என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கங்கனா ரணாவத்"
- சர்ச்சையான கருத்துக்களை பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளார்.
- பல முறை சிந்தித்து கருத்துக்களை வெளியிட வேண்டும்.
புதுடெல்லி:
பா.ஜ.க. எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரணாவத் அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
சமீபத்தில் விவசாயிகள் போராட்டம் மற்றும் ரத்து செய்யப்பட்ட 3 பண்ணை சட்டங்கள் தொடர்பாக கங்கனா ரணாவத் தெரிவித்த சர்ச்சையான கருத்துக்கள் நாடு முழுவதும் அவருக்கு எதிராக எதிர்ப்பை கிளப்பிய நிலையில் தனது கருத்துக்களை அவர் திரும்ப பெற்றுக் கொண்டார்.
நேற்று மகாத்மா காந்தியின் பிறந்தநாள் மற்றும் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டன.
இந்த நிலையில் தேசப்பிதா மகாத்மா காந்தி என்று எழுதப்பட்ட காந்தியின் சிலை அருகே நின்றபடி நடிகை கங்கனா ரணாவத் ஒரு வீடியோ பதிவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
அதில் இந்திய நாட்டில் தேசப்பிதாக்கள் இல்லை. அனைவரும் மகன்கள் தான். மகாத்மா காந்தியும், லால்பகதூர் சாஸ்திரியும் பாரத தாயின் ஆசி பெற்ற மகன்கள்... என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மகாத்மா காந்தியின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி சிறப்பான முறையில் முன்னெடுத்து வருவதாகவும் அவர் வாழ்த்து தெரி வித்துள்ளார்.
தேசப்பிதா மகாத்மா காந்தி தொடர்பான கங்கனா ரணாவத்தின் இந்த சர்ச்சையான விமர்சனம் பல்வேறு தரப்பினர் மத்தியில் எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க.விலும் நடிகை கங்கனா ரணாவத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளன.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சுப்ரியா ஸ்ரீநேட் கருத்து தெரிவிக்கையில், மகாத்மா காந்தியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடிகை கங்கனா ரணாவத் தேசப்பிதா காந்தி மீது கேலியான விமர்சனத்தை வைத்துள்ளார்.
மேலும் பா.ஜ.க.வில் கோட்சேயின் வழித்தோன்றல்கள் இது போன்று காந்திக்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பது வழக்கம் என்றாலும் கோட்சேயின் பக்தர்களை பிரதமர் நரேந்திர மோடி எந்த வகையில் மன்னிக்கப் போகிறார்.
மகாத்மா காந்தி தான் நாட்டின் தந்தை நாம் எல்லோரும் அவரது பிள்ளைகள் என்ற உயர்ந்த எண்ணத்தோடு ஒவ்வொரு இந்தியர்களும் மகாத்மா காந்திக்கு உரிய மரியாதை செலுத்தி வருகிறார்கள் என்றும் சுப்ரியா ஸ்ரீநேட் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. மூத்த தலைவர் மனோரஞ்சன் காலியாவும் கங்கனா ரணாவத்தின் கருத்துக்கு எதிர்வினை ஆற்றியுள்ளார்.
மகாத்மா காந்தியின் 156-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது நடிகை கங்கனா ரணாவத் கூறிய சர்ச்சை கருத்து பதிவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள மனோரஞ்சன் காலியா நடிகை கங்கனாவின் அரசியல் பயணம் மிகக் குறுகியது.
சர்ச்சை கருத்துக்களை அடிக்கடி கூறி பரபரப்பு ஏற்படுத்துவதை அவர் வழக்கமாக கொண்டிருக்கிறார் என்றும் தனது சமூக வலைதள பக்கத்தில் மனோ ரஞ்சன் காலியா தெரிவித்துள்ளார்.
மேலும் அரசியல் அவரது முழு நேர துறை அல்ல, அரசியல் வாதிகள் பொறுப்புடனும், எச்சரிக்கையுடனும் பேச கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு முறை அல்ல பல முறை சிந்தித்து கருத்துக்களை வெளியிட வேண்டும்.
ஆனால் நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சையான கருத்துக்களை பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளார் அவரது செயல்பாடுகள் பா.ஜ.க.வுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
கங்கனா ரணாவத்தின் மகாத்மா காந்தி தொடர்பான சர்ச்சை பதிவிற்கு காங்கிரஸ் மட்டுமின்றி பா.ஜ.க. தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளன.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் இமாச்சல பிரதேசம் மாண்டி தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட கங்கனா ரணாவத் தற்போது நடிகை மட்டுமல்ல, பா.ஜ.க. பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அவரது கருத்துக்கள் இருக்க வேண்டும் என்பதை அவர் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் எதிர்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- எமர்ஜென்சி படத்தில் இந்திரா காந்தி வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார்.
- எமர்ஜென்சி திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
மும்பை:
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அறிவித்த அவசரநிலை பிரகடனத்தை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ள எமர்ஜென்சி படத்தில் இந்திரா காந்தி வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். இந்தப் படத்தை அவரே இயக்கி, தயாரித்துள்ளார். ரித்தேஷ் ஷா திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் கங்கனா ரணாவத் வெற்றி பெற்று எம்.பியான பின் வெளியாகும் முதல் திரைப்படம் இதுவாகும். இந்தப் படம் வெற்றியடைய பெரிதும் நம்பிக்கையுடன் காத்துள்ளார் கங்கனா ரணாவத். எமர்ஜென்சி திரைப்படம் அடுத்த மாதம் 6-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், எமர்ஜென்சி திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அப்போது கங்கனா ரணாவத் பேசியதாவது:
ஷாருக் கான், அமிர் கான், சல்மான் கான் என 3 பேரையும் எனது தயாரிப்பு, இயக்கத்தில் நடிக்க வைக்க மிகுந்த ஆசையாக உள்ளது. நன்றாக நடிக்கவும், அவர்களை அழகாக திரையில் காண்பிக்கவும் ஆசை. அவர்களால் மிகப்பெரிய மக்கள் கூட்டத்துடன் ஒன்றிணைய முடியும்.
அதனால் அவர்களால் சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உண்டாக்க முடியும். அவர்கள் திறமைசாலிகள் மட்டுமல்ல அவர்களால் இந்தி சினிமாவுக்கு நல்ல வருமானமும் கிடைக்கின்றன. அதற்காக அவர்களுக்கு மிகவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என தெரிவித்தார்.
- ராகுல் காந்தி மிகவும் ஆபத்தான மனிதர். விஷமி. அழிவுகரமானவர்.
- நாட்டு மக்கள் உங்களை ஒருபோதும் பிரதமராக்க மாட்டார்கள்.
புதுடெல்லி:
ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி விமர்சித்து இருந்தார். செபியின் நேர்மை சமரசத்துக்கு உள்ளாகி இருக்கிறது என்று குற்றம் சாட்டி இருக்கிறார்.
இந்தநிலையில் ராகுல் காந்தி மிகவும் ஆபத்தானவர் என்று நடிகையும், பா.ஜனதா எம்.பி.யுமான கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
ராகுல் காந்தி மிகவும் ஆபத்தான மனிதர். விஷமி. அழிவுகரமானவர். அவரால் பிரதமராக முடியாவிட்டால் இந்த நாட்டை அழித்துவிடலாம் என்பதே அவரது செயல்திட்டமாக இருக்கிறது.
நமது பங்குச் சந்தையை குறிவைத்து வெளியிடப்பட்ட ஹிண்டன்பெர்க் அறிக்கை, ராகுல் காந்தி ஆதரவுடன் வெளியானது என்பது நேற்று இரவு உறுதியானது. இந்த நாட்டின் பாதுகாப்பையும், பொருளாதாரத்தையும் சீர்குலைக்க அவர் எல்லா முயற்சிகளையும் செய்கிறார்.
நீங்கள் (ராகுல் காந்தி) வாழ்நாள் முழுவதும் எதிர்க்கட்சியில் அமர தயாராகுங்கள். நாட்டு மக்கள் உங்களை ஒருபோதும் பிரதமராக்க மாட்டார்கள். நீங்கள் ஓர் அவமானம்.
இவ்வாறு கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
- பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
- ஜனநாயக முறையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதமரை பற்றி ராகுல்காந்தி பேசுவது தவறான முன்னுதாரணமாகும்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மக்களவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். பாஜக-வின் சக்கரவியூகத்தை உடைத்து எறியும் காலம் விரைவில் வரும் என்றும் கூறினார்.
இதற்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில், ராகுல்காந்தி பேச்சு குறித்து பாஜக எம்.பி.யும் இந்தி நடிகையுமான கங்கனா ரணாவத் கூறுகையில்,
ஜனநாயக முறையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதமரை பற்றி ராகுல்காந்தி பேசுவது தவறான முன்னுதாரணமாகும். ராகுல் காந்தி இப்படி பேசுவதை பார்க்கும்போது மது அல்லது போதை பொருளை பயன்படுத்தியவாறு பாராளுமன்றத்துக்குள் வருகிறாரா? என்று அவரை சோதனை செய்ய வேண்டும் என்று கூறினார்.
அவரது கருத்து பலத்த சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
- 21-ந்தேதிக்குள் பதில் அளிக்க கோர்ட்டு உத்தரவு.
- கங்கனா ரணாவத் வெற்றியை எதிர்த்து வழக்கு.
பாராளுமன்ற தேர்தலில் நடிகை கங்கனா ரணாவத் இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங்கை 74,755 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
இந்த நிலையில் மண்டி தொகுதியில் கங்கணா ரணாவத் வெற்றியை எதிர்த்து இமாச்சல பிரதேச ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
லயக்ராம் நெகி என்பவர் மண்டி தொகுதியில் தனது வேட்பு மனு தவறாக நிராகரிக்கப்பட்டதாக அவர் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு கங்கனா ரணாவத் ஆகஸ்ட் 21-ந்தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டது.
- கங்கனா தனது உறவினர் வருண் ரணாவத்தின் திருமணத்தில் கலந்து கொண்டார்.
- நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா வருணுக்கு சண்டிகரில் ஒரு வீட்டை பரிசளித்துள்ளார்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மாண்டி தொகுதியில் போட்டியிட்டு கங்கனா ரணாவத் வெற்றி பெற்றார்.
பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக மாண்டி தொகுதியில் பதவியேற்ற கங்கனா தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்காகவும் நேரத்தை ஒதுக்கி வருகிறார்.
அந்தவகையில் கங்கனா தனது உறவினர் வருண் ரணாவத்தின் திருமணத்தில் கலந்து கொண்டார். அப்போது நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா வருணுக்கு சண்டிகரில் ஒரு வீட்டை பரிசளித்துள்ளார்.
இதையடுத்து வருண் தனது இன்ஸ்டாகிராமில், "நன்றி தீதி கங்கனா ரணாவத். இப்போது சண்டிகரில் வீடு உள்ளது," என்று படங்களுடன் பதிவிட்டுள்ளார்.
வருணின் மனைவி அஞ்சலி ரணாவத் தனது இன்ஸ்டாகிராமில் புதிய வீட்டின் கிரக பிரவேச புகைப்படங்களை பதிவிட்டு, கங்கனாவை "அன்பு, அடக்கம் மற்றும் தைரியம்" என்றும் பாராட்டியுள்ளார்.
- கங்கனா ரணாவத்தின் ‘தேஜஸ்’ திரைப்படம் 27-ஆம் தேதி வெளியானது.
- முதல் நாளில் இருந்தே இப்படம் வசூலில் சரிவைச் சந்தித்து வருகிறது.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். இவர் சமீபத்தில் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி 2 திரைப்படத்தில் ராகவா லாரன்ஸுடன் நடித்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதைத்தொடந்து கங்கனா ரணாவத்தின் 'தேஜஸ்' திரைப்படம் 27-ஆம் தேதி வெளியானது. சர்வேஷ் மேவாரா இயக்கிய இந்தப் படத்தில் கங்கனா விமானப்படை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே வசூலில் சரிவைச் சந்தித்து வருகிறது. கூட்டம் இல்லாததால் பல திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், நடிகை கங்கனா ரசிகர்களுக்குக் கோரிக்கை விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கொரோனாவுக்கு முன்பே திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருவது குறைந்தது. அதற்குப் பின் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இலவச டிக்கெட்டுகள் உட்பட நியாயமான சலுகைகள் வழங்கப்பட்டும் பல திரையரங்குகள் மூடப்பட்டு விட்டன. அந்தச் சரிவு தொடர்கிறது. அதனால், திரையரங்குகளுக்குச் சென்று படங்களைக் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பார்த்து மகிழுங்கள். இல்லை என்றால் திரையரங்கை நடத்துகிறவர்கள் வாழ முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
Even before covid theatrical footfalls were dipping drastically post covid it has become seriously rapid.
— Kangana Ranaut (@KanganaTeam) October 28, 2023
Many theatres are shutting down and even after free tickets and many reasonable offers drastic footfall decline is continuing.
Requesting people to watch films in theatres… pic.twitter.com/Mty9BTcpkD
- கங்கனா சமீபத்தில் வெளியான சந்திரமுகி 2 படத்தில் சந்திரமுகியாக நடித்து இருந்தார்.
- இவருக்கு சிறந்த நடிகைக்கான சினிமா விருது வழங்கப்பட்டது.
ஜெயம் ரவியுடன் தாம் தூம் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கங்கனா ரணாவத். அடுத்ததாக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தன்மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். சில ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் வெளியான சந்திரமுகி 2 படத்தில் சந்திரமுகியாக நடித்து இருந்தார். கேங்ஸ்டர் என்ற படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான சினிமா விருது வழங்கப்பட்டது.
தொடர்ந்து இந்தி சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கும் கங்கனா ரணாவத் சர்ச்சையாக பேசிய கருத்துக்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு ஓய் பிரிவு பாதுகாப்புடன் வெளியில் வருகிறார். நவராத்திரி திருவிழாவை ஒட்டி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராவணன் உருவ பொம்மையை அம்பு எய்து எரித்தார் 50 வருடத்திற்கு பிறகு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரே பெண்மணி கங்கனா என்ற பெயரை பெற்றார்.
இந்நிலையில் இவர் நடித்த தேஜஸ் படம் இப்போது வெளியாகியுள்ளது. இதையொட்டி அவர் கூறும்போது, "தேஜஸ் படத்திற்கு பிறகு தொடர்ந்து மூன்று படங்களில் நடிக்க இருக்கிறேன். விஜய் சேதுபதியுடன் திரில்லர் படத்தில் நடிக்க உள்ளேன். அதற்கு அடுத்ததாக தனு வெட்ஸ் மூன்றாம் பாகத்திலும் நோட்டிபினோதினி என்ற படத்திலும் நடிக்க இருக்கிறேன்" என்றார்.
- ’சந்திரமுகி -2’ திரைப்படத்தில் நடிகை கங்கனா சந்திரமுகியாக நடித்துள்ளார்.
- இப்படம் செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து சென்னையில் 'சந்திரமுகி -2' படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இதில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், "சந்திரமுகி -2 திரைப்படத்தில் நடிப்பது எனக்கு பெருமை. கங்கனா இந்த படத்தில் வந்தது மிகப்பெரிய பிளஸ். இந்த படத்தில் ஜோதிகா போன்று கங்கனா நடித்துள்ளாரா? என்று அனைவரும் என்னிடம் கேட்கிறார்கள். ஜோதிகாவையும், கங்கனாவையும் ஒப்பிடவே கூடாது. ஜோதிகா, தன்னை சந்திரமுகியா நினைத்துக் கொண்டார். சந்திரமுகி எப்படி இருப்பார் என்று நடித்து காண்பித்தார். இந்த படத்தில் தான் ஒரிஜினல் சந்திரமுகி யாருனு காண்பிக்கிறார்கள். கங்கனா 'சந்திரமுகி'கதாபாத்திரத்தை எவ்வளவு சிறப்பாக செய்ய முடியுமோ அதை செய்திருக்கிறார். இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி" என்று பேசினார்.
- இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'சந்திரமுகி -2'.
- லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார்.
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'சந்திரமுகி -2' திரைப்படத்தின் 'ஆட்டநாயகி' பாடல் வெளியாகியுள்ளது. மதன் கார்க்கி வரிகளில் ஸ்ரீநிதி திருமலா பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- 'சந்திரமுகி -2' திரைப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.
- இப்படத்தில் சந்திரமுகியாக கங்கனா நடிக்கிறார்.
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் கதை கேட்காமலேயே சந்திரமுகியாக நடிக்க கங்கனா ஒப்புக் கொண்டதாக இயக்குனர் பி. வாசு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கங்கனாவிடம் இந்திப் படம் ஒன்றின் கதையை சொல்ல சென்றதாகவும் அப்போது 'சந்திரமுகி- 2' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதையும் அதில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிக்க யாரையும் முடிவு செய்யவில்லை என்று தெரிந்ததும் நானே நடிக்கிறேன் என்று கங்கனா ஒப்புக் கொண்டதாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
- இந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத்.
- இவர் நடிப்பது மட்டுமல்லாமல் படங்களை இயக்கியும் வருகிறார்.
இந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கங்கனா ரணாவத் இயக்கி நடித்துள்ள படம் 'எமர்ஜென்சி'. இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மட்டும் மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அண்மையில் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 'எமர்ஜென்சி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்