search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடவுள் ராமர்"

    • காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு ஊழல் வரலாறு உண்டு.
    • பாரபங்கி மக்களவைத் தொகுதிக்கு ஐந்தாம் கட்டமாக மே 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சி அமைப்பார் என்றும் கடவுள் ராமர் கூட தனது "தீவிர பக்தன்" வெற்றி பெற விரும்புகிறார் என்று அவர் கூறினார்.

    நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், "மோடி அலை தற்போது சுனாமியாக மாறியுள்ளது" என்று இங்குள்ள ஹைதர்கரில் பாஜக வேட்பாளர் ராஜ்ராணி ராவத்தை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பேரணியில் யோகி ஆதித்யநாத் கூறினார்.

    அப்போது யோகி ஆதித்யநாத் மேலும் கூறியதாவது:-

    பிரதமர் மோடியின் தலைமையில், சாதி, சமூகம் என்ற வேறுபாடின்றி அனைவரும் வளர்ச்சித் திட்டங்களால் பயனடைந்துள்ளோம்.

    எங்கள் அன்புக்குரிய பகவான் ராமரும் தனது தீவிர பக்தர் (பிரதமர் மோடி) மீண்டும் நாட்டின் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

    காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு ஊழல் வரலாறு உண்டு. இவர்கள் பெரிய கூற்றுக்களை கூறுகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால், அவர்கள் காலத்தில் மக்கள் பசியால் இறந்தனர், விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர், இளைஞர்கள் இடம்பெயர்ந்தனர்.

    ஆனால், பிரதமர் மோடியின் தலைமையில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றத்திற்கு நாம் அனைவரும் சாட்சிகள். கடந்த 4 ஆண்டுகளாக 80 கோடி பேர் இலவச ரேஷன், 12 கோடி விவசாயிகள் கிசான் சம்மான் நிதி மூலம் பலன் பெற்றுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாரபங்கி மக்களவைத் தொகுதிக்கு ஐந்தாம் கட்டமாக மே 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அயோத்தியில் ராமர் கோவில் ஒருபோதும் கட்ட முடியாது என எல்லோரும் நினைத்தனர். ஆனால், பா.ஜனதா அயோத்தி ராமர் கோவிலை கட்டியது.
    • ஆனால், பா.ஜனதா அயோத்தி ராமர் கோவிலை கட்டியது.

    பிரதமர் மோடி சத்தீஸ்கர் மாநிலம் சக்தி என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பா.ஜனதா தலைமையிலான அரசு மீண்டும் 3-வது முறையாக ஆட்சி அமைக்க உங்களுடைய ஆசீர்வாதத்தை பெற நான் இங்கே வந்துள்ளேன். மோடியின் ஒவ்வொரு உத்தரவாதத்திற்கும் சத்தீஸ்கர் மக்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

    அயோத்தியில் ராமர் கோவில் ஒருபோதும் கட்ட முடியாது என எல்லோரும் நினைத்தனர். ஆனால், பா.ஜனதா அயோத்தி ராமர் கோவிலை கட்டியது.

    ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை புறக்கணித்து காங்கிரஸ் தலைவர்கள் புனிதர்களை அவமதித்தனர். கடவுள் ராமரை விட தன்னை பெயரிதாக காங்கிரஸ் நினைக்கிறது.

    டிரோன் புரட்சி விவசாயத்துறையில் மாற்றத்தை கொண்டு வரும். டிரோன்களை இயக்கும் பயிற்சிகளை பெண்கள் பெறுவார்கள். பழங்குடியின பெண் நாட்டின் ஜனாதிபதியாகிய போது, காங்கிரஸ் அவரை இழிவுப்படுத்தியது. நாட்டின் பெரும்பகுதியில் காங்கிரஸ் நிராகரிக்கப்பட்டுள்ளது. நாளை காஙகிரஸ் அம்பேத்கரின் அரசமைப்பை புறக்கணிக்கும்.

    மோடிக்கு யாராலும் தீங்கு விளைவிக்க முடியாது. லட்சக்கணக்கான தாய்மார்களும் நாட்டு மக்களும் மோடியின் பாதுகாப்புக் கவசமாக உள்ளனர். யாராலும் அரசமைப்பை மாற்ற முடியாது. அம்பேத்கர் வந்து வலியுறுத்தினாலும் கூட அது நடக்காது.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜனவரி 22-ம் தேதி அன்று நடந்த கொண்டாட்டம் அரசியல் சார்ந்தது.
    • நாம் ராமரை வணங்குபவர்கள் அவர்கள் (பாஜக) ராமர் வியாபாரிகள் என்றார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், தகவல் தொடர்பு பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    வீட்டுக்கு வீடு உத்தரவாத திட்டத்தை நாங்கள் ஆரம்பித்துள்ளோம். 8 கோடி உத்தரவாத அட்டைகளை வீடுகளுக்கு விநியோகித்து வருகிறோம். ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா என 3 சூப்பர் ஸ்டார் பிரச்சாரகர்கள் வெவ்வேறு மாநிலங்களில் பிரசாரம் செய்கிறார்கள்.

    ஜனவரி 22-ம் தேதி அன்று நடந்த கொண்டாட்டம் அரசியல் சார்ந்தது. இது ஒரு அரசியல் நபருக்காக செய்யப்பட்டது.

    நாம் ராமரை வணங்குபவர்கள் அவர்கள் (பாஜக) ராமர் வியாபாரிகள். மதத்தை அரசியலாக்குவது மதத்தையும் அரசியலையும் வீழ்த்துகிறது என தெரிவித்தார்.

    • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாட்டு மக்களை ஓரணியில் ஒருங்கிணைத்துள்ளது.
    • இந்தாண்டு 13 விளையாட்டு வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.

    புதுடெல்லி:

    மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

    அயோத்தியில் நடந்த ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாட்டு மக்களை ஓரணியில் ஒருங்கிணைத்து உள்ளது. அனைவரின் மனங்களில் ராமர் உள்ளார்.

    கடந்த 22-ம் தேதி மாலை நாடு முழுவதும் ராமஜோதி ஏற்றி தீபாவளி பண்டிகை கொண்டாடினர். அன்று நாட்டின் பலம் தெரிந்தது. கடவுள் ராமரின் ஆட்சி, நமது அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு முன்மாதிரியாக இருந்துள்ளது.

    பத்ம விருதுகளால் கவுரவிக்கப்படும் பலர், பெரிய மாற்றங்களைச் செய்ய அடிமட்டத்தில் இருந்து பணியாற்றியவர்கள்.

    பத்ம விருதுகள் அமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அந்த விருது மக்களின் பத்மா ஆக மாறியுள்ளது. திறமையான விளையாட்டு வீரர்கள் அர்ஜூனா விருது மூலம் கவுரவிக்கப்பட்டனர்.

    இந்தாண்டு 13 விளையாட்டு வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. நமது இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை உயரத்திற்கு கொண்டு சென்ற வெளிநாட்டினருக்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், தைவான், மெக்சிகோ மற்றும் வங்காள தேசத்தைச் சேர்ந்தவர்களும் விருது பெற்றுள்ளனர்.

    இந்தாண்டு குடியரசு தின அணிவகுப்பு சிறப்பாக இருந்தது. இந்த அணிவகுப்பில் இருந்த பெண்கள் சக்தி குறித்து அனைவரும் பேசினர்.

    இன்றைய இந்தியாவில் நமது மகள்கள், பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சிறப்பாக பணியாற்றுகின்றனர். சுய உதவிக் குழுக்களில் பெண்கள் முத்திரை பதித்துள்ளனர். நாடு முழுவதும் இக்குழுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களின் பணியும் விரிவடைகிறது.

    இன்று நிறைய பேர் தங்களது மரணத்திற்கு பிறகு உடல் உறுப்பு தானம் செய்கின்றனர். இந்த முடிவு எளிதானது அல்ல. ஆனால், பலரின் வாழ்க்கையை காப்பாற்றி உள்ளது. இவர்களின் கடைசி ஆசையை நிறைவேற்றிய குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என தெரிவித்தார்.

    • 14 ஆண்டுகளாக காட்டில் வசிக்கும் ஒருவர் சைவ உணவுகளை எங்கு தேடுவார்?
    • நான் சொல்வது சரியா அல்லது இல்லை?

    சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜிதேந்திர அவாத் மகாராஸ்டிரா மாநிலம் ஷீரடியில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது கூறியதாவது:-

    கடவுள் ராமர் சைவம் உண்பவர் அல்ல. அவர் அசைவம் உண்பவர். 14 ஆண்டுகளாக காட்டில் வசிக்கும் ஒருவர் சைவ உணவுகளை எங்கு தேடுவார்?. நான் சொல்வது சரியா அல்லது தவறா? (மக்களை நோக்கி கேள்வி கேட்டார்.)

    மேலும் யார் என்ன சொன்னாலும் கவலை இல்லை. மகாத்மா காந்தி மற்றும் நேரு ஆகியோரால்தான் நாம் சுதந்திரம் பெற்றோம் என்பது உண்மை. இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த மகாத்மா காந்தி ஓபிசி என்பதால் அவர்களால் (ஆர்.எஸ்.எஸ்.) ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை. காந்தியின் படுகொலைக்கு சாதிவெறிதான் உண்மையான காரணம்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிற 22-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கும் நிலையில், அவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அயோத்தியில் அடுத்த ஆண்டு ஜனவரி 22-ம் தேதி ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது.
    • பள்ளி பாடப் புத்தகங்களில் கடவுள் ராமரின் வரலாறு இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியானது.

    புதுடெல்லி:

    உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் ஜனவரி 22-ம் தேதி ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

    இந்நிலையில், வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து அமைக்கப்பட்டுள்ள என்.சி.இ.ஆர்.டி. சமூக அறிவியல் நிபுணர் குழு, கடவுள் ராமர் பற்றிய பாடங்களை இடம்பெறச் செய்யலாம் என்ற பரிந்துரையை வழங்கி இருப்பதாக தெரிகிறது.

    சங்க கால இந்தியா என்ற பிரிவில் ராமாயணம், ராமர் அயோத்தியை ஆட்சி செய்த விதம், வனவாசம் உள்ளிட்டவை இடம்பெறும் வகையிலான பரிந்துரை வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    இதனை அரசு ஏற்கும் பட்சத்தில், விரைவில் பள்ளி பாடப் புத்தகங்களிலும் கடவுள் ராமர் குறித்த வரலாறு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • அயோத்தி தீப உற்சவத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
    • அப்போது பேசிய அவர், கடவுள் ராமரின் லட்சியங்களை பின்பற்றுவது அனைத்து இந்தியர்களின் கடமை என்றார்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெற்ற தீப திருவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். மாலையில் சரயு நதியின் புதிய படித்துறையில் ஆரத்தியை பார்வையிட்ட அவர், பிரமாண்ட தீப உற்சவத்தையும் தொடங்கி வைத்தார். இந்த தீப திருவிழாவில் 18 லட்சம் தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது. விழாவில் உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், அமைச்சர்கள், உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அயோத்தி தீப உற்சவத்தை தொடங்கி வைத்தபின் பிரதமர் மோடி பேசியதாவது:

    பகவான் ராமரின் ஆளுமையை போற்றவும், உலகளவில் நமது அடையாளத்தை நிலைநாட்டவும் கர்த்வய பாதையை நாங்கள் கொண்டுவந்துள்ளோம்.

    சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் நேரத்தில் தீபாவளி வந்துள்ளது. ராமரின் சங்கல்ப சக்தி இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும்.

    பிரயாக்ராஜ் நகரில் 51 அடி உயரத்தில் ராமர் மற்றும் நிஷாத்ராஜ் சிலை நிறுவப்படும் என தெரிவித்தார்.

    கடவுள் ராமருக்கு அயோத்தியில் பிரமாண்ட கோவில் கட்டப்பட்டு வரும் நிலையில், அவரின் பிறப்பிடம் குறித்து தொடர்ந்து சர்ச்சைக்கான கருத்துகள் வந்த வண்ணம் உள்ளன.
    இந்துக்கள் வழிபடும் கடவுள்களில் ஒருவர் ராமர். வட இந்தியாவில் இவருக்கு மிகப்பெரிய அளவில் கோவில் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. ராமர் பிறந்த அயோத்தியில் பா.ஜனதா அரசு பிரமாண்ட கோவில் கட்டி வருகிறது.

    இதற்கிடையே ராமர் பிறந்த இடம் குறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துகள் வெளியாகியுள்ளன. நேபாள முன்னாள் பிரதர் கே.பி. சர்மா ‘‘ராமரின் பிறப்பிடம் இந்தியாவில் உள்ள அயோத்தி நகரம் என்பது உண்மையில்லை. காத்மண்டு அருகே உள்ள அயோத்தி என்ற சிறு கிராமம்தான் ராமரின் உண்மையான பிறந்த இடம்’’ எனத் தெரிவித்திருந்தார்.  மேலும், கடவுள் ராமர் ஒரு நேபாளி, அவர் இந்தியர் அல்ல எனத் தெரிவித்திருந்தார். நேபாள பிரதமரின் கருத்துக்கு இந்திய அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

    பின்னர், நேபாள பிரதமர் கருத்து குறித்து விளக்கம் தெரிவித்த அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம், ‘‘ராமர் பற்றி பிரதமர் சர்மா ஒலி தெரிவித்தது அரசியல் ரீதியான கருத்து அல்ல. அயோத்தியின் மாண்பை குறைக்கும் வகையில் கே.பி. சர்மா ஒலி அந்த கருத்தை தெரிவிக்கவில்லை. அரசியல் நோக்கத்தோடு பேசவில்லை. யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் நோக்கத்தில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி கூறவில்லை’’ எனத் தெரிவித்திருந்தது. அதன்படி சர்ச்சை ஓய்ந்தது.

    இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ள நிஷாத் கட்சியின் தலைவர் சஞ்சய் நிஷாத், கடவுள் ராமர் மன்னர் தசரதன் மகன் அல்ல. நிஷாத் குடும்பத்தில் பிறந்தவர் எனத் தெரிவித்துள்ளார். சஞ்சய் நிஷாத்தின் இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இவரது கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் அன்ஷு அவாஸ்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பா.ஜனதாவின் கொள்கையை நிஷாந்த் கட்சி தலைவர் பிரசாரம் செய்கிறார். தற்போது ராமர் கோவில் குறித்து பேசுகிறார். ஆனால், பா.ஜனதா அலகாபாத்தில் நிஷாத் மக்களின் படகை (Boat) இடிக்கும்போது நிஷாத் மவுனமாக இருந்தார். உத்தர பிரதேச மக்கள் மற்றும் சொந்த சமுதாயத்தில் உள்ளவர்களின் முக்கிய பிரச்சினையில் இருந்து பின்வாங்குகிறார்’’ என்றார்.

    அசாதுதீன் ஒவைசி

    ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஒவைசி ‘‘டி.என்.ஏ. நிபுணரான ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், நிஷாத் கட்சி தலைவர் கருத்து குறித்து விளக்க வேண்டும். பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். முக்கிய தலைவர்கள் இதுகுறித்து பேச வேண்டும்’’ என்றார்.
    ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, கடவுள் ராமரை கற்பனை வடிவம் என்று கூறியவர்கள் எனது மத பக்தியை விமர்சிப்பதா? என கேள்வி எழுப்பினார். #RajasthanAssemblyElections #BJP #Modi #LordRam #Congress
    ஜோத்பூர்:

    ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடைபெற இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:



    மத்தியில் காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியில் இருந்தபோது, சுப்ரீம் கோர்ட்டுக்கு நான் ஒரு கடிதம் எழுதியிருந்தேன்.  அதில், கடவுள் ராமர் வாழ்ந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் இல்லை என தெரிவித்திருந்தேன்.

    அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் ராமர் ஒரு கற்பனை கதாபாத்திரம் என பதிலளித்தனர். அன்று அப்படி கூறியவர்கள், இப்போது மோடிக்கு இந்து மதத்தை பற்றி ஏதும் தெரியாது என விமர்சிக்கின்றனர்.

    ஆனால், எனக்கு இந்து மதம் தெரியுமா என்பதை ராஜஸ்தான் வாக்காளர்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர் என தெரிவித்தார்.  #RajasthanAssemblyElections #BJP #Modi #LordRam #Congress
    ×