search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதல் பிரச்சினை"

    தக்கலை அருகே காதல் பிரச்சினையில் மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    தக்கலை:

    தக்கலையை அடுத்த அப்பட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் அஜித் (வயது 23). அஜித் எஸ்.எஸ்.எல்.சி. படித்துவிட்டு கூலி வேலை செய்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக காதல் இருந்து வந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பிருந்து இவர்களின் காதலில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அஜித் மனம் உடைந்து காணப்பட்டார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். 

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தக்கலைஅரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அஜித் பரிதாபமாக இறந்தார். இது பற்றி தக்கலை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் தக்கலையை அடுத்த மூலச்சல், உம்மச்சாணி விளையை சேர்ந்தவர் நடராஜன் (60). நாகர்கோவிலில் உள்ள ஒரு நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலையில் இருந்து விலகிய நடராஜன் வேறு வேலைக்கு முயற்சி செய்தார். ஆனால் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் கடந்த 25-ந் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று காலை இறந்தார். இது பற்றியும் தக்கலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காதல் பிரச்சினையில் திருச்சி சிறை பெண் வார்டன் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணமான போலீஸ்காரரை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
    திருச்சி:

    திருச்சி பெண்கள் சிறையில் வார்டனாக பணியாற்றி வந்த செந்தமிழ் செல்வி காதல் பிரச்சினையில் தற்கொலை செய்து கொண்டார்.  

    இதையடுத்து அவரது தற்கொலைக்கு காரணமான திருச்சி மத்திய சிறை வார்டனும், காதலருமான வெற்றிவேல், அவரின் அண்ணன் கைலாசம், அண்ணி ராஜசுந்தரி ஆகியோர் மீது கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் வெற்றிவேல் கைது செய்யப்பட்டார். 

    இந்தநிலையில் கைதான வெற்றிவேலை சஸ்பெண்டு செய்து திருச்சி மத்திய சிறை போலீஸ் சூப்பிரண்டு முருகேசன் இன்று உத்தரவிட்டார்.                               
    கோவையில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் பிரச்சினை காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை:

    திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா ஜம்புநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப்(வயது 21). பட்டதாரி.

    இவரும், நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த இவரது உறவினரான சங்கர் (25) என்பவரும் கோவையில் தனியார் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையங்களில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சேர்ந்தனர்.

    ஆர்.எஸ்.புரம் வெங்கட கிருஷ்ணா சாலையில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வந்தனர். பிரதீப் காந்திபுரத்தில் உள்ள பயிற்சி மையத்திலும், சங்கர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மையத்திலும் படித்தனர்.

    நேற்று சங்கர் பயிற்சி வகுப்புக்கு சென்று விட்டு இரவு அறைக்கு திரும்பினார். அப்போது அறைக்கதவு உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. வெகுநேரமாக தட்டியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர் கதவை உடைத்து உள்ளே சென்றார்.

    அங்கு பிரதீப் மின்விசிறியில் லுங்கியால் தூக்குபோட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார். அதிர்ச்சியடைந்த சங்கர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோதி, சப்-இன்ஸ்பெக்டர் செல்லமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அறையில் இருந்த பிரதீப்பின் செல்போனை போலீசார் கைப்பற்றினர். அதில் அனைத்து நம்பர்களும், மெசேஜ்களும் அழிக்கப்பட்டு இருந்தது. பிரதீப் அடிக்கடி வெளியே சென்று யாருடனோ நீண்ட நேரம் செல்போனில் பேசி வந்துள்ளார். எனவே காதல் பிரச்சினையில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    பிரதீப் கடைசியாக யார்- யாரிடம் செல்போனில் பேசினார்? என்பதை கண்டறிய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த தகவல் கிடைத்ததும், மேல் விசாரணை நடத்தும் போது பிரதீப் தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    கோவையை அடுத்த சூலூரில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூலூர்:

    கோவையை அடுத்த சூலூர் பாப்பம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அஜய் குமார் (வயது 18). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் வெல்டராக வேலை பார்த்து வந்தார். இன்று காலை அஜய் குமார் வீடு அருகே கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    அவரது கழுத்து, தோள், கை உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள், தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    அஜய்குமார் நேற்று இரவு 10 மணி அளவில் தனது தந்தை ஆனந்த்குமாரிடம் ரூ.100 வாங்கிக் கொண்டு, மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பி வருவதாக கூறிச் சென்றுள்ளார். அதன் பிறகு நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள பேக்கரிக்கு சென்றுள்ளார்.

    அதன் பிறகு என்ன நடந்தது? அவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை நடந்தது?அஜய் குமாருடன் பேக்கரிக்கு சென்ற நண்பர்கள் யார்- யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அஜய்குமார் கடந்த சில நாட்களுக்கு வேலைக்கு செல்ல வில்லை என கூறப்படுகிறது. காதல் பிரச்சினையில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என விசாரணை நடந்து வருகிறது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உத்தரவின்பேரில் கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மார்த்தாண்டத்தில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். காதல் பிரச்சினை காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    குழித்துறை:

    மார்த்தாண்டத்தை அடுத்த நந்தன்காட்டை சேர்ந்தவர் அஜய் (வயது 22). மார்த்தாண்டம் மார்க்கெட்டில் மீன் லோடு இறக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று மாலை அஜய், மார்க்கெட்டில் மீன் லோடு இறக்கி கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.

    அதனை எடுத்து பேசிய அஜய், அப்படியே உடைந்து போய் அழுதார். பின்னர் அருகில்  இருந்தவர்களிடம் இனி வாழ்வதில் பயன்இல்லை என்று கூறிவிட்டு வெளியே சென்றார். அவருக்கு அருகில் இருந்தவர்கள் ஆறுதல் கூறினர். அதன்பின்பு வீட்டிற்கு சென்ற அஜய், தன் அறைக்கு சென்று கதவை மூடிக்கொண்டார். நீண்ட நேரமாகியும் அவரது அறை கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், கதவை உடைத்து திறந்தனர். அங்கு அஜய் , மின் விசிறியில் தூக்குபோட்டு இறந்து கிடந்தார். இது பற்றி உறவினர்கள் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தனர்.

    மார்த்தாண்டம் போலீசார் அஜய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வழக்குபதிவு செய்தனர்.

    அஜய் சாவுக்கு அவருக்கு கடைசியாக வந்த செல்போன் அழைப்பு காரணமாக இருக்கலாம் என்று உறவினர்கள் சந்தேகப்பட்டனர். இது குறித்து அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். அதன்பேரில் அஜய் சாவுக்கு காதல் பிரச்சினை காரணமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×