search icon
என் மலர்tooltip icon

    கால்பந்து

    • விதிப்படி தவறு என்றாலும், ரெஃப்ரீ கத்தாருக்கு சாதகமாக நடந்து கொண்டது சர்ச்சையாகியுள்ளது.
    • போட்டியில் கால்பந்தில் ரிவ்யூ பார்க்கும் VAR முறையை பயன்படுத்தாதது ஏன்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    பிபா உலக கோப்பை-2026, ஆசிய கோப்பை-2027க்கான கால்பந்து தகுதிச் சுற்று ஆட்டங்கள் ஆசிய நாடுகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் ஆசிய சாம்பியன் கத்தார் அணியை நேற்று எதிர்கொண்டது.

    இந்த போட்டியில் எல்லைக் கோட்டை தாண்டி சென்ற பந்தை மீண்டும் உள்ளே கொண்டு வந்து கத்தார் வீரர்கள் கோல் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    போட்டியின் 73-வது நிமிடத்தில் கோட்டுக்கு வெளியே சென்ற பந்தை அல் ஹசன் உள்ளே தள்ளி விட, அய்மென் கோல் அடித்ததால் 2-1 என்ற கோல் கணக்கில் கத்தார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    விதிப்படி தவறு என்றாலும், ரெஃப்ரீ கத்தாருக்கு சாதகமாக நடந்து கொண்டது சர்ச்சையாகியுள்ளது. மேலும் இப்போட்டியில் கால்பந்தில் ரிவ்யூ பார்க்கும் VAR முறையை பயன்படுத்தாதது ஏன்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    • புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணி, மூன்றாவது கட்ட தகுதிச்சுற்றுக்கு முன்னேறலாம்.
    • இந்திய அணி இதுவரை மோதிய முதல் 5 போட்டியில் 5 புள்ளி பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

    தோகா:

    அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் 2026ல் நடக்கவுள்ளது. இதற்கான ஆசிய பிரிவு இரண்டாவது கட்ட தகுதிச் சுற்றில் இந்திய அணி 'ஏ' பிரிவில், குவைத், கத்தார், ஆப்கானிஸ்தானுடன் இடம் பெற்றுள்ளது.

    புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணி, மூன்றாவது கட்ட தகுதிச்சுற்றுக்கு முன்னேறலாம். இந்திய அணி இதுவரை மோதிய முதல் 5 போட்டியில் 5 புள்ளி பெற்று 2-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் கத்தார் (13) உள்ளது. கடைசி இரு இடத்தில் ஆப்கானிஸ்தான் (5) குவைத் (4) உள்ளன.

    இந்திய அணி, தனது கடைசி போட்டியில் கத்தார் அணியை அதன் சொந்த மண்ணில் சந்திக்கிறது. இதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது. ஒருவேளை 'டிரா' அல்லது தோல்வியடைந்தால், குவைத்-ஆப்கானிஸ்தான் மோதும் போட்டியின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

    இந்நிலையில் இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக அணியை வழிநடத்தி வந்த சுனில் சேத்ரி அண்மையில் அவரது ஓய்வு முடிவை அறிவித்தார். இதனை தொடர்ந்து இந்திய கால்பந்து அண்யின் கேப்டனாக கோல் கீப்பர் குர்பிரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

    அனுபவ கோல்கீப்பர் குர்பிரீத் சிங் (32 வயது) இதுவரை இந்தியாவுக்காக 72 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

    • இந்திய வீரர்களில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் சுனில்.
    • நீங்கள் இந்தியாவின் கொடியை உயர்த்தியுள்ளீர்கள்.

    இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இதன்மூலம் சர்வதேச போட்டியில் இருந்து சுனில் சேத்ரி விடைபெற்றார். நேற்று நடைபெற்ற குவைத்துக்கு எதிரான போட்டி முடிந்து மைதானத்தை விட்டு செல்லும் போது சுனில் சேத்ரி கண்ணீருடன் வெளியேறினார். அவருக்கு ரசிகர்கள் பிரியா விடை கொடுத்தனர்.

    முன்னதாக மைதானத்தை சுற்றி சுனில் சேத்ரிக்கு நன்றி தெரிவித்து பேனர்கள், பாதகைகளை ரசிகர்கள் ஏந்தி இருந்தனர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.


    இந்திய வீரர்களில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் சுனில். 151 போட்டிகளில் விளையாடி 94 கோல்களை பதிவு செய்துள்ளார். மேலும் 50 சர்வதேச கோல்கள் அடித்த முதல் இந்திய வீரர் சுனில் சேத்ரி ஆவார்.

    இந்நிலையில், ஓய்வு பெற்ற கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சச்சின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ஒரு கோல் அடிப்பது எளிதல்ல, சர்வதேச போட்டிகளில் ஒற்றை ஆளாக 94 கோல்கள் அடித்துள்ளார். நீங்கள் இந்தியாவின் கொடியை உயர்த்தியுள்ளீர்கள். உங்களின் மறக்க முடியாத கால்பந்து பயணத்திற்கு எனது வாழ்த்துகள் என கூறியுள்ளார்.

    • இந்தியா- குவைத் மோதிய ஆட்டம் சமனில் முடிந்தது.
    • இந்த போட்டியுடன் இந்திய கால்பந்து வீரர் சுனில் சேத்ரி சர்வதேச போட்டியில் இருந்து விடைபெற்றார்.

    கொல்கத்தா:

    23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்றுக்கான 2-வது ரவுண்டு ஆட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ளது. கத்தார், குவைத், ஆப்கானிஸ்தான் ஆகியவை இந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.


    இந்த தொடரில் இன்று கொல்கத்தாவில் உள்ள சால்ட்லேக் ஸ்டேடியத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி, குவைத்தை எதிர்கொண்டது. இதில் இந்தியா வெற்றி பெற்றால் உலகக் கோப்பை 3-வது ரவுண்டுக்கு முதல் முறையாக முன்னேறும் வாய்ப்பு உருவாகும் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் இரு அணிகள் மோதிய போட்டி விறுவிறுப்பாக சென்றது. இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரமாக முயற்சித்தனர். ஆனால் இறுதி வரை 2 அணிகளாலும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் இந்த ஆட்டம் 0-0 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

    இந்த போட்டியுடன் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இதன்மூலம் சர்வதேச போட்டியில் இருந்து சுனில் சேத்ரி விடைபெற்றார். போட்டி முடிந்து மைதானத்தை விட்டு செல்லும் போது கண்ணீருடன் வெளியேறினார். அவருக்கு ரசிகர்கள் பிரியா விடை கொடுத்தனர்.

    முன்னதாக மைதானத்தை சுற்றி சுனில் சேத்ரிக்கு நன்றி தெரிவித்து பேனர்கள், பாதகைகளை ரசிகர்கள் ஏந்தி இருந்தனர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படம் வைரலாகி வருகிறது. 

    இந்திய வீரர்களில் அதிக போட்டிகளில் விளையாடி வீரர் சுனில். 151 போட்டிகளில் விளையாடி 94 கோல்களை பதிவு செய்துள்ளார். மேலும் 50 சர்வதேச கோல்கள் அடித்த முதல் இந்திய வீரர் சுனில் சேத்ரி ஆவார்.

    • சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சுனில் சேத்ரி 4-வது இடத்தில் உள்ளார்.
    • இந்திய அணிக்காக 150 போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் சேத்ரி மொத்தமாக 94 கோல்களை அடித்துள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய கால்பந்து அணிக்காக கடந்த 20 ஆண்டுகளாக சுனில் சேத்ர்பங்களிப்பு அளித்து வந்துள்ளார். இந்திய கால்பந்து அணியின் கேப்டனான சுனில் சேத்ரி சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார்.

    இந்திய அணிக்காக 150 போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் சேத்ரி மொத்தமாக 94 கோல்களை அடித்துள்ளார்.

    அவர் ஜூன் 6-ம் தேதி நடைபெறும் குவைத் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டியுடன் ஓய்வுபெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

    இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்துடன் சர்வதேச போட்டிகளில் இருந்து சுனில் சேத்ரி இன்றுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில், அவருக்காக ஃபிஃபா உலக கோப்பை அமைப்பு ஸ்பெஷல் போஸ்டர் வெளியிட்டுள்ளது. மேலும் அவரின் சாதனையை பதிவிட்டு ஃபிஃபா உலக கோப்பை அமைப்பு கவுரவித்துள்ளது. இந்த தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • கேப்டன் சுனில் சேத்ரி சர்வதேச போட்டியில் இருந்து விடைபெறுகிறார்.
    • இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது.

    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் இன்று நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டத்தில் இந்தியா-குவைத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்துடன் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி சர்வதேச போட்டியில் இருந்து விடைபெறுகிறார்.

    23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்றுக்கான 2-வது ரவுண்டு ஆட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ளது. கத்தார், குவைத், ஆப்கானிஸ்தான் ஆகியவை இந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.

    இந்த போட்டி தொடரில் இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள சால்ட்லேக் ஸ்டேடியத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, குவைத்தை எதிர்கொள்கிறது.

    இதில் இந்தியா வெற்றி பெற்றால் உலகக் கோப்பை 3-வது ரவுண்டுக்கு முதல் முறையாக முன்னேறும் வாய்ப்பு உருவாகும் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அதே நேரத்தில் ஏற்கனவே இந்தியாவிடம் 0-1 என்ற கோல் கணக்கில் உதை வாங்கியிருந்த குவைத் அணி அதற்கு பதிலடி கொடுக்க கடுமையாக முயற்சிப்பார்கள்.

    இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி இந்த ஆட்டத்துடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார். அவரை வெற்றியுடன் வழியனுப்பும் உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் வரிந்து கட்டுவார்கள் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

    39 வயதான சுனில் சேத்ரி இந்திய அணிக்காக அதிக கோல்கள் (94 கோல்) அடித்தவர் ஆவார். போட்டி குறித்து அவர் கூறுகையில் 'இது என்னை பற்றியோ எனது கடைசி ஆட்டத்தை பற்றியோ கிடையாது. எனது ஓய்வு குறித்து நான் மீண்டும், மீண்டும் பேச விரும்பவில்லை. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவதே எங்களது முதன்மையான நோக்கம். அது எளிதாக இருக்க போவதில்லை. ஆனால் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    எங்களுக்கு ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவு இருக்கும் என்று நினைக்கிறேன். நாளைய (இன்று) ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்றால் ஏறக்குறைய 3-வது சுற்றுக்கு தகுதி பெற்று விடுவோம். நான் ஓய்வு பெற்றாலும், இந்திய அணியின் அடுத்த சுற்று ஆட்டங்கள் எங்கு நடந்தாலும் நேரில் சென்று ஊக்கப்படுத்துவேன்' என்றார்.

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் கருத்து தெரிவிக்கையில், 'எனது ஒட்டுமொத்த விளையாட்டு மற்றும் பயிற்சியாளர் வாழ்க்கையில் இது மிகப்பெரிய தருணமாகும்.

    150 கோடி இந்தியர்களை மகிழ்ச்சி அடைய செய்ய எங்களுக்கு இது நல்ல வாய்ப்பாகும். அதனை நிறைவேற்ற நாங்கள் எல்லாவற்றையும் செய்ய வேண்டும். இதில் நாங்கள் வெற்றி பெற்றால் அது இந்திய கால்பந்தின் எதிர்காலத்தை மாற்றி அமைக்கும் என்று நம்புகிறேன்' என்றார்.

    இந்திய அணி இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, ஒரு டிரா, 2 தோல்வி என 4 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், குவைத் 4 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 3 தோல்வி என 3 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.

    • ரியல் மேட்ரிட் கிளப்பில் கால்பந்து வீரர் எம்பாப்பே இணைந்தார்.
    • எம்பாப்பே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    அண்மையில் ரியல் மேட்ரிட் கிளப்பில் கால்பந்து வீரர் எம்பாப்பே இணைந்தது உலக அளவில் பேசுபொருளானது.

    இது தொடர்பாக எம்பாப்பே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    அந்த புகைப்படத்திற்கு ரொனால்டோ பதிவிட்ட கமெண்ட், இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகளை பெற்ற கமெண்ட் என்ற புதிய சாதனையை படைத்துள்ளது.

    அந்த கமெண்டிற்கு 38 லட்சத்திற்கு மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளது. 

    • இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் பொரூஸியா டார்முண்ட் அணியும் ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணியும் மோதின.
    • டோர்முண்ட் அணியின் டிபெண்டர் டானி கார்வஜால் அசந்த நேரத்தில் ரியல் மாட்ரிட் அணி ஆட்டத்தின் 74ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தியது.

    UEFA சாம்பியன் ஷிப் லீக் என்று அழைக்கப்படும் ஐரோப்பிய கோப்பை கால்பந்து 69 வது சீசன் போட்டிகள் கடந்த வருடம் ஜூன் மாதம் தொடங்கி நடந்து வந்த நிலையில் சாம்பியன் லீக் பட்டத்தை வெல்வதற்காக இறுதிப்போட்டியானது நேற்று (ஜூன் 1) சனிக்கிழமை லண்டனில் உள்ள வெம்ப்லே மைத்தனத்தில் வைத்து நடைபெற்றது.

    இந்த இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் பொரூஸியா டார்முண்ட் அணியும் ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணியும் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடின. இந்த லீக் தொடர் முழுவதிலும் இரண்டாவது சிறந்த அணியாக விளங்கிய டொர்முண்ட் அணி ஆட்டத்தின் முதல் பாதியில் வாய்ப்பு கிடைத்தும் 3 கோல்களை தவறவிட்டது.

    டோர்முண்ட் அணியின் டிபெண்டர் டானி கார்வஜால் அசந்த நேரத்தில் ரியல் மாட்ரிட் அணி ஆட்டத்தின் 74ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தியது. தொடர்ந்து ரியல் மத்ரித் வீரர் வினீசியஸ் ஜூனியர், 9 நிமிட இடைவெளியில் ஆட்டத்தின் 83வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

     

    இதன்மூலம் 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியின் பொரூஸியா டார்முண்ட் அணியை வீழ்த்தி ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணி சாம்பியன்ஷிப் லீக் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. ஐரோப்பிய லீக் கோப்பையை ரியல் மாட்ரிட் அணி வெல்வது இது 15 ஆவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • பெனால்டி ஷூட்டை தவற விட்டு தோற்றதால் மனமுடைந்து மைதானத்திலேயே ரொனால்டோ கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
    • ரொனால்டோ அழும் காட்சிகளே தற்போது இணையத்தை நிறைந்துள்ளன.

    கால்பந்து உலகின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபிய அணியின் கேப்டனாக சவுதி ப்ரோ லீக் தொடரில் அவ்வணியை திறமையாக வழிநடத்தி பைனல்ஸ் வரை அழைத்து வந்தார். அதன்படி நேற்று (மே 31) சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் உள்ள கிங் அப்துல்லா மைதானத்தில் வைத்து நடந்த கிங் கப் சவுதி லீக் தொடரின் இறுதிப்போட்டியில் அல்- ஹிலால் அணியை ரொனால்டோவின் அல்- நாசர் அணி எதிர்கொண்டது.

    இந்த போட்டியில் இறுதிவரை போராடிய அல்- நாசர் அணி பெனால்டி ஷூட்டை தவறவிட்டதன் மூலம் 5-4 என்ற கோல் கணக்கில் அல்- ஹிலால் அணியிடம் தோற்றது. இந்நிலையில் பெனால்டி ஷூட்டை தவற விட்டு தோற்றதால் மனமுடைந்து மைதானத்திலேயே ரொனால்டோ கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

    ரொனால்டோ அழும் காட்சிகளே தற்போது இணையத்தை நிறைந்துள்ளன. அவர் அழும் வெடியோவைப் பகிர்ந்து அவருக்கு நெட்டிசன்களும் ரொனால்டோ ரசிகர்களும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

    கால்பந்து விளையாட்டின் மீது அதீத ஆர்வம் கொண்டவரான ரொனால்டோ தோல்விக்காக கண்ணீர் விட்டு அழுத்தத்தில் ஆச்சர்யம் இல்லை என்று கூறும் நெட்டிசன்கள், கிரிக்கெட்டை போல் வணிக லாபத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் ரொனால்டோ போன்ற உண்மையான வீரர்கள் எப்போதும் முன்னுதாரணமாக திகழ்கின்றனர் என்று கருத்து கூறி வருகின்றனர்.

    முன்னதாக லீக் தொடரில் அல் நசர் அணி, அல் இத்திஹாத் அணியுடன் மோதிய போட்டியில் ஆட்டத்தின் முதல் பாதி முடிவதற்கு முன் ஒரு கோல், ஆட்டத்தின் 69வது நிமிடத்தில் மற்றொரு கோல் என இரண்டு கோல்களை ரொனால்டோ அடித்தார். இதன் மூலம் இந்த சீசனில் 35 கோல்களை அடித்து, ஒரே சீசனில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • கடைசி லீக் ஆட்டத்தில் இரண்டு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
    • 2019-ல் அப்டெர்ரஜாக் ஹம்தல்லா ஒரு சீசனில் 34 கோல்கள் அடித்தது சாதனையாக இருந்தது.

    கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதியில் உள்ள அல்-நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். அல்-நாசர் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று அல்-இத்திஹாட் அணியை எதிர்கொண்டது. இதில் அல்-நாஸர் அணி 4-2 என அல்-இத்திஹாட் அணியை வீழ்த்தியது.

    இந்த போட்டியில் 39 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல்கள் அடித்தார். இதன்மூலம் சவுதி புரோ லீக் கால்பந்தில் ஒரு சீசனில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    இதற்கு முன்னதாக அப்டெர்ரஜாக் ஹம்தல்லா 2019-ல் 34 கோல்கள் அடித்ததுதான் சாதனையாக இருந்தது. அதை தற்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ முறியடித்துள்ளார்.

    இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் கிறிஸ்டியானோ ரொனால்டோ "சாதனைகளை நான் பின்தொடரவில்லை. அதுதான் என்னை பின்தொடர்கின்றன" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    கிறிஸ்டியானோ ரொனால்டோ ஐந்து முறை பலோன் டி'ஆர் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரியல் மாட்ரிட் அணிக்காக 305 போட்டிகள் விளையாடி உள்ளார்.
    • 14 ஆண்டுகளாக ஜெர்மனி கால்பந்து அணியில் விளையாடி வந்தவர் டோனி க்ராஸ்.

    யூரோ 2024 தொடருக்கு பின் கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜேர்மனி வீரர் டோனி க்ராஸ் அறிவித்துள்ளார். 14 ஆண்டுகளாக ஜெர்மனி கால்பந்து அணியில் விளையாடி வந்தவர் டோனி க்ராஸ் (34). ஜெர்மனி அணிக்காக இதுவரை 108 போட்டிகளில் விளையாடி க்ராஸ் 17 கோல்கள் அடித்துள்ளார்.

    ரியல் மாட்ரிட் அணிக்காக 305 போட்டிகளும் (22 கோல்கள்), பாயர்ன் முனிச் அணிக்காக 130 போட்டிகளும் (13 கோல்கள்), பாயர் லெவேர்குசேன் அணிக்காக 43 போட்டிகளும் (10 கோல்கள்) விளையாடியுள்ளார்.

    இவரது மிரட்டலான ஆட்டத்தின் மூலம் ரியல் மாட்ரிட் அணி UEFA சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில், கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டோனி க்ராஸ் அறிவித்துள்ளார்.

    ஓய்வு குறித்து க்ரூஸ் கூறியதாவது:-

    ஜூலை 17, 2024-ல் ரியல் மாட்ரிட்டில் நான் அறிமுகமானது என் வாழ்க்கையை மாற்றிய நாள். ஒரு மனிதராகவும், கால்பந்து வீரராகவும் மாற்றியது. இது உலகின் பாரிய கிளப் அணியில் புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகும். 10 ஆண்டுகளுக்குப் பிறகு சீஸனின் முடிவில் இந்த அத்தியாயம் முடிவடைகிறது.

    என்னை திறந்த மனதுடன் வரவேற்று நம்பிய அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஆனால், அன்புள்ள மாட்ரிடிஸ்டாஸ், முதல் நாள் முதல் கடைசி நாள் வரை உங்கள் பாசத்திற்கும், உங்கள் அன்புக்கும் நன்றி கூற விரும்புகிறேன்.

    என அவர் கூறியுள்ளார். 

    • கால்பந்தாட்ட உலகில் 2 பெரும் ஜாம்பவான்களாக விளங்குபவர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றொருவர் லியோனல் மெஸ்ஸி.
    • 629 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்சைக் கொண்ட ரொனால்டோ, முக்கிய பிராண்ட்கள் மற்றும் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களின் மூலமும் அதிக வருவாய் ஈட்டுவதாகத் தெரிகிறது.

    கால்பந்தாட்ட உலகில் 2 பெரும் ஜாம்பவான்களாக விளங்குபவர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றொருவர் லியோனல் மெஸ்ஸி. இருவரையும் ஒப்பிட்டு ரசிகர்கள் அவ்வப்போது விவாதங்களில் ஈடுபடுவது வழக்கம். விளையாட்டைத் தாண்டி இவ்விருவர் உலக ஐகானாக விளங்குகின்றனர். இந்நிலையில் ரொனால்டோவின் வருமானம் மெஸ்ஸியை விட 2 அதிகம் என்று தெரியவந்துள்ளது. 

     

    பிரபல ஃபோர்ப்ஸ் இதழின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், கிறிஸ்டியானோ ரொனால்டோ நான்காவது முறையாக அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் 260 மில்லியன் டாலர் வருவாயுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஸ்பெயின் கோல்ப் வீரர் ஜான் ரஹம் சவுதி இரண்டாம் இடத்தில் உள்ளார். பட்டியலில் லியோனல் மெஸ்ஸி 135 மில்லியன் டாலர் வருவாயுடன் 3 ஆம் இடம் பிடித்துள்ளார்

    39 வயதான ரொனால்டோவின் மொத்த வருவாயான 260 மில்லியன் டாலர்கள் பிராந்தியத்தில் இதுவரை ஒரு கால்பந்து வீரர் ஈட்டும் உட்சபட்ச வருவாயாகும். 629 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்சைக் கொண்ட ரொனால்டோ, முக்கிய பிராண்ட்கள் மற்றும் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களின் மூலமும் அதிக வருவாய் ஈட்டுவதாகத் தெரிகிறது. 

    ×