என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இஸ்ரேல்
- காசாமுனை பகுதிக்குள் இஸ்ரேல் ராணுவம் நுழைந்து 250-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகளை மீட்டு வந்தது.
- ஹமாஸ் அமைப்பிடம் இன்னும் 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
டெல் அவிவ்:
இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பினர் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் என பலரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதையடுத்து, காசாமுனை பகுதிக்குள் இஸ்ரேல் ராணுவம் நுழைந்து 250-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகளை மீட்டு வந்தது.
இந்நிலையில், ஹமாஸ் அமைப்பிடம் இன்னும் 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், தற்போது காசாவில் 120-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஹமாஸ் அமைப்பால் சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர் என்பதை இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதிபடுத்தி உள்ளது என தெரிவித்தது.
- போரால் சாமானிய மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்.
- எச்சரிக்கையை ஏற்று மக்கள் உடனடியாக வெளியேறி வருகிறார்கள் என்றார்.
டெல் அவிவ்:
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய 7-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில், பாலஸ்தீன மக்களை வெளியேற விடாமல் ஹமாஸ் தடுத்து வருகிறது என இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் ஜோனாதன் கூறுகையில், போரால் சாமானிய மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். எச்சரிக்கையை ஏற்று மக்கள் உடனடியாக வெளியேறி வருகிறார்கள். ஆபத்தான பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற விடாமல் ஹமாஸ் தடுப்பது வேதனை அளிக்கிறது. 120க்கும் அதிகமான சாமான்ய மக்களை பணயக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
- போர் இன்னும் தீவிரம் அடைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
- இரு விமானங்களை ஆஸ்திரேலிய அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நிலவிய நீண்ட கால மோதல் தற்போது போராக வெடித்துள்ளது. இதில் இரு தரப்பினரும் சரமாரி ஏவுகணை தாக்குதலில் ஈடுபடுகின்றனர். இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு பலியாகி உள்ளனர். போர் இன்னும் தீவிரம் அடைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. எனவே அங்கு சிக்கியுள்ள தங்களது குடிமக்களை மீட்கும் பணியில் ஒவ்வொரு நாடுகளும் தீவிர முயற்சி செய்து வருகின்றன.
அந்த வகையில் இஸ்ரேலில் சிக்கியுள்ள ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த சுமார் 1,600 பேர் தாயகம் திரும்ப உதவும்படி ஆஸ்திரேலிய அரசிடம் முறையிட்டுள்ளனர். அவர்களை மீட்டு கொண்டு வருவதற்காக இரு விமானங்களை ஆஸ்திரேலிய அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் இருந்து அந்த விமானங்கள் இயக்கப்படும் என ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது.
- இஸ்ரேல் அரசு காசா மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந் தேதி இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள், குண்டுகளை வீசி, ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதுடன், ஆயுதங்களுடன் இஸ்ரேலுக்குள் ஊடுருவி கண்ணில்பட்டவர்களை எல்லாம் சுட்டுக்கொன்றனர்.
இதையடுத்து, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்த இஸ்ரேல் அரசு காசா மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. தொடர்ந்து இஸ்ரேல் - ஹமாஸ் ஆயுதக்குழு இடையேயான போர் 8ம் நாளாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கென் இஸ்ரேல் சென்ற நிலையில், நேற்று அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டின் இஸ்ரேல் சென்றுள்ளார். அமெரிக்காவின் ஆதரவை உறுதிப்படுத்தும் வகையில் அவர் இஸ்ரேலுக்கு வருகை தந்துள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், "ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை விட மோசமானது ஹமாஸ் அமைப்பு" என அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆஸ்டின் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இஸ்ரேலுக்கு பக்கபலமாக அமெரிக்கா என்றும் இருக்கும் என உறுதி அளித்துள்ளார்.
- காசாவில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி தவித்து வருகிறார்கள்.
- இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வர மத்திய அரசு ஆபரேஷன் அஜய் திட்டத்தை தொடங்கியது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆட்சி நடத்தி வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந் தேதி இஸ்ரேல் மீது திடீரென சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்த இஸ்ரேல் அரசு காசா மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த போரால் இஸ்ரேல் மற்றும் காசாவில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி தவித்து வருகிறார்கள். அவர்களை அங்கிருந்து பத்திரமாக மீட்க மத்திய அரசு களத்தில் இறங்கி இருக்கிறது. இதற்காக 'ஆபரேஷன் அஜய்' என்ற பெயரில் அதிரடி மீட்பு நடவடிக்கையை மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதன்படி இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரப்படுவார்கள் என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.
அந்தவகையில் நேற்றைய தினம் 212 இந்தியர்கள் அடங்கிய முதல் குழுவுடன் சிறப்பு விமானம் ஒன்று இந்தியா வந்தடைந்தது. இதைத் தொடர்ந்து டெல் அவிவ் நகரில் இருந்து 235 இந்தியர்களை அழைத்துக் கொண்டு 2-வது சிறப்பு விமானம் இந்தியா புறப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய மந்திரி ஜெய்சங்கர் தனது 'எக்ஸ்' சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
#OperationAjay
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) October 13, 2023
Flight #2 carrying 235 Indian nationals takes off from Tel Aviv. pic.twitter.com/avrMHAJrT4
- போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது.
- வானில் இருந்து நோட்டீஸ்களை வீசி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்து வருகிறது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆட்சி நடத்தி வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந் தேதி இஸ்ரேல் மீது திடீரென சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்த இஸ்ரேல் அரசு காசா மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதனால் போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. மேலும் காசா மீது தொடர் வான்வழித்தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும் காசாவில் உள்ள மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு செல்லுமாறும் வானில் இருந்து நோட்டீஸ்களை வீசி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்து வருகிறது. குறிப்பாக காசாவின் வடக்கு பகுதியில் இருந்து பொதுமக்கள் அனைவரும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படக் கூடும் என்பதால் சைரன் எச்சரிக்கை ஒலிக்கப்பட்டதும், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை தேடி ஓட்டம் பிடித்தனர். வடக்கு இஸ்ரேலில் ராக்கெட் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்படுவதால் இஸ்ரேல்- லெபனான் எல்லையில் மீண்டும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
- இஸ்ரேல் அரசு காசா மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
- மோசமான விளைவுகள் ஏற்படக்கூடும் எனவும் ஐ.நா. எச்சரித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆட்சி நடத்தி வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந் தேதி இஸ்ரேல் மீது திடீரென சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்த இஸ்ரேல் அரசு காசா மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதனால் போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. மேலும் காசா மீது தொடர் வான்வழித்தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும் காசாவில் உள்ள மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு செல்லுமாறும் வானில் இருந்து நோட்டீஸ்களை வீசி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்து வருகிறது. குறிப்பாக காசாவின் வடக்கு பகுதியில் இருந்து பொதுமக்கள் அனைவரும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலின் இந்த அறிவிப்புக்கு ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்துள்ளது. சுமார் 11 லட்சம் பேர் வாழும் வடக்கு காசா பகுதியில் இருந்து 24 மணி நேரத்திற்குள் அனைவரும் வெளியேறுவது சாத்தியமில்லாதது எனவும், இதனால் மோசமான விளைவுகள் ஏற்படக்கூடும் எனவும் ஐ.நா. எச்சரித்துள்ளது. ஏற்கனவே பெரும் சோகத்திற்கு ஆளாகியுள்ள மக்கள், மேலும் ஒரு பேரிடரில் சிக்கிக்கொள்வதை தவிர்க்கும் வகையில் இந்த அறிவிப்பை இஸ்ரேல் திரும்பப் பெற வேண்டும் என ஐ.நா. கேட்டுக்கொண்டுள்ளது.
- காசா பகுதிக்குள் குடிநீர், மின்சாரம், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் இஸ்ரேல் தடுத்து நிறுத்தி உள்ளது.
- காசா பகுதிக்கு உணவு, எரிபொருள், மின்சாரம், மருந்து ஆகியவற்றை வழங்குவதற்கு இஸ்ரேல் நிபந்தனை விதித்துள்ளது.
டெல்அவிவ்:
இஸ்ரேல்-ஹமாஸ் படையினருடன் ஏற்பட்டு உள்ள சண்டை இன்று (வெள்ளிக்கிழமை) 7-வது நாளை எட்டியுள்ளது.
ஹமாஸ் படையினர் வசிக்கும் காசா பகுதிகளை இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. நேற்று இரவு மிக கடுமையான தாக்குதல் நடந்ததால் காசா பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
கடந்த 6 நாட்களில் மட்டும் 6 ஆயிரம் சக்தி வாய்ந்த குண்டுகளை இஸ்ரேல் விமானங்கள் வீசி உள்ளன. இந்த வான்வழி தாக்குதல் காரணமாக காசா பகுதியில் சுமார் 2,500 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி விட்டன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமாகி உள்ளன.
இதன் காரணமாக காசா நகரம் உருக்குலைந்து பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது. 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்களை இதற்காக குவித்துள்ளது.
காசா நகருக்குள் இஸ்ரேல் தரை படை நுழைந்து தாக்குதல் நடத்தினால் உயிர் சேதம் மிக அதிகளவில் இருக்கும் என்று அச்சம் எழுந்துள்ளது. இதனால் காசாவில் இருந்து மக்கள் வெளியேறி வருகிறார்கள். இன்று காலை வரை 4.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறி விட்டனர்.
காசா பகுதிக்குள் குடிநீர், மின்சாரம், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் இஸ்ரேல் தடுத்து நிறுத்தி உள்ளது. இதனால் காசா பகுதியில் வாழும் மக்களின் நிலைமை படுமோசமாக மாறி வருகிறது. ஐ.நா. சபை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு மக்களுக்கு உதவி செய்து கண்காணித்து வருகிறார்கள்.
காசாவில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு முகாம்களை ஐ.நா. சபை ஏற்படுத்தி உள்ளது. அங்கு மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால் தஞ்சம் அடைய வரும் மக்களுக்கு முழுமையாக உதவி செய்ய முடியாமல் ஐ.நா. சபை அதிகாரிகள் திணறியபடி உள்ளனர்.
காசாவில் உள்ள உணவு ஆலைகள் இன்று முதல் உணவு விநியோகத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதனால் காசாவில் உணவு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் உணவுக்காக கடைகளில் அரசு வினியோக பகுதிகளில் குவிந்துள்ளனர்.
இன்று காலை காசாவில் உணவுக்காக மக்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்ற காட்சியை காண முடிந்தது.
காசா பகுதிக்கு உணவு, எரிபொருள், மின்சாரம், மருந்து ஆகியவற்றை வழங்குவதற்கு இஸ்ரேல் நிபந்தனை விதித்துள்ளது. பிணை கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படும் வரை இந்த தடை தொடரும் என இஸ்ரேல் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.
தற்போது காசாவில் ஹமாஸ் படையினர் கட்டுப்பாட்டில் 200-க்கும் மேற்பட்ட இஸ்ரேல் வீரர்கள் பிணை கைதிகளாக உள்ளனர்.
அவர்களை விடுவிக்குமாறு அரபு நாடுகளும், பாலஸ்தீன பிரதமரும் வலியுறுத்தி உள்ளனர். ஆனால் அதை ஹமாஸ் படையினர் ஏற்க மறுத்து இருப்பதால் நிலைமை மோசமாகி வருகிறது.
காசாவில் மின்சாரம் இல்லாததால் கடந்த 4 நாட்களாக காசா முழுவதும் இருளில் மூழ்கி உள்ளது. மின்சாரம் இல்லாததால் குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது. சுமார் 10 லட்சம் பேர் தண்ணீர் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.
மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உணவு, குடிநீர் இல்லாத நிலையில் மருந்தும் இல்லாததால் முதியவர்கள், குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
என்றாலும் இஸ்ரேல் இன்னும் தாக்குதலை நிறுத்தவில்லை. இதன் காரணமாக காசா பகுதி மேலும் உருக்குலைய தொடங்கி உள்ளது. இது ஹமாஸ் இயக்கத்தினருக்கு நீண்ட கால பாதிப்பை கொடுக்கும் என்று கருதப்படுகிறது.
- இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
- 3.34 லட்சம் பாலஸ்தீனியர்கள் வீடுகளை இழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஜெருசலேம்:
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந்தேதி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் எதிர் தாக்குதல் நடத்தியது. இருவரும் நடத்திவரும் தாக்குதலில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்து இருக்கின்றனர்.
ஹமாஸ் அமைப்பினருக்கு தக்க பதிலடி கொடுத்துவரும் இஸ்ரேல், பணயக் கைதிகளை விடுவிக்கும் வரை காசா முற்றுகை பகுதியில் மனிதாபிமான உதவிகளை வழங்க அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளது. அங்கு ஒரு சொட்டு தண்ணீரோ, வெளிச்சமோ இருக்காது என்று இஸ்ரேல் அமைச்சர் எச்சரித்திருக்கிறார்.
இந்நிலையில் இரு தரப்பினரும் நடத்திவரும் தாக்குதலுக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 45 பேர் பலியாகியிருக்கின்றனர். இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 500 குழந்தைகள், 276 பெண்கள் உள்பட 1537 பேர் கொல்லப்பட்டு இருக்கின்றனர். 6,612 பேர் காயமடைந்துள்ளனர். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் 31 பேர் பலியாகினர். 600பேர் காயமடைந்தனர்.
ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் பலியானோர் எண்ணிக்கை 1,300 ஆக உயர்ந்திருக்கிறது. அவர்களில் 220 பேர் ராணுவ வீரர்கள் ஆவர். தாக்குதலில் 3,200பேர் காயமடைந்து இருக்கின்றனர்.
3.34 லட்சம் பாலஸ்தீனியர்கள் வீடுகளை இழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐ.நா. முகாம்களில் 2.2 லட்சம் பேர் உள்ளனர். சிரியாவின் தலைநகர் டகாகஸ் மற்றும் வடக்கு நகரான அலெப்போலில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் நடத்தியதில் விமான நிலையங்களின் ஓடுபாதைகள் சேதடைந்தன.
இஸ்ரேலில் நடந்துவரும் தாக்குதலில் அமெரிக்க குடிமக்கள் 25பேர் கொல்லப்பட்டதாகவும், 17பேரை காணவில்லை என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோன்று பிரெஞ்சு குடிமக்கள் 12 பேர் கொல்லப்பட்டதாகவும், 16 பேரை காணவில்லை எனவும் கூறப்படுகிறது.
- ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி வருகிறது.
- காசாவில் உள்ள 10 லட்சம் மக்கள் அடுத்த 24 மணி நேரத்தில் வெளியேறவும் எச்சரித்துள்ளது.
டெல் அவிவ்:
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய 6-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில், வட காசாவில் உள்ள 10 லட்சம் மக்கள் அடுத்த 24 மணி நேரத்தில் துரிதமாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை ஊழியர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பள்ளிகள் உள்பட அனைத்து இடங்களில் உள்ள பாலஸ்தீனியர்களை உடனே வெளியேறவும் அறிவுறுத்தியுள்ளது.
- அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் நேற்று இஸ்ரேல் சென்றார்.
- அவர் தலைநகர் டெல் அவிவில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்துப் பேசினார்.
டெல் அவிவ்:
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் நேற்று இஸ்ரேல் சென்றார். தலைநகர் டெல் அவிவில் உள்ள ராணுவ அமைச்சகத்தில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகுவை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் நேதன்யாகுவிடம், என்னுடன் நான் கொண்டு வந்துள்ள செய்தி இதுதான். உங்களை தற்காத்துக் கொள்ளும் அளவுக்கு நீங்கள் பலம் வாய்ந்தவர்களாக இருக்கலாம். அமெரிக்கா இருக்கும்வரை நீங்கள் தனியாகப் போராட வேண்டிய அவசியமில்லை. போர்ச்சூழலைப் பயன்படுத்தி யாராவது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால் நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் என தெரிவித்தார்.
- காசாவில் உள்ள மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு செல்லுமாறு வானில் இருந்து நோட்டீஸ்களை வீசி இஸ்ரேல் எச்சரிக்கை.
- ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் ராணுவத்தின் பலத்தை அதிகரிக்க இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் கடந்த சனிக்கிழமை முதல் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இஸ்ரேல் ராணுவம் பதிலடி நடவடிக்கையாக போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் இன்று 6-வது நாளாக நீடிக்கிறது.
இந்நிலையில், சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ ஆகிய 2 விமான நிலையங்கள் மீது இஸ்ரோ வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதற்கிடையே, இஸ்ரேலில் உள்ள தங்கள் நாட்டினரை மீட்க இங்கிலாந்து விமானம் அனுப்புகிறது.
மத்திய காசா பகுதியில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 18 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
பல்வேறு நாடுகளில் உள்ள இஸ்ரேலின் விமான படையினர் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என இஸ்ரேல் அழைப்பு விடுத்துள்ளது.
ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் ராணுவத்தின் பலத்தை அதிகரிக்க இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும், காசாவில் உள்ள மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு செல்லுமாறு வானில் இருந்து நோட்டீஸ்களை வீசி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்