search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • அந்த மாணவி தோழி வீட்டிற்கு சென்று வருவதாக பாட்டியிடம் கூறி சென்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை நயினார் மண்டபம் சுதானா நகர் பகுதியை சேர்ந்த ஒருவரின் மகள் அரியாங்குப்பத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்கி முதலியார் பேட்டை அன்னை சிவகாமி மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    சம்பவத்தன்று காலை அந்த மாணவி தோழி வீட்டிற்கு சென்று வருவதாக பாட்டியிடம் கூறி சென்றார். ஆனால் அதன் பிறகு அந்த மாணவி வீடு திரும்ப வில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்கள், தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் அந்த மாணவி இல்லை.

    இதையடுத்து மாயமான மாணவியின் தந்தை முதலி யார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆய்வு
    • வாய்க்கால்கள் தூர்வா ரப்படாததால் தண்ணீர் தேங்கி இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டு கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தின் நெற்களஞ்சியமான பாகூர் பகுதியில் கடந்த 2 தினங்களாக மிக கனமழை பெய்தது.

     இதனால் தாழ்வான பகுதி உள்ள நிலங்களிலும் சாலைகளிலும் வீடுகளிலும் மழை நீர் சூழ்ந்து காணப்படு கிறது. தொடர்ந்து இன்றும் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

    இந்த மழையின் காரண மாக ஏரி குளங்கள் பெரும்பாலானவை வேகமாக நிரம்பி வழிகிறது.

    தாழ்வான பகுதி உள்ள விளை நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. நிலத்தில் புகுந்த தண்ணீர் வடிய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். இதனால் பயிர்கள் சேதம டைந்துள்ளது. முறையாக வாய்க்கால்கள் தூர்வா ரப்படாததால் தண்ணீர் தேங்கி இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டு கின்றனர்.

    குறிப்பாக பாகூர் விவ சாய நிலத்திற்கு குறுக்கில் விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை உயரமாகவும் பாலங்களும் கட்டப்பட்டுள்ளதால் தற்பொழுது பெய்த மழை நீர் வடிய போதிய வசதி இல்லாமல் தேங்கி காணப்படுகிறது. பல இடங்களில் வாய்க்கால்கள் உடைந்து விளைநிலங்களில் தேங்கி தொடர்ந்து காணப்படுகிறது.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராய ணன் தலைமை பொறியாளர் வீரசெல்வம் மற்றும் பொறி யாளர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு ஆய்வு செய்ய இன்று காலை பாகூர் வந்தனர்.

    பாகூர் - கன்னியகோயில் ரோட்டின் ஓரத்தில் இருந்த சித்தேரி வாய்க்கால் உடைந்து நெல் வயலில் தண்ணீர் புதுந்து இருப்பதை பார்த்தார்.

    இது சம்பந்தமாக புறவழிச் சாலை அமைக்கும் அதிகாரியிடம் பாகூர் பகுதியில் உள்ள வாய்க்காலுக்கு ஏற்றவாறு பாலங்களும் வழியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.

    தற்பொழுது ஏற்பட்டுள்ள தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க அந்த அதிகாரியிடம் கேட்டுக்கொண்டார்.

    • 30-ந் தேதி வரை நடக்கிறது
    • நீரிழிவு நோய் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு ஒவ்வொரு நோயாளி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அவசியம் தேவை.

    புதுச்சேரி:

    புதுவை இ.சி.ஆர். மெயின் ரோடு லாஸ் பேட்டையில் அமைந்துள்ள எம். வி. ஆர். மருத்துவ மையத்தில் வருடம்தோறும் நவம்பர் 14-ந் தேதி உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு உடல் நல பரிசோதனை முகாம் நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டும் மருத்துவ முகாம் கடந்த 1-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    முகாமில் ரத்த சர்க்கரை அளவு, ரத்த கொழுப்பு அளவு, ரத்த சோகை பரிசோதனை, சிறுநீரக பரிசோதனை, கல்லீரல் பரிசோதனை, இருதய பரிசோதனை, மார்பு எக்ஸ் ரே, வயிற்றுப்பகுதிக்கான ஸ்கேன், கண் விழித்திரை புகைப்படம், பல், நரம்பு மற்றும் ரத்த ஓட்ட பரிசோத னைகள் அனைத்தும் ரூ.9000 மதிப்புள்ள பரிசோதனை கள் சிறப்பு கட்டணச்சலுகை யில் ரூ.4500-த்திற்கே செய்யப்படுகிறது.

    இம்முகாமில் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், அதிக கொலெஸ்டிரால், உடல் பருமன் உடையவர்கள், கர்ப்பகால சர்க்கரை நோய் ஏற்பட்ட பெண்கள், இருதய மற்றும் சிறுநீரக பாதிப்புடை யவர்கள் பங்குபெற்று பயன்பெறலாம்.

    மேலும் மயக்கம், தலைசுற்றல், கால்வீக்கம், சிறுநீர் கழிக்கு ம்போது எரிச்சல், கால்குத்தல் வலி, எரிச்சல் , காலில் ஆறாத புண், வீக்கம், கால் மரத்துப்போன நிலை, காரணமற்று உடல் எடை குறைதல், உடலில் அடிக்கடி அரிப்பு, கட்டி, கொப்புளம் ஏற்படுதல், மூச்சு திணறல், நெஞ்சு வலி மற்றும் எரிச்சல் போன்ற அறிகுறி உடைய வர்கள் மற்றும் பொதுவான உடல் நல பரிசோதனைகள் செய்ய விரும்புபவர்களும் இம்முகாமில் பங்குபெற்று பயன்பெறலாம்.

    இதுகுறித்து எம்.வி.ஆர். மருத்துவ மையத்தின் மருத்துவ இயக்குனரும், இந்திய மருத்துவ கழகத்தின் புதுச்சேரி மாநில பெண்கள் பிரிவு துணைத்தலைவரும், நீரிழிவு நோய் நிபுணருமான டாக்டர் எம்.ஆர்.வித்யா கூறியதாவது:-

    நீரிழிவு நோய் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு ஒவ்வொரு நோயாளி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அவசியம் தேவை.

    பொது மக்களுக்கு உதவும் நோக்கத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வருடந்தோறும் சிறப்பு மருத்துவ முகாம்களை எங்களது மருத்துவமனை மூலம் நடத்தி வருகிறோம்.

    பரிசோத னைகள் மூலம் பலரும் அபாயகரமான உடல் பாதிப்புகளில் இருந்து மீண்டுள்ளனர். புதுச்சேரி யில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் ஆய்வின்படி 25 சதவீதம் அளவுக்கு நீரிழிவு நோயும், 26சதவீதம் அளவுக்கு நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை யும் காணப்படு வதால் பொதுமக்கள் 35 வயதிற்கு மேல் ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தம், உடல்நல பரிசோதனைகள் செய்துகொள்ளுவது மிகவும் முக்கியமானது.

    முகாமில் கலந்துகொள் வோருக்கு உடற்கூறு பகுப்பாய்வு செய்து உடல் கொழுப்பு அளவை குறைக்கும் முறை குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முகாமிற்கான ஏற்பாட்டினை எம்.வி.ஆர். மருத்துவ மையத்தின் மேலாளர் தேவதாஸ், சச்சிதானந்தம் மற்றும் செலின் ஆகியோர் செய்துள்ளனர். முகாமில் முன்பதிவு செய்து பயன்பெற தொலைபேசி எண்களில் 9047791662, 0413-2252662, 2257662/63 தொடர்பு கொள்ளலாம்.

    • பொது மக்கள் அவதி
    • பாதாள கழிவு நீர் தொட்டிகளில் மழை நீர் புகுந்து வீடுகளில் உள்ள கழிவறை வழியாக வெளியேறி வருகிறது.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்தசாலை பகத்சிங் வீதி, முதல் பள்ளிக்கூட வீதி, பள்ளிக்கூட மெயின்ரோடு, பாரதிபுரம் மெயின் ரோடு போன்ற பகுதிகளில் மழையின் காரணமாக பாதாள கழிவு நீர் தொட்டிகளில் மழை நீர் புகுந்து வீடுகளில் உள்ள கழிவறை வழியாக வெளியேறி வருகிறது.

    இதனை அறிந்த தொகுதி எம்எல்ஏ நேரு அங்கு விரைந்து வந்து பார்வை யிட்டார்.

    தொடர்ந்து கழிவு நீர் உட்பட்ட பிரிவு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை வரவழைத்து இதற்கு தீர்வு காண தேவையான நடவ டிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    மேலும் அப்பகுதியில் வீடுகளுக்குள் கழிவுநீர் புகாதவாறு வாய்க்கால் வாட்டம் அமைத்தல் சாலைகள் உயர்த்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளுமாறு நகராட்சி அதிகாரிகளை கேட்டு கொண்டார். ஆய்வின் போது பொதுப்பணித்துறை கழிவுநீர் உட்கோட்ட பிரிவு உதவி பொறியாளர் வைத்தியநாதன், நகராட்சி உதவி பொறியாளர் நமச்சிவாயம், நகராட்சி மருத்துவ அதிகாரி பிரீத்தா, நகராட்சி ஆய்வாளர். லட்சுமணன் மற்றும அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • கவர்னருக்கு வையாபுரி மணிகண்டன் கடிதம்
    • மத்திய பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

     புதுச்சேரி:

    புதுவைமாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன கவர்னருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரியில் பெய்துவரும் தொடர் கனமழையால் அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள விடுமுறை அறிவித்தும் மத்திய பல்கலைக்கழகம் வழக்கம்போல இயங்கியது.

    கனமழை போன்ற பேரிடர் காலத்தில் அரசு விடுமுறை அறிவிக்கப்படுவதன் நோக்கம் மாணவர்களின் உயிருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதுதான்.

    புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு புதுவை மட்டுமின்றி, அண்டை மாநிலமான தமிழகத்தின் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களும் படித்து வருகின்றனர்.

    கனமழையால் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும், அதைத்தொடர்ந்து புதுவையிலும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

    ஆனால் புதுவை மாநில எல்லை வரம்புக்குள் உள்ள மத்திய பல்கலைக்கழகமும், மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவ கல்லூரியும், அரசு உத்தரவை பின்பற்ற வில்லை. இது மாணவர்களின் உயிருக்குத்தான் ஆபத்தாக விளையும்.

    இனிவரும் காலத்தி லாவது புதுவை அரசின் உத்தரவுகளை மாணவர்களின் நலன் கருதி மத்திய பல்கலைக்கழகம், ஜிப்மர் மருத்துவக்கல்லூரி ஆகியவை பின்பற்ற கவர்னர் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

    • பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு
    • ஊழியரின் மனைவி மற்றும் உறவினர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து உரிய இழப்பீடு வழங்க கோரினர்.

    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டில் இயங்கி வரும் தனியார் மருந்து தொழிற்சாலையில் கடந்த 4-ந் தேதி பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

    இதில் 14 பேர் படுகாய மடைந்து சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி நெடுஞ்செழியன் என்ற ஊழியர் இறந்தார். அவரின் உடல் புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டுவரப்பட்டது.

    இறந்த ஊழியரின் மனைவி மற்றும் உறவினர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து உரிய இழப்பீடு வழங்க கோரினர். முதல்- அமைச்சர் ரங்கசாமி, இதுகுறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

    இதன்படி கலெக்டர் வல்லவன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இறந்த நெடுஞ்செழியன் குடும்பத்தினர், தொழிற்சாலை பிரதிநிதிகள், ஏ.ஐ.சி.சி.டி.யூ தொழிற்சங்கத்தின் மாநிலத்தலைவர் மோதிலால், நாம் தமிழர் கட்சியின் காலாப்பட்டு தொகுதி செயலாளர் காமராஜ், தொழிற்சங்க செயலாளர் ரமேஸ், நிர்வாகிகள் வினோத், மணிபாரதி, வெங்கடேஷ், முகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

    பேச்சுவார்த்தையில், மருந்து தொழிற்சாலை நிர்வாகம் நெடுஞ்செழியன் குடும்பத்துக்கு ரூ.35 லட்சம் நிவரணம், இறுதிச்சடங்கிற்கு ரூ.2 லட்சம் வழங்க ஒப்புக்கொண்டது.

    மேலும் நெடுஞ்செழியன் மனைவிக்கு தொழிற்சாலையில் நிரந்தர பணி வழங்கவும், அவரின் 2 மகன்களின் கல்லூரி படிப்பு செலவை ஏற்கவும் ஒப்புக்கொண்டது.

    இதையடுத்து பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. நெடுஞ்செழியன் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் அவரின் குடும்பத்தினரிடம் இன்று ஒப்படைக்கப்படுகிறது.

    • அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
    • மழை வெள்ளம் அதிகளவில் ஓடுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    பதுவையில் நேற்று 24 மணிநேரம் பெய்த தொடர் மழையால் ஏரிகள் நிரம்பி வருகிறது. இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பருவ மழை அதிகமாக இருக்கும் என்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க முதல்-அமைச்சர் ரங்கசாமி கடந்த வாரம் கூட்டத்தை கூட்டி அனைத்து துறையினருக்கும் உத்தரவிட்டார்.

    பொதுப்பணித்துறை, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து, மின் துறை என அனைத்து துறை அதிகாரிகளும் ஊழியர்களும் நள்ளிரவு முதல் பணியாற்றி வெள்ளப் பாதிப்பை தடுத்துள்ளனர்.தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீர் வெளி யேற்றப்பட்டு விட்டது. ஏற்கனவே வாய்க்கால்கள் தூர் வாரப்பட்டதனால் மழை நீர் தேங்கும் பகுதிகள் சீரமைக்கப் பட்டுள்ளது. மேலும் மழை இருக்கும் என வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.

    இதனால் புதுவை மற்றும் காரைக்காலில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கை களும் எடுக்கப்பட்டு ள்ளது.

    சங்கராபரணி ஆறு மற்றும் தென்பெண்ணை ஆற்றில் மழை வெள்ளம் அதிகளவில் ஓடுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பிள்ளையார்குப்பம் படுகை அணை புதிதாக கட்டும் பணி ஜனவரி மாதம் தொடங்கும். மற்ற படுகை அணைகளில் மழை நீரை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

    கடுமையான மழை இருக்கும் என்பதால் பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். தாழ்வான பகுதிகளில் உள்ள பகுதி மக்கள் அருகில் உள்ள பள்ளிக் கூடங்கள், நகராட்சி சொந்த மான கட்டிடங்கள் ஆகியவற்றிற்கு செல்லவும். அங்கு உணவு உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

    புதுவையில் 84 ஏரிகளில் உள்ள மண்ணை தேவையானவர் எடுத்து செல்லலாம் என்று கூறியதன் காரணமாக தற்போது ஏரிகளில் நீர் அதிக அளவில் தேங்க தொடங்கி உள்ளது. மேலும் மழைக்காலத்தில் நீர் பிடிப்பு பகுதியில் நிறைய தண்ணீரை சேர்க்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. வலியுறுத்தல்
    • கட்டிட தொழிலாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டில் முடங்கி உள்ளனர்.

    புதுச்சேரி:

    எதிர்கட்சி தலைவரும் புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளருமான சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் மழையால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    கட்டிட தொழிலாளர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டில் முடங்கி உள்ளனர்.

    தொடர் மழையால் புதுவையின் பல்வேறு பகுதிகளில் தாழ்வாக உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. சாலைகளில் மழைநீருடன், கழிவுநீரும் சேர்ந்து தேங்கி உள்ளதால் பல இடங்களில் சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

    எனவே இன்னும் மாவட்ட நிர்வாகம் தூங்கிக் கொண்டிருக்காமல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை களத்தில் இறக்கி நிவாரணப் பணிகளை முடுக்கிவிட வேண்டும். நீர்நிலைகளை கண்காணித்து வீடுகள் இழந்த மக்களுக்கு உடனடியாக மாற்று இடம் வழங்க வேண்டும்.

    வேலைக்கு செல்ல முடியாத மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி கிராமங்கள்தோறும் மருத்துவக் குழுக்கள் அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

    குறிப்பாக மழைக்கால நோய் வராமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட வீடுகள், விளைநிலங்கள் குறித்து அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு எம்.எல்.ஏ.க்களின் துணை யோடு மக்கள் துயர்தீர்க்க துரித நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வனத்துறையினர் பிடித்தனர்
    • ஒரு அடி நீளத்தில் மெல்லிய பாம்பு இருந்தது. உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை அவ்வை நகரில் ஒரு வீட்டின் வெளிபுற இரும்பு கிரில் கதவில் வித்தியாசமாக ஏதோ தென்பட்டது.

    உற்று நோக்கியதில் ஒரு அடி நீளத்தில் மெல்லிய பாம்பு இருந்தது. உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஊழியர் கண்ணதாசன் விரைந்து வந்து பாம்பை பிடித்தார். "வெள்ளிகோல் வரையன்" என்ற இந்த பாம்பு விஷத்தன்மை கொண்டதல்ல. கரப்பான் பூச்சி, பல்லிகளை மட்டும் உண்ண கூடியது.மழை காலத்தில் அதிகம் தென்படும்.

    அந்த வகையில் காலை முதல் லாஸ்பேட்டை பகுதியில் தொடர் மழை பெய்ததால் வெளியே வந்த பாம்பு பல்லியை பிடிக்க காத்திருந்த போது வனத்துறை ஊழியரிடம் சிக்கியுள்ளது.

    இதனை காட்டுப்பகுதியில் விட அவர் எடுத்து சென்றார்.

    • அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு அதனை சரி செய்ய நடவடிக்கை எடுத்தார்.
    • பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக பள்ளி, சமுதாய நலக்கூடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை உழவர்கரை தொகுதிகுட்பட்ட ஜவகர் நகர் பகுதியில் பெய்த கனமழையின் போது பழமை வாய்ந்த அரசமரம் அங்குள்ள ஆட்டோ, டிரான்ஸ்பார்மர் மீது விழுந்து பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இதனை அறிந்த வக்கீல் சசிபாலன் நேரடியாக அங்கு சென்று அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு அதனை சரி செய்ய நடவடிக்கை எடுத்தார்.

    தொடர்ந்து பிச்சவீரன்பேட்டை, குமரன் நகர் பகுதியில் அவர் ஆய்வு செய்தார்.அப்போது அங்கு அரசு அதிகாரிகள் வந்தனர். அவர்களிடம் பொதுமக்கள் தங்குவதற்கு வசதியாக பள்ளி, சமுதாய நலக்கூடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவர்கள் அதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர்.

    • கென்னடி எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
    • சுத்திகரிப்பு குடிநீர் வழங்கும் மையத்தில் விநியோகிக்கப்படும் தண்ணீர் சரியில்லை என்று கடந்த ஒருவாரமாக பொது மக்கள் குறை கூறி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி, அம்பேத்கர் சாலையில் பொதுப் பணித்துறை தண்ணீர் டேங்க் மற்றும் திருவள்ளுவர் வீதி எதிரில் அமைந்திருக்கும் சுத்திகரிப்பு குடிநீர் வழங்கும் மையத்தில் விநியோகிக்கப்படும் தண்ணீர் சரியில்லை என்று கடந்த ஒருவாரமாக பொது மக்கள் குறை கூறி வருகின்றனர்.

    இதனை அறிந்த தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி குடிநீர் மையத்தை கொட்டும் மழையில் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது தரமற்ற குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை அறிந்தார்.அதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை அதி காரிகளை நேரில் சந்தித்து சுத்திகரிக்கப்பட்ட (ஆர்.ஓ.) குடிநீர் மையத்தில் உள்ள பில்டரை உடனடியாக மாற்ற வேண்டும் என வலி யுறுத்தினார். அப்போது பொதுப் பணித்துறை உத விப்பொறியாளர் வாசன், இளநிலைப் பொறியாளர் வெங்கடேசன் ஆகியோர் உடனடியாக சரி செய்து புதிய பில்டரை பொருத்தி தருகிறோம் என்று

    எம்.எல்.ஏ.விடம் உறுதி யளித்தனர்.

    தி.மு.க. நிர்வாகி கள் இருதயராஜ். ராகேஷ், மோரிஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் விடுமுறை அறிவிப்பு.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

    இதன் காரணமாக வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

    நாளையும் கனமழை நீடிக்கும் என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் விடுமுறை அறிவித்துள்ளார்.

    ×