என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அடகு கடை"
- மதுரையில் அடகு கடை உரிமையாளரிடம் ரூ. 1¼ லட்சம் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
- அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பகுதிகளை ஆய்வு செய்தனர்.
மதுரை
மதுரை சிம்மக்கல் எல்.என்.பி. அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சுதர்சன் (வயது35). இவர் ஜான்சி ராணி பூங்கா பகுதியில் உள்ள மதார்கான் டதோர் தெருவில் தங்க நகை அடகு கடை நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு சுதர்சன் கடையை பூட்டி விட்டு ரூ. 1 லட்சத்து 31 ஆயிரத்தை பையில் வைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். பணப்பையை மோட்டார் சைக்கிளில் தொங்க விட்டிருந்தார். வீட்டுக்கு சென்ற அவர் பணப்பையை எடுத்துச்செல்லவில்லை. சிறிது நேரம் கழித்து பணப்பை குறித்து ஞாபகம் வந்ததும் சுதர்சன் உடனே வீட்டின் வெளியே வந்து மோட்டார் சைக்கிளை பார்த்தார்.
அப்போது அதில் இருந்த பணப்பை திருடு போயிருந்தது. இதுகுறித்து அவர் திலகர் திடல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா பகுதிகளை ஆய்வு செய்தனர். அப்போது செல்லூர் கல் பாலம் காளிதோப்பு பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் மனைவி யோகபிரியா (வயது 31) பணப்பையை திருடிச்சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
- நகைகளை அடகு வைத்திருந்த வாடிக்கையாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு கடையை முற்றுகையிட்டனர்.
- வாடிக்கையாளர்களுக்கு சொந்தமான நகை அருகில் உள்ள தனியார் வங்கி லாக்கரில் இருப்பதாகவும் வாடிக்கையாளர்களிடம் திருப்பி கொடுப்பதாகவும் உறுதி அளித்தார்.
அனுப்பர்பாளையம் :
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த இடையபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சதீஸ். இவர்திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம்- பொம்மநாயக்கன்பாளையம் சாலையில் நகை அடகு கடை நடத்தி வந்தார். அங்கு சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் சுமார் 200 பவுன் நகைகளை அடகு வைத்திருந்தனர்.
இந்த நிலையில் தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்ற சதீஸ் பின்னர் திரும்பி வரவில்லை. கடந்த 2 மாதங்களாக அவருக்கு சொந்தமான நகை அடகு கடை பூட்டியே இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் சதீஸ் செல்போனுக்கு தொடர்பு கொண்டு உள்ளனர்.
ஆனால் அவர் போனை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு மேலும் சந்தேகம் ஏற்பட்டது. இந்த நிலையில் போயம்பாளையத்திற்கு வந்த சதீஸ் அவருடைய கடையை திறந்துள்ளார்.
இதுபற்றி தகவலறிந்ததும் சம்பந்தப்பட்ட நகை அடகு கடையில் நகைகளை அடகு வைத்திருந்த வாடிக்கையாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டு கடையை முற்றுகையிட்டனர்.
மேலும் கடை உரிமையாளர் சதீஸிடம் தங்களுடைய நகைகளை வழங்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கடை உரிமையாளர் சதீஸ், வாடிக்கையாளர்களுக்கு சொந்தமான நகை அருகில் உள்ள தனியார் வங்கி லாக்கரில் இருப்பதாகவும், அதை நாளை (திங்கட்கிழமை) வாங்கி அந்தந்த வாடிக்கையாளர்களிடம் திருப்பி கொடுப்பதாகவும் உறுதி அளித்தார். மேலும் வங்கியில் உள்ள நகையை மீட்பதற்கான பணம் தன்னிடம் இருப்பதாக கூறி, அந்த பணத்தையும் வாடிக்கையாளர்கள் மற்றும் போலீசாரிடம் சதீஸ் காட்டி உள்ளார். இதனால் திருப்தி அடைந்த வாடிக்கையாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆனாலும் திங்கட்கிழமை வரை வாடிக்கையாளர்களில் தலா 4 பேர் சுழற்சி முறையில் அங்கேயே இருந்து கடையை கண்காணிக்கவும் முடிவு செய்தனர்.
- கடையின் உள்ளே வைக்கப்பட்டிருந்த லாக்கர் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.
- நாய் அடகு கடையின் பின்புறமாக சென்று முன்பக்கமாக வந்து நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள பாப்பாக்குடி கடைவீதியில் ராஜஸ்தானை சேர்ந்த சங்கர் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.
கடந்த 28-ந் தேதி இரவு 7 மணியளவில் வியாபாரம் முடிந்து கடையை பூட்டி விட்டு சங்கர் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் சங்கர் மற்றும் அவரது கடையில் வேலை பார்த்து வரும் தில்கேஷ், அஜித் ஆகியோர் கடையை திறக்க வந்தனர்.
அப்போது கடையின் உள்ளே வைக்கப்பட்டிருந்த லாக்கர் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது கடையின் பின்பக்க சுவற்றை மர்ம நபர்கள் துளையிட்டு லாக்கரில் வைத்திருந்த 209 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸ் மோப்ப நாய் மலர் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் அடகு கடையின் பின்புறமாக சென்று முன்பக்கமாக வந்து நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதனைதொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
- கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கல்லாவில் உள்ள ரொக்கம் ரூ. 17,000 திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- நள்ளிரவில் 3 பேர் கடைக்கு வந்து சி.சி.டி.வி. காமிராவை சாக்கை போட்டு மூடி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் கண்கொடுத்தவனிதம் கடைத்தெருவில் கலையமு தன் என்பவருக்கு சொந்த மான ரதிமீனா நகை அடகு கடை இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பணி முடிந்து கலையமுதன் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இவரது கடைக்கு அருகில் முகமது இக்பால் என்பவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை முகமது இக்பால் தனது மளிகை கடையினை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கல்லாவில் உள்ள ரொக்கம் 17,000 ரூபாய் திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தவர் மீண்டும் வெளியில் வந்து பார்த்து ள்ளார். அப்போது தனது கடைக்கு அருகிலுள்ள அடகு கடையின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்க ப்பட்டு இருப்பதை கண்டு கலையமுதனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கலைய முதன் அடகு கடைக்கு வந்து பார்த்தபோதுதனது கடையிலும் திருட்டுப் போனது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கலைய முதன் கொரடாச்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் ஜுவல்லரியில் உள்ள சிசிடிவி காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது நள்ளிரவில் 3 பேர் கடைக்கு வந்து சிசிடிவி காமிராவில் சாக்கை போட்டு மூடி திருட்டு சம்பவத்தில் ஈடுப ட்டதுதெரியவ ந்துள்ளது. கொள்ளையர்கள்மூன்று பேரும் அரை நிர்வாண நிலையில் வந்து கொள்ளையடித்துள்ளனர் என்பதும் தெரிய வந்தது.மேலும் இது குறித்து கைக் கடை உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்ட போது 450 கிராம் வெள்ளி பொருட்கள், 2 பவுன் மதிப்பிலான தங்க நகைகள் காணாமல் போய் இருப்பதாக தெரிவித்தார். போலீசார் திருட்டு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் அடுத்தடுத்த கடைகளில் நடந்துள்ள திருட்டு சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- மர்ம நபர்கள் சிலர் அடகு கடைக்குள் புகுந்து ராஜேந்திரனை தாக்கிவிட்டு நகைகளை கொள்ளையடித்து தப்பி ஓடிவிட்டனர்.
- போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
அம்மாபேட்டை:
பாபநாசம் அருகே இரும்புதலை கிராமத்தில் திருப்பத்தூரை சேர்ந்த சகோதரர்கள் தமிழ்செல்வன், சரவணன் , கார்த்திகேயன்ஆகியோர் நகை அடகு கடை நடத்தி வருகின்றனர். இந்த கடையில் திருப்பத்தூரை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 72) ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் அடகு கடைக்குள் புகுந்து ராஜேந்திரனை தாக்கிவிட்டு நகைகளை கொள்ளையடித்து தப்பி ஓடிவிட்டனர். படுகாயமடைந்த ராஜேந்திரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாபநாசம் போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- மதுரை அருகே அடகு கடையில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
- ரூ. 21 ஆயிரம் ரொக்கம், அரை கிலோ வெள்ளி பொருட்கள் இருந்தன.
மதுரை
மதுரை ஆத்திகுளம், மூகாம்பிகை தெருவைச் சேர்ந்தவர் வைத்தியநாதன் (62). இவர் புதூர், பாரதியார் மெயின் ரோட்டில் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.
கடந்த 4-ந் தேதி இரவு இவர் 7 மணி அளவில் கடையை பூட்டிவிட்டு சென்றார். அதற்கு அடுத்த நாள் காலை கடைக்கு வந்தார். அப்போது கடையில் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
எனவே அவர் பதறியடித்துக் கொண்டு கடைக்குள் சென்று பார்த்தார். அப்போது கல்லாப்பெட்டி லாக்கரை காணவில்லை. அதில் நகை, பணம் ஆகியவை இருந்தன. எனவே வைத்தியநாதன் இதுதொடர்பாக கே.புதூர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே நகை அடகு கடையில் கொள்ளை போன லாக்கர், டி.ஆர்.ஓ காலனியில் உள்ள குப்பைத்தொட்டியில் கிடந்தது. அதனை தூய்மைப் பணியாளர்கள் மீட்டு போலீசில் ஒப்படைத்தனர். அதில் 21 ஆயிரம் ரூபாய் ரொக்கம், அரை கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை இருந்தன.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள எடக்காடு தலையட்டியை சேர்ந்தவர் சகாதேவன். இவர் எடக்காடு பஜாரில் அடகு கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் சகாதேவன் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலையில் கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையின் உள்ளே சென்று பார்த்த போது அங்கு இருந்த கல்லாவை திறந்த மர்மநபர்கள் அதில் இருந்த ரூ. 20 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து சகாதேவன் மஞ்சூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக இன்ஸ்பெக்டர் தவுஹித் நிஷா தலைமையிலான விரைந்து விசாரணை நடத்தினர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு போலீசார் பஜார் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்து இடமாக நின்ற 2 பேரை பிடடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது 2 பேரும் சகாதேவனின் அடகு கடையில் திருடியதை ஒப்புக்கொண்டனர். மேலும் போலீசார் நடத்திய
விசாரணையில் இவர்கள் பல்வேறு பகுதிகளில் திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. தொடர்ந்து 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
எமரால்டில், சுவரில் துளையிட்டு அடகு கடையில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளையடித்த மர்ம ஆசாமியை, தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மஞ்சூர் அருகே எமரால்டு பஜாரில் அடகு கடை நடத்தி வருபவர் சோத்தாராம்(வயது 47). ராஜஸ்தானை சேர்ந்தவர். இவரது கடை போலீஸ் நிலையத்திற்கு எதிரே உள்ளது. நேற்று காலை 8.15 மணிக்கு வழக்கம்போல் சோத்தாராம் கடையை திறந்தார். அப்போது அங்கு வலதுபுற சுவரில் பெரிய அளவில் துளையிடப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் அடகு கடையை ஒட்டியுள்ள டீக்கடை ஷட்டரின் பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து டீக்கடை உரிமையாளர் கணேஷ் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த அவர், தனது கடைக்குள் சென்று பார்த்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் டீக்கடைக்குள் புகுந்த மர்ம ஆசாமி, சுவரில் துளையிட்டு அருகிலுள்ள அடகு கடைக்குள் நுழைந்து கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றிருப்பது தெரியவந்தது. அதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளை போயிருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து உடனே எமரால்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அடகு கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் 35 வயது மதிக்கத்தக்க மர்ம ஆசாமி ஒருவர், சுவரில் துளையிட்டு கடைக்குள் நுழைவதும், கண்காணிப்பு கேமராவை சுவரை நோக்கி திருப்பி வைத்ததும் பதிவாகி இருந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முக பிரியா, துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கு, கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு கோபு ஆகியோர் வந்து பார்வையிட்டனர். பின்னர் மில்டன் என்ற மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. பஜாரின் பல இடங்களில் சுற்றித்திரிந்த மோப்பநாய், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இதையடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கொள்ளையனை வலைவீசி தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்