிரதேச கவர்னர் மங்குபாய் படேல், முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- அறைகுறை ஆடையுடன் வீடு வீடாக உதவி கேட்டும் யாரும் உதவ முன்வரவில்லை
- பேச்சிலிருந்து அச்சிறுமி உ.பி.யை சேர்ந்தவளாக இருக்கலாம் என காவல் அதிகாரி தெரிவித்தார்
இந்தியாவின் மத்திய பகுதியில் உள்ள பெரிய மாநிலம், மத்திய பிரதேசம். இதன் தலைநகரம் போபால்.
அம்மாநிலத்தின் ஷிப்ரா நதிக்கரையோரம் அமைந்துள்ள பண்டைய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நகரம் உஜ்ஜைன். இந்நகரில் உள்ளது புகழ் பெற்ற தண்டி ஆசிரமம்.
அந்த ஆசிரமத்தை அடுத்துள்ள பகுதியில் ஒரு 12 வயது சிறுமியை சிலர் கற்பழித்தனர். பின்பு அவளை அப்படியே போட்டு விட்டு ஓடி விட்டனர். இதில் அச்சிறுமிக்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு ரத்த போக்கு ஏற்பட்டது. குறைந்த அளவே ஆடைகள் உள்ள நிலையில் அவள் நிராதரவாக விடப்பட்டு, தானாக எழுந்து நகருக்குள் வீடுகள் உள்ள பகுதியில் வீடு வீடாக உதவி கேட்டாள். ஆனால் யாருமே குறைந்த ஆடைகளுடனும் ரத்த போக்குடன் அவளை கண்டாலும் உதவி செய்ய முன் வரவில்லை; மாறாக அவளை விரட்டி விட்டனர்.
பிறகு வேறு சிலர் அவளின் பரிதாப நிலையை கண்டு அவளை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அதன் பிறகு மேல்சிகிச்சைக்காக அம்மாநிலத்தின் இந்தோர் நகர மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.
"அச்சிறுமியின் மருத்துவ பரிசோதனையில் அவள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது உறுதியாகியுள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளை கண்டு பிடிக்க ஒரு சிறப்பு புலனாய்வு படை அமைக்கப்பட்டுள்ளது. அச்சிறுமியின் பேச்சிலிருந்து உத்தர பிரதேசத்தை சேர்ந்தவள் போல் தெரிகிறது." என இது குறித்து காவல்துறை உயரதிகாரி சச்சின் ஷர்மா தெரிவித்தார்.
அச்சிறுமி யார் என்பதும், என்ன நடந்தது என்பதும் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. சிறார் உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் இச்சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு ம.பி. காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதற்கிடையே அந்த சிறுமி தாக்குதலுக்கு உள்ளான பிறகு பரிதாபமாக வீடு வீடாக உதவி கேட்டு சென்றதும் அவளுக்கு உதவ மறுத்து குடியிருப்புவாசிகள் விரட்டுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
- காங்கிரஸ் கட்சியும், ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள அதன் கூட்டணி கட்சிகளும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஆதரித்தன.
- வாய்ப்பு கிடைத்தால், மகளிர் மசோதாவை ஆதரிப்பதில் இருந்து காங்கிரஸ் கட்சி பின்வாங்கும் என்பதை மறக்க வேண்டாம்.
போபால்:
பா.ஜனதா ஆட்சி நடக்கும் மத்தியபிரதேசத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, பா.ஜனதா செயல்வீரர்கள் கூட்டம், மாநில தலைநகர் போபாலில் நடந்தது.
அதில், பிரதமர் மோடி கலந்து கொண்டார். பா.ஜனதா தொண்டர்கள் நடத்திய யாத்திரை நிறைவு, ஜனசங்கத்தை நிறுவியவர்களில் ஒருவரான தீனதயாள் உபாத்யாயா பிறந்தநாள் ஆகியவற்றை முன்னிட்டும் இந்நிகழ்ச்சி நடந்தது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியதற்காக பிரதமர் மோடிக்கு பெண்கள் பிரமாண்ட மாலை அணிவித்தனர்.
நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:-
காங்கிரஸ் கட்சியும், 'இந்தியா' கூட்டணியில் உள்ள அதன் கூட்டணி கட்சிகளும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஆதரித்தன. பெண்சக்தியின் வலிமையை அவை புரிந்து கொண்டன.
மேலும், மோடி வாக்குறுதி என்றால் 'உத்திரவாதம்' என்பதை புரிந்து வைத்துள்ளன. எனவே, நிர்பந்தத்தின் பேரிலும், தயக்கத்துடனும் மகளிர் மசோதாவை ஆதரித்தன.
'இந்தியா' கூட்டணியை தொடங்கியவர்கள் யார்? முன்பு, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றவிடாமல் தடுத்த அரசியல்வாதிகள் சேர்ந்துதான் அக்கூட்டணியை அமைத்துள்ளனர். மகளிர் மசோதாவை முன்பு கொண்டு வந்தபோது, அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். மசோதாவை கிழித்தனர். சபாநாயகரை குறிவைத்து செயல்பட்டனர்.
'இந்தியா' கூட்டணி கட்சிகள், பல்லாண்டு காலம் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்தன. அப்போதே ஏன் மகளிர் மசோதாவை நிறைவேற்றவில்லை?
வாய்ப்பு கிடைத்தால், மகளிர் மசோதாவை ஆதரிப்பதில் இருந்து காங்கிரஸ் கட்சி பின்வாங்கும் என்பதை மறக்க வேண்டாம். வதந்தியை பரப்பி, பெண்களிடையே பிளவு ஏற்படுத்தும்.
மத்தியபிரதேசத்தை நீண்ட காலம் ஆண்ட காங்கிரஸ் கட்சி, அம்மாநிலத்தை பின்தங்கிய மாநிலமாக்கியது. மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தால், அக்கட்சி மீண்டும் மத்தியபிரதேசத்தை பின்தங்கிய மாநிலம் ஆக்கிவிடும்.
காங்கிரஸ் கட்சி, ஒரு குடும்ப கட்சி. கோடிக்கணக்கான ரூபாய் ஊழலையும், வறுமையையும், ஓட்டுவங்கி அரசியலையும் ஊக்குவித்தது. காங்கிரஸ் கட்சி துருப்பிடித்த இரும்பு போன்றது. மழையில் வைத்தால், அதன் கதை முடிந்து விடும்.
வாயில் வெள்ளி ஸ்பூனுடன் பிறந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு ஏழைமக்களின் வாழ்க்கை என்பது அர்த்தமற்றதாக தெரிகிறது. ஏழைகளின் குடிசைகளுக்கு செல்வதை சுற்றுலா போல் கருதுகிறார்கள்.
ஏழை விவசாயிகளின் வயல்களுக்கு சென்று வீடியோ மற்றும் புகைப்பட படப்பிடிப்பு நடத்துகிறார்கள். முன்பும், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஏழைகளை இழிவுபடுத்தினர். காங்கிரஸ் கட்சி சிறிதுகூட மாறவில்லை.
ஏழைகள் தொடர்ந்து ஏழைகளாக இருந்தால்தான் தங்களுக்கு நல்லது என்று காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால், பா.ஜனதாவின் 5 ஆண்டுகால ஆட்சியில், 13 கோடியே 50 லட்சம் ஏழைகள், வறுமையின் பிடியில் இருந்து விடுபட்டுள்ளனர்.
புதிய நாடாளுமன்றத்தையும் காங்கிரஸ் விமர்சிக்கிறது. நாட்டின் சாதனைகளை காங்கிரஸ் விரும்புவது இல்லை. எதிர்மறை தன்மையை பரப்பி வருகிறது.
காங்கிரஸ் கட்சிக்குள் நகர்ப்புற நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிலவுகிறது. அடிமட்ட தொண்டர்கள் புறக்கணிக்கப்பட்டு அமைதியாக உள்ளனர். காங்கிரஸ் கட்சி, சனாதன தர்மத்தை அழிக்க முயற்சிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- டெல்லியில் இருந்து பிரதமர் மோடி விமானம் மூலம் ராஜா போஜ் விமான நிலையத்துக்கு வந்தார்.
- சாலையில் இருபுறமும் திரண்டு நின்ற மக்களை பார்த்து பிரதமர் மோடி உற்சாகமாக கையசைத்தார்.
போபால்:
மத்திய பிரதேச மாநில தேர்தல் விரைவில் நடை பெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. வும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் முயற்சி செய்து வருகின்றன.
காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் களத்தில் இறங்கி உள்ளனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி போபாலில் இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். போபாலில் இன்று பா.ஜ.க. சார்பில் கார்யகா மஹா கும்ப நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இதற்காக டெல்லியில் இருந்து பிரதமர் மோடி விமானம் மூலம் ராஜா போஜ் விமான நிலையத்துக்கு வந்தார். பின்பு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் போபாலின் ஜம்போரி மைதானத்தை அடைந்தார்.
பின்பு அவர் திறந்த ஜீப்பில் ரோடு ஷோ சென்றார். சாலையில் இருபுறமும் திரண்டு நின்ற மக்களை பார்த்து பிரதமர் மோடி உற்சாகமாக கையசைத்தார். பிரதமர் மோடியுடன் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், மாநில பா.ஜ.க. தலைவர் வி.டி.சர்மா ஆகியோரும் வந்தனர். இதை தொடர்ந்து பிரதமர் மோடி லட்சக்கணக்கானோர் திரண்ட பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் பேசினார். முன்னதாக கூட்டத்துக்கு வந்த பிரதமர் மோடிக்கு மகளிர் இட ஒதுக்கீடு மசோத நிறைவேற்றியமைக்காக பா.ஜ.க. மகளிர் அமைப்பினர் மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு மத்தியபிரதேசத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- முதலில் ஆடிய இந்திய அணி 399 ரன்களை குவித்தது.
- சுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர் ஜோடி அதிரடியாக ஆடி 200 ரன்கள் சேர்த்தனர்.
இந்தூர்:
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெயிக்வாட், சுப்மன் கில் களமிறங்கினர். அணியின் எண்ணிக்கை 16 ஆக இருக்கும்போது ருதுராஜ் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஷ்ரேயாஸ் அய்யர் சுப்மன் கில்லுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்திய அணி 9.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
சுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர் ஜோடியைப் பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணியினர் திணறினர். இருவரும் கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.
சுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர் ஆகியோர் சதமடித்து அசத்தினர். ஷ்ரேயஸ் அய்யர் 86 பந்துகளில் 3 சிக்சர், 10 பவுண்டரிகள் உள்பட சதமடித்தார். அவர் 105 ரன்னில் அவுட்டானார். இது இவரது 3வது ஒருநாள் சதமாகும்.
சுப்மன் கில் 92 பந்துகளில் 4 சிக்சர், 6 பவுண்டரி உள்பட சதமடித்து அசத்தினார். அவர் 104 ரன்னில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இவர்கள் 200 ரன்கள் குவித்தனர். இஷான் கிஷன் 31 ரன்னில் வெளியேறினார்.
தொடர்ந்து ஆடிய கேப்டன் கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் ஜோடியில் சிக்சர், பவுண்டரிகளாக அடித்தனர். ராகுல் அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார்.
கேமரூன் கிரீன் வீசிய 43-வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து 4 சிக்சர்கள் அடித்து அசத்தினார்.
இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 399 ரன்களை குவித்தது. சூர்யகுமார் யாதவ் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.
- சுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர் ஜோடி அதிரடியாக ஆடி ரன்களை குவித்தது.
- 2வது ஒருநாள் போட்டியில் இருவரும் சதமடித்து அசத்தினர்.
இந்தூர்:
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெயிக்வாட், சுப்மன் கில் களமிறங்கினர். அணியின் எண்ணிக்கை 16 ஆக இருக்கும்போது ருதுராஜ் 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து இறங்கிய ஷ்ரேயாஸ் அய்யர் சுப்மன் கில்லுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்திய அணி 9.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து இருவரும் அரை சதமடித்தனர்.
சுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர் ஜோடியைப் பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணியினர் திணறினர். இருவரும் கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.
இந்நிலையில், சுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர் ஆகியோர் சதமடித்து அசத்தினர். ஷ்ரேயஸ் அய்யர் 86 பந்துகளில் 3 சிக்சர், 10 பவுண்டரிகள் உள்பட சதமடித்தார். அவர் 105 ரன்னில் அவுட்டானார். இது இவரது 3வது ஒருநாள் சதமாகும்.
சுப்மன் கில் 92 பந்துகளில் 4 சிக்சர், 6 பவுண்டரி உள்பட சதமடித்து அசத்தினார்.
2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இவர்கள் 200 ரன்கள் குவித்தனர்.
- டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
- இந்திய அணி 9.5 ஓவரில் 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்தது.
இந்தூர்:
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெயிக்வாட், சுப்மன் கில் களமிறங்கினர். அணியின் எண்ணிக்கை 16 ஆக இருக்கும்போது ருதுராஜ் 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து இறங்கிய ஷ்ரேயாஸ் அய்யர் சுப்மன் கில்லுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்திய அணி 9.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்தது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- 2வது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று நடைபெறுகிறது.
இந்தூர்:
உலக கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அடுத்த மாதம் 5-ம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி ஆஸ்திரேலியா உடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட முடிவு செய்தது. அதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது.
முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு பிரசித் கிருஷ்ணா களமிறங்குகிறார்.
இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
- கடந்த 40 வருடங்களாக இந்த காலனியில் சதுர்த்தி விழாவை நடத்தி வருகிறோம்.
- ஒரு தனித்துவமான கருபொருளுடன் விநாயகப் பெருமானை வடிவமைத்து பிரதிஷ்டை செய்கிறோம்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து முக்கிய நகரங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டைக்காக வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சில இடங்களில் விநாயகர் சிலைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள பந்தலில் விநாயகப் பெருமானின் பல்வேறு வடிவங்களை காட்சிபடுத்தி உள்ளனர். அந்த வகையில், மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் ஜெய்ராம்பூர் காலனியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பந்தலில் விநாயகப் பெருமானின் 108 விதமான வடிவங்களில் சிலைகள் இடம்பெற்றுள்ளன.
சங்கு, சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸ், சாய்பாபா, சிவன், கிருஷ்ணா மற்றும் பல வடிவங்களில் சிலைகள் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த அனில் ஆகா கூறுகையில், நாங்கள் கடந்த 40 வருடங்களாக இந்த காலனியில் சதுர்த்தி விழாவை நடத்தி வருகிறோம். ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான கருபொருளுடன் விநாயகப் பெருமானை வடிவமைத்து பிரதிஷ்டை செய்கிறோம். இந்த ஆண்டு 108 விதமான வடிவங்களில் விநாயகப் பெருமானை சித்தரித்துள்ளோம் என்றார். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- இந்து மதத்தில், ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் ஷண்மத மார்க்கங்களை நிறுவியவர்
- ஓம்காரேஷ்வர் நகரில்தான் ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் ஆரம்ப வேதக்கல்வி பயின்றார்
இந்து மதத்தின் தற்போதைய கட்டமைப்பை உருவாக்கிய இந்து மத குருக்களில் முதன்மையானவர்களாக கருதப்படும் பலரில் ஸ்ரீராமானுஜர் மற்றும் ஸ்ரீமத்வாச்சாரியார் ஆகியோருடன் ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் ஒருவர். இந்துக்களுக்கு வைணவம், சைவம், ஸாக்தம், கவுமாரம், காணாதிபத்யம் மற்றும் சவுரபம் என 6 பிரதான வழிகளில் ஷண்மத வழிபாட்டு மார்க்கங்களை நிறுவியவர்.
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் காந்த்வா மாவட்டத்தில் காந்த்வா நகருக்கருகே மந்தாதா பகுதியில் உள்ளது ஓம்காரேஷ்வர் கோவில். இது ஒரு புகழ் பெற்ற இந்து மத சைவ கோயில். இக்கோவில் நர்மதை நதிக்கரை ஓரம் உள்ளது. ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் ஓம்காரேஷ்வர் நகரில்தான் ஆரம்ப வேதகல்வியை பயின்றார்.
இப்பகுதியில் உலகெங்கும் உள்ள இந்துக்களால் மதிக்கப்படும் மத குருவான ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் அவர்களுக்கு 108 அடியில் மிக பெரிய சிலை ஒன்று நிறுவப்பட்டு ம.பி. மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகன் அவர்களால் இன்று திறந்து வைக்கப்பட்டது. திறந்து வைத்த முதல்வர், இங்கு முறைப்படி பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினார்.
அப்போது உரையாற்றிய அவர் கூறியதாவது:
கலாச்சார ரீதியாக ஸ்ரீ ஆதி குரு சங்கராச்சார்ய மகராஜ் நாட்டை ஒருங்கிணைத்தார். வேதங்களின் சாரம் சாமானிய மக்களுக்கும் புரியும் வகையில் பரவ தீவிரமாக செயல்பட்டார். நமது நாட்டின் 4 மூலைகளிலும் 4 மடங்களை நிறுவினார். அவரது உயரிய, சிறந்த முயற்சியினால்தான் நாடு இத்தனை ஆண்டுக்காலம் ஒன்றாக, ஒற்றுமையாக உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இப்பகுதிக்கு செல்ல விரும்பும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ம.பி.யின் இந்தோர் நகரிலிருந்து 80 கிலோமீட்டர் பயணம் செய்து இந்த இடத்தை அடையலாம்.
#MadhyaPradesh: Chief Minister @ChouhanShivraj unveils 108 feet tall statue of #AdiShankaracharya at Omkareshwar.#AdiShankara pic.twitter.com/6byRYdXnpL
— All India Radio News (@airnewsalerts) September 21, 2023
- ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய குழு அமைப்பு
- ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
பா.ஜனதா ''ஒரே நாடு ஒரே தேர்தல்'' என்ற முழக்கத்தை முன்வைத்து வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவையும் மத்திய அரசு அமைத்துள்ளது.
இந்த நிலையில், நாடு முழுவதும் ஒரே நாளில் பண்டிகைகைள் கொண்டாடும்போது, ஏன் தேர்தல் நாளை கொண்டாட முடியாது என பா.ஜனதா பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து கைலாஷ் விஜய்வர்கியா கூறியதாவது:-
நாம் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகிறோம். கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகள் நாடுகள் முழுவதும் ஒன்றாக கொண்டாடப்படுகிறது. ஆகவே, தேர்தல் நாளை நாம் ஏன் ஒன்றாக கொண்டாட முடியாது.
பெண்களுக்கான அதிகாரத்தை குறித்து பேசிக்கொண்டு மட்டுமே இருந்த நிலையில், பிரதமர் மோடி அரசு மசோதாவை தாக்கல் செய்து சரியான பதிலடி கொடுத்துள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்