search icon
என் மலர்tooltip icon

    சீனா

    • கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர்.
    • கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக வேலை இல்லை.

    சீனாவில் உள்ள தனியார் நிறுவனங்கள் பெண்கள் பிரசவகால விடுப்பு தவிர்க்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அங்குள்ள ஜிங்சு மாகாணத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யும்போது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர்.

    அதோடு நிற்காமல் நேர்முக தேர்வுகளின் போது பெண்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்கிறார்கள். அப்போது பெண்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா என்பதை அறிய கர்ப்ப பரிசோதனை செய்யப்படுகிறது.

    இதில் பெண்கள் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக வேலை இல்லை என கூறி திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

    அதோடு நிற்காமல் குடும்ப கட்டுப்பாடு திட்டங்கள் பற்றியும் கேள்விகள் கேட்கப்ப டுகின்றன. ஏற்கனவே குழந்தைகள் பிறந்து இருந்தால் கண்டிப்பாக குடும்ப கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்படுகிறது. இது குறித்து ஆன்லைன் மூலம் அரசு கவனத்திற்கு சிலர் கொண்டு சென்றனர்.

    அப்போது 16 நிறுவனங்களில் சட்டவி ரோதமாக 168 பெண்களுக்கு உடற் பரிசோதனை என்ற பெயரில் கர்ப்ப பரிசோதனை செய்தது கண்டுபி டிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கடுமையான எச்சரிக்கையுடன் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • தனது மனைவிக்கும், வேறு ஒரு நபருக்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்க திட்டமிட்ட ஜிங் இதற்காக டிரோன் கேமராவை பயன்படுத்த ஆரம்பித்தார்.
    • டிரோன் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் மனைவியை விவாகரத்து செய்ய ஜிங் முடிவு செய்துள்ளார்.

    சீனாவில் ஹூபே மாகாணத்தில் உள்ள சியான் நகரை சேர்ந்தவர் ஜிங் (வயது33). இவர் தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டார். இதனால் மனைவியின் செயல்பாடுகளை கண்காணிக்க தொடங்கினார்.

    அப்போது தனது மனைவிக்கும், வேறு ஒரு நபருக்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்க திட்டமிட்ட ஜிங் இதற்காக டிரோன் கேமராவை பயன்படுத்த ஆரம்பித்தார். காரில் அவரது மனைவி வேறு ஒரு ஆணுடன் மலைப்பகுதிக்கு கைகளை பிடித்து கொண்டு ஒரு சிறிய குடிசைக்குள் நுழைந்து 20 நிமிடங்கள் கழித்து அங்கிருந்து வெளியே வந்து அலுவலகம் செல்லும் காட்சிகள் டிரோன் கேமரா மூலம் அம்பலமானது.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஜிங் விசாரணை நடத்தினார். அவரது மனைவி அவரது நிறுவன உரிமையாளருடன் தகாத உறவு இருந்ததும், அவர் தன்னை ஏமாற்றுவதையும் ஜிங் கண்டுபிடித்தார். டிரோன் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் மனைவியை விவாகரத்து செய்ய ஜிங் முடிவு செய்துள்ளார்.

    • டேட்டிங் உத்திகளுக்கு தனி கட்டணம் என பல வகையான பேக்கேஜூகளின் வருமானம் ஈட்டி வருகிறாராம்.
    • பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    சமூக வலைதளங்கள் பொழுதுபோக்கு தளமாக மட்டுமல்லாமல், சிலருக்கு பணம் ஈட்டித்தரும் தளமாகவும் விளங்குகிறது. அந்த வகையில் சீனாவை சேர்ந்த ஒருவர் சமூக வலைதளங்களில் பெண்களுக்கு ஆலோசனைகள் கூறி ஆண்டுக்கு ரூ.163 கோடி சம்பாதிக்கிறார். ஆனால் இவர் கூறும் ஆலோசனைகள் சர்ச்சையாக உள்ளது.

    அதாவது பணக்கார ஆண்களை திருமணம் செய்வது எப்படி? என்பது குறித்து பெண்களுக்கு இவர் சமூக வலைதளங்கள் மூலம் பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறார். க்யூ குவின் என்ற பெயர் கொண்ட இவர், காதல் உறவுகளை கையாள்வது குறித்து சர்ச்சை கருத்துக்களை வழங்குவதாக கூறப்படுகிறது.

    திருமணம் செய்வதை கோட்டைக்குள் செல்வது என்றும், பணத்தை அரிசி என்றும், கர்ப்பத்தை பந்தை சுமப்பது என்றும் குறிப்பிடும் இவர், உறவுகளை மதிப்பதில்லை. ஆனாலும் இவரை கலந்து ஆலோசிக்க பெண்களிடம் குறிப்பிட்ட தொகையை பெறுகிறார். ரூ.12,945, ரூ.43,179, கவுன்சிலிங் பேக்கேஜூகளுக்கு மாதம் ரூ.1.17 லட்சம், டேட்டிங் உத்திகளுக்கு தனி கட்டணம் என பல வகையான பேக்கேஜூகளின் வருமானம் ஈட்டி வருகிறாராம்.

    அந்த வகையில் ஆண்டுக்கு தோராயமாக 142 மில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் ரூ.163 கோடி) சம்பாதிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ள நிலையில், பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • முதல் மூன்று நிலைகளை சாதாரணமாக கடந்த சென்றது.
    • 4-வது நிலையில் குறித்த இலக்கை எட்ட முடியாமல் தோல்வியடைந்தது.

    சீனாவின் ஐஸ்பேஸ் (iSpace) என்ற தனியார் நிறுவனம் ஹைபர்போலா-1 என்ற ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. இந்த ராக்கெட் 24 மீட்டர் நீளம் கொண்டது. உயர் திட எரிபொருள் மூலம் இயங்கக் கூடியது. இந்த ராக்கெட் இன்று உலகளாவிய வானிலை முன்னறிவிப்பு செயற்கைக்கோள் மற்றும் நிலநடுக்கம் முன்னறிவிப்பு செயற்கைக்கோள் உள்ளிட்ட மூன்று செயற்கைக்கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்டது.

    முதல் மூன்று நிலைகளை வெற்றிகரமாக ராக்கெட் கடந்தது. ஆனால் நான்காவது கட்டத்தில் இலக்கு நோக்கி செல்லவில்லை. பின்னர் ராக்கெட் ஏவுதல் திட்டம் தோல்வியடைந்ததாக ஐஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ராக்கெட் திட்டம் தோல்வியடைந்ததால் மூன்று செயற்கைக்கோள்களும் புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட முடியாமல் போனதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு முதன்முறையாக ஐஸ்பேஸ் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய தனியார் நிறுவுனம் என்ற பெருமையை பெற்றது. அதன்பின் தொடர்ந்து மூன்று முறை ராக்கெட் செலுத்திய முயற்சியில் தோல்வியை சந்தித்தது.

    • தண்டனை கொடுத்த தந்தையின் செயலுக்கு இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
    • பத்து வினாடிகளுக்கு மேல் போராடிய அவள் சோர்வடைந்தாள்.

    சீனாவில் நீண்ட நேரம் தொலைக்காட்சியை பார்த்த 3 வயது குழந்தை கையில் கிண்ணத்தை கொடுத்து, அதனை கண்ணீரால் நிரப்புமாறு தண்டனை கொடுத்த தந்தையின் செயலுக்கு இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    சீனாவின் குவாங்சி ஜுவாங் பகுதியில் உள்ள யூலின் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    இரவு உணவு தயாரித்தபோது, தந்தை தனது மகள் ஜியாஜியாவை சாப்பாட்டு மேஜைக்கு அழைத்தார். ஆனால் டிவி பார்ப்பதில் மூழ்கியிருந்ததால் அவள் பதிலளிக்கவில்லை.

    விரக்தியடைந்த அவர் தொலைக்காட்சியை ஆஃப் செய்தார். இதனால் ஜியாஜியா அழத் தொடங்கினாள்.

    இதைக்கண்ட ஜியாஜியா தந்தை ஒரு கிண்ணத்தை அவளிடம் கொடுத்து, இந்த கிண்ணத்தை உன் கண்ணீரால் நிரப்பியவுடன் நீ டிவி பார்க்க மீண்டும் தொடங்கலாம் என்று கூறி உள்ளார்.

    ஜியாஜியா தனது கண்களுக்கு கீழே கிண்ணத்தை வைத்து கண்ணீரை சேகரிக்க முயற்சி செய்தார். பத்து வினாடிகளுக்கு மேல் போராடிய அவள் சோர்வடைந்தாள்.

    இந்த வீடியோ ஜியாஜியா அம்மா பகிர்ந்துள்ளார். பின்னர் ஜியாஜியா தந்தை அவளை சிரிக்கச்சொல்லி போட்டோ எடுத்தார். பின் சிரிக்கும் புகைப்படத்தையும் அழும் புகைப்படத்தையும் அவளிடம் காண்பித்தது வேடிக்கையாக இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    சில நிமிடங்களுக்கு பின் பெற்றோர் குழந்தையை சமாதானப்படுத்தினாலும் அவர்களின் இந்த செயலை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

    • யானையின் அருகில் பராமரிப்பாளர்கள் யாரும் இல்லை.
    • சிறுவன் தவறவிட்ட காலணியை யானை துதிக்கையால் எடுத்து வேலியை தாண்டி உயரமான மேடையில் நிற்கும் சிறுவனிடம் நீட்டியது.

    யானை தொழுவத்திற்குள் சிறுவன் தவறவிட்ட செருப்பை எடுத்து யானை கருணையுடன் திரும்ப கொடுக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் அதிகம் ரசிக்கப்படுகிறது.

    சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் வெய்ஹாய் உயிரியல் பூங்காவில் அந்த யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. கம்பி வேலி போட்ட அடைப்பிற்குள் விடப்பட்டு உள்ள யானையை ரசிக்க உயரமான மேடை அமைக்கப்பட்டு உள்ளது.

    25 வயதான அந்த யானையை ரசித்துக் கொண்டிருந்தபோது 5 வயதிற்கு உட்பட்ட சிறுவன் ஒருவன் தனது காலணியை தவறவிட்டான். அது யானையின் தொழுவத்திற்குள் சென்று விழுந்தது. அப்போது யானையின் அருகில் பராமரிப்பாளர்கள் யாரும் இல்லை. இருந்தபோதிலும் சிறுவன் தவறவிட்ட காலணியை யானை துதிக்கையால் எடுத்து வேலியை தாண்டி உயரமான மேடையில் நிற்கும் சிறுவனிடம் நீட்டியது.

    சிறுவனும் அதை கைநீட்டி பெற்றுக் கொண்டான். புத்திசாலித்தனமும், கருணையும் மிகுந்த யானையின் இந்த செய்கை அங்கு நின்ற பார்வையாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஒருவர் இதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பரப்ப, பல்வேறு வலைத்தளங்களுக்கும் அது பரவியது. இன்ஸ்டாகிராமில் வெளியான இந்த வீடியோவை பல லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர். 52 ஆயிரம் பேர் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.


    • மேலதிகாரிகளை பழைய பொருட்களை வாங்கும் இ காமர்ஸ் வெப்சைட்டில் விற்பதுப் போல் விளம்பரம் செய்கின்றனர்.
    • அனைவரும் ஏதோ ஒரு வேலை செய்தாக வேண்டும் என்ற சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளனர்.

    தற்போதைய சமூதாய சூழ்நிலையில் அனைவரும் ஏதோ ஒரு வேலை செய்தாக வேண்டும் என்ற சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளனர். அந்த வேலை பிடிக்கிறதோ, இல்லையோ அதை அனைவரும் செய்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

    எல்லா வேலைகளிலும் நமக்கு மேல் அதிகாரி என்பவர் இருப்பார், அவர் கொடுக்கும் வேலை பளுவினால் வருவது மனசோர்வு, கோபம் மட்டும்தான். சில நபர்களுக்கு அவர்களுக்கு வேலை செய்யும் நிறுவனம் பிடிக்காது, மேலதிகாரி மற்றும் மேலதிகாரி நடத்தும் விதமும், அவர்கள் நடந்து கொள்ளும் விதமும் பிடிக்காது. இதனை சீன மக்கள் புதுவிதமான அணுகியுள்ளனர்.

    அவர்களது மன சோர்வை குறைத்துக்கொள்ள அவர்களுக்கு பிடிக்காத வேலையையும் , பிடிக்காத மேலதிகாரிகளையும் பழைய பொருட்களை வாங்கும் இ காமர்ஸ் வெப்சைட்டில் விற்பதுப் போல் விளம்பரம் செய்கின்றனர்.

    அலிபாபா என்ற இந்த தளத்தில் அவர்களது வேலை பளுவை குறைத்துக் கொள்ள இப்படி செய்து வருகின்றனர். இந்த வேலையையும் , தொல்லை பிடித்த மேலதிகாரிகளை 4 முதல் 9 லட்ச ரூபாய் வரை விற்பதாக சீன மக்கள் பதிவிடுகின்றனர்.

    அதில் ஒரு நபர் அவர் மாதம் 33 ஆயிரம் ஈட்டித்தரும் வேலையை 91000 ரூபாய்க்கு விற்பதாகவும் நீங்கள் முதலீடு செய்யும் பணத்தை 3 மாதங்களில் திரும்பி எடுத்துக் கொள்ளலாம் என்றும் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

    மற்றொருவர் அவருடன் வேலை பார்க்கும் சக நக்கல் பிடித்த ஊழியரை 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்பதாக பதிவிட்டுள்ளார். கூடுதலாக அவரை எப்படி சமாளிக்கவேண்டும் என்பதை நானே கற்று தருகிறேன் என்று அதில் எழுதியுள்ளார்.

    ஆனால் இதெல்லாம் ஒரு விளையாட்டுக்காகவும், மன சோர்வை குறைக்கும் ஒரு செயலுக்காக தான் இப்படி செய்கிறார்கள். யாரும் இதன் மூலம் பணபரிவர்தனை செய்யக்கூடாது. அப்படி யாரெனும் விளம்பரத்தை பார்த்து முன்வந்தால் அவர்கள் அந்த பதிவை அழித்து விடுகின்றனர்.

    இப்படி உங்களுக்கும் உங்கள் வேலையில் மனசோர்வு மற்றும் பிடிக்காத மேலதிகாரி அல்லது கடுப்பேற்றும் சக ஊழியர்கள் இருந்தால் இப்படி எதையாவது புதுவிதமாக முயற்சி செய்து உங்கள் மனசோர்வை குறைத்துக் கொள்ளுங்கள்.

    • வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    • வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    சீனாவில் மெட்ரோ ரெயில் பயணம் என்பது அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. பெரும்பாலானவர்கள் மெட்ரோ ரெயில் பயணமே மேற்கொள்ளும் நிலையில் உட்கார இருக்கை தராத தகராறில் இளம்பெண்ணை தாக்கிய வழக்கில் 65 வயதுடைய முதியவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெய்ஜிங் சுரங்கப்பாதை லைன் 10-ல் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வைரலான வீடியோவில், முதியவர், ஒரு இளம்பெண்ணிடம் தனக்காக இருக்கையை விட்டு தருமாறு கேட்கிறார். இதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்து வேறு யாருக்காவது தருவேன், உங்களுக்கு தரமாட்டேன் என்கிறார். இதனால் ஆத்திரமடைந்த முதியவர் தனது கைத்தடியை கொண்டும் கைகளாலும் அப்பெண்ணை தாக்குகிறார்.

    இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் முதியவரை கைது செய்துள்ளனர். வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    • டெஸ்லா ஸ்கிரீனில் சிறுமி வரைந்த வரைபடம் சில நேரங்களில் மாயம்.
    • இது தொடர்பாக எலான் மஸ்க்கிடம் தெரிவிக்க விரும்பி வீடியோ அனுப்பியுள்ளார்.

    உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரான எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் இந்த நிறுவனம் முன்னிலையில் உள்ளது.

    சீனாவைச் சேர்ந்த சிறுமி ஒருவர் டெஸ்லா காரில் உள்ள ஸ்கிரீனில் தான் விரும்பியதை படமாக வரைந்துள்ளார். அப்போது திடீர் திடீரென வரைந்த படங்கள் காணாமல் போகிறது. இதனால் அந்த சிறுமி கவலை அடைந்தார். அத்துடன் இது ஒரு பிழை. இதை டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என விரும்பினார்.

    தன்னுடைய செயலை ஒரு வீடியோவை எடுத்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு எலாஸ் மஸ்க் டேச் செய்துள்ளார். அதில் ஹலோ மிஸ்டர் மஸ்க், நான் சீனாவின் மோலியில் உள்ளேன். என்னுடைய கேள்வி உங்களுடைய கார் பற்றியது. நான் படம் வரையும்போது, சில நேரங்களில் லைன் இது போன்று (வீடியோவை காட்டி) மறைந்து விடுகிறது. நீங்கள் இதை பார்க்கிறீர்கள் அல்லவா? இதை சரி செய்ய முடியுமா? நன்றி" என அதில் குறிப்பிட்டுள்ளார்.

    இதை கவனித்த எலான் மஸ்க் "நிச்சயமாக" என பதில் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக எக்ஸ் வலைப்பக்கத்தில் கருத்து விவாதங்கள் நீண்டு கொண்டே செல்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 1996-ம் ஆண்டில் ஜோசப் மற்றும் மரியா மார்டென்ஸ் என்ற டச்சு தம்பதியினரால் அவர் தத்தெடுக்கப்பட்டார்.
    • கடந்த ஆண்டு தன்னார்வலர்கள் மார்டென்ஸிடம் அவரது டிஎன்ஏ அவரது பிறந்த தாயான வென்னுடன் பொருந்தியதாகக் கூறினர்.

    கவுமிங் மார்டென்ஸ் என்பவரை அவரது 4 வயதில் சீனாவில் உள்ள ஒரு அனாதை இல்லத்தில் இருந்து டச்சு தம்பதியர் தத்தெடுத்தனர். மார்டென்ஸ் 12 வருட நீண்ட தேடலுக்கு பிறகு இறுதியாக தனது பெற்றோரை கண்டுபிடித்தார்.

    மார்டென்ஸ் 1994-ம் ஆண்டு தனது மூன்று வயதில் கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள அவர்களது வீட்டிலிருந்து அவரது தாயின் சொந்த ஊருக்கு பெற்றோருடன் பயணிக்கும்போது தொலைந்து போனதாக தெரிவிக்கப்பட்டது.

    கருணை உள்ளம் கொண்டவர்கள் அவரை ஒரு அனாதை இல்லத்திற்கு அனுப்பினர். அங்கு 1996-ம் ஆண்டில் ஜோசப் மற்றும் மரியா மார்டென்ஸ் என்ற டச்சு தம்பதியினரால் அவர் தத்தெடுக்கப்பட்டார்.

    மார்டென்ஸ் வளர்ப்பு பெற்றோர்கள் அவரை பெற்றோரைத் தேடுவதை ஆதரித்தனர். மேலும் 2007-ல் இவர்களது குடும்பம் சீனாவுக்கு சென்று விசாரித்தது. ஆனால் அங்கு அனாதை இல்லம் இல்லை. இருந்தாலும் மார்டென்ஸ் தனது தேடலைத் தொடர்ந்தார். ஐந்தாண்டுகள் மாண்டரின் மொழியைக் கற்றுக்கொண்டு, பகுதிநேர வேலை செய்தார்.

    2012-ல் அவர் தன்னை Baby Come Home-ல் பதிவு செய்தார். இது மக்கள் தொலைந்து போன குடும்பங்களைக் கண்டறிய உதவுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தன்னார்வ நடவடிக்கையாகும். மேலும் தன்னார்வலர்களின் உதவியுடன் தனது பிறந்த பெற்றோரைத் தேடினார்.

    மார்டென்ஸ் நெதர்லாந்தில் உள்ள லைடன் பல்கலைக்கழகத்தில் பட்டமும், கனடாவில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முனைவர் பட்டமும் பெற்றவர். இறுதியாக கடந்த ஆண்டு தன்னார்வலர்கள் மார்டென்ஸிடம் அவரது டிஎன்ஏ அவரது பிறந்த தாயான வென்னுடன் பொருந்தியதாகக் கூறினர்.

    அவரைப் பெற்றெடுத்த பெற்றோர்கள் காவ் யாங் என்ற குழந்தையைத் தேடுவதை ஒருபோதும் நிறுத்தவில்லை. மார்டென்ஸின் வளர்ப்பு தாய் இந்த செய்தி தெரிவதற்கு முன்பு இறந்துவிட்டார். வளர்ப்புத் தந்தை தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார்.

    மனநலக்கோளாறால் அவதிப்பட்ட அவரது தாய் வென்னை பார்த்தபோது யாங்யாங் என்ற பெயரில் அழைத்தார். இந்த கதை சமூக வலைதளங்களில் பலரையும் கவர்ந்துள்ளது.

    மார்டென்ஸ் கதை துரதிர்ஷ்டவசமாக ஆரம்பித்த போதிலும், அவரது பிறந்த குடும்பம் மற்றும் வளர்ப்பு குடும்பம் இரண்டும் அன்பால் நிறைந்ததால் இறுதியில் அவர் அதிர்ஷ்டசாலி என்று தெரிவித்துள்ளனர்.

    • கஜகஸ்தானில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு நடைபெற உள்ளது.
    • இதில் சீனா, ரஷியா, பாகிஸ்தான் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    பீஜிங்:

    கஜகஸ்தானின் அஸ்தானா நகரில் ஜூலை 3 மற்றும் 4-ம் தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு நடைபெற உள்ளது.

    இந்த மாநாட்டில், சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்கிறார். ஜூலை 2 முதல் 6-ம் தேதி வரை கஜகஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானுக்கான அரசுமுறை பயணங்களை மேற்கொள்கிறார் எனவெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் அறிவித்தார்.

    இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்துகொள்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சீன நெட்டிசன்களில் 76.7 சதவீதம் பேர் ஆன்லைனில் ஷாப்பிங் செய்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
    • சீனாவில் 900 மில்லியன் மக்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்கிறார்கள்.

    சீனாவின் ஆன்லைன் நுகர்வு பற்றிய நீல புத்தகம் சமீபத்தில் அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கிராமப்புறங்களில் உள்ள சீன நெட்டிசன்களில் 76.7 சதவீதம் பேர் ஆன்லைனில் ஷாப்பிங் செய்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

    கிராமப்புறங்களில் உள்ள நெட்டிசன்கள் குறுகிய பிளாட்ஃபார்ம்களில் ஷாப்பிங் செய்ய விரும்புகிறார்கள். அத்தகைய தளங்களில் ஷாப்பிங் செய்யும் நெட்டிசன்களின் விகிதம் நகர்ப்புறங்களுடன் ஒப்பிடும்போது கிராமப்புறங்களில் 1.2 சதவீதம் புள்ளிகள் அதிகம் என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள சீன இன்டர்நெட் நெட்வொர்க் தகவல் மையம் நீல புத்தகம் தெரிவித்துள்ளது.

    சீனாவில் 900 மில்லியன் மக்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்கிறார்கள். 1990 மற்றும் 2000-களில் பிறந்த 90-களுக்குப் பிந்தைய மற்றும் 2000-களுக்குப் பிந்தைய தலைமுறைகளில் 95.1 சதவீதம் மற்றும் 88.5 சதவீதம் பேர் ஆன்லைன் ஷாப்பிங் செய்துள்ளார்கள்.

    சீனாவில் 85.4 சதவீத பெண்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்கிறார்கள். இது நாட்டின் ஆன்லைன் நுகர்வோரின் முக்கியமானதாக உள்ளது என்று நீல புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

    2023-ம் ஆண்டின் இறுதியில் கிட்டத்தட்ட 300 மில்லியனை எட்டிய 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மக்கள்தொகையில் 69.8 சதவீதம் பேர் ஷாப்பிங்கிற்காக ஆன்லைன் தளங்களைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக உடல்நலம் மற்றும் மருந்துகள், கலாச்சாரம், சுற்றுலா மற்றும் பிற பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகின்றனர் என அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

    ×