search icon
என் மலர்tooltip icon
    • இந்தியப் பெருங்கடலின் மையப் பகுதிக்கு அருகே கப்பல் சென்று கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்து மூழ்கியது.
    • கப்பலில் சீனாவை சேர்ந்த 17 மீனவர்கள், இந்தோனேசியாவை சேர்ந்த 17 மீனவர்கள் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டின் மீனவர்கள் 5 பேர் என 39 பேர் இருந்தனர்.

    சீனாவுக்கு சொந்தமான மீன்பிடி கப்பல் ஒன்று இந்தியப் பெருங்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து புறப்பட்ட இந்த கப்பல் சீனாவை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, இந்தியப் பெருங்கடலின் மையப் பகுதிக்கு அருகே கப்பல் சென்று கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்து மூழ்கியது.

    இதில், அந்த கப்பலில் சீனாவை சேர்ந்த 17 மீனவர்கள், இந்தோனேசியாவை சேர்ந்த 17 மீனவர்கள் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டின் மீனவர்கள் 5 பேர் என 39 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் மாயமாகி உள்ளனர்.

    இதனிடையே மாயமானவர்களை தேடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு மீட்பு குழுக்களுக்கு சீன அதிபர் ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், சர்வதேச கடல்சார் மற்றும் மீட்பு உதவிகளை நாடி சீன அதிபர் அழைப்பு விடுத்ததை அடுத்து, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளின் கடற்படைகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • துணை முதல்வராக டி.கே.சிவகுமார் பதவியேற்கிறார்.
    • பதவியேற்பு விழா பெங்களூருவில் வரும் 20ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.

    கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ள போதிலும் முதலமைச்சர் பதவியை ஏற்கப்போவது யார் என்பதை தீர்மானிக்க முடியாமல் திணறியது.

    கடந்த 13ம் தேதி பிற்பகல் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதியான நிலையில் முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் விருப்பம் தெரிவித்தனர்.

    இதையடுத்து யாரை முதலமைச்சராக தேர்வு செய்வது என்பது குறித்து புதிய எம்.எல்.ஏ.க்கள் அனைவரிடமும் எழுத்து பூர்வமாக கருத்து கேட்கப்பட்டது. அவை அனைத்தும் டெல்லி கொண்டு செல்லப்பட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரையும் காங்கிரஸ் மேலிடம் டெல்லிக்கு வரவழைத்தது. நேற்று அவர்கள் இருவரையும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது வீட்டுக்கு வர வழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரிடமும் பல்வேறு திட்டங்களை காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்தார். முதல்-மந்திரி பதவியை முதல் 2 ஆண்டுகள் ஒருவரும், மீதமுள்ள 3 ஆண்டுகளை மற்றொருவரும் ஏற்கும் வகையில் செயல்படலாம் என்று கூறினார். இதை இருவரும் ஏற்க மறுத்து விட்டனர்.

    சித்தராமையா, டி.கே.சிவகுமார் இருவரும் விட்டுக்கொடுக்க மறுப்பதால் 4 நாட்களாக புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்ய முடியாமல் இழுபறி நீடித்து வந்தது.

    இந்நிலையில், கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.

    முதல்வர் மற்றும் துணை முதல்வர் மற்றும் புதிய எம்.எல்.ஏக்களுக்கான பதவியேற்பு விழா பெங்களூருவில் வரும் 20ம் தேதி நடைபெறும் என காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது.

    முன்னதாக, பெங்களூருவில் இன்று இரவு 7 மணிக்கு கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், அப்போது, முதல்வர், துணை முதல்வர் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    • எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த தமிழ்நாட்டின் முதல் பெண்மணி என்ற பெயரை பெற்றிட வாழ்த்துகள்.
    • பயணத்தை முடித்த பின்பு தன்னை நேரில் வந்து சந்திக்குமாறும் முத்தமிழ்ச்செல்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு.

    எவரெஸ்ட் சிகரத்தை அடையும் பயணத்தில் வெற்ற பெற தமிழக வீராங்கனை முத்தமிழ்செல்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த தமிழ்நாட்டின் முதல் பெண்மணி என்ற பெயரை பெற்றிட வாழ்த்துகள் என்றும் பயணத்தை முடித்த பின்பு தன்னை நேரில் வந்து சந்திக்குமாறும் முத்தமிழ்ச்செல்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    எல்லோருக்கும் சாதனை படைத்து, தாங்களே 'முதல்' என முத்திரை பதித்திட வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அதற்கான உழைப்பும் முயற்சியும் இருந்தால் எத்தகைய உயரத்தையும் அடைந்திடலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக, புகழின் உச்சிக்குச் செல்ல, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிக் கொண்டிருக்கிறார் விருதுநகர் மாவட்ட ஜோகில்பட்டியைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி அவர்கள்.

    எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் தமிழ்ப்பெண் என்ற சாதனையை நோக்கி 7200 மீட்டர் உயரத்தைக் கடந்து பயணிக்கும் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தொலைபேசி வாயிலாகப் பகிர்ந்தேன்.

    எட்டிவிடும் தூரத்தில் இருக்கும் சாதனை அவருக்கு வசப்படட்டும்! இன்னும் பல பெண்கள் சாதனை படைத்திட அவர் ஊக்கமாக விளங்கட்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மாவட்ட மருந்துக் கிடங்கில் மருந்துகள் மற்றும் மருந்து உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் வைக்கப்பட்டிருந்தன.
    • 5 தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் உலியக்கோவில் தேவி கோவிலுக்கு அருகே உள்ள கேரள மருத்துவ சேவை கழகத்தின் மாவட்ட மருந்துக் கிடங்கில் மருந்துகள் மற்றும் மருந்து உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் வைக்கப்பட்டிருந்தன.

    இந்நிலையில், இந்த கிடங்கில் நேற்று இரவு 8.45 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தை கவனித்த பாதுகாப்பு ஊழியர்கள், அப்பகுதி மக்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து, போலீசார் மற்றும் 5 தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பிறகு, 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கிடங்கின் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒன்றிரண்டு வாகனங்கள் தீயில் எரிந்து நாசமானது. கிடங்கில் ஏற்பட்ட பொருட் சேதம் குறித்து தகவல் இல்லை.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழகம் முழுவதும் போலீசார் கள்ளச்சாராய வேட்டை நடத்தி கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பலை அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.
    • சாராயத்தை ஒழிக்க தவறிய குற்றத்துக்காக போலீஸ் அதிகாரிகள் மீது பணியிடை நீக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம், செங்கல்பட்டு மாவட்டம் பெருக்கரணை, பேரம்பாக்கம் கிராமங்களில் சாராயம் அருந்திய 22 பேர் பலியாகி உள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் கள்ளச்சாராய வேட்டை நடத்தி கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பலை அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.

    மேலும் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. சாராயத்தை ஒழிக்க தவறிய குற்றத்துக்காக போலீஸ் அதிகாரிகள் மீது பணியிடை நீக்க நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் விஷச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி விரிவான  அறிக்கை கேட்டுள்ளார்.

    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது.
    • பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

    ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று தரம்சாலாவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது.

    அதிரடியாக ஆடிய கேப்டன் டேவிட் வார்னர், 31 பந்துகளில் 46 ரன்களும், பிருத்வி ஷா 38 பந்துகளில் 54 ரன்களும் விளாசி வலுவான அடித்தளம் அமைத்தனர்.

    அதன்பின்னர் ரூசோ அதிரடியாக ஆடி ரன் குவித்தார். பந்துகளை பவண்டரி, சிக்சர்களாக பறக்கவிட, அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

    கடைசி வரை களத்தில் நின்ற ரூசோ, 37 பந்துகளில் 6 பவுண்டரி 6 சிக்சர் உள்பட 82 ரன்கள் குவித்தார். பில் சால்ட் 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.

    இதில், அதிகபட்சமாக லியம் லிவிங்ஸ்டன் 48 ரன்களில் 94 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் விளையாடினார்.

    தொடர்ந்து, அதர்வா டைட் 55 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 22 ரன்களும், சாம் குரான் 11 ரன்களும், ஷாருக்கான் 6 ரன்களும் குவித்தனர். கடைசி ஓவரில் களமிறங்கிய ராகுல் சஹார் ரன்கள் எடுக்கவில்லை.

    இதன் முடிவில், பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் டெல்லி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தி வெற்றிப்பெற்றது.

    ×