search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • தற்போது உள்ளூர் முதல்தர கிரிக்கெட் போட்டியில் ஆர்வம் காட்டி வருகிறார்.

    இந்தியாவின் டி20 அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்ய குமார் யாதவ். இலங்கை தொடருக்கான இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதிரடி வீரரான இவர் டி20 கிரிக்கெட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார். டெஸ்ட் போட்டியில் இடம் பிடித்து விளையாட விரும்புகிறார். இந்த அணி வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடினால்தான் தேசிய அணியில் இடம் என பிசிசிஐ தெரிவித்திருந்தது.

    இதனால் புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் சூர்யகுமார், ஷ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இந்தியா வங்கதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

    இந்த போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பதுதான் முக்கியம் என இவர்கள் கருதுகிறார்கள். விரைவில் துலீப் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா "சி" அணியில் சூர்யகுமார் இடம் பிடித்துள்ளார்.

    இந்த நிலையில்தான் புச்சிபாபு கிரிக்கெட்டில் தமிழக அணிக்கு எதிராக விளையாடும்போது, சூர்யகுமாருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் காரணமாக துலீப் டிராபி தொடரில் விளையாடுவாரா? என்பது சந்தேகம்தான்.

    இதனால் இந்திய டெஸ்ட் அணியில் விளையாட விரும்பும் சூர்யகுமாருக்கு காயம் வழிவிடுமா? என்பதை பார்க்க வேண்டும்.

    தமிழ்நாடு அணிக்கெதிராக மும்பைக்காக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 38 பந்தில் 30 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடங்கும். தமிழ்நாடு லெவன் 379 ரன்கள் எடுத்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் 156 ரன்னில் சுருண்டது.

    சூர்யகுமார் யாதவ் முதல் தர கிரிக்கெட்டில் 82 போட்டிகளில் 5,628 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 43.62 ஆகும். சூர்யகுமார் யாதவ் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடியுள்ளார்.

    • டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி 20 சதங்கள் அடித்துள்ளார்.
    • ஜோ ரூட் 32 சதங்கள் அடித்து அலைஸ்டர் குக் சாதனையை சமன் செய்துள்ளார்.

    கிரிக்கெட்டில் இந்த தலைமையின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக இந்திய அணியின் விராட் கோலி, ஆஸ்திரேலிய அணியின் ஸ்மித், நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன், இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் ஆகியோர் பார்க்கப்படுகிறார்கள்.

    இவர்களில் யார் சிறந்தவர்கள் என்ற விவாதம் ரசிகர்களுக்கு இடையில் மட்டுமல்ல, முன்னாள் வீரர்களுக்கு இடையிலும் ஏற்படுவதுண்டு.

    இந்திய அணியின் விராட் கோலி டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். ஜோ ரூட் பெரும்பாலும் டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறது.

    இந்திய நான்கு பேர்களில் ஒட்டுமொத்தமாக அதிக சதம் அடித்தவர் விராட் கோலி. ஆனால் டெஸ்ட் போட்டியில் அவர் மற்ற மூன்று பேர்களை விட சற்று குறைவாக உள்ளார்.

    நேற்று முன்தினம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் சதம் விளாசினார். இதன்மூலம் அதிக சதம் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை அலைஸ்டர் குக் உடன் பகிர்ந்துள்ளார்.

    இந்த நிலையில் டெஸ்ட் போட்டியில் விராட் கோலியை விட ஜோ ரூட் சிறந்தவர் என்பது போல் மைக்கேல் வாகன், இருவர்களுக்கும் இடையிலான ஒப்பிட்டை வெளிப்படுத்தி, "மார்னிங் இந்தியா" என இந்திய ரசிகர்களை சீண்டியுள்ளார்.

    விராட் கோலியை விட 72 இன்னிங்ஸ்கள் அதிகமாக ஜோ ரூட் விளையாடியுள்ளார் என இந்திய ரசிகர் ஒருவர் பதில் அளித்துள்ளார். மேலும் இந்திய ரசிகர்கள் விராட் கோலிக்கு ஆதரவாக தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

    • கமிந்து மெண்டில் மட்டும் தாக்குப்பிடித்து 74 ரன்கள் சேர்த்தார்.
    • ஐந்து பேர் ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

    இங்கிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் 29-ந்தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து ஜோ ரூட் (143), கஸ் அட்கின்சன் (118) ஆகியோரின் சதத்தால் நேற்றைய 2-வதுநாள் ஆட்டத்தின்போது 427 ரன்கள் குவித்தது. இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக அசிதா பெர்னாண்டோ 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது, இங்கிலாந்தின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. கமந்து மெண்டிஸ் மட்டும் தாக்குப்பிடித்து 74 ரன்கள் அடிக்க இலங்கை அணி 196 ரன்களில் சுருண்டது. இங்கிலாந்து அணியின் கிறிஸ் வோக்ஸ், ஒல்லி ஸ்டோன், கஸ் அட்கின்சன், மேத்யூ பாட்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    231 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் எடுத்துள்ளது. லாரன்ஸ் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். பென் டக்கட் 15 ரன்னுடனும், ஒல்லி போப் 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    • முதல் டெஸ்டில் பாகிஸ்தானை வங்கதேசம் வீழ்த்தியது.
    • கனமழையால் முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    இதில் முதல் டெஸ்டில் வங்கதேசம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்தது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் இன்று தொடங்க இருந்தது. ஆனால் அங்கு கனமழை பெய்து வருகிறது.

    இதையடுத்து, கனமழை காரணமாக இந்த டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

    • பொறுப்புடன் விளையாடிய ஜோ ரூட் சதமடித்து 143 ரன்னில் அவுட்டானார்.
    • கஸ் அட்கின்சன் அதிரடியாக ஆடி 105 பந்தில் சதமடித்தார்.

    லண்டன்:

    இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேனியல் லாரன்ஸ் 9 ரன்னிலும், கேப்டன் ஒல்லி போப் ஒரு ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 40 ரன்னில் அவுட்டானார்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் பொறுப்புடன் விளையாடி சதமடித்த ஜோ ரூட், 33வது சதத்தை பதிவு செய்தார். அவர் 143 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அவரை தொடர்ந்து அதிரடியாக ஆடிய கஸ் அட்கின்சன் 105 பந்துகளில் சதமடித்தார். அவர் 118 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில 427 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இலங்கை சார்பில் அஷிதா பெர்னாண்டோ 5 விக்கெட்டும், மிலன் ரத்னாயகே, லஹிரு குமரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • இந்திய கிரிக்கெட் அணியின் மேட்ச் வின்னராக பும்ரா உருவெடுத்துள்ளார்.
    • அவரிடம், உங்களுக்கு மிகவும் சவால் கொடுத்த பேட்ஸ்மேன் யார் என கேள்வி எழுப்பப்பட்டது.

    சென்னை:

    இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா, தற்போது உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக அறியப்படுகிறார். எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழும் அவர், இந்தியாவின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

    குறிப்பாக, டி20 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற அவர் 17 வருடங்கள் கழித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். மேலும், இந்திய அணியின் மேட்ச் வின்னராக உருவெடுத்துள்ளார்.

    இதனால் தான் அவரை, பும்ரா தலைமுறையில் ஒருமுறை மட்டுமே வரும் பவுலர் என விராட் கோலி பாராட்டினார். அத்துடன் வாசிம் அக்ரம், ரிக்கி பாண்டிங் போன்ற உலகின் பல ஜாம்பவான்கள் பும்ராவை பாராட்டி உள்ளனர்.

    இந்நிலையில், ஜஸ்பிரித் பும்ராவுக்கு சென்னையில் சமீபத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது, உங்களுக்கு சவால் கொடுத்த பேட்ஸ்மேன் யார்? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, சிறப்பாக பந்து வீசினால் தம்மை எந்த பேட்ஸ்மேன்களாலும் தடுத்து நிறுத்தமுடியாது என தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:

    இதற்கு நல்ல பதிலைக் கொடுக்க விரும்புகிறேன். இருப்பினும் உண்மையில் யாரும் எனக்கு மேல் இருப்பதை நான் விரும்பவில்லை.

    கண்டிப்பாக அனைவரையும் மதிக்கிறேன். ஆனால் என்னுடைய வேலையை சரியாக செய்தால் இந்த உலகில் யாரும் என்னை தடுத்து நிறுத்த டியாது என்று எனது தலைக்குள் எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்.

    எனவே நான் எதிரணியை பார்க்காமல் என்னைப் பார்க்கவேண்டும். என்னுடைய அனைத்து விஷயங்களிலும் கட்டுப்பாடு இருந்தால், எனக்கு நானே சிறந்த வாய்ப்புகளைக் கொடுத்தால் மற்ற அனைத்தையும் அதுவே பார்த்துக் கொள்ளும். அதனால் பேட்ஸ்மேன் என்னை விட சிறந்தவர் என்பதுபோல் நினைக்க வேண்டியதில்லை என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எம்.எஸ்.டோனி பலருக்கு ரோல் மாடலாகத் திகழ்ந்து வருகிறார்.
    • நடுவர்கள் வழங்கும் தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்வதிலும் டோனி வல்லவர்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுபவர் மகேந்திரசிங் டோனி. இவரது தலைமையிலான இந்திய அணி ஐசிசி டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 உலகக் கோப்பைகளை வென்றுள்ளது. பல தொடர்களில் இந்திய அணிக்கு வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

    விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் சாதனை படைத்துள்ள அவர் பலருக்கு ரோல் மாடலாகத் திகழ்ந்து வருகிறார்.

    விக்கெட் கீப்பிங், ஸ்டம்பிங், ரன் அவுட், கேட்ச் என அனைத்திலும் சிறப்பாக செயல்படும் திறமை கொண்டவர் டோனி. நடுவர்கள் வழங்கும் தீர்ப்பை எதிர்த்து முறையீடு (டி.ஆர்.எஸ்) செய்வதிலும் டோனி வல்லவர்.

    இந்நிலையில், டோனி எப்போதுமே துல்லியத்திற்கும் நெருக்கமான டி.ஆர்.எஸ். முடிவுகளை எடுப்பார் என இந்தியாவின் பிரபல நடுவர் அனில் சவுத்ரி பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அனில் சவுத்ரி சமீபத்தில் அளித்த பேட்டியில், ரசிகர்கள் கூறுவது உண்மைதான். டோனி மிகவும் துல்லியமானவர். அவருடைய அழைப்புகள் (டி.ஆர்.எஸ்.) கிட்டத்தட்ட துல்லியத்திற்கு மிகவும் நெருக்கமாக இருக்கும். பேட்ஸ்மேன்களுக்கு பின்னால் இருப்பதால் விக்கெட் கீப்பர்களால் சில நேரங்களில் பவுலர்களின் பொசிஷனை சரியாகப் பார்க்கமுடியாது. அது வித்தியாசமானது. இருப்பினும் டோனி எடுக்கும் முடிவுகள் காரணம் மிகுந்ததாக இருக்கும் என தெரிவித்தார்.

    • லக்னோ அணிக்கு புதிய ஆலோசகராக ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • மோர்னே மோர்கல் இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கவுதம் கம்பீர் ஆலோசகராக இருந்தார். பின்னர் 2024 ஆம் ஆண்டு கொல்கத்தா அணி ஆலோசகராக கம்பீர்ஆலோசகராக இருந்தார். பின்னர் 2024 ஆம் ஆண்டு கொல்கத்தா அணி ஆலோசகராக கம்பீர் பொறுப்பேற்றார். இப்போது இந்திய அணியில் தலைமை பயிற்சியாளராக அவர் உயர்ந்துள்ளா

    கம்பீர் வெளியேறிய பிறகு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் ஆலோசகர் பதவி காலியாக இருந்த நிலையில் ஐபிஎல் 2025 தொடரில் லக்னோ அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.


    இந்நிலையில் லக்னோ அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்த மோர்னே மோர்கல் இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதால் லக்னோ அணிக்கு அடுத்த பந்து வீச்சு பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்தது.

    இதற்கு லக்னோ அணியின் புதிய ஆலோசகரான நியமிக்கப்பட்ட ஜாகீர் கான் பதில் அளித்துள்ளார். நான் இருக்கும் போது உங்களுக்கு ஒரு பந்து வீச்சு பயிற்சியாளர் தேவையா? அணிக்கு தேவையான அனைத்தையும் நான் செய்வேன் என அவர் கூறினார்.

    • ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் மிகப்பெரிய வீரராக வருவார் என்று கணிக்கப்பட்டவர்.
    • வில் பொக்கோஸ்கி 22-வது வயதில் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார்.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. இளம் வயதில் அணியில் இடம் கிடைப்பது மிகப்பெரிய விஷயாமாக பார்க்கபடும் நிலையில் 20 வயதில் தேசிய அணியில் விளையாட வில் பொக்கோஸ்கிக்கு வாய்ப்பு கிடைத்தது.

    உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இளம் வயதிலேயே தொடர்ந்து சதம் சதமாக அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். 36 உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 2350 ரன்கள் அடித்திருந்தார். இதில் 7 சதம் அடங்கும். அதுமட்டுமல்லாமல் இவருடைய சராசரி 45 என்ற அளவில் இருந்தது.

    தன்னுடைய திறமை காரணமாக 22-வது வயதில் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2020-21-ம் ஆண்டு அறிமுகமானார். சிட்னி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 62, இரண்டாவது இன்னிங்ஸில் 10 ரன்கள் அடித்தார்.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் மிகப்பெரிய வீரராக வருவார் என்று கணிக்கப்பட்ட நிலையில் பேட்டிங் செய்யும்போது தொடர்ந்து பந்து தலையை தாக்கிக் கொண்டு இருந்தது. இதனால் அவருக்கு பலமுறை காயம் ஏற்பட்டு போட்டியிலிருந்து பாதியில் விலகி இருக்கிறார். 

    ஒரு முறை இரண்டு முறை அல்ல காயம் அடைந்து மீண்டும் குணம் அடைந்து களத்திற்கு வரும்போது மீண்டும் தலையில் பந்து தாக்கி அவர் ஓய்வு பெற்று விடுவார். இப்படியே தொடர்கதையாக இருந்தது. இவருக்கு தொடர்ந்து எப்படி ஒரே இடத்தில் பந்து படுகிறது என்பது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்தனர்.

    இதில் பந்து தலையை தாக்கி விடுமோ என்ற பயத்தில் அவர் விளையாடுவதால் தான் பேட்டிங் யுத்தியை அவர் மறந்து விடுவதாக மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். கடைசியாக ஒரு முறை கிரிக்கெட்டில் சாதித்து விடலாம் என வில் பொக்கோஸ்கி வந்தபோது கடந்த மார்ச் மாதம் மீண்டும் தலையில் பந்து அடிபட்டு அவர் காயமடைந்தார்.

    இந்த நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் தொடர்ந்து பந்து தலையைத் தாக்கியதால் அது அவருக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாகவும், இதனால் வில் பொக்கோஸ்கி இனி விளையாடவே முடியாது என்றும் மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர். இதனையடுத்து வில் பொக்கோஸ்கி கிரிக்கெட் விளையாடும் தகுதியை இழந்து விட்டதாகவும் அவர் ஓய்வு பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.

    இதனால் வில் பொக்கோஸ்கி தற்போது வெளிநாடுகளில் சுற்றுலா சென்று இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் விக்டோரியா நிர்வாகி மோரிஸ், சில மருத்துவ குழு நிபுணர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதன் காரணமாக அவர் கிரிக்கெட் பக்கமே திரும்பவில்லை. அவர் பயிற்சி செய்ய கடந்த மூன்று மாதங்களாக வரவில்லை. தற்போது அவர் வெளிநாட்டில் சுற்றுலாவில் இருக்கின்றார். மருத்துவர்களின் அறிக்கை எங்களுக்கு எந்த ஒரு ஆச்சரியத்தையும் கொடுக்கவில்லை என்று மோரிஸ் கூறியிருக்கிறார்.

    • ஹீலி மேத்யூஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்குகிறது.
    • ஓய்வு பெற்ற தியான்ட்ரா டோட்டினிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் இத்தொடரில் பங்கேற்கும் நிலையில், அந்த அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி பிரிவில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.

    இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அதன் படி, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானின் மகளிர் அணிகளை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன.

    இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கவுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் சமீபத்தில் தனது ஓய்வு முடிவை திரும்பப்பெற்றிருந்த தியான்ட்ரா டோட்டினிற்கு இடம் கிடைத்துள்ளது.

    ஹீலி மேத்யூஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஸ்டேஃபானி டெய்லர், ஷெர்மைன் காம்பெல், ஷமில கன்னெல் உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகளுடன், சில இளம் வீராங்கனைகளுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி:

    ஹீலி மேத்யூஸ் (கே), ஷெர்மைன் காம்ப்பெல்லே, ஆலியா அலீன், அஃபி பிளெட்சர், அஷ்மினி முனிசார், செடியன் நேஷன், சினெல்லே ஹென்றி, டியான்ட்ரா டோட்டின், கரிஷ்மா ராம்ஹராக், மாண்டி மங்ரு, நெரிசா கிராப்டன், கியானா ஜோசப், ஷமிலா கானல், ஸ்டேஃபானி டெய்லர், ஜைடா ஜேம்ஸ்.

    • அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி, மார்ச்சில் நடக்கிறது.
    • இந்திய கிரிக்கெட் அணி 2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சென்று விளையாடியதில்லை.

    லாகூர்:

    இந்திய கிரிக்கெட் அணி 2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சென்று விளையாடியதில்லை. கடந்த ஆண்டு பாகிஸ்தானில் ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தபோது இந்திய அணி அங்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் இலங்கைக்கு மாற்றப்பட்டது.

    அடுத்ததாக பாகிஸ்தானில் 8 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச்சில் நடக்கிறது. பாகிஸ்தானுடனான சீரற்ற உறவு மற்றும் பாதுகாப்பு பிரச்சினையால் இந்திய அணி அங்கு செல்வதற்கு தயக்கம் காட்டுகிறது. மத்திய அரசின் அனுமதி கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.

    இந்த நிலையில் இந்திய அணி இந்த முறை பாகிஸ்தானுக்கு வருகை தரும் என்று அந்த நாட்டை சேர்ந்த முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஐ.சி.சி.யின் புதிய தலைவராக இந்தியாவின் ஜெய்ஷா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார் என்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவருக்கு ஆதரவு அளித்துள்ளது என்று தான் அர்த்தம். இதுவே இந்திய அணி பாகிஸ்தானுக்கு வருகை தருவதை 50 சதவீதம் உறுதிப்படுத்தி விட்டது.

    கிரிக்கெட் வாரிய நிர்வாகியாக ஜெய்ஷா இதுவரை செய்துள்ள பணிகள் கிரிக்கெட்டுக்கு ஆதாயம் தரும் வகையிலேயே இருந்துள்ளன. எனவே சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி பங்கேற்பதை உறுதி செய்வதற்கான முயற்சியை அவர் மேற்கொள்வார் என நம்புகிறேன்.

    இவ்வாறு ரஷித் லத்தீப் கூறினார்.

    • ஓரம் நியூசிலாந்து அணிக்காக 33 டெஸ்ட், 160 ஒருநாள் மற்றும் 36 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறார்.
    • டி20 உலகக் கோப்பை போட்டியின்போது நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகராக ஓரம் செயல்பட்டார்.

    வெலிங்டன்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ஜேக்கப் ஓரம் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பைக்கு பிறகு ஷேன் ஜூர்கன்சன் பந்து வீச்சு பயிற்சியாளர் பதவியில் இருந்து விடைபெற்றார்.

    இதனால் காலியான அந்த வெற்றிடத்தை ஜேக்கப் ஓரம் நிரப்புகிறார். ஏற்கனவே அவர் வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட், சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியின்போது நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகராக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

    46 வயதான ஓரம் நியூசிலாந்து அணிக்காக 33 டெஸ்ட், 160 ஒருநாள் மற்றும் 36 இருபது ஓவர் போட்டியில் விளையாடி இருக்கிறார்.

    ×