என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கடை கொள்ளை"
மேலசொக்கநாதபுரம்:
போடியை சேர்ந்தவர் தாகுல்சிங்(வயது59). இவர் டி.வி.கே.கே.நகர் பகுதியில் பஞ்சு கமிசன் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிச்சென்றுள்ளார். நள்ளிரவு சமயத்தில் உள்ளே புகுந்த மர்மநபர்கள் கடையின் பூட்டை உடைத்துள்ளனர். கல்லாவில் இருந்த ரூ.50,000த்தை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.
மறுநாள் காலை தாகுல்சிங் கடைக்கு வந்து பார்த்தபோது பணம் கொள்ளைபோனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போடி டவுன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கொள்ளைச்சம்பவங்கள் அரங்கேறி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து செயின்பறிப்பது, கடைகளை உடைத்து பணம் கொள்ளையடிப்பது தொடர் கதையாகி வருகிறது. எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அம்பத்தூர்:
அயனாவரம் பாளையம் பிள்ளை நகரை சேர்ந்தவர் கோபி. இவர் அதே பகுதியில் துரைசாமி தெருவில் மளிகை கடை வைத்துள்ளார்.
நேற்று இரவு இவர் வழக்கம்போல் கடையை மூடிவிட்டு சென்றார். இன்று காலை கடையை திறக்க வந்தபோது ஷட்டர் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது கல்லாவிலிருந்த சீட்டு பணம் ரூ.40,000 மற்றும் மளிகை பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அயனாவரம் போலீஸ் நிலையத்தில் கோபி புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அயனாவரம், ஐ.சி.எப்., வில்லிவாக்கம் பகுதியில் இரவு நேரங்களில் பூட்டி உள்ள கடைகளை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கொள்ளையடித்து செல்லும் சம்பவம் வியாபாரிகளிடடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
போரூர்:
அரும்பாக்கம், வள்ளுவர் சாலையைச் சேர்ந்தவர் விஜயன். அரும்பாக்கம் ,பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
காலையில் அவர் கடை திறக்க வந்த போது ஷட்டர் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த சிறிய லாக்கர் உடைக்கப்பட்டு ரூ. 18 லட்சத்து 55 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து விஜயன் அரும்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு புதூர்கிராமம் ஆர்.வி.நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் தங்கப்பன் மகன் ராஜாங்கம். மாற்றுதிறனாளியான இவர் ஒரத்தநாடு தேர்வுநிலை பேரூராட்சி அருகே சாலையோரம் கடை வைத்து வலையில் மற்றும் பெண்கள் அழகுசாதன பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். தினமும் காலை 8 மணிக்கு கடையை திறந்து வியாபாரம் முடிந்து மாலை 6 மணிக்கு கடையை பூட்டி சென்று விடுவார்.
அதன்படி நேற்று மாலை வழக்கம் போல் 6 மணிக்கு வியாபாரம் முடிந்து கடையை பூட்டி சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை கடையை திறக்க வந்த ராஜாங்கம் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் விசாரணை நடத்தி வருகிறார்.
திருவள்ளூர்:
திருவள்ளூைரை அடுத்த காக்களூர் தேவா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். அதே பகுதி டீச்சர்ஸ் காலனியில் மளிகை கடை வைத்து உள்ளார்.
கிருஷ்ணகுமாரின் வீடு ஒதுக்குப்புறமாக உள்ளது. இதனால் வீட்டில் இருந்த 40 பவுன் நகை, ரூ.78 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களை மளிகை கடையில் வைத்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் கடையை பூட்டி விட்டு கிருஷ்ணகுமார் வீட்டுக்கு வந்தார். இன்று அதிகாலை கடையை திறக்க சென்ற போது ஷட்டர் பூட்டு உடைந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்த போது கடையில் வைத்திருந்த 40 பவுன் நகை, ரூ.78 ஆயிரம் ரொக்கம், ½ கிலோ வெள்ளிப் பொருட்கள் மாயமாகி இருந்தது.
மேலும் 25 கிலோ எடையுள்ள 10 அரிசி மூட்டைகள் மற்றும் மளிகை பொருட்களும் கொள்ளை போய் இருந்தன.
நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் கடையில் இருந்த நகை-பணம் உள்ளிட்ட பொருட்களை அள்ளிச் சென்று இருப்பது தெரிந்தது.
மளிகை கடையில் நகை- பணம் வைத்திருப்பதை அறிந்து கொள்ளை கும்பல் கைவரிசை காட்டி உள்ளனர். எனவே இதில் ஈடுபட்டது கிருஷ்ணகுமாருக்கு அறிமுகமான நபர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதுகுறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரச்சலூர்:
அரச்சலூர் அருகே உள்ளது ராட்டை சுற்றி பாளையம். இங்கு ஜெயச்சந்திரன் (42) என்பவர் 25 ஆண்டுகளாக மளிகை கடை நடத்தி வருகிறார்.
வழக்கம் போல் இரவு கடையை பூட்டி விட்டு ஜெயச்சந்திரன் வீட்டுக்கு சென்று விட்டார். இரவில் மர்ம ஆசாமிகள் இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அங்கு கல்லா பெட்டி மற்றும் பல்வேறு இடங்களில் துழாவி பார்த்தனர். ஆனால் எங்கும் பணம் இல்லை. வழக்கம் போல் ஒவ்வொரு நாளும் வசூலான பணத்தை ஜெயச்சந்திரன் வீட்டுக்கு எடுத்து சென்று விடுவார். அதே போல் எடுத்து சென்றதால் பணம் தப்பியது.
பணம் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த மர்ம ஆசாமிகள் 25 கிலோ (ஜிப்பம்) கொண்ட 12 அரிசி மூட்டைகளை தூக்கி கொண்டு சென்று விட்டனர்.
இது குறித்து அரச்சலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்