search icon
என் மலர்tooltip icon

    வங்காளதேசம்

    • சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 175 குடும்பங்கள் ரோவாங்சாரி அரசு உயர்நிலைப் பள்ளியில் தஞ்சமடைந்துள்ளனர்.
    • துப்பாக்கி சூடு எதிரொலியால் அச்சத்தில் உறைந்த மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி தஞ்சமடைந்தனர்.

    வங்காளதேசம், டாக்கா பந்தர்பானில் உள்ள ரோவாங்க்சாரி உபாசிலாவில் நேற்று இரவு இரு ஆயுத பிரிவினருக்கு இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

    ஐக்கிய மக்கள் ஜனநாயக முன்னணி (ஜனநாயக) மற்றும் குகி- சின் தேசிய முன்னணியின் ராணுவப் பிரிவான குக்கி- சின் தேசிய ராணுவம் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

    சம்பவ இடத்தில் இருந்து குண்டுகள் துளைத்த உடல்கள் பந்தர்பன் ஜிலா சதார் மருத்துவமனை பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டன என்றும் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் ரோவாங்ச்சாரி காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி அப்துல் மன்னன் கூறினார்.

    வியாழன் மாலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரை துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

    வியாழக்கிழமை நடந்த சம்பவத்திற்குப் பிறகு, சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 175 குடும்பங்கள் ரோவாங்சாரி அரசு உயர்நிலைப் பள்ளியில் தஞ்சமடைந்துள்ளனர்.

    துப்பாக்கி சூடு எதிரொலியால் அச்சத்தில் உறைந்த மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி பலர் அருகிலுள்ள கல்வி நிறுவனங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதுவரை 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வெளியேறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சம்பவம் குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீயணைப்பு வீரர்களின் பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
    • தீ விபத்தில், நூற்றுக்கணக்கான ஜவுளி கடைகள் எரிந்து சாம்பலானது.

    வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் உள்ள பங்கா பஜாரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நாட்டின் மிகப்பெரிய ஜவுளி சந்தையான இந்த பஜாரில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான கடைகள் உள்ளன. இந்த சந்தையில் நேற்று காலை திடீரென தீப்பிடித்தது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த கடைகளுக்கு தீ மளமளவென பரவியது.

    விபத்து குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுது்து சம்பவ இடத்திற்கு 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    தீயணைப்பு வீரர்களின் பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    இந்த தீ விபத்தில், நூற்றுக்கணக்கான ஜவுளி கடைகள் எரிந்து சாம்பலானது. மேலும் 8 பேருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    வங்காளதேசத்தில் ஷிப்சர் மாவட்டம் மதரிபூரில் இருந்து பயணிகளுடன் டாக்காவை நோக்கி சொகுசு பேருந்து ஒன்று இன்று காலை 8 மணிக்கு புறப்பட்டு சென்றது.

    புதிதாக கட்டப்பட்ட எக்ஸ்பிரஸ் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 19 பேர் உயிரிழந்தனர்.

    மேலும், 30 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதலில் ஆடிய வங்காளதேச அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது.
    • இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக லித்தன் தாஸ் தேர்வு செய்யப்பட்டார்.

    மிர்புர்:

    வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் இரண்டு போட்டிகளில் வங்காளதேசம் வெற்றி பெற்று தொடரை வென்ற நிலையில், இன்று மூன்றாவது ஆட்டம் நடைபெற்றது.

    முதலில் ஆடிய வங்காளதேச அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் லித்தன் தாஸ் 57 பந்துகளில் 73 ரன்கள் விளாசினார். நஜ்முல் உசைன் ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் அடித்தார்.

    இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் டேவிட் மலன் 53 ரன்களும், கேப்டன் பட்லர் 40 ரன்களும் அடித்து நம்பிக்கை அளித்தனர். ஆனால் மற்ற வீரர்கள் சோபிக்கவில்லை. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்களே சேர்த்தது. இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.

    இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக லித்தன் தாஸ் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக நஜ்முல் உசைன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 117 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • வங்காளதேச அணியின் மெஹிதி ஹசன் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    டாக்கா:

    வங்காளதேசம், இங்கிலாந்து அணிகள் இடையிலான 2வது டி 20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து வங்காளதேச அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 117 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியின் சால்ட் 25 ரன்னும், டக்கட் 28 ரன்னும் எடுத்தனர்.

    வங்காளதேச அணியின் மெஹிதி ஹசன் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வங்காளதேசம் களம் இறங்கியது. தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், அந்த அணியின் ஷாண்டோ நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார்.

    இறுதியில், வங்காளதேச அணி 18.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் எடுத்து இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. அத்துடன், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது 2-0 என்ற கணக்கில் வங்காளதேசம் முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் 14-ம் தேதி நடைபெறுகிறது.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 156 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய வங்காளதேச அணி 157 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

    சட்டோகிராம்:

    இங்கிலாந்து அணி வங்காளதேசம் சென்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

    இந்நிலையில் வங்காளதேசம், இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நடந்தது. டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 156 ரன்களை எடுத்தது. கேப்டன் ஜோஸ் பட்லரும் 67 ரன்னும், பில் சால்ட்டு 38 ரன்னும் எடுத்தனர்.

    வங்காளதேசம் சார்பில் ஹசன் மக்முத் 2 விக்கெட்டும், நசும் அகமது, தஸ்கின் அகமது, முஸ்தாபிஜூர் ரகுமான், ஷகிப் அல்-ஹசன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    நஜ்முல் ஹூசைன் ஷன்டோ 30 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 51 ரன் விளாசினார். ரோனி தலுக்தர் 21 ரன்னும், லிட்டன் தாஸ் 12 ரன்னும், தவ்கித் ஹிரிடாய் 24 ரன்னும் எடுத்தனர்.

    இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் உலக சாம்பியன் இங்கிலாந்தை வங்காளதேச அணி முதல்முறையாக வீழ்த்தி வரலாறு படைத்தது. ஷகிப் அல்-ஹசன் 34 ரன்களுடனும், அபிப் ஹூசைன் 15 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். வங்காளதேச வீரர் நஜ்முல் ஹூசைன் ஷன்டோ ஆட்டநாயகன் விருது பெற்றார்.

    • வெடிவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    • அருகில் உள்ள வங்கியின் கண்ணாடி உடைந்து விழுந்துள்ளது.

    டாக்கா:

    வங்காளதேச தலைநகர் டாக்காவில் 7 தளங்கள் கொண்ட கட்டிடத்தில் இன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. வெடிவிபத்து ஏற்பட்ட தளத்தில் பலர் தூக்கி வீசப்பட்டனர். குண்டு வெடித்ததுபோன்று பயங்கர சத்தம் கேட்டு அந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேறினர். தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வெடிவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    அந்த கட்டிடத்தின் தரைத் தளத்தில் சானிடரி பொருட்கள் விற்பனை செய்யும் பல கடைகள் உள்ளன. தரைத்தளத்தில் வெடிவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. 

    • முதலில் ஆடிய வங்காளதேசம் 246 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இங்கிலாந்து 196 ரன்களில் ஆல் அவுட்டானது.

    சட்டோகிராம்:

    வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி அங்கு 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. ஒருநாள் தொடரின் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 48.5 ஓவரில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஷகிப் அல் ஹசன் 75 ரன், முஷ்பிகுர் ரஹீம் 70 ரன், ஷாண்டோ 53 ரன்கள் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டும், சாம் கர்ரன், அடில் ரஷித் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 247 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. ஆனால் வங்காளதேச அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.

    இறுதியில், இங்கிலாந்து அணி 43.1 ஓவரில் 196 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜேம்ஸ் வின்ஸ் 38 ரன்னும், பிலிப் சால் 35 ரன்னும், கிறிஸ் வோக்ஸ் 34 ரன்னும் எடுத்தனர்.

    இதன்மூலம் வங்காளதேச அணி 50 ரன் வித்தியாசத்தில் வென்று ஆறுதல் வெற்றியை தேடிக்கொண்டது.

    வங்காளதேச அணி சார்பில் ஷகிப் அல் ஹசன் 4 விக்கெட்டும், தைஜூல் இஸ்லாம், எபடாட் ஹோசைன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இப்போட்டியில் தோற்றாலும் இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் வரும் 9-ம் தேதி தொடங்குகிறது.

    • பலத்த காயங்களுடன் பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
    • மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    டாக்கா:

    வங்காளதேசத்தின் சிட்டகாங்க் அருகே சீதகுண்டா பகுதியில் ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் தீயை கட்டுப்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று இரவு நிலவரப்படி 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பலத்த காயங்களுடன் பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வங்காளதேச தேசியவாத கட்சி, அதிபர் பதவிக்கு கட்சியின் சார்பில் யாரையும் வேட்பாளராக அறிவிக்கவில்லை.
    • ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆணையர்களில் ஒருவராக பணியாற்றினார்.

    டாக்கா :

    வங்காளதேசத்தின் அதிபராக இருந்து வரும் முகமது அப்துல் ஹமீதுவின் பதவிக்காலம் வருகிற ஏப்ரல் மாதம் 24-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

    இதையடுத்து, நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் பிப்ரவரி 19-ந் தேதி நடைபெறும் என அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது.

    இந்த நிலையில் அதிபர் பதவிக்கான ஆளும் அவாமி லீக் கட்சியின் வேட்பாளராக முன்னாள் நீதிபதி முகமது ஷஹாபுதீன் அறிவிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் தனது வேட்பு மனுவை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தார்.

    இதனிடையே வங்காளதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியான வங்காளதேச தேசியவாத கட்சி, அதிபர் பதவிக்கு கட்சியின் சார்பில் யாரையும் வேட்பாளராக அறிவிக்கவில்லை. இதன் மூலம் முகமது ஷஹாபுதீன் வங்காளதேசத்தின் 22-வது அதிபராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது.

    மாவட்ட மற்றும் செசன்சு கோர்ட்டு நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு அவர், ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆணையர்களில் ஒருவராக பணியாற்றினார்.

    பின்னர் அரசியலில் குதித்த அவர், அவாமி லீக் கட்சியில் இணைந்து, கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவில் உறுப்பினரானார். எனினும் அவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்படும்போது கட்சி பதவியை துறக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வங்காளதேசத்தில் 14 இந்து கோவில்களில் தாக்குதல் நடந்துள்ளன.
    • சாமி சிலைகளை பெயர்த்த மர்ம கும்பல் சாலைகளிலும், குளங்களிலும் வீசிச்சென்றன.

    டாக்கா:

    சமீப காலமாக வெளிநாடுகளில் இந்துக் கோவில்கள் மீது தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது.

    ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியா மற்றும் கனடா நாடுகளில் உள்ள பிரசித்தி பெற்ற இந்து கோவில்களை இலக்காக கொண்டு தாக்குதல்கள் நடந்துள்ளன.

    ஆஸ்திரேலியாவில் கடந்த ஜனவரியில் அடுத்தடுத்து 3 கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், இந்தியாவுக்கு எதிரான வாசகங்களும் கோவில் சுவர்களில் எழுதப்பட்டன.

    இந்நிலையில், வங்காளதேசத்தில் 14 இந்து கோவில்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தி உள்ளது. கடந்த ஞாயிறு அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.

    தகவலறிந்த போலீசார் சம்பவ பகுதிக்குச் சென்றனர். இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில்கள் மீது தாக்குதல்களை நடத்திய மர்ம நபர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், சிந்தூர்பிந்தி என்ற இடத்தில் இருந்த கோவிலில் 9 சாமி சிலைகளும், பாரியா யூனியனில் காலேஜ்பாரா பகுதியில் உள்ள கோவிலில் 4 சாமி சிலைகளும் மற்றும் சரோல் யூனியனில் ஷாபாஜ்பூர் நாத்பாரா பகுதியில் உள்ள 12 கோவில்களில் 14 சாமி சிலைகளும் சூறையாடப்பட்டன. கடந்த சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை தாக்குதல்கள் நடத்தப்பட்டு இருக்கலாம் என தெரிவித்தனர்.

    • சிறந்த கிரிக்கெட் வீரரின் சிறப்பு நினைவு பரிசு என ஹசன் கருத்து
    • இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருதை ஹசன் வென்றார்.

    மிர்பூர்

    இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் வங்காளதேச நட்சத்திர வீரர் மெகிதி ஹசன் சிறப்பாக செயல்பட்டார். ஒருநாள் தொடரில் வங்களாதேசம் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெறுவதற்கு அவர் முக்கிய பங்காற்றினார். ஒருநாள் தொடரில் அவர் சராசரியாக 141 ரன்கள் எடுத்ததுடன் 4 விக்கெட்களையும் கைப்பற்றியிருந்தார்.

    இதன் மூலம் ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார். டெஸ்ட் தொடரில், மொத்தம் பதினொரு விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். இந்நிலையில் மெகிதி ஹசனுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, தனது ஆட்டோகிராப் போடப்பட்ட ஜெர்சியை பரிசாக வழங்கினார். விராட் 18 என எழுதப்பட்டிருந்த அந்த ஜெர்சியை பெற்றுக் கொண்ட ஹசன், சிறந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சிறப்பு நினைவு பரிசு என்று தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்

    ×