search icon
என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • தீயணைப்புத் துறை சார்பில் விளக்கம்
    • மாணவிகள் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அரசு மக ளிர் மேல்நிலைப்பள்ளியில் தீயணைப்புத் துறை சார்பில் தீ விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து மாணவிகளுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    தீயணைப்பு நிலைய அலுவ லர் ரமேஷ் தலைமையில் தீய ணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு பருவ மழையை முன்னிட்டும், தீவிபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்ப டுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர் கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • எம்.எல். ஏ.க்கள் தேவராஜ், வில்வநாதன் தொடங்கி வைத்தனர்
    • பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய பகுதியில் ஆம்பூர் எம்.எல். ஏ. வில்வநாதன் தலைமை யில் பல்வேறு திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

    இதில் மேற்கு ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஞானவேலன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. மாவட்ட செயலாளர், ஜோலார்பேட்டை எம்.எல். ஏ. க.தேவராஜி கலந்து கொண்டு கிரிசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி யில் மாணவ, மாணவி களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார்.

    பின்னர் கிரிசமுத்திரம் ஊராட்சியில் முதல் அமைச்சர் கிராம புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

    அதேபோல் கிரிச முத்திரம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடம் மற்றும் மதனஞ்சேரி, பள்ளிப்பட்டு, சம்பந்திகுப்பம், புருஷோத்த குப்பம் உள்ளிட்ட பகுதியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்ப ள்ளியில் தலா ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்ப ட்டுள்ள ஸ்மார்ட் போர்டு வகுப்பறைகளை தொடங்கி வைத்தார்.

    இதில் ஆலங்காயம் ஒன்றியக்குழுத் தலைவர் சங்கிதாபாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் திருநா வுக்கரசு, வட்டார கல்வி அலுவலர் சித்ரா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிர பாகரன், பொதுக்குழு உறுப்பினர் வி.எம் பெருமாள், தலைமை செயற்குழு உறுப்பினர் மு.அசோகன், ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் உட்பட பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

    • காவலாளி கைது
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நியூ பெத்த லேகம் பகுதியைச் சேர்ந்தவர் ராசித்தா (வயது 28). ஆசனம்பட்டு ரோட்டை சேர்ந்தவர் ராஜாசேகரன் (38). காவலாளி.

    இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராசித்தாவிடம் ரூ. 5 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வாங்கிய கடனை திருப்பி தருமாறு ராஜசேகரிடம், ராசித்தா கேட்டார்.

    அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜசேகரன், ராசித்தாவை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.

    இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று மாலை ராஜசேகரன் கைது செய்தனர்.

    • பொதுமக்கள் தர்ணா-பரபரப்பு
    • ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம்,, வாணியம்பாடி நூருல்லாபேட்டை பகுதியில் பொதுமக்கள், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகள் கட்டி வாழ்ந்து வந்தனர். நீர்பிடிப்பு பகுதியான ஏரி கால்வாயில் அவர்கள் வீடுகள் கட்டி உள்ளதால், மழை நீர் ஏரிக்கு செல்ல முடியாத சூழல் நிலவியது. மேலும் மழை நீர் செல்ல வழி இல்லாமல் அரசு ஆஸ்பத்திரி மற்றும் சாலைகளில் குளம்போல் தேங்கி நிற்கும் நிலை நீடித்தது.

    இதில் கடந்த 2022-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 20-ந் தேதி நீதிமன்ற உத்தரவின் பேரில் வருவாய் துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம், ஏரி கால்வாய் ஆக்ரமித்து கட்டப்பட்டு இருந்த 47 வீடுகளை இடித்து அகற்றினர்.

    இதில் வீடுகளை இழுந்த 47 குடும்பங்களில் 6 பேருக்கு மட்டும் இலவச வீட்டு மனைகள் வழங்கப்ப ட்டுள்ளது.

    மிதமுள்ள 41 குடும்பத்தினர்கள் இலவச வீட்டு மனை வழங்க கோரி அரசு அதிகாரிகளிடம் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக வலியுறுத்தி வந்தனர். ஆனால் இதுநாள் வரை அவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட வில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று வாணியம்பாடி சப்- கலெக்டர் அலுவ லகத்தை முற்றுகையிட்டனர். மேலும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என கூறி, அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த சப்- கலெக்டர் பிரேமலதா விரைந்த சென்று போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ஒரு மாதத்திற்குள் இலவச வீட்டு மனைகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    • ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் சாலை போடப்பட்டது
    • ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆவல்நாயக்கன்பட்டியில் ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் புதியதாக தார் சாலை போடப்பட்டுள்ளது.

    இந்த தார் சாலை 25 இன்ச் அளவில் போடப்பட வேண்டும். ஆனால் இந்த சாலை தரமற்று போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த தார்சாலை தரமற்ற நிலையில் உள்ளதாக குற்றம் சாட்டினர்.

    மேலும் இந்த தார் சாலையை கைகளால் பெயர்த்து எடுத்தும் வீசி எரிந்தனர்.

    தரம் இல்லா சாலையை அமைத்த அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • பணம் மற்றும் மருந்துகளை எடுத்து சென்றனர்
    • கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது

    நாட்டறம்பள்ளி:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியில் துணி கடை, மளிகை கடை, டீ கடை உள்ளிட்டவைகள் உள்ளன.

    இதில் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடி விட்டு வீட்டுக்கு சென்றார்.

    நாட்றம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால் அந்த பகுதி ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோ டி காணப்பட்டது.

    நள்ளிரவில் டீ கடையின் பூட்டை உடைத்து கும்பல் உள்ளே சென்றனர். கடையில் வைத்திருந்த பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்தனர்.

    அதேபோல் அதே பகுதியில் உள்ள சாதிக் என்பவரின் எண்ணெய் கடையில் பணம் மற்றும் எண்ணை பாட்டில்கள், துணிக்கடையில் பணம், பட்டுப் புடவைகள் மற்றும் துணிகள், வெங்கடேஸ்வரா மருந்து கடையில் பணம் மற்றும் மருந்துகளையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    கொள்ளையர்கள் அடுத்தடுத்து 6 கடைகளில் தங்களது கைவரிசையை அரங்கேற்றி உள்ளனர். திருடு போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சத்திற்கு மேலாக இருக்கும் என கூறப்ப டுகிறது. இது குறித்து தகவல் அறிந்த நாட்றம்பள்ளி போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் அழைத்து செல்லப்பட்டனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட நகர்புற நல வாழ்வு மைய வளாகத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் கிளியர் வியு கண் பரிசோதனை நிலையம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

    28-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ராஜலட்சுமி ஜெயகாந்தன், 29-வது வார்டு நகர மன்ற உறுப்பினர் சுபாஷிணி செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக நகர மன்ற தலைவர் உமாபாய் சிவாஜி கணேசன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் வி.எஸ் சாரதிக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.

    இதில் அண்ணா நகர், புதூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    மேலும் கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் இலவச அறுவை சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர். முகாமில் அறிவழகன், ஜெயாமன், சண்முகம், கார்த்திக், அருண்குமார், அலெக்ஸ் நிர்மல்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
    • திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம் நடந்தது

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர்,திருப்பத்தூர்,ஜோலார்பேட்டை 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்கு சாவடி மையங்களில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல்,திருத்தம் உள்ளிட்ட முகாம் 2 நாட்கள் நடந்தது.

    வாக்காளர் பட்டியல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ் நாடு சிறுதொழில் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனர் மதுமதி மற்றும் திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் அனைத்து வாக்கு சாவடி மையங்களில் நடைபெறும் முகாம்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    புதியதாக பெயர்களை சேர்க்க முகாமிற்கு வந்த முதல் இளம் வாக்காளர்களை வரவேற்று அவர்களுக்கு நாற்காலிகள் போடும்படி கூறி அவர்களை அமரவைத்து கவுரவபடுத்தி பெயர் சேர்ப்பதற்கான வழிமுறைகளை எடுத்து கூறி பெயர்களை சேர்த்தார். இது இளம் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில் இருந்தது.

    வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மதுமதி கூறியதாவது:-

    முன்பு 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே சேர்க்க முடிந்தது.

    ஆனால் தற்போது இளம் வக்காளர்கள், விடுபட்ட வாக்காளர்கள் ஜனவரி,ஏப்ரல், ஜூலை,அக்டோபர் என வருடத்தில் 4 முறை தங்கள் பெயர்களை சேர்த்து கொள்ளலாம். மாவட்டம் முழுவதும் நடைபெறும் வாக்காளர் சிறப்பு முகாமில் பெயர் சேர்த்தல், நீக்கல்,திருத்தம் உள்ளிட்ட பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அலுவலர்கள் மிகவும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.

    மேலும் புதிய இளம் வாக்காளர்களை சேர்க்க கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள இளம் வாக்காளர்களை சேர்க்க பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி சேர்க்கபட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, சப் கலெக்டர் பிரேமலதா, தாசில்தார் மோகன்,நகராட்சி ஆணையாளர் சதீஷ் குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • பொதுமக்கள் வலியுறுத்தல்
    • பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைப்பெற்ற வண்ணம் உள்ளது

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர் கடந்த ஏப்ரல் மாதம் பொறு ப்பேற்று க்கொண்டார். அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தது.

    அதன்படி வடக்கு மண்டல ஐ.ஜி. நாட்ட றம்பள்ளி இன்ஸ்பெக்டர் மலரை கடந்த மாதம் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

    இதனையடுத்து வாணியம்பாடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி, நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டராக கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.

    நாட்டறம்பள்ளி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆந்திரா மாநில எல்லையும் உள்ளது. இங்கு கஞ்சா விற்பனை, ரேஷன் அரிசி கடத்தல், மண் கடத்தல், கோவில் மற்றும் வீடுகளில் தொடர் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைப்பெற்ற வண்ணம் உள்ளது.

    பொறுப்பு இன்ஸ்பெக்டர் பதவி வகித்து வருவதால் பல்வேறு வழக்குகள் முடிவ டையாமல் நிலுவையில் தேங்கி கிடக்கின்றன.

    தற்போது தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை தினம் வருவதால் குற்ற செயல்கள் அதிகம் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு உடனடியாக இன்ஸ்பெக்டரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • கேமராவில் பணம் திருடும் காட்சிகள் பதிவு
    • போலீஸ் விசாரணை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அம்பூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சத்தியா(50) என்பவர்.

    புதூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள வணிக வளாகத்தில் டாடா மோட்டார்ஸ் டீலர் ஷோரூம் நடத்தி வருகிறார்.அதன் பக்கத்தில் பூங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கோபி(27) என்பவர் மீன் வறுவல் கடை நடத்தி வருகிறார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் சத்தியா என்பவரின் கடையின் பூட்டை உடைத்து ஷட்டரை நூதனமாக உடைத்து கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.6500 ஆயிரம் பணம் மற்றும் கடையில் இருந்த பொருட்கள், கோபி என்பவரின் கடையின் பூட்டை உடைத்து ஷட்டரை திறந்து ரூ.5000 ஆகிவற்றை திருடிக்கொண்டு ஷட்டரை அப்படியே திறந்து விட்டு சென்றுள்ளார்.

    பின்னர் நேற்று காலை கடையின் உரிமையாளர்கள் வந்து பார்த்த போது கடைகள் திறந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    கேமராவை பார்த்த போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் கடையின் வெளியே பொருத்தப்பட்டிருந்த கேமராவை சிக்காமல் இருப்பதற்கு ஒரு கேமராவை திசையை வேறு பக்கமாக திருப்பி பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கடைக்குள் உள்ள கேமராவை ஆப் செய்து அதன் பிறகு தனது கைவரிசையை காட்டி கல்லாவை உடைத்து பணத்தை திருடி சென்றது தெரியவந்துள்ளது.

    இதை தொடர்ந்து கடையின் உரிமையாளர்கள் சத்தியா மற்றும் கோபி ஆகியோர் வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

    புகாரின் பேரில் போலீசார் கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையனை தேடி வருகின்றனர்.

    • ரோந்து பணியில் சிக்கினார்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் குட்கா ேபான்ற போைத பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது கடையில் குட்கா பான்மசாலா பக்கெட்கள் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் பெட்டிக்கடைக்காரர் இஸ்மாயில் ( வயது 59) என்பரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.5,00,000 விருது தொகை வழங்கப்படும்
    • கலெக்டர் தகவல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் அம்பேத்கர் பெயரில் தமிழ்நாடு அரசால்

    விருது வழங்கப்படுகிறது. பட்டியலின சமுதாயத்தைச் சார்ந்த மக்களின் சமூக, பொருளாதாரம் மற்றும் கல்வி நிலையை உயர்த்து வதற்கு, வாழ்க்கைத் தரம் உயர பாடுபட்ட ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்.

    இந்தஆண்டிற்கான விருது. 2024-ம் ஆண்டு திருவள்ளுவர் திருநாளில் தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு ரூ.5,00,000 விருது தொகையும், 8 கிராம் தங்கப்பதக்கமும். இதர செலவினங்களுக்கு ரூ.65,000 சேர்த்து மொத்தம் ரூ.5.65,000 வழங்கப்பட உள்ளது.

    எனவே 2023-2024 ஆம் ஆண்டிற்கான அம்பேத்கர் விருதுக்கு தகுதியான பட்டியலினத்தைச் சேர்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    அம்பேத்கர் விருது வழங்குவதற்கான விண்ணப்பத்தை, திருப்பத்தூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திருப்பத்தூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் வருகிற 10-ந் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×