search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • அரியாங்குப்பம் ெதாகுதி பா.ஜனதா சார்பில் நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினராக புதுச்சேரி பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி. கலந்து கொண்டார்.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடியின் 107-வது மனதின் குரல் நிகழ்ச்சி அரியாங்குப்பம் தொகுதியில் நேரலை நிகழ்ச்சியாக நடைபெற்றது,

    இந்நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக புதுச்சேரி பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி. கலந்து கொண்டார்.

    பாரதிய ஜனதா கட்சியின் அரியாங்குப்பம் தொகுதி தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார், இந்நிகழ்ச்சியில் கோவையைச் சேர்ந்த தொழிலாளி லோகநாதன் துப்புரவு பணி செய்து ஏழைகளுக்கு உதவி வருவதை பிரதமர் மோடி பாராட்டியது அனைவரையும் வியக்க வைத்தது. இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் மோகன் குமார், விவசாய அணித் தலைவர் புகழேந்தி, பட்டியல் அணித் தலைவர் தமிழ்மாறன், விவசாயஅணி தேசிய செயற்குழு உறுப்பினர் பாரதி மோகன், தொகுதி பொதுச் செயலாளர்கள் பிச்சமுத்து மற்றும் முருகவேல், மனோ, கணேசன் ஆகியோர் பங்கேற்றனர்.

    • உழவர்கரை வட்டார வளர்ச்சி அதிகாரியும், நிகழ்ச்சியின் நோடல் அதிகாரியுமான ராதா கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
    • 7 நாட்கள் நடந்த விழிப்புணர்வு யாத்திரை நிழச்சிக்கான ஏற்பாடுகளை கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் செய்திருந்தார்.

    புதுச்சேரி:

    நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தலைப்பில் மத்திய அரசின் திட்டங்களின் பயன்பாடுகளை பொது மக்களிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் விதமாக நாடு தழுவிய பிரச் சரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதன் பகுதியாக அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் அரியாங்குப்பம் மேற்கு பஞ்சாயத்தில் நேற்று நடந்த நிறைவு நாள் நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கர் தலைமை தாங்கினார். உழவர்கரை வட்டார வளர்ச்சி அதிகாரியும், நிகழ்ச்சியின் நோடல் அதிகாரியுமான ராதா கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் மீன்வளத்துறை இயக்குனர் இஸ்மாயில், ஆதி திராவிட நலத்துறை இயக்குனர் இளங்கோவன், குடிமை பொருள் வழங்கல் துறை துணை தாசில்தார் ஐயனார் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அரியாங்குப்பம் கொம்யூனில் 7 நாட்கள் நடந்த விழிப்புணர்வு யாத்திரை நிழச்சிக்கான ஏற்பாடுகளை கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் செய்திருந்தார்.

    • கோகிலாம் பிகையுடன் திருக்காமீசுவரர் சாமி கோவில் உள் புறப்பாடு செய்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
    • திரபுரசுந்தரி உடனுறை வேதபுரீஸ்வரர் கோவிலில் சாமி உள் புறப்பாடு நடைபெற்று பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூரில் வரலாற்று புகழ்மிக்க திருக்காமீசுவரர் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை தீபத்திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டும் கார்த்திகை தீப விழா விமர்சையாக நடந்தது.

    கோவில் கோபுரத்தில் தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து கோவில் வளாகம் முழுவதும் திரளான பக்தர்கள் ஒரு லட்சம் தீபம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.

    முன்னதாக கோகிலாம் பிகையுடன் திருக்காமீசுவரர் சாமி கோவில் உள் புறப்பாடு செய்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    இதே போல் காந்தி வீதியில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து திரபுரசுந்தரி உடனுறை வேதபுரீஸ்வரர் கோவிலில் சாமி உள் புறப்பாடு நடைபெற்று பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    • அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • பொதுப்பணித் துறை சார்பில் ரூ.37 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணி களுக்கான தொடக்க விழா நடந்தது.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட அப்துல் கலாம் அரசு குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் வெளியேற்றுதலை பாதாள சாக்கடையுடன் இணைக்க பொதுப்பணித் துறை சார்பில் ரூ.37 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணி களுக்கான தொடக்க விழா நடந்தது.

    இதில் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென் னடி கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், செயற்பொறியாளர் சீனு, உத விப்பொறியாளர் ஞானம், பார்த்தசாரதி இளநிலைப் பொறியாளர் ஜெயசந்திரன், தி.மு.க. நிர்வாகிகள் ராஜா கோபால், தங்கவேல், சக்திவேல், ஹரிகிருஷ்ணன், ராஜி, விநாயகமூர்த்தி, ஜோஸ் லின், ராகேஷ், மோரிஸ், ரகுமான், பாஸ்கல் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • நெடுஞ்சாலை பணியாளர்கள் 2 சாலைகளின் குறுக்கே இரும்பு கேட்டுகள் அமைத்து ஒரு புறத்திலிருந்து மறுபுறம் நடந்து கூட செல்லாத அளவிற்கு தடுப்பு அமைத்துள்ளனர்.
    • போராட்டத்தினால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.

    மதகடிப்பட்டு:

    விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக விழுப்புரம்-புதுச்சேரி வரை 90 சதவீத பணி நிறைவு பெற்றுவிட்டது.

    இந்நிலையில் புதுச்சேரி மதகடிப்பட்டு 4 வழி சாலைக்கு அருகாமையில் தமிழக பகுதியான எல்.ஆர். பாளையம் கிராமம் உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இதற்கிடையே எல்.ஆர். பாளையம் வழியாகவே பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை விழுப்புரம்-புதுச்சேரி 4 வழி சாலையில் வந்து இணைகிறது.

    இந்த சாலைக்கு எதிர் புறம் பிரபல மருத்துவக் கல்லூரி, கலைக்கல்லூரி, பள்ளி என அதிகமான கல்வி நிறுவனங்கள் உள்ளன. மாணவர்கள் இந்த சாலையை கடந்தே மறுமுனைக்கு செல்ல வேண்டும். மேலும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்வோரும் இந்த சாலையை கடந்து செல்ல வேண்டும்.

    ஆனால் நெடுஞ்சாலை பணியாளர்கள் 2 சாலைகளின் குறுக்கே இரும்பு கேட்டுகள் அமைத்து ஒரு புறத்திலிருந்து மறுபுறம் நடந்து கூட செல்லாத அளவிற்கு தடுப்பு அமைத்துள்ளனர்.

    இதனால் எல்.ஆர். பாளையம் பகுதியில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் பொதுமக்களும் அப்பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுங்க சாவடியை கடந்து செல்ல வேண்டிய நிலைமை உள்ளது.

    இதனை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த போலீசார் அதிகாரிகளிடம் பேசி சர்வீஸ் சாலையை அகலப்படுத்தி பாதை ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தனர்.

    இந்நிலையில் உறுதி அளித்தப்படி பாதை அமைத்து தராததால் மீண்டும் மறியல் போராட்டம் நடத்த போவதாக எல்.ஆர். பாளையம் பொதுமக்கள் அறிவித்தனர்.

    அதன் படி இன்று எல்.ஆர். பாளையம் பொதுமக்கள் விழுப்புரம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் மதகடிப்பட்டு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தினால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.

    • பாகூர் பகுதியில் ஏரி, தாங்கள் போன்ற 24 நீர்நிலைகள் உள்ளது
    • 100 கி.மீ. நீளத்திற்கு வாய்க்கால்களை பொதுப்பணித்துறையினர் பராமரித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    பாகூர் பகுதியில் ஏரி, தாங்கள் போன்ற 24 நீர்நிலைகள் உள்ளது. இவைகளுக்கான நீர்வரத்து, நீர் போக்கு வாய்கால் என சுமார் 100 கி.மீ. நீளத்திற்கு வாய்க்கால்களை பொதுப்பணித்துறையினர் பராமரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பாகூர், பிள்ளையார்குப்பம், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதியில் வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டு மூடி மறைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் அனுமதியின்றி வாய்க்கால்களின் குறுக்கே பாலங்களும் தடுப்புகளும் அமைத்துள்ளனர்.

    இதனால் பேரிடர் காலங்களில் மழைநீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளிலும் வயல்வெளி பகுதியில் தண்ணீர் தேங்கி நின்று பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

    நேற்று இரவு பெய்த கனமழையால் பிள்ளையார்குப்பம் - பாகூர் சாலையில், தனியார் மருத்துவ கல்லூரி அருகே சுமார் 200 மீட்டர் நீளத்திற்கு தண்ணீர் சாலையிலேயே தேங்கி நிற்கிறது. அவ்வழியே வாகனங்கள் நீந்தி செல்கின்றன.

    • பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
    • ராமலிங்கசாமி வள்ளலார் மடத்தில் ஒளிபரப்பப்பட்டது.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே நேரடியாக பேசும் மனதின் குரல் நிகழ்ச்சியின் 107-வது பகுதி புதுச்சேரி மாநிலம் முழுவதும் அனைத்து கேந்திரங்கள் மற்றும் கிளைகளிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    அதுபோல் முதலியார்பேட்டை கேந்திர பொறுப்பாளரும், உப்பளம் தொகுதி பொறுப்பாளர் மற்றும் மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளருமான வெற்றிச்செல்வம் ஏற்பாட்டில், மூத்த நிர்வாகி சந்திரசேகரன் தலைமையில் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி கிளைத் தலைவர்கள் மணிகண்டன், பலராமன், முனியப்பன் ஆகியோர் முன்னிலையில் முதலியார் பேட்டை-கடலூர் சந்திப்பில் உள்ள ராமலிங்கசாமி வள்ளலார் மடத்தில் ஒளிபரப்பப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் கருணாகரன், ஹரிதாஸ், அசோக்குமார், கார்த்திக், மோகன் புகழேந்தி, ஆனந்தன், சந்தோஷ், பழனி, முருகன் , ராஜி, செல்வம் மணி மகேஷ், கிஷோர், பிரஜித், ஈஸ்வர், மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தேசிய மாணவர் படை தினம் நவம்பர் 26-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
    • மாணவர் படையின் கொடி அணிவகுப்பு நடந்தது.

    புதுச்சேரி:

    தேசிய மாணவர் படை தினம் நவம்பர் 26-ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படுகிறது. புதுச்சேரி கடற்கரையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் நடந்த தேசிய மாணவர் படை தினத்தை யொட்டி நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களுக்கு ராணுவம், கப்பல் படை, விமானப்படை மற்றும் புதுச்சேரி போலீஸ் சார்பில் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து நினைவஞ்சலி செலுத்தினர். முன்னதாக தேசிய மாணவர் படையின் கொடி அணிவகுப்பு நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் தேசிய மாணவர் படை விங் கமாண்டர் ஜனார்த்தனன், லெப்டினன்ட் கர்ணல் ஏ.எஸ்.காங்ரோட், நேவல் கமாண்டிங் அதிகாரி லோகேஷ், மாணவியர் பிரிவு ஜூனியர் கமிஷன் ஆபீஸர் சீனிவாசலு, இன்டப் ஜூனியர் கமிஷன் ஆபிஸர் சுஷில்குமார், விமானப்படை ஜெ.டபிள்யு.ஓ. சிவக்குமார், கப்பல் படை பைலட் அதிகாரி பிரேம் மற்றும் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவர்கள் மலர் வளையம் வைத்து வீர வணக்க அஞ்சலி செலுத்தினர். 

    • ஆராய்ச்சி மையத்தில் மாநில அளவி லான ஓவியப்போட்டி நடந்தது.
    • பரிசு பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.

    புதுச்சேரி:

    இந்திய அரசு எரிசக்தி நுகர்வுத் துறை சார்பில், கடந்த 18-ந்தேதி புதுச்சேரி அன்னை தெரேசா முதுநிலை நல அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மாநில அளவி லான ஓவியப்போட்டி நடந்தது.

    இதில் திருக்கனூர் பிரைனி ப்ளூம்ஸ் இன்டர் நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பயிலும் 10-ம் வகுப்பு மாணவி பிரிதிஷா முதல் பரிசு பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார். பரிசுகள் வென்ற மாணவிக்கு புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை முதன்மை இயக்குனர் பிரியதர்ஷினி, சென்னை ஆர்.இ.சி முதன்மை திட்ட மேலாளர் தாரா ரமேஷ் ரூ.50 ஆயிரம் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி மாண வியை வாழ்த்தி பேசினர்.

    அவரைத் தொடர்ந்து அடுத்த நிலையாக, தேசிய அளவிலான ஓவியப் போட்டிக்கு செல்லும் மாணவி பிரதிஷாவிற்கு பயிற்சி அளித்த ஓவிய ஆசி ரியர் குமரவேல் ஆகியோரை பள்ளியின் தாளாளர் அருண்குமார், துணை தாளாளர் திவ்யா ஆகியோர் பாராட்டினர்.

    • அறிவியல் ஆசிரியை பிரபாவதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
    • 150-க்கும் மேற்பட்ட படைப்புகள் வைக்கப்பட்டது

    புதுச்சேரி:

    பாகூர் அரசு நடுநிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசாமி தலைமை தாங்கினார். ஆசிரியர் துரைசாமி முன்னிலை வகித்தார். அறிவியல் ஆசிரியை பிரபாவதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    கண்காட்சியில் 150-க்கும் மேற்பட்ட படைப்புகள் வைக்கப்பட்டது. இதனை 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பார்வை யிட்டனர்.

    முன்னதாக மாணவர்க ளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை உடல்கல்வி ஆசிரியர் வசந்த ராஜா, ஆசிரியர்கள் தம்பி ராஜலட்சுமி, கார்த்திகேயன், மஞ்சு, ரம்யா, சங்கீதா ஆகியோர் செய்திருந்தனர்.

    • 10-ந் தேதி நடக்கிறது
    • அறிவியல் விழிப்புணர்வு தேர்வு நடத்தப்படுகிறது.

    புதுச்சேரி:

    இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் சார்பில் ஆண்டுதோறும் நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு இடையிலான தேசிய அறிவியல் விழிப்புணர்வு தேர்வு நடத்தப்படுகிறது.

    கடந்த அக்டோபர் மாதம் நடந்த தேர்வில் புதுவை மாநிலத்தின் 4 பிராந்தியங்களைச் சேர்ந்த 1,800 பள்ளி மாணவர்கள் எழுதினர். இதில் 130 மாணவர்கள் மாநில அளவிலான தேர்வுக்கு தேர்ச்சி பெற்றனர்.

    மாநில அளவிலான திறனறிவு தேர்வு வருகிற 10-ந் தேதி புதுவை ராஜீவ்காந்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடக்கிறது.

    இந்த தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்கள் தேசிய அளவிலான முகாமிற்கு தகுதி பெறுவார்கள். தேசிய அளவில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும்.

    தேர்வை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அருண் நாகலிங்கம் மற்றும் மணிகண்டன் ஆகியோர் நடத்துகின்றனர்.

    • அடிக்கடி தகறாறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.
    • படுகாயம் அடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    புதுச்சேரி:

    பாகூர் அருகே குருவிநத்தம் மாஞ்சாலை ரோடு பகுதியை சேர்ந்தவர் சீனுவாசன் இவரது மனைவி லலிதா. இவர் அப்பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார்.

    இவர்களது குடும்பத்துக்கும் அதே பகுதியை சேர்ந்த தீன தயாளன் குடும்பத்துக்கும் அடிக்கடி தகறாறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில்  காலை லலிதாவின் தாயார் சாவித்திரி மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த தீனதயாளன் சாவித்திரியிடம் தகராறு செய்து அவரை செங்கல்லால் தாக்கினார்.

    மேலும் இது பற்றி போலீசில் புகார் செய்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு சென்றார்.வியாபாரம் முடிந்து லலிதா வீட்டுக்கு வந்த போது அங்கு தாயார் சாவித்திரி தலையில் ரத்தத்துடன் படுகாயம் அடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அவரிடம் விசாரித்து விட்டு சாவித்திரியை பாகூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தார்.இது குறித்து லலிதா பாகூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×