search icon
என் மலர்tooltip icon

    திருப்பத்தூர்

    • சமூக வலைதளத்தில் பழகி துணிகரம்
    • இ-மெயில் முகவரி மற்றும் போன் எண்ணை வைத்து விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், குரிசிலாப்பட்டு பகுதியை சேர்ந்த திருமணமான 36 வயது பெண்ணுக்கும், திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவருக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    அந்த நபர் தனது பெயரை பிரகதீஷ் என பதிவிட்டிருந்தார்.

    இதையடுத்து பிரகதீஷை அந்த பெண் தனது வீட்டிற்கு அழைத்து உள்ளார். இதையடுத்து அவர் நேற்று முன்தினம் பெண்ணின் வீட்டிற்கு சென்று பேசிக்கொண்டு இருந்தார்.

    அப்போது பிரகதீசை அந்த பெண் அணிந்து இருந்த நகைகள் தங்கமா என விசாரித்து உள்ளார். அந்த பெண் தனது தாலி மட்டும் தங்கம் என கூறியுள்ளார்.

    இதையடுத்து திடீரென பிரகதீஷ், பெண்ணின் கழுத்தில் இருந்த 3 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து பெண் அளித்த புகாரின்பேரில் குரிசிலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்து சென்ற வாலிபர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த இ-மெயில் முகவரி மற்றும் போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து திண்டுகல் மாவட்டத்தை சேர்ந்த பிரகதீஷ்வரனை போலீசார் ைகது செய்தனர்.

    • 16-ம் நூற்றாண்டை சேர்ந்தது
    • சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தையது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே பொம்மிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட வேடி வட்டம் பகுதியில் திருப்பத்தூர் தனியார் கல்லூரி பேராசிரியர் பிரபு மற்றும் சமூக ஆர்வலர்கள் ராதாகிருஷ்ணன், நாராயணன், அன்புசெல்வம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தைய வில்வீரனின் நடுகல் உள் ளதைக் கண்டறிந்தனர். இதுகுறித்து பேராசிரியர் பிரபு கூறியதாவது:-

    திருப்பத்தூரில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள பொம்மிக்குப்பம் ஊராட்சியில் ஜவ்வாது மலையில் இருந்து வரும் பாம்பாற்றின் கரையில் அமைந்துள்ள பகுதி வேடி வட்டமாகும். அப்பகுதியில் பழமையான மரங்கள் அடர்ந்த பகுதியில் வில் வீரனின் உருவம் உள்ள நடுகல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

    வீரனின் வலது கரத்தில் அம்பும், இடதுகரத்தில் வில்லினையும் ஏந்திய நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. வீரன் அலங்கரிக்கப்பட்ட நேரான கொண்டையினை முடிந்துள்ளார்.

    கழுத்தில் 3 அடுக்குகளைக் கொண்ட கழுத்தணியினை அணிந்துள்ளனர். முதுகில் அம்புகள் தாங்கிய கூட்டினையும், இடைக்கச்சையுடன் நீண்ட குறுவாளும், காதுகளில் குண்டலமும், புயங்களில் பூண்களும், கால்களில் வீரக்கழலும் அணிந்துள்ளார்.

    இந்த நடுகல்லானது உறுதியான கரும்பாறை கல்லால் செதுக்கப்பட் டுள்ளது. நான்கரை அடி உயரமும் மூன்றரை அடி அகலமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

    இப்பகுதி மக்கள் இவ்வில் வீரனை 'வேடியப்பன்' என்று அழைத்து வழிபட்டு வருகின்றனர். வரலாற்றின் சாட்சிகளாக நிற்கும் இந்த நடுகல் ஒருகாலத்தில் தான் சார்ந்துள்ள மக்கள் கூட்டத்தின் பிரதிநிதியாகப் போர்க்களத்தில் பங்கேற்று உயிர்துறந்த ஒப்பற்ற வீரனின் நினைவைப் போற்றும் வகையில் அமைக்கப்பட்டதாகும்.

    இந்த நடுகல் நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தவையாக ருக்கக்கூடும். அதாவது கி.பி. 16-ம் நூற்றாண்டு கலைப்பாணியைக் கொண்டதாக இருக்கக் கூடும்.

    பொதுவாக, நடுகற்களை வேடியப்பன் என்று அழைக்கும் வழக்கம் வட தமிழகத்தில் பரவலாகக் காணப்படுகின்றது.

    அவ்வகையில் இந்த நடுகல் அமைந்துள்ள பகுதி 'வேடி வட்டம்' என்றும் நடுகல் 'வேடியப்பன்' என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    • தூக்கி வீசப்பட்ட சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்
    • அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் சான்றோர் குப்பத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 30) பெயிண்டர்.

    இவர் நேற்று இரவு சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வினோத்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோத்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து பெங்களூர் பகுதியை சேர்ந்த கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

    • காதல் தகராறில் விபரீதம்
    • போலீசார் தலைமறைவான மற்றவர்களை தேடி வருகின்றனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த போஸ்ட்மேன் வட்டம், பார்ச்சல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் விஜய் (வயது 25).

    இவரும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், காதலர்கள் ரகசியமான இடத்தில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இதனை அறிந்த பெற்றோர் 2 பேரையும் கண்டித்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறினர். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் விஜய்யின் வீட்டுக்குச் சென்று கடபாரையால் கதவுகளை உடைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தினர்.

    இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வீட்டை தீ வைத்து எரித்த பெண்ணின் தந்தை சிவா மற்றும் தாயார் பாரதியை போலீசார் கைது செய்தனர்.

    தலைமறைவான மற்றவர்களை தேடி வருகின்றனர்.

    • போக்குவரத்து பாதிப்பு
    • போலீசார் பேச்சு வார்த்தை அடுத்து கலைந்து சென்றனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அடுத்த கூழ்கார பகுதியில் 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் சரியான முறையில் விநியோகம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இது சம்பந்தமாக பலமுறை அதிகாரி களிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நாட்ட றம்பள்ளி டோல்கேட்டில் புதுப்பேட்டை திருப்பத்தூர் செல்லும் சாலையில் இன்று காலை காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாட்டறம்பள்ளி போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    உடனடியாக குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • போக்சோவில் கைது
    • வேலூர் ஜெயிலில் அடைப்பு

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் டவுன் ரெட்டி தோப்பை சேர்ந்தவர் பாட்ஷா (வயது 23). மீன் வியாபாரி. இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய கல்லூரி மாணவியை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

    இது குறித்து ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து வாலிபரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு கரூரில் பதுங்கி இருந்த பாட்ஷாவை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    • பெண் வீட்டார் ஆத்திரம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த போஸ்ட்மேன் வட்டம், பார்ச்சல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் விஜய் (வயது 25). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், காதலர்கள் ரகசியமான இடத்தில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இதனை அறிந்த பெற்றோர் 2 பேரையும் கண்டித்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை விஜய் மற்றும் இளம்பெண் திடீரென வீட்டை விட்டு வெளியேறினர்.

    பெண்ணின் பெற்றோர் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சென்று தேடியும் இளம்பெண் கிடைக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் விஜய் வீட்டை பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.

    இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள் ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    இருப்பினும் வீட்டிலிருந்த பொருட்கள் மட்டும் தீயில் கருகி நாசமானது. இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்லூரி மாணவன் மீது வழக்கு
    • உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வந்தார்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார்.

    அப்போது டாக்டர் பரிசோதனை செய்த போது அந்த சிறுமி 6 மாதம் கர்ப்பம் என தெரியவந்தது. இது குறித்து ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் கவிதாவிடம் புகார் அளித்தார்.

    இது குறித்து அதே பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு மகன் விக்னேஷ் (வயது 19) கல்லூரி மாணவன் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நிர்வாக காரணத்திற்காக மாற்றம் செய்யப்பட்டனர்
    • கலெக்டர் உத்தரவு

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் நிர்வாக காரணத்திற்காக 3 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி வாணியம்பாடி தாசில்தாராக பணியாற்றி வந்த சாந்தி, திருப்பத்தூர் நிலங்கள் மற்றும் கோவில் தனி தாசில்தாராகவும், இவருக்கு பதிலாக ஏலகிரிமலை தனி தாசில்தார் மோகன் வாணியம்பாடி தாசில்தாராகவும், திருப்பத்தூர் கோவில் நில எடுப்பு பிரிவு தனி தாசில்தார் சம்பத் ஏலகிரி மலை வருவாய், கோவில் மற்றும் பின் தொடர்பணி தனி தாசில்தராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    • மீறி திருமணம் நடத்தினால் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை
    • போலீசார் 2 வீட்டாரையும் அழைத்து அறிவுரை கூறினர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே பொம்மிகுப்பம் பகுதியை சேர்ந்த சிறுமிக்கு இன்று வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற இருந்தது. இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இது தொடர்பாக, விசாரித்து நடவடிக்கை எடுக்க திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் போலீசார் நேற்று அந்தப் பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தியதில் 14 வயது சிறுமிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நடைபெற இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 2 வீட்டாரையும் அழைத்து அறிவுறித்தி திருமணத்தைத் தடுத்து நிறுத்தினர்.

    இதேபோல், வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா ஊராட்சி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும் இன்று திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

    தகவலை அறிந்த குழந்தைகள் நலக் குழு மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் திம்மாம்பேட்டை போலீ சாருடன் மல்லகுண்டா பகுதிக்குச் சென்று சிறுமியின் திருமணத்தைத் தடுத்து நிறுத்தினர்.

    மீறி திருமணம் நடத்தினால் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை செய்தனர்.

    • திருப்பத்தூரில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் பன்முகத் திறமைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் கலைதிரு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் வட்டார அளவிலான போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டு, மாவட்ட அளவிலான கலைதிருவிழா திருப்பத்தூர் மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று தொடங்கியது.

    கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தார். எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனிசுப்ராயன் வரவேற்றார்.

    விழாவில் கலெக்டர் பேசியதாவது:-அரசுப் பள்ளி மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர இந்த கலைத்திருவிழா கட்டாயம் உதவும்.

    தமிழர்களின் வாழ்வில் கூத்தும், இசையும் இணைந்த ஒன்றாகவே உள்ளது. தொல்காப்பியத்தில் இசை 24 வகையில் கையாளப்பட்டுள்ளது.

    அது போக, ஒவ்வொரு கருவிகளையும் எப்போது இசைக்க வேண்டும் என்பது உள்பட விதியாக வகுத்துள்ளனர். உங்களுடைய தனித்திறமை வெளிப்பட வேண்டும். இப்போது சொந்த மரபில், இசையில் பாடும் நபர்கள் குறைந்து விட்டனர். அனைவரும் உலக இசையை நம் இசைக்கு மாற்றி செய்கின்றனர்.

    ஆனால் நம் மண் மனத்துடன் இசையை கொண்டு சென்றால்தால்தான் பேரும், புகழும் நமக்கு கிடைக்கும். இதற்கு இந்த கலைத்திருவிழா மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

    மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாநில அளவில் சாதனை படைத்து மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

    அப்போது அரசு பள்ளி மாணவிகள் தவில் இசைக்க, நாதஸ்வரம் வாசித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.

    அவர்களுக்கு கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். மேலும் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கபடுவார்கள். முடிவில் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கப்பள்ளி) அமுதா நன்றி கூறினார்.

    • போலீசார் சோதனையில் சிக்கினார்
    • 10 பாக்கெட்டுகள் பறிமுதல்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையில் உள்ள இடையம்பட்டி மசூதி தெரு பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 48). பெட்டிக்கடை வைத்துள்ளார்.

    இவர் தடை செய்யப்பட்ட புகையிலை பாக் கெட்டுகள் விற்பனை செய்வதாக ஜோலார்பேட்டை போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சென்று பெட்டிக்கடையில்சோதனை செய்தனர்.

    அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டு கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதனைய டுத்து கடை உரிமையாளர் பார்த்திபனை கைது செய்து, அவரிடம் இருந்து 10 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    ×