search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • இலங்கை மற்றும் இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
    • ஆகஸ்ட் 2, 4 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கொழும்புவில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    இலங்கை மற்றும் இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 2, 4 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கொழும்புவில் இலங்கைக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறுகிறது.

    தற்போது விடுமுறையில் இருந்து வரும் ரோகித் சர்மா, தனது விடுமுறையை குறைத்துக்கொண்டு அடுத்த மாதம்நடைபெற உள்ள ஒருநாள் தொடரில் பங்கேற்கிறார்.

    இந்நிலையில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்க உள்ளார் என தெரிகிறது.

    இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் இன்று ஆன்லைனில் நடைபெற உள்ளது. அதற்கு முன் தனது வருகையை பிசிசிஔக்கு அறிவிப்பார் என தெரிகிறது.

    ரோகித் சர்மா கடந்த மாதம் ஐசிசி கோப்பையை வென்ற மூன்றாவது இந்திய கேப்டனாக ஆனார். இவர் ஏற்கனவே டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பேட்டிங் தரவரிசையில் டாப் 10-ல் 2 இந்திய வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.
    • பந்து வீச்சாளர் தரவரிசையிலும் டாப் 10-ல் 2 இந்திய வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.

    துபாய்:

    டி20 கிரிக்கெட் போட்டிக்கான வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ சி சி) நேற்று வெளியிட்டது. இதில் பேட்டர்கள் தரவரிசையில் இந்திய அணியின் முன்னணி வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா 5-வது இடத்தில் தொடருகிறார்.

    இந்திய கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் 3 இடம் முன்னேறி 12-வது இடத்தையும், தொடக்க ஆட்டக்காரர் ஷபாலி வர்மா 2 இடம் உயர்ந்து 15-வது இடத்தையும் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பெத் மூனி 'நம்பர் ஒன்' இடத்தில் இருக்கிறார்.

    பந்து வீச்சாளர் தரவரிசையில் டாப்-3 இடங்களில் முறையே இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டன், சாரா கிளென், இந்தியாவின் தீப்தி ஷர்மா மாற்றமின்றி நீடிக்கிறார்கள். இந்திய வீராங்கனைகள் ரேணுகா சிங் 10-வது இடமும், ராதா யாதவ் 15-வது இடமும் , பூஜா வஸ்ட்ராகர் 23-வது இடமும் , ஸ்ரேயங்கா பட்டீல் 60-வது இடமும் வகிக்கிறார்கள்.

    • முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் உள்ளார்.
    • இந்திய வீரரான சூர்யகுமார் யாதவ் 2-வது இடத்தில் நீடிக்கிறார்.

    துபாய்:

    டி20 கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டது. அதன்படி இந்திய வீரரான ஜெய்ஸ்வால் டாப் 10-ல் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

    ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் 142 ரன்கள் குவித்ததன் மூலம் 5 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

    மற்றொரு இந்திய வீரரான சூர்யகுமார் யாதவ் 2-வது இடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் முதல் இடத்தில் உள்ளார்.

    இங்கிலாந்து வீரர் பில் சால்ட் 3-வது இடத்திலும், 4-வது மற்றும் 5-வது இடங்கள் முறையே பாகிஸ்தான் வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான் உள்ளனர்.

    மற்றொரு இந்திய வீரர் கெய்க்வாட் 2 இடங்கள் பின்தங்கி 8-வது இடம்பிடித்துள்ளார். சுப்மன் கில் 37-வது இடத்தில் உள்ளார்.

    • திருச்சி அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களை எடுத்து
    • 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷாருக்கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    கோவை:

    கோவையில் நடைபெற்று வரும் டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கோவை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் இறங்கிய திருச்சி அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கோவை அணியினரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் 35 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்து திருச்சி அணி தத்தளித்தது.

    சஞ்சய் யாதவ், ஜாபர் ஜமால் ஜோடி நிதானமாக ஆடியது. 7வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்த நிலையில் சஞ்சய் யாதவ் 34 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களை எடுத்தது. ஜாபர் ஜமால் அதிரடியாக ஆடி 41 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    கோவை அணி சார்பில் கேப்டன் ஷாருக் கான் மற்றும் முகமது ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 125 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி களமிறங்கியது. ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய சுரேஷ்குமார் டக் அவுட்டாகி வெளியேற அடுத்ததாக வந்த சாய் சுதர்சன் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். 7 ரன்னிற்குள் 2 விக்கெட்டுகளை இழந்து கோவை தடுமாறியது. அப்போது களத்தில் இருந்த சுஜய் - முகிலேஷ் ஜோடி நிதானமாக விளையாடி ரன் சேர்த்தனர்.

    16.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை சேர்த்து கோவை அணி எளிதாக இப்போட்டியில் வென்றது. நிதானமாக விளையாடிய முகிலேஷ் 63 ரன்களும் சுஜய் 48 ரன்களும் அடித்தனர்.

    சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷாருக்கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    • டி20 உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்ட்யா துணைக் கேப்டனாக செயல்பட்டார்.
    • இலங்கை தொடரில் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டாலும், பின்னர் சூர்யகுமார் யாதவ் நிரந்தர கேப்டனாக நியமிக்க வாய்ப்பு.

    இந்திய டி20 அணியின் கேப்டனாக ரோகித் சர்மா இருந்து வந்தார். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அத்துடன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டி20-யில் இருந்து ஓய்வு பெற்றனர்.

    இதனால் டி20 அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட வேண்டியுள்ளது. இந்திய அணியின் ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா புதிய கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. ஆனால் காயம் காரணமாக அவர் அடிக்கடி இந்திய அணியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டது. ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடினார். இதனால் டி20 அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    இலங்கைக்கு எதிராக டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா 27-ந்தேதி விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தொடரில் இருந்துதான் கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார். இதனால் இந்த தொடருக்காக அறிவிக்கப்படும் கேப்டன் 2026 உலகக் கோப்பை வரை நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில்தான் அதிரடி வீரரான சூர்யகுமார் யாதவ் இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    சூர்யகுமார் யாதவ் இந்திய டி20 அணியின் கேப்டனாக பணியாற்றியுள்ளார். ஹர்திக் பாண்ட்யா இலங்கை டி20 தொடரில் விளையாடுகிறார். இந்த தொடருக்கு அவர் கேப்டனாக நியமிக்கப்படலாம். ஆனால் இலங்கை தொடருக்கு மட்டுமல்ல, 2026 டி20 உலகக் கோப்பை வரை சூர்யகுமார் சாத்தியமான கேப்டனாக இருக்கலாம் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இன்று மாலை மாற்றம் செய்யப்பட்ட திட்டம் குறித்து கவுதம் கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் ஆகியோர் ஹர்திக் பாண்ட்யாவிடம் பேசியதாகவும், நீண்ட கால ஆப்சனை கருத்தில் கொண்டு ஸ்திரதன்மையை உறுதி செய்ய இந்த இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • முதலில் ஆடிய திருச்சி கிராண்ட் சோழாஸ் 124 ரன்கள் எடுத்தது.
    • கோவை அணி கேப்டன் ஷாருக் கான் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட் வீழ்த்தினார்.

    கோவை:

    கோவையில் நடைபெற்று வரும் டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கோவை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் இறங்கிய திருச்சி அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கோவை அணியினரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் 35 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்து திருச்சி அணி தத்தளித்தது.

    சஞ்சய் யாதவ், ஜாபர் ஜமால் ஜோடி நிதானமாக ஆடியது. 7வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்த நிலையில் சஞ்சய் யாதவ் 34 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்களை எடுத்தது. ஜாபர் ஜமால் அதிரடியாக ஆடி 41 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    கோவை அணி சார்பில் கேப்டன் ஷாருக் கான் மற்றும் முகமது ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 125 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி களமிறங்குகிறது.

    • டாஸ் வென்ற கோவை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
    • திருச்சி கிராண்ட் சோழாஸ் - லைக்கா கோவை கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

    கோவை:

    8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டியின் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் - லைக்கா கோவை கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற கோவை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

    • அது எப்போதுமே தனிநபர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும் அணி.
    • விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், கெயிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

    2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அதிகபட்சமாக மும்பை, சென்னை அணிகள் 5 முறை கோப்பையை கைப்பற்றி உள்ளது. இவர்களுக்கு அடுத்தப்படியாக கொல்கத்தா அணி 3 முறை கோப்பையை வென்றுள்ளது. அதை தவிர ராஜஸ்தான், டெக்கான் ஜார்சஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் ஆகிய அணிகள் ஒரு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளனர்.

    இந்த கோப்பையை வெல்லாதா அணியாக ஆர்சிபி, பஞ்சாப், லக்னோ ஆகிய அணிகள் உள்ளது. முக்கியமாக விராட் கோலி இடம்பெற்ற ஆர்சிபி அணி கோப்பையை வெல்லாதது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐபிஎல் தொடரில் விராட் கோலி மட்டுமே ஒரே அணிக்காக விளையாடி உள்ளார்.

    இந்நிலையில் ஆர்சிபி அணி எப்போதுமே தனிநபர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும் அணி என அந்த அணியின் முன்னாள் வீரர் பார்தீவ் படேல் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஆர்சிபி அணிக்காக நான் 4 வருடங்கள் விளையாடியுள்ளேன். அது எப்போதுமே தனிநபர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும் அணி. நான் பெங்களூரு அணியில் இருந்த போது விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், கெயிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 

    அங்கே அவர்களுக்கு ஸ்பெஷல் முன்னுரிமை இருந்தது. எனவே அங்கே அணி கலாச்சாரம் கிடையாது என்பதை அவர்கள் விளையாடுவதை பார்க்கும் போது தெளிவாக தெரியும். அதனாலேயே அவர்கள் கோப்பையை வெல்லவில்லை

    இவ்வாறு பார்தீவ் படேல் கூறினார்.

    • ரோகித், கோலி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா போன்றவர்களுக்கு விதிவிலக்குகள் வழங்கப்படும்.
    • குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு போட்டியிலாவது விளையாட வேண்டும்.

    இந்திய கிரிக்கெட் தொடரில் இருந்து நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் இடம் பெறவில்லை என்றால், உள்நாட்டு தொடரில் விளையாடுவதற்காக தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஜெய்ஷா தெரிவித்தார். ஆனால் ரோகித், விராட் கோலி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா போன்றவர்களுக்கு விதிவிலக்குகள் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

    மேலும் வங்காள தேசம் மற்றும் நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னோடியாக துலீப் டிராபி பார்க்கப்படுகிறது. அதனால் இந்திய அணியில் இடம் பிடிக்காத மற்ற அனைத்து டெஸ்ட் வீரர்களும் இந்த தொடரில் பங்கேற்க வேண்டும். குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு போட்டியிலாவது விளையாட வேண்டும் என்று பிசிசிஐ விரும்புகிறது.

    இது குறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறியதாவது:-

    இந்த முறை துலீப் டிராபிக்கு மண்டலத் தேர்வுக் குழு இல்லை. தேசிய தேர்வுக் குழு மட்டுமே துலீப் அணிகளைத் தேர்ந்தெடுக்கும். அனைத்து டெஸ்ட் அணி வீரர்களும் தேர்வு செய்யப்படுவார்கள். ரோகித், விராட், பும்ரா ஆகியோர் விளையாடுவது அவர்களின் விருப்பம்.

    என கூறுகின்றது. 

    • லார்ட்ஸ் போட்டியில் கூப்பரின் பேட்டிங்கை நான் பார்த்துள்ளேன்.
    • கேப்டனாக இல்லாமல் அவருடைய புள்ளி விவரங்களை பார்த்தால் அது வித்தியாசமானதாக இருக்கும்.

    டிரினிடாட்:

    கிரிக்கெட்டின் ஜாம்பவான் பேட்ஸ்மேன்களாக போற்றப்படுவர்கள் இந்தியாவை சேர்ந்த சச்சின் மற்றும் வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா ஆவர்.

    இந்நிலையில் சச்சின் மற்றும் தன்னை விட வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கார்ல் கூப்பர் சிறந்த பேட்ஸ்மேன் என்று பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:- 

    கூப்பர் நான் பார்த்த வீரர்களில் சிறந்தவர். சொல்லப்போனால் நானும் சச்சின் டெண்டுல்கர் கூட அவருடைய திறமையை நெருங்க முடியாது என்று சொல்வேன். கேப்டனாக இல்லாமல் அவருடைய புள்ளி விவரங்களை பார்த்தால் அது வித்தியாசமானதாக இருக்கும். கேப்டனாகவும் கூட பொறுப்புடன் விளையாடிய அவருடைய சராசரி கிட்டத்தட்ட 50 தொடும். இருப்பினும் ஒரு கேப்டனாக மட்டுமே அவர் தனது உண்மையான திறனை நிறைவேற்றினார் என்பது வருத்தமளிக்கிறது.

    லார்ட்ஸ் போட்டியில் கூப்பரின் பேட்டிங்கை நான் பார்த்துள்ளேன். அவர் என்ன ஒரு அற்புதமான பிளேயர். அப்போட்டியில் அவர் சீனியர்களை விட அற்புதமாக பேட்டிங் செய்தார். கார்ல் பேட்டிங் செய்யும்போது அதை தேஷ்மண்ட், விவியன் ரிச்சர்ட்ஸ், கோர்டான் க்ரீனிட்ஜ் ஆகியோர் தங்களின் வேலையை விட்டுவிட்டு பார்ப்பார்கள். அந்த வகையில் மிகவும் திறமையான அவர் நாம் எந்தளவுக்கு சிறந்தவர் என்பதை புரிந்து கொள்ளவில்லை.

    என்று கூறியுள்ளார்.

    • இவரை நான் ஐபிஎல் தொடரில் பார்த்தேன். அவருக்கு கேப்டன்ஷிப்பை எப்படி செய்வது என்பது தெரியவில்லை.
    • அதற்கு முன்னாடி அவர் கேப்டனாக இருந்ததில்லை.

    இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இதில் விளையாடியது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

    இதனால் சுப்மன்கில் கேப்டன்ஷிப் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தது. அதனை தொடர்ந்து நடந்த 4 டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த வெற்றி மூலம் வெளிநாடுகளில் தொடர்ந்து 4 போட்டிகளுக்கு மேல் வெற்றி பெற்ற 2-வது இந்திய கேப்டன் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

    இந்நிலையில் அவருக்கு கேப்டன்ஷிப் பன்ன தெரியாது என இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:- 

    இவரை நான் ஐபிஎல் தொடரில் பார்த்தேன். அவருக்கு கேப்டன்ஷிப்பை எப்படி செய்வது என்பது தெரியவில்லை. அது பற்றி எந்த யோசனையும் இல்லை. அதற்கு முன்னாடி அவர் கேப்டனாக இருந்ததில்லை. அவர் எதுக்கு கேப்டனாக நியமிக்கபட்டார் என்பது குறித்து தேர்வாளர்களை தான் கேட்க வேண்டும்.

    கடந்த 2 வருடங்களாக ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் இந்திய அணிக்காக டி20 தொடரிலும் சிறப்பாக விளையாடி உள்ளார். பேட்டராக சிறப்பாக செயல்படுகிறார். எனவே பேட்டராக தகுதியானவர்.

    அவருக்கு கேப்டன் பதவியை வழங்கியது, அணி நிர்வாகம் அவருக்கு அந்த அனுபவத்தை வழங்க விரும்பியதால் தான் என்று நினைக்கிறேன்.

    என்னைப் பொறுத்தவரை சுப்மன் கில்லை விட ருதுராஜ் கெய்க்வாட் சிறந்த பேட்டர். யாராவது சிறப்பாக செயல்பட்டால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். நான் சுப்மன் கில் அல்லது அது போன்ற எதையும் வெறுப்பவன் அல்ல, எனக்கும் அவரை மிகவும் பிடிக்கும், ஆனால் ருதுராஜ் கடினமான சூழ்நிலையில் ரன்களை எடுத்ததால் ஒரு சிறந்த வீரர் என்று நான் நினைக்கிறேன்.

    டி20 உலகக் கோப்பையில் ருதுராஜ் ஒரு பேக்அப் பிளேயராக இருந்திருக்க வேண்டும் என்று நான் உணர்ந்தேன். என்னைப் பொறுத்தவரை, அவர் ஒரு முழுமையான வீரர். அவர் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட முடியும் - அவருடைய நுட்பம் அப்படிப்பட்டது. அவருடைய அணுகுமுறை அப்படித்தான் இருக்கிறது.

    இவ்வாறு மிஸ்ரா கூறினார்.

    • இலங்கை தொடரில் இருந்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பேற்க உள்ளார்.
    • இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி ஜூலை 27-ந் தேதி நடக்கிறது.

    இந்திய அணி 3 வடிவிலான தொடரில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதில் முதலில் டி20 தொடரும் அடுத்து ஒருநாள் தொடரும் அதன் பின் டெஸ்ட் தொடரும் நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி ஜூலை 27-ந் தேதி நடக்கிறது.

    டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாவும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுலும் நியமிக்கப்பட்டுள்ளனர். டி20 தொடரில் ரோகித், விராட் கோலி ஆகியோர் ஓய்வு அறிவித்தனர். இதனால் ரோகித், விராட் மட்டுமின்றி பும்ரா ஆகியோருக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இலங்கை தொடரில் இருந்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ள கவுதம் கம்பீர், ரோகித், விராட் கோலி, பும்ரா ஆகியோரை இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட வேண்டும் என கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு அவர்களிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.

    மேலும் டி20 தொடரில் கேப்டனாக அறிவிக்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா, தனிப்பட்ட காரணங்களுக்காக விலக உள்ளதாக பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    ×