search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • சேலத்தில் இன்று முதல் ஜூலை 11ம் தேதி வரையிலும் போட்டி நடைபெறுகிறது.
    • இந்தத் தொடர் தமிழகத்தின் 5 நகரங்களில் நடைபெற உள்ளது.

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியின் 8வது தொடர் சேலத்தில் இன்று தொடங்கியது.

    நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ் உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் தமிழகத்தின் 5 நகரங்களில் நடைபெற உள்ளது.

    சேலத்தில் இன்று முதல் ஜூலை 11ம் தேதி வரையிலும், கோவையில் ஜூலை 13 முதல் ஜூலை 18ம் தேதி வரையிலும், திருநெல்வேலியில் ஜூலை 20 முதல் ஜூலை 24ம் தேதி வரையிலும் லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெறும்.

    இன்றைய முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கோவை கிங்ஸ், அதிக முறை சாம்பியன் சேப்பாக் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், சேப்பாக் கில்லீஸ் அணி டாஸ் வென்றதை தொடர்ந்து பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, கோவை கிங்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது.

    • 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
    • உலகக் கோப்பை வென்றதற்காக இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை அறிவித்தார் ஜெய்ஷா.

    மும்பை:

    சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இதற்கிடையே, டி20 உலகக் கோப்பை வென்றதற்காக இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை அறிவித்தார் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா.

    உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று இந்திய அணி வீரர்கள் மும்பையில் திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். கிரிக்கெட் வீரர்களைக் காண ரசிகர்கள் படையெடுத்ததால் மும்பை நகரமே ஸ்தம்பித்தது.

    இந்திய வீரர்கள் திறந்த பஸ்சில் உலகக் கோப்பையுடன் பேரணியாக சென்றனர். அதன்பின் வான்கடே மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவில் 125 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

    இந்நிலையில், உலகக் கோப்பை வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட மும்பை வீரர்களுக்கு மகாராஷ்டிரா சட்டசபையில் இன்று பாராட்டு விழா நடந்தது. அப்போது பேசிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு 11 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்தார்.

    • உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
    • மும்பையில் அலைகடலென குவிந்திருந்த ரசிகர்கள் மத்தியில் இந்திய வீரர்கள் பயணித்த பேருந்து ஊர்ந்து வந்தது.

    மும்பை:

    டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி நேற்று தாயகம் திரும்பியது. அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    உலகக் கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணிக்கு நேற்று வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது. முன்னதாக அலைகடலென குவிந்திருந்த ரசிகர்கள் மத்தியில் இந்திய அணி வீரர்கள் பயணித்த பேருந்து ஊர்ந்து வந்தது.

    இதற்கிடையே, இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கிரிக்கெட் வீரர்கள் சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் மும்பையில் மகாராஷ்டிர முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அங்கு முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே அவர்களுக்கு சால்வை அணிவித்து பரிசு வழங்கினார்.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில சட்டசபையான விதான் பவனில் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட மும்பை வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    • வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வீரர்கள் திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
    • கிரிக்கெட் வீரர்களைக் காண ரசிகர்கள் படையெடுத்ததால் மும்பை நகரமே ஸ்தம்பித்தது.

    மும்பை:

    டி20 உலகக் கோப்பை தொடரில் தோல்வியையே சந்திக்காமல் வீறுநடை போட்ட இந்திய அணி, கடந்த மாதம் 29-ம் தேதி நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 7 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

    டி20 உலகக் கோப்பையை 17 ஆண்டுக்கு பிறகு இந்திய அணி சொந்தமாக்கியதால் ஒட்டுமொத்த தேசமும் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தது.

    இதற்கிடையே, வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று வீரர்கள் மும்பையில் திறந்த பஸ்சில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். கிரிக்கெட் வீரர்களைக் காண ரசிகர்கள் படையெடுத்ததால் மும்பை நகரமே ஸ்தம்பித்தது. வெற்றி பேரணி மரைன் டிரைவ் பகுதியில் இருந்து வான்கடே மைதானம் வரை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் மும்பை கடற்கரையில் 7 முக்கிய சாலைகள் மூடப்பட்டன. 10 இடங்களில் வாகன நிறுத்தத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    இரவு 7. 30 மணிக்கு வீரர்கள் திறந்த பஸ்சில் உலகக் கோப்பையுடன் பேரணியாக சென்றனர். பின் வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது.

    இந்நிலையில், இந்த அணிவகுப்பு பேரணியை வெற்றிகரமாக நடத்த உதவி புரிந்த மும்பை போலீசுக்கு விராட் கோலி நன்றி தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, கோலி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மும்பை போலீசின் அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு ஆழ்ந்த மரியாதை மற்றும் மனமார்ந்த நன்றி. இந்தியாவின் வெற்றி அணிவகுப்பின் போது ஒரு அற்புதமான வேலை செய்ததற்காக மும்பை கமிஷனருக்கும் நன்றிகள். உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் சேவை மிகவும் பாராட்டப்படுகிறது. ஜெய் ஹிந்த் என பதிவிட்டுள்ளார்.

    • கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணிக்கு நேற்று வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
    • அலைகடலென குவிந்திருந்த ரசிகர்கள் மத்தியில் இந்திய அணி வீரர்கள் பயணித்த பேருந்து ஊர்ந்து வந்தது.

    டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி நேற்று தாயகம் திரும்பியது. அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணிக்கு நேற்று வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. முன்னதாக அலைகடலென குவிந்திருந்த ரசிகர்கள் மத்தியில் இந்திய அணி வீரர்கள் பயணித்த பேருந்து ஊர்ந்து வந்தது.

    இந்நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கிரிக்கெட் வீரர்கள் சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் மும்பையில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

    அதன்பின் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஒவ்வொருக்கும் சால்வை அணிவித்து பரிசு வழங்கினார்.


    • ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
    • இந்தப் பட்டியலில் ரோகித் சர்மா, பும்ரா என 2 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி கவுரவித்து வருகிறது.

    அதன்படி ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்துள்ளது.

    இந்நிலையில், ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் டி20 உலகக் கோப்பை தொடரில் அசத்திய இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தொடர் நாயகன் விருது வென்ற ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்து அசத்திய ஆப்கானிஸ்தானை சேர்ந்த குர்பாசும் இடம்பெற்றுள்ளார்.

    இதேபோல், ஜூன் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இலங்கையின் விஷ்மி குணரத்னே, இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா, இங்கிலாந்தின் மாயா பவுச்சியர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    • கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணிக்கு நேற்று வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
    • இந்திய அணியின் வெற்றிக்கு பும்ரா தான் முக்கியமான காரணம் என்பதை மீண்டும் மீண்டும் விராட் கோலி தெரிவித்து பாராட்டினார்.

    நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி பெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் எடுத்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா வெற்றியை நோக்கி வேகமாக சேசிங் செய்தது. 177 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய அந்த அணி 15 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்திருந்தது. 15-வது ஓவரில் 24 ரன்கள் குவித்த அந்த அணி பெரிய அளவில் தன்னம்பிக்கையை பெற்றது.

    ஆனால், 16 வது ஓவர் மற்றும் 18வது ஓவரை வீசிய பும்ரா அந்த இரண்டு ஓவர்களில் மொத்தமே ஆறு ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். பும்ராவின் பந்துவீச்சை சந்திக்க தென்னாப்பிரிக்கா அணி திணறியது. அதன் காரணமாக, அந்த அணிக்கு இருந்த அழுத்தம், இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. கடைசியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்று உலகக்கோப்பையை கைப்பற்றியது. 17 ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இதையடுத்து, கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணிக்கு நேற்று வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. முன்னதாக அலைகடலென குவிந்திருந்த ரசிகர்கள் மத்தியில் இந்திய அணி வீரர்கள் பயணித்த பேருந்து ஊர்ந்து வந்தது.

    பாராட்டு விழாவில், பும்ராவை 'உலகின் எட்டாவது அதிசயம்' மற்றும் 'தேசிய பொக்கிஷம்' என்று அழைக்கும் மனுவில் கையெழுத்திடுவீர்களா என்று கேட்டதற்கு, கோலி சிறிதும் தயங்காமல் கையெழுத்திடுவேன் என்று விராட் கோலி கூறினார். மேலும் அவர் கூறியதாவது:- மைதானத்தில் இருந்த அனைவரையும் போலவே ஒரு கட்டத்தில் இந்த உலகக் கோப்பையும் கையை விட்டு நழுவுகிறது என்று நினைத்தோம். ஆனால், கடைசி ஐந்து ஓவரில் என்ன நடந்ததோ அது மிகவும் அற்புதமானது. நாம் அனைவரும் இந்த போட்டியில் நம்மை மீண்டும் வெற்றியை நோக்கி கொண்டு வந்த வீரரை பாராட்ட வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் இந்த தொடரில் மீண்டும், மீண்டும் அதை செய்தார். அந்த கடைசி ஐந்து ஓவரில் பும்ரா இரண்டு ஓவர்களை வீசினார். அது அற்புதமாக இருந்தது என்றார்.

    இதனிடையே இந்திய அணியின் வெற்றிக்கு பும்ரா தான் முக்கியமான காரணம் என்பதை மீண்டும் மீண்டும் விராட் கோலி தெரிவித்து பாராட்டினார்.

    • ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி, இந்திய அணி புறந்தள்ளப்பட்டது.
    • பாராட்டு விழாவின்போது உலக அதிகாரிகள் யாரும் அணியுடன் உட்கார அனுமதிக்கப்படுவதில்லை.

    டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு நேற்று வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மற்றும் ராஜீவ் சுக்லா கலந்து கொண்டனர்.

    வீரர்கள் உட்கார்ந்த வரிசையில் ஜெய்ஷா மற்றும் ராஜீவ் சுக்லா முன்வரிசையில் அமர்ந்திருந்தனர்.

    இதனை முன்னாள் வீரரும், முன்னாள் எம்.பி.யுமான கீர்த்தி ஆசாத் கடும்யைாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் "ஜெய்ஷா அமர்ந்திருக்கும் படத்தை வெளியிட்டு, உண்மையிலேயே உலகக் கோப்பையை வென்றது ஜெய்ஷா, ராஜீவ் சுக்லா.

    ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி, இந்திய அணி புறந்தள்ளப்பட்டது. பாராட்டு விழாவின்போது உலக அதிகாரிகள் யாரும் அணியுடன் உட்கார அனுமதிக்கப்படுவதில்லை. வெட்கம் கெட்ட சந்தர்ப்பவாதிகள்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • நாங்கள் பார்படாஸில் உலகக் கோப்பையை வாங்கும் தருவாயில் அவர் அழுது கொண்டிருந்தார்.
    • பும்ரா ஒரு தலைமுறை வீரர், அவர் நமக்காக விளையாடுவதில் மிகவும் மகிழ்ச்சி.

    டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதற்கு முன்னதாக இந்திய அணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. லட்சக் கணக்கான ரசிகர்கள் சாலையில திரண்டு இந்திய அணி வீரர்களை வரவேற்றனர்.

    பிசிசிஐ சார்பில் இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. பாராட்டு விழாவில் இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற விராட் கோலி, ரோகித் சர்மா குறித்து பேசினார். அப்போது 15 வருடங்களில் இதுபோன்ற ரோகித் சர்மா உணர்ச்சிவசப்பட்டது கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.

    ரோகித் சர்மா குறித்து விராட் கோலி கூறியதாவது:-

    15 வருடங்களில் முதன்முறையாக ரோகித் சர்மா மிகவும் அதிகமான வகையில் உணர்ச்சிவசப்பட்டார். நாங்கள் பார்படாஸில் உலகக் கோப்பையை வாங்கும் தருவாயில் அவர் அழுது கொண்டிருந்தார். நானும் அழுது கொண்டிருந்தேன்.

    பும்ரா ஒரு தலைமுறை வீரர், அவர் நமக்காக விளையாடுவதில் மிகவும் மகிழ்ச்சி. வான்கடே மைதானம் சிறப்பு வாய்ந்தது. சிறு வயதாக இருக்கும்போதே இங்கு வந்துள்ளேன். இன்று (பாராட்டு விழா) என்ன பார்க்கிறனோ, அதை இதற்கு முன்னதாக பார்த்தது இல்லை. என்னுடைய மகனை பார்த்தபோது, நாம் உணர்ச்சிவசப்பட்டேன். அப்போது பேச வார்த்தைவரவில்லை.

    சச்சின் தெண்டுல்கர் 21 வருடம் இந்திய அணியை வழி நடத்திச் சென்றார். அவரை நாங்கள் இதே மைதானத்தில் தோளில் தூக்கிச் சென்றோம். அவரை தூக்கிச் சென்றது நியாயமானது. நானும் ரோகித் சர்மாவும் அணியை வழி நடத்திச் சென்றோம். வான்கடேவுக்கு மீண்டும் கோப்பையை கொண்டு வந்ததைவிட சிறந்தது இருக்க முடியாது என்று நம்புகிறேன்.

    இவ்வாறு விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    • டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா அணி இன்று இந்தியா வந்தடைந்தது.
    • மும்பை வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

    வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா அபாரமாக விளையாடியது. பார்படாஸில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

    17 வருடத்திற்குப் பிறகு டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி இன்று காலை இந்தியா வந்தடைந்தது. மும்பையில் இந்திய அணிக்கு வெற்றி ஊர்வலம் நடத்தப்பட்டது. லட்சக்கணக்கான ரசிகர்கள் மரைன் டிரைவ் பகுதியில் இருபக்கமும் குவிந்து வீரர்களை வரவேற்றனர். வீரர்களுடன் பயிற்சியாளர்களும் கலந்து கொண்டனர்.

    அதன்பின் வான்கடே மைதானத்தில் ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் பேச அழைக்கப்பட்டார். அப்போது அவர் கூறுகையில் "ரசிகர்களின் இந்த அன்பை இழக்கப் போகிறேன். இன்று இரவு தெருக்களில் நான் பார்த்ததை (ரசிகர்களின் வரவேற்பு) ஒருபோதும் நான் மறக்கமாட்டேன்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    விராட் கோலி பேசும்போது "2011-ம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பையை வென்றபோது சீனியில் வீரர்கள் அழுத எமோசன் உடன் நான் தொடர்பு கொள்ள முடியவில்ல. ஆனால் தற்போது அதை செய்கிறேன்" என்றார்.

    • சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி தொடங்குகிறது.
    • இந்திய கிரிக்கெட் அணி குறித்து நான் தற்போது எந்த கருத்தும் கூறமாட்டேன்.

    2025-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

    அதன்படி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.

    இதில் இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் இருதரப்பு தொடர்களில் பங்கேற்காமல் இருந்து வருகிறது. அதுமட்டுமின்று கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது, இந்தியாவின் அழுத்தத்தின் காரணமாக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் இலங்கைக்கு மாற்றப்பட்டன. இதனால் 2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் இந்திய அணி மோதும் ஆட்டம் மட்டும் வேறு இடத்தில் நடைபெறும் என்ற எதிர்பார்க்கள் எழுந்துள்ளது.

    இந்நிலையில் சாம்பின்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது முழுவதுமாக பாகிஸ்தானில் மட்டும் தான் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    2025-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் மட்டுமே நடத்தப்படும். இந்திய கிரிக்கெட் அணி குறித்து நான் தற்போது எந்த கருத்தும் கூறமாட்டேன். ஆனால் இன்ஷா அல்லாஹ் பாகிஸ்தானுக்கு இந்தியா வருவது குறித்து நல்ல செய்தியை கேட்க விரும்புகிறேன்.

    என்று தெரிவித்துள்ளார்.

    இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியானது மார்ச் 01-ம் தேதி லாகூரில் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா என்பது குறித்து எந்த முடிவையும் பிசிசிஐ இதுவரை இறுதிசெய்யவில்லை. 

    • திருமண நாளை தோனி - சாக்ஷி தம்பதி கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
    • 15 ஆவது வருடத்தில் அடி எடுத்து வைக்கிறோம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி சாக்ஷி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    எம்.எஸ்.தோனி - சாக்ஷி தம்பதிக்கு ஸிவா என்ற ஒரு மகள் இருக்கிறாள்.

    இந்த நிலையில், இன்று தங்களது 15வது திருமண நாளை தோனி - சாக்ஷி தம்பதி கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    திருமண நாளை ஒட்டி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் 15 ஆவது வருடத்தில் அடி எடுத்து வைக்கிறோம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    மேலும், சாக்ஷி வீடியோ ஒன்றையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தோனியின் ரசிகர்கள் இருவரைக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    ×