search icon
என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • பென்னாகரம் அருகே பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • வயிற்று வலியால் விபரீத முடிவு

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மிட்ட தாரர் தெருவைச் சேர்ந்தவர் நசீர்பாஷா. இவரது 2-வது மனைவி ஷம்சாத் (வயது48). இவர்களுக்கு 4 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நசீர்பாஷா இறந்து விட்டார். இந்த நிலையில் ஷம்சாத் தனது மகன் வீட்டின் மேல் மாடியில் தங்கியிருந்தார். ஷம்சாத்துக்கு அடிக்கடி ஏற்படும் வயிற்று வலியால் அவதியடைந்தார். இதன் காரணமாக மனமுடைந்த காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் இரவு 11மணியளவில் திடீரென்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை கண்ட உறவினர்கள் உடனே அவரை மீட்டு பென்னா கரம் அரசு தலைமை ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஷம்சாத் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.

    இதுகுறித்து நசீர்பாஷா–வின் மகன் மஹப்பூஷா பென்னாகரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரி வித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தருமபுரியில் பண்டிகை காலங்களில் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்து போனதால் வெல்லம் விற்பனை சரிந்து போனது.
    • கிலோ ரூ. 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    தீபாவளி பண்டிகை என்றாலே உருண்டை வெல்லத்தை வைத்து வீடுகளில் பாட்டிகள், அதிரசம், சீடை, கடலை மிட்டாய் உருண்டை, முந்திரி திராட்சை உருண்டை, பாதாம் திராட்சை உருண்டை, அவல் உருண்டை, அரிசி மிட்டாய் உருண்டை, பொரி உருண்டை, கமர்கட், எள்ளுருண்டை, வெல்லம் பாகில் ஊற வைத்த தேன்குடல், ஜவ்வரிசி உருண்டை, கேழ்வரகு மாவு உருண்டை, திணை உருண்டை, வேர்க்கடலை உருண்டை எனகுழந்தைகள் நன்கு வளரவும், பெரியவர்கள் களைப்படையாமல் உழைக்கவும் புரதச்சத்து மிகவும் அவசியம். இந்த புரதச்சத்தை வாரி வழங்கும் பொருட்களைக் கொண்டு வீடுகளில் பெரியவர்கள் பலவகையான இனிப்பு வகைகளை செய்து அசத்துவர்.

    இந்த தின்பண்டங்கள் செய்வ தற்கு பண்டைய காலத்தில் இருந்து சிறந்த முறையில் உருண்டை வெல்லம் தயார் செய்து அதில் இனிப்பு வகைகளை செய்து அசத்தி வந்தனர். இன்றும் பாரம்பரியம் குறையாமல் தருமபுரி மாவட்டத்தில் பழைய தருமபுரி, முத்துக்கவுண்டன் கொட்டாய், கட கத்தூர், சோகத்தூர், பாப்பா ரப்பட்டி, பாலக்கோடு, பாப்பி ரெட்டிப்பட்டி, பொம்மிடி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட பகுதிகளில் கரும்பு உருண்டை வெல்லம் உற்பத்தி செய்வது பிரதான தொழிலாக இருக்கிறது.

    இந்தப் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட உருண்டை வெல்லம் உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. ஒரு உற்பத்தி நிலையத்தில் சுமார் 5 முதல் 10 பேர் வரை பணிபுரிந்து வருகின்றனர்.

    இங்கு உற்பத்தி செய்யப் படும் வெல்லம் சென்னை, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஓசூர், சேலம் மற்றும் அண்டை மாநிலங்களான கர்நாடகாவில் உள்ள மைசூர், மாண்டியா, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும் ஆந்திராவிற்கு விற்பனைக்காக அனுப்பப் படுகிறது. இந்நிலையில் ஆயுதபூஜை, தசரா, தீபாவளி, பொங்கல் பண்டிக்கை காலங்களில் உருண்டை வெல்லம் உற்பத்தி அதிகரித்து, விலை உயர்ந்து விற்பனையாகும்.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள உருண்டை வெல்லம் உற்பத்தி ஆலைகளுக்கு தேவையான கரும்புகள் கர்நாடகா மாநிலத்தில் மாண்டியா, மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்து உருண்டை வெல்லம் உற்பத்தி செய்து வந்தனர். இந்நிலையில் போதிய வருமானம் கிடைக்காததால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு உருண்டை வெல்லம் உற்பத்தி ஆலைகள் மூடப்பட்டது. இந்நிலையில் ஒரு சில ஆலைகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது.

    இதனால் கடந்த காலங்களில் பொங்கல், தீபாவளி, ஆயுத பூஜை போன்ற பண்டிகை நாட்களில் வெல்லம் உற்பத்தி குறைவாக இருந்ததால் நல்ல விலை கிடைத்து வந்தது.இது குறித்து வெல்ல உற்பத்தியாளர்கள் கூறியதாவது;- தருமபுரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்காக உருண்டை வெல்லம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில் உருண்டை வெல்லம் உற்பத்தி செய்யும் பணியில் உற்பத்தியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகைக்காக உருண்டை வெல்லம் கிலோ ரூ. 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனால் பண்டிகைக்கு இரண்டு மாதத்திற்கு முன்பு முன்பதிவுகளும் உற்பத்தியில் தொடங்கும் நிலையில், தற்போது மக்களிடையே வெல்லம் வாங்கி வீடுகளில் இனிப்பு தயாரிக்கும் பழக்கம் குறைந்து.

    நேரடியாக கடைகளுக்கு சென்று இனிப்பு வாங்கி தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இதனால் போதிய அளவு முன்பதிவு கிடைக்காமல் உள்ளது. இதனால் உருண்டை வெல்லம் உற்பத்தியாளர்களுக்கு விற்பனையும் வருவாயும் குறைந்த அளவே இருந்து வருகிறது.

    இதனால் இந்த ஆண்டு பண்டிகைக்கு உருண்டை வெல்லத்தின் விலையும் இல்லை, போதிய வருவாய் கிடைக்கவில்லை. இதனால் கரும்பு விவசாயிகளும், உருண்டை வெல்ல உற்பத்தி ஆலைகள் மற்றும் தொழிலாளர் தீபாவளி பண்டிகைக்கான வருவாய் இல்லாமல் தவித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • மத்திய அரசு மின் துறையில் தனியார் நிறுவனங்களை ஈடுபடு்த்த கூடாது என்று ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
    • ஸ்மார்ட் மீட்டர் பொறுத்த கேரளா மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    மத்திய அரசு மின் துறையில் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்த கூடாது என மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

    இது குறித்து தருமபுரி மாவட்டம், அரூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

    மின்சார துறையில் மின் உற்பத்தி, மின்சார விநியோகம், மின்சார பயன்பாடுகளின் கணக்கெடுப்பு உள்ளிட்ட பணிகளுக்கு தனியார் நிறுவனங்களை பயன்ப டுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. முதல்கட்டமாக அனைத்து மாநிலங்களிலும் ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்தும் பணிகள் தொடங்கப்படவுள்ளது.

    இந்த ஸ்மார்ட் மீட்டர் மூலம் கணக்கெடுப்பு மற்றும் கட்டண நிர்ணயம் செய்யும் பணிகளை தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ளும். இதனால் ஏழை, எளிய மக்கள், சிறு, குறு தொழில் செய்பவர்கள், கைத்தறி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப் படுவார்கள். கேரளா மாநிலத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொறுத்த அந்த மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இதேபோல், தமிழக அரசும் மின்சார துறையில் ஸ்மார்ட் மீட்டர் பொறுத்துவதை தடுக்க வேண்டும்.மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இம் மாதம் 15ந் தேதி முதல் பிரசார இயக்கம் நடத்தப்படவுள்ளது. சென்னிமலையில் இம்மாதம் 9 ந்தேதி, மத நல்லிணக்கம் மற்றும் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ.கட்சி சார்பில் 11 கட்சிகள் இணைந்து பொதுக்கூட்டம் நடத்தப்படவுள்ளது.

    தருமபுரி மாவட்டம், வாச்சாத்தியில் வன்கொ டுமையால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்க ளுக்கு தேவையான வேலைவாய்ப்பு, வீடுகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தமிழக அரசு மேம்படுத்த வேண்டும் என்றார்.

    • தருமபுரி மாவட்டத்தில் போதிய விலை கிடைக்காததால் சாமந்தி பூக்களை ரோட்டோரம் கொட்டி விவசாயிகள் கொட்டி சென்றனர்.
    • செண்டுமல்லி பூக்கள் கிலோ ரூ. 5 முதல் முதல் ரூ. 10க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது

    தருமபுரி மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் அனைத்து வகை பூக்களையும் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளையும் பூக்களை தமிழகத்தின் பல மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலும் இருந்து வரும் மொத்த வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.

    கடந்த புரட்டாசி மாதம் பூக்களின் விலை குறைந்து படு வீழ்ச்சியில் விற்பனை செய்யப்பட்டது. பின்னர் விஜயதசமி பண்டிகையையொட்டி பூக்களின் விலை உயர்ந்து கிலோ சாமந்திப்பூ ரூ. 200க்கும் செண்டுமல்லி ரூ .50 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    தற்பொழுது பூக்களின் வரத்து அதிகரிப்பால் சாமந்தி, செண்டுமல்லி பூக்கள் கிலோ ரூ. 5 முதல் முதல் ரூ. 10க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. பூக்களை வாங்க வியாபாரிகள் வராததால் விற்பனை ஆகாத பூக்களை விவசாயிகள் ரோடு ஓரங்களில் கொட்டி செல்கின்றனர்.

    தருமபுரி பென்னாகரம் ரோட்டில் இருந்து சேலம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் பிரிவு சாலை ஓரத்தில் சாமந்தி மற்றும் செண்டு மல்லி பூக்களை விவசாயிகள் கொட்டி சென்றுள்ளனர்.

    • கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி 19-ந் தேதி கே.பி.அன்பழகன் மற்றும் அவருக்கு தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
    • வருமானத்திற்கு அதிகமாக ரூ. 45 கோடியே 20 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் அளவிற்கு சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்டுபிடித்தனர்.

    தருமபுரி:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி 19-ந் தேதி கே.பி.அன்பழகன் மற்றும் அவருக்கு தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    அதில் வருமானத்திற்கு அதிகமாக ரூ. 45 கோடியே 20 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் அளவிற்கு சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்டுபிடித்தனர்.

    இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் 10 ஆயிரம் பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையினை தருமபுரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். இதனை தொடர்ந்து நீதிமன்ற நடைமுறைகள் தொடங்கியது. அமைச்சர் மற்றும் உறவினர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், உறவினர்கள், சரவணன், சரவணக்குமார், மாணிக்கம், தனபால் உள்ளிட்ட 11 பேரும் இன்று முதல் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

    • வார்டன் மது போதையில் இருந்ததாக புகார் எழுந்தது.
    • சிறைவா சிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்து விசாரணை செய்தார்.

    அரூர்,  

    சேலம் மத்தியில் சிறைச்சாலையின் கட்டுப் பாட்டில் உள்ள அரூர் கிளை சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. இதில் காப்பாளர், காவலர்கள், சமையலர் 13 பேர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று குடிபோதையில் பணியில் ஈடுபட்ட தலைமை வார்டன் அசோக்குமார் மது போதையில் இருந்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து அவரை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோதனை செய்தனர். அதில் அவர் மது போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

    இதனையடுத்து சிறைத்துறை டிஜிபி-க்கு இது குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக் கப்பட்டுள்ளது. இதனை யடுத்து சிறைத்துறை டிஜிபி அம்ரீஷ் புஜாரி உத்தரவின் பேரில்சேலம் மத்திய சிறைச்சாலை கண்கா ணிப்பாளர் மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர் ஜி வினோத் மது போதையில் பணி செய்த தலைமை வார்டன் அசோக்குமாரை பணியிடை நீக்கம் செய்தார்.

    இதனை தொடர்ந்து அரூர் சிறைச்சாலையில் ஆய்வு மேற்கொண்ட கண்காணிப்பாளர் சிறைவா சிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும் பதிவேடு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது அரூர் கிளை சிறைச்சாலை கண்காணிப்பாளர் அருண் உடன் இருந்தார். 

    • மாணவிகள் காலி பக்கெட்டுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தரமான உணவுகள் வழங்க ப்படுகின்றதா? என விசாரணை மேற்கொண்டார்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள எச், புதுப்பட்டி மாணவிகள் தங்கும் விடுதியில் 6-ம் வகுப்பு முதல் 12- ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் 56 பேர் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் இரு திங்களுக்கு முன்பு விடுதியில் கழிப்பறை, போதிய தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி பள்ளி மாணவிகள் திடீரென விடுதி முன்புள்ள நுழைவாயில் பகுதி சாலையில் தரையில் காலி பக்கெட்டுடன் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் தங்களுக்கு கழிப்பிட வசதி இல்லாததால் வயல்வெளி பகுதி முட்புதர் பகுதிக்கும் செல்வதாகவும், குடிநீர் வசதி, தண்ணீர் வசதி இல்லா ததால் வயல்வெ ளிக்குச் சென்று தண்ணீர் எடுத்து வந்து குளிப்பதாகவும் பகீர் குற்றச்சாட்டை தெரி வித்தனர். இந்த செய்தி மாலை மலர் நாளிதழில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் இச்ச ம்பவம் குறித்து நேரில் விசாரணை மேற்கொ ள்வதற்கு தேசிய தாழ்த்தப்பட்ட ஆணை யத்தின் எஸ்.சி. எஸ். டி. தமிழ்நாடு ஆணைய இயக்குனர் ரவிவர்மன் பள்ளி மாணவி யரின் தங்கும் விடுதிக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் மாணவிகளிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டார். மேலும் விடுதியில் தண்ணீர் வசதி செய்யப்ப ட்டுள்ளதா? கழிப்பிடங்கள் சுத்த மாக பராமரிக்க ப்படுகிறதா? தரமான உணவுகள் வழங்க ப்படுகின்றதா? என்பது குறித்து மாணவிகளிடம் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

    இந்த விசாரணையின் போது அரூர் ஆர்.டிஓ., வில்சன், பாப்பி ரெட்டிப்பட்டி வட்டாட்சியர் வள்ளி, துணை துணை தாசில்தார் மில்லர் மற்றும் போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த ஆய்வின் போது உடன் இருந்தனர். 

    • வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் பழனிசாமி பங்கேற்பு
    • வரும் 18,19-ம் தேதிகளில் தேதிகளில் முகாம் நடக்கிறது.

    தருமபுரி, 

    இந்தியதேர்தல் ஆணை யத்தின்ஆணையின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் தொடர்பான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2024 ஆம் ஆண்டுக்கான பணியினை மேற்பார்வையிடுவதற்கு தருமபுரி மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள மாவட்ட வாக்காளர் பட்டியல் மேற்பார்வை யாளர் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர்நல ஆணையர் பழனிசாமி தலைமையில், மாவட்ட கலெக்டர் சாந்தி முன்னிலையில் அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசி யல் கட்சிகளின் பிரதிநிதி களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் மாவட்ட வாக்காளர் பட்டியல் மேற்பார்வை யாளர் பழனிசாமி பேசியதாவது;-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தர வின்படி, தருமபுரி மாவட்டத்தில் வாக்கா ளர்பட்டியல்-2024 சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்கள் நடைபெற்று வருகின்றது. 1.1.2024தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மற்றும் 18 வயது நிறைவடைந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள், மற்றும் 17 வயது பூர்த்தி அடைந்த இளம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்த்துக்கொள்ளும் வகை யில் இன்று மற்றும் 18.11.2023 மற்றும்19.11.2023 (சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை) தேதிகளில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்க ளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறு கின்றது. 

    சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்-2024-ல் பெறப்படும் படிவங்கள் குறித்தும், களப்பணி குறித்தும், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரால் மேல்த ணிக்கை செய்யப்பட்ட சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான படி வங்கள் குறித்தும் விவா திக்கப்பட்டது.

    பொதுமக்கள் மேற்கண்ட வசதிகளை தங்கள் வீடுகளிலிருந்தே பெற www.nvsp.in என்ற இணையதள முகவரியில், Apply Online/Correction of entries என்ற Link மூலமும்வி ண்ணப்பிக்கலாம்.  மேலும், செல்போனில் Voters Helpline App என்ற செயலியை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்க உரிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்திட அறிவுறுத்தப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், வருவாய் கோட்டாட் சியர்கள் கீதா ராணி (தருமபுரி), திரு.வில்சன் ராஜசேகர் (அரூர்)மற்றும் தேர்தல் தனி வட்டாட்சியர் அசோக் குமார், அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளனர்.

    • 2 ஆயிரம் லஞ்சமாக ஊராட்சி செயலாளர் சரவணன் கேட்டுள்ளார்.
    • பவுடர் தடவி கொடுத்த ரூ. 1500 கொடுத்தனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி.  

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் ,பொம்மிடி அருகே உள்ள கேத்துரெட்டிபட்டி ஊராட்சி அலுவலகத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் எடுத்து விடும் வேலை செய்து வந்தவர் கோபால்.

    கடந்த 2009 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்ற பின்பு இவருக்கு அலுவலகத்தில் சேர வேண்டிய செட்டில் மெண்ட் தொகை பெறுவதற்கு ஊராட்சி செயலாளர் சரவணனிடம் சென்று மனு கொடுத்துள்ளார். அப்போது அவருக்கு சேர வேண்டிய 30 ஆயிரம் செட்டில்மெண்ட் தொகையை பெறுவதற்கு ரூ. 2 ஆயிரம் லஞ்சமாக ஊராட்சி செயலாளர் சரவணன் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பணியாளர் கோபால் தனது மகனிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

    லஞ்சம் கொடுப்பதற்கு விருப்பமில்லாத கோபால் மற்றும் அவரது மகன் தர்மராஜன் ஆகியோர் தர்மபுரியில் உள்ள மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவில் சென்று புகார் தெரிவித்தனர். அவர்கள் கொடுத்த பவுடர் தடவி கொடுத்த ரூ. 1500 கொடுத்தனர். அதை சரவணனிடம் கோபால் கொடுத்தார்.

    இதனையடுத்து அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. நேற்று தருமபுரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கினார். 

    • ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.
    • நீர்வரத்து சரிவினால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, ஐவார் பாணி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து சரிந்து பாறை திட்டுக்கள் வெளியே தெரிகின்றன.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் கர்நாடக அணைகளில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைத்துள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,000 கன அடியாக சரிந்துள்ளது.

    தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் எல்லை பகுதிகளிலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை முற்றிலும் குறைந்துள்ளதாலும், கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் குறைந்துள்ளது.

    இந்த நிலையில் ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்து ஆனது நேற்று மாலை நிலவரப்படி விநாடிக்கு 4,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 3,000 கன அடியாக சரிந்தது. நீர்வரத்து சரிவினால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, ஐவார் பாணி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து சரிந்து பாறை திட்டுக்கள் வெளியே தெரிகின்றன.

    தொடர்ந்து காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்து வருவதால் ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்தின் அளவுகளை தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

    • தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
    • லாரி ேலாகேஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    தருமபுரி. 

     தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள புதுகொக்க–ராப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு லோகேஷ்(வயது19) என்ற மகன் உள்ளார். இவர் ஊத் தங்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று தனது அக்கா வீடான ஆல்ரப்பட்டிக்கு லோகேஷ் தனது மோட்டார் சைக்கி–ளில் சென்று விட்டு கம்பை நல்லூர் இருந்து ஒடசல்பட்டி ரோட்டில் வீரபத்திரன் கொட்டாய் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த போர்வெல் லாரி எதிர் பாராத விதமாக ேலாகேஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட லோகேஷ் பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தருமபுரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் லோகேஷ் வரும் வழியி லேயே உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.

    இதுகுறித்து லோகேஷின் தாயார் செல்வி கம்பை நல்லூர் போலீஸ் நிலை யத்தில் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விதை பந்துகளை வனத்து றையிடம் ஒப்ப டைப்பு
    • 2000 மாணவிகள் 3.84 லட்சம் விதை பந்துகள் தயாரித்தனர்.

    தருமபுரி, 

     தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் 23.69 சதவீதம் வனப்பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. அதனை 33 சதவீதமாக உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் 10 ஆண்டுகளில் 12 ஆயிரம் சதுர கிலோமீட்டர் வனப்பரப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தருமபுரியில் தனியார் கல்லூரியில் சுமார் 2000 மாணவ, மாணவிகள் மூலம் 3.84 லட்சம் விதைப் பந்துகள் தயார் செய்தனர். இதன் மூலம் காடுகளின் பரப்பை அதிகரிக்கவும், தயாரிக்கப்பட்ட விதை பந்துகள் மூலம் இந்தியா வுக்கே பெருமை சேர்த்த சந்திரயான்-3 விண்கலத்தின் ஓவியத்தை வரைந்து, உலக சாதனை பட்டியலில் இடம் பெறும் முயற்சியில் ஈடு பட்டனர். இதனை அடுத்து அரசின் பசுமை தமிழக இயக்கத்திற்கு வனத்துறை மூலம் வழங்க திட்டமிட்டனர்.

    கடந்த 2 நாட்களில் கல்லூரி மாணவ மாணவிகள் 3.84 லட்சம் விதைப் பந்துகளை உருவாக்கி, சந்திரன்-3 ஓவியம் வரைந்தனர். இது விஞ்ஞானிகளுக்கு மரியாதை செலுத்து–கின்ற வகையில் அமைக்கப் பட்டது.

    மேலும் உலக சாதனை பட்டியலில் 2000 மாணவிகள் ஒன்றிணைந்து 3.84 இலட்சம் விதை பந்துகள் தயாரித்து, 182.5 சதுர மீட்டரில் 13.5 மீட்டர் உயரம், அகலம் கொண்ட மிகப்பெரிய ஓவியத்தினை வரைந்தது, உலக சாதனை பட்டியலில் இடம் பெற்றது. அதனை எலைட் உலக சாதனை அமைப்பினர் நேரில் வந்து ஆய்வு செய்து,

    இந்த மாணவிகளின் முயற்சியை பாராட்டி உலக சாதனை படைத்ததாக அறிவித்தனர். மேலும் இந்த உலக சாதனை படைத்த தற்காக கல்லூரி தாளாளர் பச்சமுத்து பாஸ்கரிடம் அதற்கான சான்றிதழ்கள், பதக்கம் உள்ளிட்டவற்றை வழங்கினர்.

    இதனைத் தொடர்ந்து பசுமை தாயகம் இயக்கத்திற்கு, தருமபுரி வனத்துறை அலுவலரிடம் தாங்கள் உருவாக்கிய 3.84 லட்சம் விதை பந்துகளை கல்லூரி மாணவிகள் ஒப்படைத்தனர். இந்த 3.84 லட்சம் விதைப் பந்துகளில் அரசன், புங்கன், புளியமரம், வேம்பு, ஆலமரம் உள்ளிட்ட பல்வேறு வகை யான விதைகளை வைத்து தயாரித்தனர். இந்த விதை பந்துகள் தருமபுரி, திருச்சி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள வனப்பகுதிக்கு பிரித்து வழங்கப்படுகிறது.

    இந்த விதை பந்துகளை உருவாக்கி சாதனை படைத்த மாணவ, மாணவிகள் தங்கள் முயற்சி சாதனை படைத்தது என்றவுடன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து ஆரவாரத்துடன் கைதட்டி மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×