search icon
என் மலர்tooltip icon

    மத்தியப்பிரதேசம்

    • அரைமணி நேர ‘நாடகம்’ முடிவுக்கு வந்தது.
    • அப்பெண்ணை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    குவாலியர் :

    விறுவிறு போக்குவரத்து நேரத்தில் இளம்பெண் ஒருவரின் அட்டகாசத்தால் வாகன ஓட்டிகள் திண்டாடிப் போயினர்.

    மத்தியபிரதேச மாநிலத்தின் குவாலியர் நகரில் இந்த 'அதிரடி' அரங்கேறியது.

    அந்த நகரில் உள்ள பரபரப்பான நாற்சந்தி, பூல் பாக்.

    இங்கு வழக்கம்போல் வாகனங்கள் பறந்துகொண்டிருந்தன. அப்போது தள்ளாடியபடி சாலையின் குறுக்கே வந்த ஒரு இளம்பெண், ஒரு முதிய வாகன ஓட்டியின் இரு சக்கர வாகனத்தை வலுக்கட்டாயமாக பறித்தார். பின்னர் அதில் ஏறி அமர்ந்தார். அதை அப்படியும் இப்படியுமாக ஓட்டினார். பின்னர் அதை கைவிட்டு, சாலைத்தடுப்பு ஒன்றை தள்ளிவிட்டார்.

    அடுத்து, ஓடும் ஒரு காரின் முன்பகுதியில் ஏறி அமர்ந்தார். எழுந்து நின்று நடனமாடினார். அந்த காரின் டிரைவர், செய்வதறியாமல் திகைத்தபடி இருக்கையிலேயே அமர்ந்திருந்தார்.

    இளம்பெண்ணின் இந்த அதிரடியால் அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. எல்லோரும் அந்தப் பெண்ணின் அடாவடியை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். முன்வந்து கண்டித்த சிலர் மீதோ அவர் வசைமாரி பொழிந்தார்.

    ஆனாலும் சில பெண்கள், அந்த இளம்பெண்ணை போராடி சமாதானப்படுத்தி காரில் இருந்து இறக்கினர்.

    பின்னர் அவரை சாலையோரம் அழைத்துச் செல்ல, அரைமணி நேர 'நாடகம்' முடிவுக்கு வந்தது.

    சிலர் போலீசாருக்கு தகவல் சொல்ல, விரைந்து வந்த அவர்கள், அப்பெண்ணை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    அந்தப் பெண் மதுபோதையில் இருந்ததாகவும், காதல் தோல்வி விரக்தியில் இவ்வாறு நடந்ததாகவும் கூறப்படுகிறது. அவரின் ஏறுக்குமாறான செயல்களை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் இட, அது பரபரப்பாக பரவியுள்ளது.

    • வந்தே பாரத் சூப்பர் ஹிட் ஆகிவிட்டது என பிரதமர் மோடி பேச்சு
    • ஒரே ஒரு குடும்பம்தான் இந்தியாவின் முதல் குடும்பம் என்று நினைத்தார்கள்

    புதுடெல்லி:

    மத்திய பிரதேச மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். போபால்-டெல்லி இடையே இந்த ரெயில் இயக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை கிண்டலடித்தார். அவர் பேசியதாவது:-

    இந்த நிகழ்வு ஏப்ரல் 1ம் தேதி நடைபெறும் என என்னிடம் தெரிவிக்கப்பட்டபோது, ஏன் ஏப்ரல் 1ம் தேதியில் வைக்கிறீர்கள்? என்று கேட்டேன். இதுகுறித்த செய்தி வெளியாகும்போது, இது பிரதமர் நரேந்திர மோடியின் ஏப்ரல் ஃபூல் ஏமாற்றுவேலை என எனது காங்கிரஸ் நண்பர்கள் கூறுவார்கள் என்று நினைத்தேன். ஆனால், நீங்களே தற்போது பார்க்கிறீர்கள். ஏப்ரல் 1-ம் தேதி திட்டமிட்டபடி வந்தே பாரத் ரயில் சேவை கொடி அசைத்து துவக்கிவைக்கப்பட்டுள்ளது. இது நமது திறமை மற்றும் தன்னம்பிக்கையின் அடையாளம். வந்தே பாரத் ரெயில் இந்தியாவின் புதிய வளர்ச்சியின் அடையாளம். நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் அதற்கான தேவை இருக்கிறது.

    முந்தைய ஆட்சியின்போது ஒரே ஒரு குடும்பம்தான் இந்தியாவின் முதல் குடும்பம் என்று நினைத்தார்கள். நடுத்தர குடும்பங்களின் தேவைகள் குறித்து கவனம் செலுத்தவில்லை. இதற்கு உதாரணம் இந்திய ரெயில்வே. இந்திய ரெயில் என்பது சாமானியர்களுக்கானது. கடந்த 9 ஆண்டுகளில், இந்திய ரெயில்வேயை உலகின் சிறந்த ரெயில்வேயாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். 900 ரெயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வந்தே பாரத் சூப்பர் ஹிட் ஆகிவிட்டது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • இந்த வந்தே பாரத் ரெயில் சனிக்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்களுக்கு இயக்கப்பட உள்ளது.
    • விழாவில் ரெயில்வே மந்திரி, மத்திய ஆளுநர், முதல்வர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் போபால் வந்துள்ள பிரதமர் மோடி, ஒருங்கிணைந்த ராணுவ தளபதிகள் மாநாட்டில் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து டெல்லி-போபால் இடையேயான நாட்டின் 11-வது வந்தே பாரத் ரெயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    விழாவில் ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ், மத்திய பிரதேச ஆளுநர் மங்கு பாய் பட்டேல், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், ரெயில்வே துறையில் மாற்றங்கள் செய்வதுடன், மக்களுக்கு ஏதுவான பயண வசதிகளை ஏற்படுத்துவதே தனது அரசின் நோக்கம் என்றார்.

    பின்னர் வந்தே பாரத் ரெயிலில் பிரதமர் மோடி பயணம் செய்தபடி, உடன் பயணித்த பள்ளி குழந்தைகளுடன் கலந்துரையாடினார். ரெயில் பணியாளர்களிடமும் உரையாடினார்.

    இந்த வந்தே பாரத் ரெயில், போபாலில் உள்ள ராணி கம்லாபதி ரெயில் நிலையம் முதல் டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் ரெயில் நிலையம் வரை இயக்கப்பட உள்ளது.  சனிக்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்களுக்கு இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பாரதத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?
    • தற்காப்புக்காக தகுந்த பதிலடி கொடுக்கும் கலாச்சாரத்தில் இருந்து வந்தவர்கள் நாங்கள்

    போபால்:

    இளம் புரட்சியாளர் ஹேமு கலானியின் பிறந்தநாளையொட்டி போபாலில் நடைபெற்ற விழாவில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசினார். அப்போது, பாரதத்தை பிரித்தது தவறு என்று பாகிஸ்தான் மக்கள் இப்போது சொல்கிறார்கள் என்றார்.

    அவர் மேலும் பேசுகையில், 'அந்த நாடு 1947க்கு முன் பாரதமாக இருந்தது. பிடிவாதத்தால் பாரதத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? அங்கே வேதனை இருக்கிறது, இந்தியாவில் மகிழ்ச்சி இருக்கிறது' என் தெரிவித்தார்.

    இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே இப்போதுள்ள மோசமான உறவு குறித்து பேசிய அவர், மற்ற நாடுகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கு அழைப்பு விடுக்கும் கலாச்சாரம் இந்தியாவுக்கு கிடையாது என்றும், தற்காப்புக்காக தகுந்த பதிலடி கொடுக்கும் கலாச்சாரத்தில் இருந்து வந்தவர்கள் நாங்கள் என்றும் கூறினார்.

    • 40 அடி ஆழ கிணற்றுக்குள் பக்தர்கள் ஒருவர் மீது ஒருவராக விழுந்தனர். மேலும் பலர் கிணற்றின் பக்க சுவர்களில் மோதி படுகாயம் அடைந்தனர்.
    • மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், இந்தூர் பாலேஷ்வர் மகாதேவ் கோவிலில் நடந்த விபத்து குறித்து விசாரிக்க உத்தரவிட்டு உள்ளார்.

    இந்தூர்:

    மத்திய பிரதேச மாநிலம் இந்தூர், படேல் நகரில் பழமையான பாலேஷ்வர் மகாதேவ் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் சுமார் 40 அடி ஆழ கிணறு உள்ளது. இந்த கிணற்றின் மீது காங்கிரீட் சிலாப்போட்டு மூடப்பட்டு உள்ளது. அதன் வழியாக பக்தர்கள் கோவிலுக்கு நடந்து செல்வார்கள்.

    நேற்று ராமநவமி விழா என்பதால் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். அவர்கள் கிணற்றின் மீது அமைக்கப்பட்டிருந்த சிலாப் வழியாக நடந்து சென்றனர்.

    நேற்று பகல் 12.30 மணி அளவில் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏராளமானோர் சிலாப் மீது நடந்து சென்றனர். இதில் பாரம் தாங்காமல் அந்த சிலாப் திடீரென உடைந்தது. அப்போது சிலாப் மீது நின்ற பக்தர்கள் அனைவரும் கிணற்றுக்குள் விழுந்தனர்.

    40 அடி ஆழ கிணற்றுக்குள் பக்தர்கள் ஒருவர் மீது ஒருவராக விழுந்தனர். மேலும் பலர் கிணற்றின் பக்க சுவர்களில் மோதி படுகாயம் அடைந்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் இந்தூர் மேயர் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கிணற்றில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட பக்தர்கள் பலர் தலையில் அடிப்பட்டும், மூச்சு திணறியும் மயங்கி கிடந்தனர். அவர்களை பரிசோதித்த போது பலர் இறந்திருப்பது தெரியவந்தது.

    இந்த விபத்தில் நேற்று வரை 13 பக்தர்கள் இறந்ததாக கூறப்பட்டது. அதன்பின்பும் கிணற்றுக்குள் பக்தர்கள் பலர் விழுந்து கிடப்பது தெரியவந்தது. அவர்களை மீட்க ராணுவத்தினரும்,பேரிடர் மீட்பு குழுவினரும் வந்தனர். அவர்கள் விடிய, விடிய கிணற்றுக்குள் கிடந்தவர்களை மீட்டனர். இதில் பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது. இன்னும் பலர் கிணற்றுக்குள் சிக்கி இருப்பதாக தெரிகிறது.

    அவர்களையும் மீட்கும் பணி நடந்து வருகிறது. மீட்பு பணி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர். இப்பணி முடிவடையும் போது பலி எண்ணிக்கை மேலும் உயரும் என கூறப்படுகிறது. இதற்கிடையே காயங்களுடன் மீட்கப்பட்ட 18 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 16 பேர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    பாலேஷ்வர் மகாதேவ் கோவிலில் கிணற்று சுவர் இடிந்து 35 பக்தர்கள் பலியான தகவல் அறிந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு அதிர்ச்சி அடைந்தார். விபத்தில் பலியான பக்தர்கள் குடும்பத்தினருக்கு அவர் இரங்கல் தெரிவித்தார்.

    அதில் இந்தூரில் நடந்த விபத்து பற்றி அறிந்ததும் நான் மிகுந்த வருத்தம் அடைந்தேன். உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன், என்று கூறியுள்ளார்.

    பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்தூரில் நடந்த விபத்து மிகவும் வேதனை அளிக்கிறது. இது பற்றி மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகானிடம் பேசினேன். அங்கு மீட்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன், என்றார்.

    மத்திய பிரதேச முதல் -மந்திரி சிவராஜ் சிங் சவுகான், இந்தூர் பாலேஷ்வர் மகாதேவ் கோவிலில் நடந்த விபத்து குறித்து விசாரிக்க உத்தரவிட்டு உள்ளார்.

    மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த பக்தர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்து உள்ளார். இதுபோல காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என கூறியுள்ளார்.

    • மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள கோவிலில் படிக்கட்டு கிணறு இடிந்தது.
    • இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

    போபால்:

    மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள பெலேஷ்வர் மகாதேவ் கோவிலில் ராமநவமி கொண்டாட்டம் நடைபெற்றது. பெலேஷ்வர் மகாதேவ் கோவிலில் படிக்கிணற்றில் வழிபாடு நடத்தியபோது படிக்கட்டுகள் எதிர்பாராத விதமாக திடீரென மளமளவென சரிந்து கீழே விழுந்தது.

    படிக்கட்டுகளில் நின்று கொண்டிருந்த பக்தர்கள் கிணற்றுக்குள் தவறி விழுந்தனர். முதல் கட்டமாக 4 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், கோவில் கிணற்றின் படிக்கட்டு இடிந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.

    இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்தூரில் துரதிர்ஷ்டவசமாக ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என பதிவிட்டுள்ளார்.

    விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    ராமநவமியை முன்னிட்டு நடந்த சிறப்பு வழிபாட்டின் போது விபத்து நேரிட்டது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    • இடிபாடுகளில் சிக்கியவர்களில் இதுவரை 10 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
    • விபத்து தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மத்திய பிரதேச மாநில முதல்வர் ஆகியோர் கவலை தெரிவித்துள்ளனர்.

    மத்திய பிரதேச மாநிலம் படேல் நகரில் உள்ள ஸ்ரீபலேஷ்வர் மகாதேவ் ஜூலேலால் கோவிலில் பழமையான படிக்கிணறு உள்ளது. இங்கு ராமநவமியை ஒட்டி இன்று ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    அப்போது, படிக்கட்டு கிணற்றின் தடுப்பு சுவர் பாரம் தாங்காமல் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், 30க்கும் மேற்பட்டோர் கிணற்றுக்குள் விழுந்தனர்.

    இடிபாடுகளில் சிக்கியவர்களில் இதுவரை 19 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

    மேலும் சிலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    இந்நிலையில், விபத்து தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மத்திய பிரதேச மாநில முதல்வர் ஆகியோர் கவலை தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், " இந்தூரில் நடந்த விபத்தால் மிகவும் வேதனையடைந்தேன். முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுஹானிடம் பேசி நிலைமை குறித்து கேட்டு அறிந்துக்கொண்டேன். மாநில அரசு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவாக முன்னெடுத்து வருகிறது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது பிரார்த்தனைகள்" என்றார்.

    மேலும், விபத்து குறித்து அம்மாநில முதல்வர் சவுகான் கூறுகையில், " இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். இருப்பினும் மீட்புப் பணி நடந்து வருகிறது. இதுவரை, 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 9 பேர் இன்னும் சிக்கியுள்ளனர். ஆனால் அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களை மீட்பதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன. அனைவரையும் மீட்க முடியும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.

    • வாரணாசி காங்கிரஸ் தலைவர் அஜய் ராயும், தனது வீட்டை ராகுல் காந்திக்கு வழங்க விருப்பம் தெரிவித்து உள்ளார்.
    • திக்விஜய் சிங்குக்கு டெல்லியில் அரசு இல்லம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    போபால்

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து டெல்லியில் அவர் வசித்து வரும் அரசு பங்களாவை காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இதை ராகுல் காந்தியும் ஏற்றுக்கொண்டுள்ளார். ராகுல் காந்தி பல ஆண்டுகளாக வசித்து வந்த வீட்டை காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு இருப்பது, காங்கிரசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே அவருக்கு தங்கள் வீட்டை வழங்க பல தலைவர்கள் முன்வந்துள்ளனர்.

    அந்த வகையில் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான தக்விஜய் சிங், தனது வீட்டை ராகுல் காந்திக்கு வழங்க முன்வந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'எனது வீட்டில் நீங்கள் தங்கினால் அதிர்ஷ்டமாக கருதுவேன்' என குறிப்பிட்டு இருந்தார்.மாநிலங்களவை உறுப்பினரான திக்விஜய் சிங்குக்கு டெல்லியில் அரசு இல்லம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதைப்போல வாரணாசி காங்கிரஸ் தலைவர் அஜய் ராயும், தனது வீட்டை ராகுல் காந்திக்கு வழங்க விருப்பம் தெரிவித்து உள்ளார்.

    • வழக்கமாக சேலை அணிவது சவுகரியமாக இருக்காது என்பது பலரின் எண்ணம்.
    • சேலை அணிந்த படி பெண்கள் பந்தை அடித்து உதைக்கும் காட்சிகளும், கோல் அடிப்பதும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    ஆண்களுக்கு பெண்கள் இளைத்தவர்கள் இல்லை என்று அனைத்து துறைகளிலும் பெண்கள் போட்டியிட்டு அசத்தி வருகிறார்கள்.

    இப்போது பெண்கள் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதுபோல மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் கால்பந்து போட்டி நடந்துள்ளது.

    இதில் விசேஷம் என்னவென்றால் போட்டியில் பங்கேற்ற பெண்கள் அனைவருமே சேலையில் விளையாடியதுதான்.

    வழக்கமாக சேலை அணிவது சவுகரியமாக இருக்காது என்பது பலரின் எண்ணம். அந்த எண்ணத்தை தவிடு பொடியாக்கும் வண்ணம் குவாலியரில் நடந்த கால்பந்து போட்டியில் பங்கேற்ற பெண்கள் அனைவரும் சேலை அணிந்து கால்பந்து விளையாடினர்.

    குவாலியரை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று பள்ளி, கல்லூரி ஆசிரியைகள் மற்றும் சுய உதவி குழு பெண்களை இணைத்து கடந்த ஆண்டு கால்பந்து போட்டி நடத்தியது.

    அப்போது 4 அணிகள் கலந்து கொண்டனர். 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் போட்டிகள் நடைபெற்றது. இதில் 8 அணிகள் பங்கேற்றனர். அனைத்து அணிகளிலும் சுமார் 20 முதல் 72 வயதான பெண்கள் கலந்து கொண்டனர்.

    அனைவருமே சேலை அணிந்தே கலந்து கொண்டனர். இந்த உடையில் எந்த அசவுகரியமும் இல்லை என கால்பந்து விளையாடிய பெண்கள் கூறினர்.

    சேலை அணிந்த படி அவர்கள் பந்தை அடித்து உதைக்கும் காட்சிகளும், கோல் அடிப்பதும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    இதுபற்றி போட்டியில் பங்கேற்ற பெண்கள் கூறும்போது, சேலை நமது பாரம்பரிய உடை. அதனை அணிவதால் எந்த அசவுகரியமும் இல்லை. இதனை அணிந்து கொண்டு கால்பந்து கூட விளையாடலாம் என்பதை அனைவருக்கும் உணர்த்தவே இந்த போட்டியில் பங்கேற்றோம். அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டியில் இன்னும் அதிக அணிகள் பங்கேற்கும் என்று நம்புகிறோம் என்றனர்.

    • நமீபியா நாட்டில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8 சிறுத்தைகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன.
    • சிறுத்தைக்கு சிறுநீரக பாதிப்பு இருந்து வந்தது.

    போபால்:

    நமீபியா நாட்டில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8 சிறுத்தைகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன. இதில் ஒரு சிறுத்தை மத்தியபிரதேசம் போபாலில் உள்ள வனவிலங்கு சரணாலயத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    அந்த சிறுத்தைக்கு சிறுநீரக பாதிப்பு இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த சிறுத்தை நேற்று பரிதாபமாக இறந்தது. இதனை வனவிலங்கு சரணாலய அதிகாரிகள் தெரிவித்தனர். இடமாற்றம் காரணமாகவும், சிறுநீரக பாதிப்பாலும் சிறுத்தை இறந்ததாக கூறப்பட்டது.

    • சீனாவின் ஷிங் லிஹாவ் 264.2 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
    • சீன வீரர் டு லின்சூவுக்கு (263.3 புள்ளி) வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

    மத்தியபிரதேச மாநிலம் போபாலில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் நடப்பு சாம்பியன் இந்திய வீரர் ருத்ராங்ஷ் பட்டீல் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள தவறினார்.

    262.3 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்ட அவர் வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.

    சீனாவின் ஷிங் லிஹாவ் 264.2 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். மற்றொரு சீன வீரர் டு லின்சூவுக்கு (263.3 புள்ளி) வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

    இதன் பெண்கள் பிரிவில் பங்கேற்ற 52 பேரில் இருந்து தகுதி சுற்று மூலம் டாப்-8 வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.

    • பூகி மாதா பைபாஸில் உள்ள 8 அடி ஆழ வாய்க்காலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
    • முதற்கட்ட விசாரணையில் சுமார் 35 பயணிகளுடன் பேருந்தை வேகமாக இயக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

    மத்தியப் பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் குஜராத் நோக்கிச் சென்ற பேருந்து வாய்க்காலில் கவிழ்நது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 25 பேர் காயமடைந்தனர். இவர்கள் மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் குமார் புர்ஷோத்தம் கூறுகையில்," உஜ்ஜையினிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு இந்தூரில் இருந்து ராஜ்கோட் நோக்கிச் சென்ற பேருந்து, பூகி மாதா பைபாஸில் உள்ள 8 அடி ஆழ வாய்க்காலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், ஏறக்குறைய 25 பயணிகள் காயமடைந்தனர். அவர்களில் இருவரில் நிலை மோசமாக உள்ளது.

    முதற்கட்ட விசாரணையில் சுமார் 35 பயணிகளுடன் பேருந்தை வேகமாக இயக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.

    ×