search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அப்துல் கலாம்"

    • கிண்டியில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னலஜியில் ஏரோநாட்டிக்ஸ் பயின்றார்.
    • அப்துல் கலாம் தனது அக்னி சிறகுகள் புத்தகத்தில் அக்னி ஏவுகணை வளர்ச்சியில் ராம் நாராயணின் பங்கினை நினைவு கூர்ந்துள்ளார்.

    இந்தியாவின் அக்னி ஏவுகணைத் திட்டத்தில் முக்கிய பங்காற்றிய விஞ்ஞானி ராம் நாராயண் அகர்வால் [84] நேற்று [ஆகஸ்ட் 15] காலமானார். ஐதராபத்தில் உள்ள தனது இல்லத்தில் வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 1940 ஆம் ஆண்டு பிறந்த பிறந்த ராம் நாராயண், சென்னை, கிண்டியில் உள்ள மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னலஜியில் ஏரோநாட்டிக்ஸ் பயின்றார். பின்னர் பெங்களூரில் அமைந்துள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சைன்ஸ் -இல் தனது டாக்டர் பட்டதைப் பெற்றார்.

    1983 ஆம் ஆண்டு இந்தியாவால் தொடங்கப்பட்ட அக்னி ஏவுகணைத் திட்ட இயக்குனராக பணியாற்றினார். 1989 ஆம் ஆண்டு அக்னி ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்க கடும் உழைப்பை செலுத்தினார். எனவே, ஏவுகணை உருவாக்கத்துக்கு அடித்தளமிட்ட ராம் நாராயண், அக்னி ஏவுகணைகளின் தந்தை என்று அழைக்கப்படுத்துகிறார்.

    டி.ஆர்.டி.ஓ. [DRDO] எனப்படும் ராணுவம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஆய்வக இயக்குநராகவும் ராம் நாராயண் அகர்வால் பணியாற்றியுள்ளார். ஏவுகணை தொழிநுட்ப வளர்ச்சியில் ராம் நாராயணின் பங்கினை போற்றும் வகையில் கடந்த 1990 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ மற்றும் 2000 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்தது. ராம் நாராயண் மறைவுக்கு டிஆர்டிஓ அமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது.

    மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் தனது சுயசரிதை புத்தகமான அக்னி சிறகுகள் புத்தகத்தில் அக்னி ஏவுகணை வளர்ச்சியில் ராம் நாராயணின் பங்கினை நினைவு கூர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • மாணவர்கள் 83 நிமிடங்களில் 83 அடி நீளம் கொண்ட ஏவுகணை வடிவில் நின்று உருவாக்கி மரியாதை செய்தனர்.
    • மாணவர்கள் உருவாக்கிய ஏவுகணையை பள்ளி நிர்வாகிகள் பார்வையிட்டு வாழ்த்தினர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் முன்னாள் குடியரசு தலைவர் விஞ்ஞானி அப்துல் கலாம் 9-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    இதனை முன்னிட்டு அப்துல் கலாமை நினைவு கூரும் விதமாக வைத்தீஸ்வரன் கோவில் முத்துராஜம் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் 210 மாணவ-மாணவிகள் அப்துல் கலாமின் உருவப்படத்தினை தனித்தனியே ஏ4 பேப்பரில் வரைந்து, வண்ணமிட்டு அவற்றை இணைத்து 83 நிமிடங்களில் 83 அடி நீளம் கொண்ட ஏவுகணை வடிவில் நின்று உருவாக்கி மரியாதை செய்தனர்.

     

    83 அடி நீளத்தில் மாணவர்கள் ஏவுகணை வடிவில் நின்று அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்திய காட்சி.

    83 அடி நீளத்தில் மாணவர்கள் ஏவுகணை வடிவில் நின்று அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்திய காட்சி.

    இதனை பள்ளியின் தாளாளர் சிவசங்கர் தலைமையில் நிர்வாகிகள் கீர்த்திமதி மனோஜ் நிர்மல், மதன், வரலட்சுமி தேவேந்திரன் ஆகியோர் மாணவர்கள் வரைந்து உருவாக்கிய 83 அடி நீளம் கொண்ட அப்துல் கலாம் ஏவுகணையை பார்வையிட்டு, வாழ்த்தினர். இதில் பள்ளி முதல்வர் சீனிவாசன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • அப்துல் கலாம் நாட்டின் மிகப்பெரிய பொறுப்பினை எட்டுவதற்கு விதையாக அமைந்தது இந்த பள்ளி தான்.
    • தொலைதூர கிராமத்தில் இருப்பதாக நினைத்து சோர்வடைய வேண்டாம்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரத்தில் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா அவர் படித்த தனியார் பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்த விழாவிற்கு கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் டி.ஜி.பி.சைலேந்திர பாபு கலந்து கொண்டு புதிய கட்டமைப்பு வசதிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் காணொலியில் பேசியதாவது:-

    அப்துல் கலாம் நாட்டின் மிகப்பெரிய பொறுப்பினை எட்டுவதற்கு விதையாக அமைந்தது இந்த பள்ளி தான். தனியார் அமைப்பு ஏற்படுத்தி கொடுக்கும் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி மாணவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

    கவனம் சிதறாமல் படிக்க வேண்டும். அப்துல் கலாம் கூறியது போல தூங்க விடாத கனவுகளை துரத்தி கொண்டே இருந்தால் நாளை பெரிய தலைவராகவோ, விளையாட்டு நட்சத்திரமாகவோ, நாட்டை ஆளும் பொறுப்பிற்கோ வர முடியும். அதற்கு அடித்தளம் அமைப்பது கல்வி தான்.

    இன்னும் 10 ஆண்டுகளுக்கு பின்பு எப்படி இருக்க வேண்டும் என சிந்தித்து அதற்குரிய முயற்சிகளை தொடருங்கள். தொலைதூர கிராமத்தில் இருப்பதாக நினைத்து சோர்வடைய வேண்டாம். கல்வி நிச்சயம் உங்களை உயர்த்தும். நம்மால் முடியும் என நம்புங்கள். முன்னேறுவீர்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அப்துல் கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • அப்துல் கலாம் கண்டுபிடிப்புகளை நினைவு கூறும் வகையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள திருவாடானை பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் சாந்தி முருகானந்தம் தலைமையில் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பிறந்த தினத்தையொட்டி அப்துல்கலாம் வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    இதில் மாணவ- மாணவிகளுக்கு வாசித்தல், மரம் வளர்த்தல், அறிவியல் மனப்பாங்கு வளர்த்தல் போன்ற அப்துல் கலாம் கண்டுபிடிப்புகளை நினைவு கூறும் வகையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

    • அதியமான் மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • மாணவிகளுக்கு இடையே பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் அமைந்துள்ள அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலர் ஷோபா திருமால் முருகன் அப்துல் கலாம் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    இதில் பேராசிரியர்களும், மாணவிகளும் அஞ்சலி செலுத்தினார்கள். இதனைத்தொடர்ந்து இயற்பியல் துறை சார்பாக ஆஸ்ட்ரோ அவெஞ்சர்ஸ் - 2023 என்ற நிகழ்வின் தொடக்கமாக முதுநிலை இயற்பியல்துறை இரண்டாம் ஆண்டு மாணவி கலையரசி வரவேற்றார்.

    இந்நிகழ்ச்சிக்கு அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலர் ஷோபா திருமால்முருகன், அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சீனி. திருமால்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து மாணவிகளுக்கு இடையே பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. கவிதை போட்டி, வினாடி, வினா, கட்டுரை போட்டி, அப்துல் கலாமின் புகைப்படம் வரைதல் போன்ற போட்டிகள் நடைபெற்றன.

    இந்நிகழ்வின் முடிவில் இளம்அறிவியல் இயற்பியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவி யுவஸ்ரீ நன்றி கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் இயற்பியல் துறை சார்ந்த மாணவிகளும் பிற அறிவியல் துறை மாணவிகளும் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.

    • தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர்.
    • டிஜிட்டல் இந்தியாவில் கையில் எழுதியுள்ள பில்லை காண்பிக்கின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற டாக்டர் அப்துல் கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது : பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை திமுகவினர்களின் ஒரு லட்சம் கோடி சொத்து பட்டியலை வெளியிட்டு இருப்பது தொடர்பான கேள்விக்கு இது ஒன்றும் புதியதாக சொன்னது இல்லை. எல்லாமே தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர்.

    அவர்கள் அண்ணாமலை கட்டி இருக்கும் ரபேல் வாட்ச்க்கு பில் கேட்டு வருகின்றனர். அந்த பில்லை கூட சரியாக காண்பிக்கவில்லை. இந்த டிஜிட்டல் இந்தியாவில் கையில் எழுதியுள்ள பில்லை காண்பிக்கின்றனர். அதில் சீரியல் நம்பர் மாறி உள்ளது.இரண்டு சீரியல் நம்பர் உள்ளது. ஐபிஎஸ்., படித்தவர் யோசனை செய்து செய்வதை சரியாக செய்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் இந்த பிரச்சனையிலிருந்து தப்பித்து இருக்கலாம். வாட்ச் பில்லில் மாட்டிகிட்டாரு. அவர் சொன்னதற்கு நம்பகத்தன்மை இல்லாமல் உள்ளது. ஊழல் என்பது ஒரு சமூக நோய். இதில் எந்த கட்சியும் விதிவிலக்கு அல்ல. மேலும் இதில் தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் விதிவிலக்கு அல்ல.

    மேலும் ஊழல் சமூக நோயாக மாறி இருப்பதால் ஒட்டுமொத்த மக்களின் மனநிலையே மாறி உள்ளது. எதிர்காலத்தில் எந்த அளவிற்கு மாறும் என்பதை மன வருத்தத்துடன் எதிர்நோக்கி இருக்க வேண்டிய சூழல் நிலவி உள்ளது. லஞ்ச ஊழலை ஒரு வியாதியாக எடுத்துக் கொள்ள வேண்டும் .அண்ணாமலை சொல்வதில் புதியது ஒன்றுமில்லை அதானி தொடர்பாக கேள்வியை ராகுல் காந்தி எழுப்பியதால் மோடியிடம் பதில் இல்லை. வாட்சுக்கும் சரியாக பில் காண்பிக்கவில்லை.

    ஓசியாகத்தான் வாங்கினேன் என தெரிவிக்க வேண்டும். நேர்மை இல்லாத அண்ணாமலையால் அவர் சொல்லக்கூடிய பில்லை மக்கள் நம்ப மாட்டார்கள். ஊழல் என்பது ஒழிக்கப்பட வேண்டும். எதிர்கால சமுதாயம் இதுதான் நாடு இதுதான் வழிமுறைகள் என கெட்டுப் போய் விடக்கூடாது. கெட்டுப் போனால் ஒட்டுமொத்த சமுதாயமும் சீரழிந்து விடும். சமூக சீர்கேடு நடக்கும். அதனால் ஊழல் என்கிற நோய் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

    • ராமேசுவரத்தில் உள்ள தேசிய நினைவிடத்தில் அப்துல் கலாம் சமாதி முன்பு ஆலிம்சா அப்துல் ரகுமான் தலைமையில் பிரார்த்தனை நடந்தது.
    • ஜமாத் நிர்வாகிகளும், அப்துல் கலாம் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.

    ராமேசுவரம்:

    மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 91-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

    இதையடுத்து ராமேசுவரத்தில் உள்ள தேசிய நினைவிடத்தில் அப்துல் கலாம் சமாதி முன்பு ஆலிம்சா அப்துல் ரகுமான் தலைமையில் பிரார்த்தனை நடந்தது. இதில் ஜமாத் நிர்வாகிகளும், அப்துல் கலாம் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.

    தமிழக அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் அப்துல் கலாமின் பேரன்கள் ஷேக் சலீம், ஷேக் தாவூத், அண்ணன் மகள் ஆயிஷா பேகம், மகன் ஜெயினுலாதீன், நடிகர் தாமு, ரோட்டரி சங்க நிர்வாகிகள் முருகன், மணிகண்டன், டி.ஆர்.டி.ஓ. சார்பில் பொறுப்பாளர் அன்பழகன், சமூக ஆர்வலர் பழனிசாமி உட்பட ஜமாத் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    • அப்துல்கலாம் குடும்ப குழந்தைகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
    • இந்த நிகழ்ச்சியில் அப்துல்கலாமின் பேரன் சேக் சலீம் உட்பட குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் அருகே உள்ள பேக்கரும்பு பகுதியில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் நினைவு இல்லத்துடன் கூடிய அருங்காட்சியகம் உள்ளது. சுதந்திர தினத்தையொட்டி அப்துல்கலாம் தேசிய நினைவகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் தேசிய கொடி ஏற்றினர்.

    பின்னர் அப்துல் கலாம் சமாதிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். நினைவிடத்தை இதுவரை ஒரு கோடி பேர் பார்வையிட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஒரு கோடியைத் தாண்டி ஒரு கோடியே 1 மற்றும் 2-ல் அடி எடுத்து வைத்த குழந்தைகள் அப்துல் கலாம் குடும்பத்தைச் சேர்ந்த சே.ஆசில் லியானா, சே.ஆசில் மிப்ரா ஆகியோர் சாதனை நிலையை நிகழ்த்தி உள்ளனர்.

    அவர்களுக்கு அப்துல் கலாம் தேசிய நினைவகத்தைச் பராமரித்து வரும் மத்திய அரசின் அங்கமான டி.ஆர்.டி.ஓ. நிர்வாக அதிகாரிகள் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் அப்துல்கலாமின் பேரன் சேக் சலீம் உட்பட குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் நினைவுநாளான இன்று அவர் நல்லடக்கம் செய்யப்பட்ட இடம் மலர் போர்வைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
    • அப்துல் கலாம் நினைவு நாளான இன்று அவர் நல்லடக்கம் செய்யப்பட்ட இடம் மலர் போர்வைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் 7-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி ராமேசுவரம் பேய்க்கரும்பில் உள்ள அவரது நினைவிட கட்டிடம் மலர்கள், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    நினைவு நாளான இன்று அவர் நல்லடக்கம் செய்யப்பட்ட இடம் மலர் போர்வைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று காலை அங்கு வந்த அப்துல்கலாம் குடும்பத்தினர் நினைவிடத்தில் சிறப்பு தொழுகை நடத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் அப்துல் கலாமின் பேரன்கள் சேக்சலீம், சேக்தாவூத், அண்ணன் மகள் நசிமா மரைக்காயர் மற்றும் ராமேசுவரம் ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அப்துல்கலாம் சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    அதன்பின் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சியினர், முக்கிய பிரமுகர்கள் அப்துல்கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

    • சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு போயிருந்தாராம் கலியமூர்த்தி.
    • அவர் மேடையேறி பேசி முடித்த பின் ஒரு இளம்பெண் அவசரம் அவசரமாக மேடைக்கு ஓடி வந்து மைக்கை பிடித்தாளாம்.

    அது அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த காலம். அவர் ஒரு பெண்ணின் திருமணத்தை நிறுத்த உத்தரவிட்டார்.

    அப்போதுதான் திருச்சியில் இருந்த உயர் அதிகாரி கலியமூர்த்தி ஐ.பி.எஸ்.க்கு ஃபோன் வந்தது அப்துல் கலாமிடமிருந்து. "சொல்லுங்க சார்" என்று பணிவுடன் சொன்னார் கலியமூர்த்தி.

    கலாம் சொன்னார்,

    அடுத்த நாள் நடக்க இருக்கும் ஒரு பெண்ணின் கல்யாணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என.

    காரணம் அந்த பெண்ணின் வயது 16. பிளஸ் டூ படித்துக் கொண்டிருக்கிறாள்.

    மாப்பிள்ளைக்கு 47.

    இரண்டாவது கல்யாணம். சொந்த மாமன்.

    கட்டாய கல்யாணம். அந்தப் பெண்ணுக்கு அதில இஷ்டம் இல்ல. அதை எப்படியாவது தடுத்து நிறுத்திடுங்க.

    அப்புறம்அந்தப் பொண்ணு மேலே படிக்கணும்னு ஆசைப்படுது. அதுக்கு வேண்டிய ஏற்பாடுகளை... என்று கலாம் சொல்லி முடிப்பதற்குள்,

    "அதை நாங்க பாத்துக்கிறோம் சார்" என்றார் கலியபெருமாள்.

    "பொண்ணுக்கு எந்த ஊர் சார் ?"

    ஊர் பெயரை சொன்னார் கலாம். துறையூருக்கு பக்கத்தில் ஒரு கிராமம் அது.

    அடுத்த நிமிடமே கலியமூர்த்தி தனது காரில் துறையூரை நோக்கி விரைந்தார்.

    ஏற்கனவே முசிறி காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு ஃபோன் செய்து ஸ்பாட்டுக்கு வரச் சொல்லி விட்டார்.

    கலாம் சொன்னபடியே அந்த கல்யாணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

    அழுதழுது வீங்கிய முகத்தோடு இருந்த பிளஸ் டூ மாணவி சரஸ்வதி நன்றி சொன்னாள்.

    "சரியான நேரத்தில வந்து கல்யாணத்தை நிறுத்தினதுக்கு ரொம்ப தாங்க்ஸ் சார்."

    "நல்லதும்மா, தொடர்ந்து என்ன படிக்கணும்னு ஆசைப்படறேன்னு சொல்லு. எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்றோம்."

    சொன்னாள். கவனமாக குறித்துக் கொண்டார் கலியமூர்த்தி.

    "ஓகே, நாங்க புறப்படறோம்.

    அதுக்கு முன்னால ஒரு சந்தேகம்."

    "என்ன சார் ?"

    "உனக்காக இவ்வளவு தூரம் அக்கறை எடுத்து நம்ம ஜனாதிபதியே எங்கிட்டே பேசினாரே. அவருக்கு யாரும்மா இந்த தகவலை சொன்னது ?"

    "நான்தான் சார்."

    ஷாக் ஆகிப் போனார் கலியமூர்த்தி.

    "எப்படீம்மா ?"

    ஒரு சில ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஒரு கருத்தரங்கம். அதற்கு அப்துல் கலாம் வந்திருந்தார். அப்போது அவர் ஜனாதிபதி ஆகவில்லை.

    அதற்கு இந்தப் பெண் சரஸ்வதியும் போயிருந்தாள்.

    பேசி முடித்து விட்டு கலாம் சொன்னார் : "உங்களில் யாராவது ஏதாவது கேள்விகள் கேட்க விரும்பினால் கேட்கலாம். Only four students..."

    கேள்வி கேட்ட நான்கு பேரில் ஒருவர் இந்தப் பெண்.

    கூட்டம் முடிந்து புறப்படும்போது கேள்வி கேட்ட நால்வரையும் தனியாக அழைத்து பாராட்டினார் கலாம்.

    "இந்தாங்க என்னோட விசிட்டிங் கார்டு. அவசியம் ஏற்பட்டால் தொடர்பு கொள்ளலாம்."

    அந்த கார்டில் அப்துல் கலாமின் மெயில் ஐடி, ஃபோன் நம்பர் இருந்தன.

    எப்படியோ அதை பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தாள் இந்தப் பெண். அதுதான் இந்த ஆபத்துக் காலத்தில் அவளுக்கு உதவியிருக்கிறது.

    இதைக் கேட்ட கலியமூர்த்தி ஆச்சரியப்பட்டு போகிறார்.

    அந்தப் பெண்ணின் மேற்படிப்புக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுத்திருக்கிறார்.

    அத்துடன் அந்த விஷயத்தை மறந்தும் விட்டார்.

    காலம்தான் எவ்வளவு விரைவாக ஓடுகிறது ?

    சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு போயிருந்தாராம் கலியமூர்த்தி. அவர் மேடையேறி பேசி முடித்த பின் ஒரு இளம்பெண் அவசரம் அவசரமாக மேடைக்கு ஓடி வந்து மைக்கை பிடித்தாளாம்.

    யார் இந்தப் பெண்?

    எங்கோ பார்த்தது போல இருக்கிறதே !

    மேடையில் நின்ற அந்தப் பெண்மூச்சு வாங்க சொன்னாளாம். "நல்ல வேளை. எனக்கு இங்கே பேச வாய்ப்பு கிடைத்தது. இல்லாவிட்டால் இத்தனை பேர் மத்தியில் நன்றி சொல்லும் ஒரு நல்ல வாய்ப்பை நான் இழந்திருப்பேன்."

    யாருக்கு நன்றி சொல்ல போகிறாள் இந்தப் பெண்?

    எதுவும் புரியாமல் அமர்ந்திருக்கிறார் கலியமூர்த்தி ஐ.பி.எஸ்.

    "கலியமூர்த்தி சார், நான் இங்கே அமெரிக்காவில் சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலையில் இருக்கிறேன். மூன்றரை லட்சம் ரூபாய் சம்பளம். என் கணவருடன் சந்தோஷமாக இருக்கிறேன்.

    நான் யார் என்று உங்களுக்கு தெரிகிறதா?"

    "தெரியவில்லை" 6என்று சொல்லியிருக்கிறார் கலியமூர்த்தி.

    அந்தப் பெண் கண்களில் நீரோடு தழுதழுத்த குரலில் சொல்கிறாள் :

    "ஒரு காலத்தில் பால்ய விவாகத்திலிருந்து உங்களால் காப்பாற்றப்பட்டவள். படிக்க வைக்கப்பட்டவள். நான்தான் துறையூர் சரஸ்வதி."

    இதை சற்றும் எதிர்பாராத கலியமூர்த்தி சந்தோஷத்தில் கண் கலங்கி போகிறார்.

    "உங்களுக்கும் நன்றி. உங்களுக்கு தூண்டுகோலாக இருந்து என் வாழ்வில் ஒளியேற்றிய அப்துல் கலாம் ஐயாவுக்கும் நன்றி."

    சொல்ல வந்ததை சொல்லி முடித்து விட்ட நிறைவோடு, மேடையை விட்டு இறங்கி போகிறாள் அந்தப் பெண்.

    ஆச்சரியம்தான்.

    அப்படியும் ஒரு காலம் இருந்திருக்கிறது.

    தமிழ்நாட்டில் ஒரு சாதாரண குக்கிராமத்தில் உள்ள ஒரு சாமானிய பெண் ஜனாதிபதியோடு சகஜமாக பேச முடிந்திருக்கிறது. தான் நினைத்ததை சாதிக்க முடிந்திருக்கிறது.

    ஆம். அது ஒரு அழகிய கலாம் காலம்.

    -ஜான்துரை ஆசிர் செல்லையா

    ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

    சமூக பாதுகாப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்காக ரூ.3,985 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூலம் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும். வறுமைக் கோட்டிற்கு கீழ் வரும் குடும்பத்திற்கு விரிவான விபத்து- ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. விபத்து மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையும், நிரந்தர ஊனத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணத் தொகையும் வழங்கப்படும்.



    விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் நலத்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.14.99 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை, கோவை, மதுரையில் முதற்கட்டமாக 500 மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு ரூ.1,031.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் பெயரில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும்.

    சத்துணவு திட்டத்திற்கு ரூ.1772.12 கோடி, ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ.18,273 கோடி, புதிய விரிவான காப்பீடு திட்டத்திற்கு ரூ.250 கோடி, நகராட்சிகளில் குடிநீர் வசதிக்காக ரூ.18,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    திருமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு கள்ளிக்குடி, திருப்பரங்குன்றம் ஆகிய வட்டங்களை உள்ளடக்கிய புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்படும். ரூ.2000 கோடியில் சென்னையில் மல்டி லெவல் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு வரும் நிதியாண்டில் 3000 ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாம் 2-வது முறையாக போட்டியிடாதது ஏன் என்பது குறித்து மகாத்மா காந்தி பேரன் ராஜ்மோகன் காந்தி தனது புத்தகத்தில் அம்பலப்படுத்தி உள்ளார். #Abdulkalam #RajmohanGandhi
    புதுடெல்லி:

    ‘மக்கள் ஜனாதிபதி’ என்று அழைக்கப்பட்ட அப்துல் கலாம், நாட்டின் 11-வது ஜனாதிபதியாக (2002-2007) பதவி வகித்தார். அவருக்கு பின்னர் 12-வது ஜனாதிபதியாக பிரதீபா பட்டீல் இருந்தார்.

    நாட்டின் 13-வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கு 2012-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அப்துல் கலாம் போட்டியிடுவார் என ஒரு எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அவர் போட்டியிடவில்லை.

    இதன் பின்னணி என்ன என்பது குறித்து மகாத்மா காந்தி, ராஜாஜி ஆகியோரின் பேரனான ராஜ்மோகன் காந்தி (வயது 83), தனது ‘நவீன தென் இந்தியா: 17-ம் நூற்றாண்டு முதல் நமது காலகட்டம் வரையிலான சரித்திரம்’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    2007-ம் ஆண்டு அப்துல் கலாமின் பதவி காலம் முடிந்தது. அதன்பின்னர் அவர் இந்தியாவின் கலாசாரம் மீது கொண்டிருந்த ஆர்வம், இந்து அமைப்புகளின் தலைவர்கள் மீதான அவரது தாராளமான பாராட்டு, இந்திய பாதுகாப்புக்கு அவர் ஆற்றிய சேவைகள் என அனைத்தும் இந்திய இந்துக்களுக்கு பிடித்தமான முஸ்லிமாக அவரை ஆக்கியது.

    2012-ம் ஆண்டு அப்துல் கலாம் 2-வது முறையாக ஜனாதிபதி ஆவதற்கு பாரதிய ஜனதா கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் முன்மொழிந்தன. ஆனால் காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும் அந்த யோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை.

    தான் வெற்றி பெறுவதற்கு தேவையான எண்ணிக்கை (ஓட்டுகள்) கிடைக்காது என்று உணர்ந்துதான், அவர் போட்டியிடாமல் ஒதுங்கிக்கொண்டார். பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதி ஆனார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    அப்துல்கலாம் முதல் முறை ஜனாதிபதி ஆனது எப்படி என்பதையும் ராஜ்மோகன் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

    இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “ 2002-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாம் பெயரை முதலில் முன்மொழிந்தது சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ்தான். தேவே கவுடா, ஐ.கே. குஜ்ரால் மந்திரிசபைகளில் ராணுவ மந்திரியாக திகழ்ந்த முலாயம் சிங் யாதவ், டி.ஆர்.டி.ஓ. (ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு) தலைவராக இருந்த அப்துல் கலாமை நன்றாக தெரிந்து வைத்திருந்ததுடன், அவரை விரும்பவும் செய்தார். 2002-ம் ஆண்டு, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஒருவரை ஜனாதிபதியாக தன் சுய பலத்தில் தேர்வு செய்ய முடியாது என்ற நிலை இருந்தது. அப்போது அப்துல் கலாமை ஜனாதிபதி ஆக்குவதில் வாஜ்பாய் மிகுந்த மகிழ்ச்சி கொண்டிருந்தார், சோனியா காந்தியும் அப்துல் கலாமுக்கு ஆதரவு அளிக்க முன்வந்தார். அதனால் அவர் ஜனாதிபதி ஆக முடிந்தது” என கூறி உள்ளார்.

    அப்துல் கலாமுக்கு ராஜ்மோகன் காந்தி புகழாரம் சூட்டவும் தவறவில்லை.



    “அப்துல் கலாம் அணுகக்கூடிய ஜனாதிபதியாக விளங்கினார். மக்களின் ஜனாதிபதி என்ற சிறப்பு பெயரையும் பெற்றார். அவர் புத்திசாலியான ஜனாதிபதியாகவும் இருந்தார். அவர் மிகச்சிறப்பான ஆலோசனைகளையும் நினைவுகூரக்கூடிய வகையில் வழங்கினார். மாணவர்கள் அவரை மிகவும் நேசித்தார்கள்” என ராஜ்மோகன் காந்தி கூறி உள்ளார். #Abdulkalam #RajmohanGandhi
    ×