search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல் கிரிக்கெட்"

    • போட்டி முடிந்ததும் சென்னை அணி ரசிகர்கள் மைதானத்திலேயே இருக்க வேண்டுமென்று சென்னை அணி நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது.
    • சென்னை அணி ரசிகர்களுக்கு ஸ்பெஷலான ஒன்று இருக்கிறது என சிஎஸ்கே அணி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

    ஐபிஎல் 2024 தொடரில் நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

    பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க வேண்டுமானால் எஞ்சிய 2 ஆட்டங்களில் சி.எஸ்.கே. கண்டிப்பாக வெல்ல வேண்டும். இத்தகைய இக்கட்டான கட்டத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ராஜஸ்தான் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

    இந்நிலையில், இந்த போட்டி முடிந்ததும் சென்னை அணி ரசிகர்கள் மைதானத்திலேயே இருக்க வேண்டுமென்று சென்னை அணி நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது.

    சென்னை அணி ரசிகர்களுக்கு ஸ்பெஷலான ஒன்று இருக்கிறது என சிஎஸ்கே அணி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.
    • பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க வேண்டுமானால் எஞ்சிய 2 ஆட்டங்களில் சி.எஸ்.கே. கண்டிப்பாக வெல்ல வேண்டும்.

    சென்னை:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி சென்னையில் தொடங்கியது.

    நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

    பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க வேண்டுமானால் எஞ்சிய 2 ஆட்டங்களில் சி.எஸ்.கே. கண்டிப்பாக வெல்ல வேண்டும். அதே நேரத்தில் ரன் ரேட்டையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

    இத்தகைய இக்கட்டான கட்டத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ராஜஸ்தான் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார்.

    • லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.
    • ராஜஸ்தானை வீழ்த்தி சி.எஸ்.கே. 7-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி சென்னையில் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் உள்ளூர், வெளியூர் என தலா 14 ஆட்டங்களில் மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

    நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

    பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க வேண்டு மானால் எஞ்சிய 2 ஆட்டங்களில் சி.எஸ்.கே. கண்டிப்பாக வெல்ல வேண்டும். அதே நேரத்தில் ரன் ரேட்டையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

    சி.எஸ்.கே. அணி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 6 ஆட்டத்தில் 4-ல் வெற்றி (பெங்களூரு 6 விக்கெட் , குஜராத் 63 ரன், கொல்கத்தா 7 விக்கெட், ஐதராபாத் 78 ரன்) பெற்றது. இரண்டில் (லக்னோ 6 விக்கெட், பஞ்சாப் 7 விக்கெட்) தோற்றது.

    வெளியூரில் ஆடிய 5 போட்டியில் இரண்டில் வெற்றி (மும்பை 20 ரன், பஞ்சாப் 28 ரன்) பெற்றது. 4 ஆட்டத்தில் (டெல்லி 20 ரன், ஐதராபாத் 6 விக்கெட், லக்னோ 8 விக்கெட் , குஜராத் 35 ரன்) தோற்றது.



    ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்சை நாளை (12-ந் தேதி) சந்திக்கிறது. இந்த ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு நடக்கிறது.

    சேப்பாக்கத்தில் நடைபெறும் 7-வது லீக் ஆட்டமாகும். இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். அவர்கள் மற்றொரு கோலாகலத்துக்கு தயாராகிவிட்டனர்.

    இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி சென்னை சூப்பர் கிங்சுக்கு உள்ளது. வெற்றி பெற்றால் தான் 'பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். ராஜஸ்தானை வீழ்த்தி சி.எஸ்.கே. 7-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் மிகவும் வலுவாக இருக்கிறது. இதனால் அந்த அணியை வீழ்த்துவது சென்னை அணிக்கு சவாலானதே. சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் ஆதரவுடன் ஆடுவது மட்டுமே சி.எஸ்.கே.வுக்கு கூடுதல் பலமாகும்.

    குஜராத்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை அணி மிகவும் மோசமாக விளையாடியது. பதிரனா, முஸ்டாபிசுர் ரகுமான் இல்லாதது பந்து வீச்சில் பலவீனத்தை காட்டியது.


    வீரர்கள் அனைவரும் முழு திறமையை வெளிப் படுத்தினால் மட்டுமே ராஜஸ்தானை வீழ்த்த முடியும்.

    டோனி கடைசி கட்ட ஓவர்களில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் சி.எஸ்.கே. ரசிகர்கள் அவரது பேட்டிங்கை காண மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

    சஞ்சு சாம்சன் தலைமை யிலான ராஜஸ்தான் ராயல்ஸ் 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி சி.எஸ்.கே.வை வீழ்த்தி 9-வது வெற்றியுடன் 'பிளே ஆப்' சுற்றுக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது.

    ராஜஸ்தான் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன், பட்லர் ரியான் பராக், யசுவேந்திர சாஹல், அஸ்வின் போல்ட் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 29-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 28 போட்டியில் சென்னை 15-ல், ராஜஸ்தான் 13-ல் வெற்ற பெற்றுள்ளன.

    • டெல்லி அணி 5 ஆட்டங்களில் ஆடி ஒன்றில் மட்டுமே (சென்னைக்கு எதிராக) வெற்றி பெற்றிருக்கிறது.
    • 4 ஆட்டங்களில் ஆடியுள்ள லக்னோ அணி 3 வெற்றி ஒரு தோல்வி என்று புள்ளிப்பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறது.

    லக்னோ:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 26-வது லீக் சுற்று ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோதுகிறது.

    நடப்பு தொடரில் இதுவரை 4 ஆட்டங்களில் ஆடியுள்ள லக்னோ அணி 3 வெற்றி (பஞ்சாப், பெங்களூரு, குஜராத்துக்கு எதிராக), ஒரு தோல்வி (ராஜஸ்தானுக்கு எதிராக) என்று புள்ளிப்பட்டியலில் 3-வது இடம் வகிக்கிறது. வரிசையாக 3 ஆட்டங்களில் வெற்றிக்கனியை பறித்த லக்னோ அந்த வெற்றிப்பயணத்தை தொடரும் வேட்கையில் உள்ளது.

    டெல்லி அணி 5 ஆட்டங்களில் ஆடி ஒன்றில் மட்டுமே (சென்னைக்கு எதிராக) வெற்றி பெற்றிருக்கிறது. லக்னோ ஆடுகளம் மெதுவான தன்மை கொண்டது என்பதால் சுழற்பந்து வீச்சின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கிரிக்கெட் பார்த்தபடி பஸ்சை ஓட்டியது தவறு எனக்கூறி அதிகாரிகளிடம் மன்னிப்பு கடிதம் வழங்கினார்.
    • டிரைவர்கள் மீதும் கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றார்.

    விருத்தாசலம்:

    கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி கடந்த 24-ந் தேதி இரவு வந்த தனியார் பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். டிரைவர், தனது செல்போனில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை பாா்த்தபடி தனியார் பஸ்சை ஓட்டினார். அவரது அலட்சியத்தால் பஸ் விபத்துக்குள்ளாகுமோ என்ற அச்சத்திலேயே பயணிகள் பயணம் செய்தனர்.

    டிரைவர் செல்போனில் கிரிக்கெட் பார்த்தபடி பஸ்சை ஓட்டியதை சில பயணிகள் தங்களது செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர். இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம், மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் சம்பந்தப்பட்ட பஸ் டிரைவரை அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த டிரைவர் விருத்தாசலம் அடுத்த சக்கரமங்கலம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்தது. மேலும் அவர் கிரிக்கெட் பார்த்தபடி பஸ்சை ஓட்டியது தவறு எனக்கூறி அதிகாரிகளிடம் மன்னிப்பு கடிதம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து அவருக்கு உரிய அறிவுரை கூறிய அதிகாரிகள், அவரது ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்தனர். மேலும் ஒரு மாத காலத்திற்கு அவரது ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தனர். இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம் கூறுகையில். வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசக்கூடாது, செல்போனில் வேறு ஏதேனும் பார்க்கக்கூடாது என்று ஏற்கனவே விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறோம்.

    இதையும் மீறி யாரேனும் செல்போன் பார்த்தபடியோ அல்லது செல்போனில் பேசியபடியோ வாகனங்களை இயக்கினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் டிரைவர்கள் மீதும் கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றார்.

    • பெண்கள் ஐ.பி.எல். கோப்பையை பெங்களூரு அணி வென்று உள்ளது.
    • பெங்களூரு அணி ஒரு வெற்றியை பெற்றால் அதன் பின் பல வெற்றிகள் வந்து கொண்டே இருக்கும் என்றார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் கோப்பையை பெங்களூரு அணி வெல்லும் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இந்த ஆண்டு பெண்கள் ஐ.பி.எல். கோப்பையை பெங்களூரு அணி வென்று உள்ளது. தற்போது ஆண்கள் அணி போட்டியில் களம் இறங்க போகிறது. இந்த ஆண்டு தடைகளை உடைத்து ஆண்கள் அணி கோப்பையை வெல்லும் என்ற நம்புகிறேன். இதற்கு பொறுமையாக இருக்க வேண்டும்.

    பெங்களூரு அணி ஒரு வெற்றியை பெற்றால் அதன் பின் பல வெற்றிகள் வந்து கொண்டே இருக்கும் என்றார்.

    • பெல்ஸ் சாலை தற்காலிகமாக ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
    • கண்ணகி சிலையில் இருந்து வரும் மாநகர பேருந்துகள் பெல்ஸ் சாலைக்கு செல்ல அனுமதி இல்லை.

    சென்னை:

    சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வருகிற 22 மற்றும் 26-ந்தேதிகளில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதையொட்டி 2 நாட்களும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பாரதி சாலையில் இருந்து வாகனங்கள் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு செல்லாம். வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு செல்வதற்கு அனுமதி இல்லை.

    பெல்ஸ் சாலை தற்காலிகமாக ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. பாரதி சாலை-பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் செல்லலாம். வாலாஜா சாலை-பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பெல்ஸ் சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

    கண்ணகி சிலையில் இருந்து வரும் மாநகர பேருந்துகள் பெல்ஸ் சாலைக்கு செல்ல அனுமதி இல்லை. நேராக ரத்னா கபே சந்திப்பு வழியாக திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

    ரத்னா கபே சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் பாரதிசாலை -பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து பெல்ஸ் சாலை வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள் இலக்கை சென்றடையலாம்.

    பாரதி சாலை-பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து நேராக வரும் வாகனங்கள் கண்ணகி சிலை செல்வதற்கு அனுமதி இல்லை.

    எம்.டி.வி. ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் வாலாஜா சாலை, உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை, கண்ணகி சிலை, பாரதி சாலை வழியாக விக்டோரியா சாலை சென்று தங்கள் வாகன நிறுத்தத்தை அடையலாம்.

    காமராஜர் சாலையில் இருந்து வரும் பி.ஆர். ஆகிய எழுத்துக்கள் கொண்ட வாகன நிறுத்த அனுமதி அட்டைகள் உள்ள வாகனங்கள் காமராஜர் சாலை, கண்ணகி சிலை, பாரதி சிலை, பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக சென்று வாகன நிறுத்துமிடங்களுக்கு செல்லலாம்.

    அனுமதி அட்டை இல்லாமல் அண்ணா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் வாலாஜா சாலை, உழைப்பாளர் சிலை, காமராஜர் சாலை வழியாக பி.டபிள்யு.டி. எதிராக உள்ள கடற்கரை உட்புறசாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு செல்லலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த ஐ.பி.எல்.லில் வணிக மதிப்பு ரூ.70 ஆயிரம் கோடியாக இருந்தது.
    • ஐ.பி.எல்.லின் ஒளிபரப்பு கட்டணம் உலகின் பிறகு தொழில் முறை லீக்களுடன் ஒப்பிடுகையில் அதிகமாக இருக்கிறது.

    மும்பை:

    உலகின் மிகப்பெரிய பணக்கார விளையாட்டாக ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திகழ்கிறது. 2008- ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த போட்டியில் கோடிக்கணக்கில் பணம் புரள்கிறது. விளம்பரங்கள் மற்றும் ஒளிபரப்பு உரிமம் ஆகியவற்றால் வருவாய் குவிகிறது.

    16-வது ஐ.பி.எல். போட்டி சமீபத்தில் நடந்தது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.

    இந்த நிலையில் ஐ.பி.எல்.லின் வணிக நிறுவன மதிப்பு தற்போது ரூ.1.3 லட்சம் கோடியாகும். இதனை உலகம் முழுவதும் உள்ள பல விளையாட்டு உரிமைகளை மதிப்பிடும் உலகளாவிய முதலீடு வங்கியான ஹெளலி ஹான் லோகி தெரிவித்துள்ளது. இது கடந்த ஐ.பி.எல். போட்டியை விட வணிக மதிப்பு 80 சதவீதம் கூடுதலாகும். கடந்த ஐ.பி.எல்.லில் வணிக மதிப்பு ரூ.70 ஆயிரம் கோடியாக இருந்தது.

    ஐ.பி.எல். போட்டியின் பிராண்ட் மதிப்பு ரூ.26,600 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதில் சென்னை சூப்பர் கிங்சின் பிராண்ட் மதிப்பு தான் அதிகமாக இருக்கிறது. அந்த அணியின் பிராண்ட் மதிப்பு ரூ.1760 கோடியாக உள்ளது. அதற்கு அடுத்தப் படியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ரூ.1605 கோடியாகவும், மும்பை இந்தியன்சுக்கு ரூ.1504 கோடியாகவும், கொல்கத்தா நைட் ரைடர்சுக்கு ரூ.1490 கோடியாகவும் பிராண்ட் மதிப்பு இருக்கிறது.

    ஐ.பி.எல்.லின் ஒளிபரப்பு கட்டணம் உலகின் பிறகு தொழில் முறை லீக்களுடன் ஒப்பிடுகையில் அதிகமாக இருக்கிறது. என்.பி.ஏ., இங்கிலாந்து பிரீமியர் லீக், ஜெர்மனி கால்பந்து லீக் போன்றவற்றை விட ஐ.பி.எல். ஒளிபரப்பு கட்டணம் அதிகமாகும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2023 முதல் 2027 வரை ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி ஸ்டார் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாக வணிக மதிப்பு அதிகரித்துள்ளது. 2017-ம் ஆண்டு கிரிக்கெட் வாரியம் செய்து கொண்ட ஒப்பந்தத்தைவிட இது 3 மடங்கு விலை அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்துக்கான ஏலம் மின்னணு முறையில் நாளை தொடங்குகிறது.
    • ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்துக்கான ஏலத்தில் இருந்து அமேசான் நிறுவனம் திடீரென விலகி உள்ளது.

    மும்பை:

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008- ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதிக ரசிகர்கள் இந்தப் போட்டியை பார்ப்பதால் ஒளிபரப்பு உரிமத்தைபெற எப்போதுமே கடும் போட்டி நிலவும்.

    2008-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை சோனி நெட்வொர்க் நிறுவனம் ரூ.8,200 கோடிக்கு ஒளிபரப்பு உரிமத்தை பெற்று இருந்தது. 2018-ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை ஸ்டார் நிறுவனம் ஐ.பி.எல். போட்டியை ஒளிபரப்பியது. அந்த நிறுவனம் ஒளிபரப்பு உரிமத்தை ரூ.16,347 கோடிக்கு வாங்கி இருந்தது.

    2023-ம் ஆண்டு முதல் 2027-ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கு ஐ.பி.எல். போட்டிக்கான ஒளிபரப்பு மற்றும் இணையவழி பயன்பாட்டுக்கான டிஜிட்டல் உரிமத்துக்கான டெண்டர் பணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கனவே தொடங்கி இருந்தது.

    ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்துக்கான ஏலம் மின்னணு முறையில் நாளை தொடங்குகிறது. இந்த முறை ஐ.பி.எல். போட்டிக்கான உரிமம் இந்திய துணைக்கண்டம் ஒளிபரப்பு என 4 பிரிவாக பிரித்து வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

    ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்துக்கான ஏலத்தில் இருந்து அமேசான் நிறுவனம் திடீரென விலகி உள்ளது.

    ரிலையன்ஸ் நிறுவனத்தின் வியாகாம் 18, ஜே.வி. தற்போதைய ஒளிபரப்பு நிறுவனமான வால்ட் டிஸ்னி (ஸ்டார்), ஜீ குழுமம், சோனி நிறுவனம் ஆகியவை கடும் போட்டியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 10 நிறுவனங்கள் போட்டியில் உள்ளன.

    2 அல்லது 3 ரவுண்டகள் ஏலம் கேட்க வாய்ப்பு உள்ளது. அதிக தொகையை கேட்கும் நிறுவனத்துக்கு ஒளிபரப்பு உரிமம் வழங்கப்படும்.

    ஐ.பி.எல். ஒளிபரப்பு மற்றும் இணைய வழி பயன்பாடுக்கான டிஜிட்டல் உரிமம் மூலம் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.45 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் கோடி வரை வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்து வரும் கேப்டன் டோனி, ஐ.பி.எல். போட்டியின் விக்கெட் கீப்பிங்கில் புதிய சாதனை படைத்துள்ளார்.
    12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி ‘திரில்’ வெற்றியை ருசித்தது.

    முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. பொல்லார்ட் (நாட்-அவுட்) 41 ரன்னும், தொடக்க ஆட்டக்காரர் குயின்டான் டி காக் 29 ரன்னும், இஷான் கிஷன் 23 ரன்னும், கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்னும் எடுத்தனர். சென்னை அணி தரப்பில் தீபக் சாஹர் 3 விக்கெட்டும், ஷர்துல் தாகூர், இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்து வரும் கேப்டன் டோனி, ஐ.பி.எல். போட்டியின் விக்கெட் கீப்பிங்கில் புதிய சாதனை படைத்துள்ளார்.

    இறுதிப்போட்டியில் மும்பை அணி வீரர்கள் குயின்டான் டி காக், ரோகித் சர்மா ஆகியோரின் விக்கெட்டுகளை டோனி தனது கேட்ச் மூலம் ஆட்டம் இழக்க வைத்தார். 190 ஐ.பி.எல். ஆட்டங்களில் விளையாடி இருக்கும் டோனி இதுவரை 132 விக்கெட்டுகளை (94 கேட்ச், 38 ஸ்டம்பிங்) வீழ்த்த காரணமாக இருந்துள்ளார்.

    இதற்கு முன்பு கொல்கத்தா அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக் 182 ஆட்டங்களில் 131 விக்கெட்டுகள் (101 கேட்ச், 30 ஸ்டம்பிங்) விழ காரணமாக இருந்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை டோனி தகர்த்துள்ளார்.





    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. #CSKvsDC #Qualifier2
    விசாகப்பட்டினம்:

    12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டி விட்டது. லீக் ஆட்டங்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின.

    சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி 5-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நேற்று முன்தினம் விசாகப்பட்டினத்தில் நடந்த வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை சாய்த்து 2-வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது. ஐதராபாத் அணி வெளியேற்றப்பட்டது.

    இந்த நிலையில் 2-வது தகுதி சுற்று ஆட்டம் விசாகப்பட்டினத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இறுதிப்போட்டியில் மோதும். இறுதிப்போட்டி ஐதராபாத்தில் நாளை மறுநாள் இரவு நடக்கிறது.

    இறுதிப்போட்டிக்குள் நுழையும் 2-வது அணி எது? என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இதற்கு அனுபவம் வாய்ந்த வீரர்களை கொண்ட சென்னை அணியும், இளம் வீரர்களை அதிகம் உள்ளடக்கிய டெல்லி அணியும் மல்லுக்கட்டுகின்றன.

    3 முறை கோப்பையை வென்றுள்ள சென்னை அணி 8-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வேட்கையில் உள்ளது. இந்த சீசனில் லீக் ஆட்டம் இரண்டிலும் சென்னை அணி, டெல்லியை வீழ்த்தியது. பெரோசா கோட்லா மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், சேப்பாக்கத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் 80 ரன்கள் வித்தியாசத்திலும் சென்னை அணி வெற்றி கண்டு இருந்தது. ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை 20 தடவை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை அணி 14 முறையும், டெல்லி அணி 6 முறையும் வெற்றி பெற்று இருக்கின்றன.

    இந்த சீசனில் தொடக்கத்தில் சிறப்பாக செயல்பட்ட சென்னை அணி கடைசி சில ஆட்டங்களில் எதிர்பார்த்தபடி ஜொலிக்கவில்லை. குறிப்பாக முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை அணி 131 ரன்களே எடுத்தது. அந்த ஆட்டத்தில் கேப்டன் டோனியை தவிர பேட்ஸ்மேன்கள் யாரும் சிறப்பாக செயல்படவில்லை. டோனி இதுவரை 405 ரன்கள் சேர்த்து நல்ல பார்மில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக சுரேஷ் ரெய்னா 364 ரன்னும், பாப் டுபிளிஸ்சிஸ் 320 ரன்னும், அம்பத்தி ராயுடு 261 ரன்னும் எடுத்துள்ளனர். தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே (ஐதராபாத்துக்கு எதிராக 96 ரன்) சிறப்பாக ஆடினார். இதுவரை 268 ரன்கள் எடுத்துள்ள ஷேன் வாட்சன் நல்ல தொடக்கம் அமைத்து கொடுக்க வேண்டியது சென்னை அணிக்கு அவசியமானதாகும்.

    பந்து வீச்சில் சென்னை அணி பலமாகவே உள்ளது. இம்ரான் தாஹிர் 23 விக்கெட்டும், தீபக் சாஹர் 17 விக்கெட்டும், ஹர்பஜன்சிங் 14 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 13 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார்கள். சென்னை மைதானத்தில் டோனி 3 சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்துவார். விசாகப்பட்டினத்தின் ஆடுகளத்தின் தன்மைக்கு தகுந்தபடி வீரர்களை அவர் முடிவு செய்வார். சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் நீக்கப்பட்டால் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்.

    டெல்லி அணியின் பேட்டிங் வலுவானதாக இருக்கிறது. ஷிகர் தவான் (503 ரன்கள்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (450 ரன்கள்), ரிஷாப் பான்ட் (450 ரன்கள்), பிரித்வி ஷா (348 ரன்கள்) நல்ல நிலையில் உள்ளனர். வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் பிரித்வி ஷா, ரிஷாப் பான்ட் ஆகியோர் அதிரடியாக ஆடினார்கள். பந்து வீச்சில் ரபடா இல்லாதது இழப்பு என்றாலும் கிறிஸ் மோரிஸ் (13 விக்கெட்), இஷாந்த் ஷர்மா (12 விக்கெட்), அமித் மிஸ்ரா (10 விக்கெட்), அக்‌ஷர் பட்டேல், கீமோ பால் (இருவரும் தலா 9 விக்கெட்) ஆகியோர் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

    டெல்லி அணி, விசாகப்பட்டினம் ஆடுகளத்தில் ஏற்கனவே ஆடிய அனுபவம் இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும். முந்தைய லீக் ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து இறுதிப்போட்டிக்குள் முதல்முறையாக அடியெடுத்து வைக்க டெல்லி அணி தீவிரம் காட்டும். இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    சென்னை சூப்பர் கிங்ஸ்: பாப் டுபிளிஸ்சிஸ், ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, எம்.விஜய், அம்பத்தி ராயுடு, டோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, வெய்ன் பிராவோ, தீபக் சாஹர், ஹர்பஜன்சிங் அல்லது ஷர்துல் தாகூர், இம்ரான் தாஹிர்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ்: பிரித்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ரிஷாப் பான்ட், காலின் முன்ரோ, அக்‌ஷர் பட்டேல், ரூதர்போர்டு, கீமோ பால், அமித் மிஸ்ரா, டிரென்ட் பவுல்ட், இஷாந்த் ஷர்மா.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. #CSKvsDC #Qualifier2
    சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.டோனி, ஐபிஎல் போட்டிகளில் 200 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். #IPL2019 #CSK #RCBvCSK #Dhoni
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 39-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

    டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் ஆடிய பெங்களூரு அணி  20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  சென்னை அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். 

    இதையடுத்து, டோனி தனி ஒருவனாக போராடினார். அரை சதம் அடித்து அசத்திய அவர் 84 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். அவர் 48 பந்தில் 7 சிக்சர், 5 பவுண்டரியுடன் 84 ரன்கள் எடுத்தார்.

    இதன்மூலம் ஐ.பி.எல். போட்டிகளில் 200 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை டோனி படைத்தார். இவர் 203 சிக்சர்கள் அடித்துள்ளார். #IPL2019 #CSK #RCBvCSK #Dhoni
    ×